விக்கிப்பீடியா:மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இரண்டாவது மூளை

நம் வயிற்றுக்குள் இன்னுமொரு மூளை (இரண்டாவது மூளை) இருக்கிறது என்பது ஆச்சர்யமான விஷயம். கண்ணில் தெரியாத எந்தக் கதிரியகங்களாலும் கண்டறியமுடியாத எண்ணங்கள் மற்றும் ஆன்மா பற்றி எத்தனையோ வேதாந்திகள் நிறைய விளக்க உரைகள் தந்தாலும் ஸ்கேன் மற்று அல்ட்ரா சவுண்ட் மூலம் கண்ணில் காணக் கூடிய வயிற்றை பற்றி நாம் அறிந்திடாத செய்திகள் நிறைய உண்டு. அறிவியல் ஆய்வுகள் மனிதன் வயிற்றுப் பகுதியைத் தாண்டிய குடலுக்கும் மனித மூளைக்கும் மிகத் தொடர்பு இருப்பதாகவும், மனிதனின் பசியின்மை மற்றும் பல்வேறு மனநிலைகளுக்கும் இந்தக் குடல் பகுதி காரணமாக இருக்கிறது என்பதும் தெரிய வந்துள்ளது.

வயிற்றுக்குள் என்ன நடக்கிறது என்பதை கண்ணால் பார்க்கும் வித்தையை (!!!) லண்டனில் உள்ள அறிவியல் மியூசியம் அறிமுகம் செய்துள்ளது (ஆராய்ச்சிப் பயனாளர்களுக்கு மட்டும்).

காலையில் உணவாக விழுங்கியது வாய்க்குள் உடைக்கப்பட்டு, கடைந்து, அமிலங்களால் கரைக்கப்பட்டு , இரைப்பை பாகாக சிறுகுடலில் தள்ளப்பட்டு கடைசியில் வெளிவருவது வரை உணவோடு விழுங்கப் பட்ட சிறிய மாத்திரையில் உள்ள கேமரா மூலம் படம் பிடிக்கப்பட்டு பெரிய திரையில் கண் முன்னே தெரிகிறது.

மனிதனின் இரண்டாவது மூளையாக செயல்படும் வயிற்றுப் பகுதியை அடுத்துள்ள குடலில் 100 மில்லியன் நியூரான் செல்கள் உள்ளன. இந்த செல்கள் வேகஸ் நரம்பின் மூலம் மூளையுடன் தொடர்பில் உள்ளன. செரிமானப் பகுதியின் சுவர்களில் பரவியுள்ள இந்த நியூரான்கள் மூளையைப் போல அதிக சிக்கலான யோசனை செய்வதில்லை. அரைத்த உணவை கலக்குவது, குடலை சுருங்கச் செய்வது, சத்து மற்றும் விட்டமின்களை உறிஞ்சி உட்கிரகிக்கச் செய்வது போன்ற வேலைகளை கட்டளையிடுவதுடன் நிறுத்திக் கொள்கிறது. வயிற்றுக்குள் சிலசமயம் " பட்டாம் பூச்சி பறப்பது போன்ற உணர்வு " வந்து போகும். இது வயிற்றுக்குள் இருக்கும் மூளை தலையில் இருக்கும் மூளையுடன் நேரடியாகப் பேசிக்கொள்வதால் ஏற்படும் செயல்.

மனிதன் அதுகமாகப் பயப்படும்போது அல்லது படபடப்பாக இருக்கும்போதோ குடல் பகுதியில் பாயும் ரத்தமானது தசைப் பகுதிக்கு வழிமாற்றம் செய்து வயிற்றுக்குள் பட்டாம் பூச்சி பறக்க விடுவது இந்த இரண்டாவது மூளைதான்.

நாம் சாப்பிட உணவு வாய்ப் பகுதியைத் தாண்டி சிறுகுடல் வரை சென்றடைய இருபது நிமிடங்கள் ஆகிறது. அதன்பிறகு அங்கு PYY எனும் (peptide tyrosine tyrosine) புரதம் வெளியிடப்பட்டு இரண்டாவது மூளையை இயக்கி தலையில் இருக்கும் மூளைக்கு வயிறு நிரம்பி விட்டது என்ற செய்தியைச் சொல்கிறது.

அதிகமாக உணவு உண்ட பிறகு கொஞ்சம் படுத்து எழுந்தால் நல்லது என்ற எண்ணம் வருவதற்கும் இந்த இரண்டாவது மூளையே காரணம்.