உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர் பேச்சு:SivakumarPP

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள்!

வாருங்கள், SivakumarPP, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

--மதனாகரன் (பேச்சு) 14:55, 11 மே 2016 (UTC)[பதிலளி]

விக்கி மாரத்தான் 2016 - பங்கேற்க அழைப்பு

[தொகு]

வணக்கம்!

சூலை 31, 2016 அன்று நடக்கவிருக்கும் தமிழ் விக்கி மாரத்தான் 2016 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

சென்ற ஆண்டு மாரத்தானில் 65 பயனர்கள் கலந்து கொண்டு 24 மணி நேரத்தில் 2370 தொகுப்புகள் ஊடாக 178 கட்டுரைகளை உருவாக்கினோம். தமிழ் விக்கிப்பீடியாவின் இந்தத் தனிச்சிறப்பு மிக்க முயற்சிக்கு, இந்த ஆண்டு சில இலக்குளை முன்வைத்துள்ளோம்.

  • பஞ்சாப் மாதம் தொடர்பான தொகுப்புகள். தமிழில் தகவல் தேடுபவர்கள், போட்டித் தேர்வுக்குத் தயாராகிறவர்கள் இந்தியா பற்றிய பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. அடுத்தடுத்து தகுந்த வேளைகளில் இது போல் ஒவ்வொரு மாநிலம் குறித்தும் தகவல்களைக் குவிக்கலாம். தற்போது, பஞ்சாப் மாதத் தொடர் தொகுப்பு முயற்சியில் இந்திய அளவில் கூடுதல் தகவலைச் சேர்ப்பதில் ஆங்கில விக்கிப்பீடியாவுடன் போட்டியிட்டுச் செயற்பட்டு வருகிறோம். நீங்களும் இணைந்தால் தமிழ் விக்கிப்பீடியாவுக்கான கேடயம் வெல்லலாம் :)
  • கோயில்கள் தொடர்பான சொற்பட்டியல், மாதிரிக் கட்டுரைகளை இறுதியாக்கி தானியக்கப் பதிவேற்றம் நோக்கி நகர்வது. இதன் மூலம் 40,000+ கட்டுரைகளை உருவாக்கலாம்.
  • கூகிள் தமிழாக்கக் கட்டுரைகளைச் சீராக்குதல்

இது போக, வழமை போல தங்களுக்கு விருப்பமான தொகுப்புகளிலும் ஈடுபடலாம். நெடுநாளாக விக்கியில் செய்ய நினைத்துள்ள பணிகளை நிறைவேற்றுவதற்கு இது ஒரு நல்ல நாள் :)

தங்களின் விருப்பத்தை இவ்விடத்தில் பதிவு செய்யுங்கள்; நன்றி!

-- இரவி

தொடர்பங்களிப்பாளர் போட்டி: பயனர் அழைப்பு

[தொகு]

15 ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்படும் போட்டி..
||தொடர்பங்களிப்பாளர் போட்டி||

போட்டிக்காலம்
6 மாதங்கள்
2017 மே-ஒக்டோபர்!

போட்டிக்காக நீங்கள்
கட்டுரைகளை விரிவாக்குதல் வேண்டும். இதில் பங்குபற்றுவது மிக இலகு!

இங்கு
பதிவு செய்யுங்கள்!
விதிகளைப் பின்பற்றி
வெற்றி பெறுங்கள்!

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 00:09, 25 மார்ச் 2017 (UTC)

தொடர்பங்களிப்பாளர் போட்டி : கட்டுரை முற்பதிவு அறிவிப்பு

[தொகு]

போட்டியாளர்களுக்கான அறிவிப்பு...
சிலநேரங்களில் ஒருவர் முற்பதிவு செய்த கட்டுரைகளை இன்னொருவர் விரிவாக்கும் செயற்பாடு தவறுதலாக நடைபெற்றுள்ளதனால், அதனைத் தவிர்க்கும் வகையிலும், அனைவருக்கும் சந்தர்ப்பத்தை அளிக்கும் வகையிலும் கட்டுரைகள் முற்பதிவு செய்வதில் ஒரு சில மாற்றங்கள் செய்துள்ளோம். அவை பின்வருமாறு:

  • 👉 - ஒரு நேரத்தில் ஒருவர் மூன்று கட்டுரைகளுக்கு மட்டுமே முற்பதிவு செய்து வைக்கலாம். முற்பதிவைச் செய்ய இங்கே செல்லுங்கள்.
  • 🎰 - நீங்கள் முற்பதிவு செய்யும் கட்டுரைக்கு, முற்பதிவு வார்ப்புரு இடப்படும்.
  • ✒️ - ஒருவரால் முற்பதிவு செய்யப்படும் கட்டுரை 10 நாட்கள்வரை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். அதன் பின்னர் வேறொருவர் விரும்பினால் விரிவாக்கலாம்.
  • ⏩ - போட்டிக்கான முற்பதிவு வார்ப்புரு இடப்பட்டிருக்கும் ஒரு கட்டுரையை 10 நாட்களுக்கு முன்னர் வேறொருவர் விரிவாக்கினால், அது ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. புரிந்துணர்வுடன், ஒத்துழைப்பு நல்குவீர்கள் என நம்புகின்றோம்.
  • 🎁 - இவற்றை கருத்திற் கொண்டு தொடர்ந்து சிறப்பாகப் போட்டியில் பங்குபற்றி வெற்றிபெற வாழ்த்துகின்றோம்!...

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 17:06, 31 மே 2017 (UTC)[பதிலளி]

ஆசிரியர்களுக்கான அடுத்த கட்ட விக்கிப்பீடியா பயிற்சிகள் அறிவிப்பு - உங்கள் உதவி தேவை

[தொகு]

வணக்கம். ஆசிரியர்களுக்கான அடுத்த கட்ட விக்கிப்பீடியா பயிற்சிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. உங்கள் அருகில் உள்ள பகுதிகளில் விக்கிப்பீடியா சார்பாக கலந்து கொண்டு பயிற்சி அளித்து தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உதவ வேண்டுகிறேன். ஒரு நாளைக்கு ஒரு மாவட்டம் செல்லலாம். பயணம், உணவு, தங்குமிடம் பொறுப்பேற்றுக் கொள்ளப்படும். உங்களால் இயன்ற தேதிகள், ஊர்களை இங்கு உறுதிப்படுத்த வேண்டுகிறேன். நிகழ்வு நடக்கும் இடங்கள், மற்ற விவரங்களை விரைவில் இற்றைப்படுத்துவோம். நன்றி.--இரவி (பேச்சு) 12:43, 25 சூன் 2017 (UTC)[பதிலளி]

வேங்கைத் திட்டம் - இன்று இல்லையேல் என்றும் இல்லை!

[தொகு]

வணக்கம். இன்னும் 24+ மணி நேரங்களில் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி நிறைவடைகிறது. தற்போதைய நிலவரம். தமிழ் - 1123 ~ பஞ்சாபி - 1185. இடைவெளி அதிகமாகத் தோன்றலாம். ஆனால், பங்கேற்பாளர்கள் எண்ணிக்கையில் நாம் 50ஐத் தொடுகிறோம். அவர்கள் 29 பேர் இருக்கிறார்கள். போட்டியல் தமிழ் வெல்லவேண்டும் என இன்று புதிதாக 10+ ஆசிரியர்களும் தங்களும் அன்றாடப் பணியை ஒதுக்கி வைத்து இணைந்திருக்கிறார்கள். நாம் 5 மணி நேரம் ஒதுக்கி ஆளுக்கு 5 கட்டுரை எழுதினாலும் போட்டியை இலகுவாக வெல்லலாம். இயன்றவர்கள் வேலைக்கு விடுப்பு போட்டு இன்னும் கூடுதலாகவும் எழுதலாம். (ரொம்ப overஆ போறமோ :) ) கடந்த காலங்களில் ஒரே நாள் விக்கி மாரத்தானில் 200 கட்டுரைகள் எழுதிய அனுபவமும் நமக்கு இருக்கிறது. சொல்ல வருவது என்னவென்றால், இன்று இல்லையேல் என்றும் இல்லை. அதே வேளை உற்சாகம் குறையாமல் உடலை வருத்திக் கொள்ளாமல் பங்களிப்போம். போட்டியைத் தாண்டி நீண்ட நாட்களுக்குப் பிறகு கூட்டு முயற்சியாக பல முக்கிய கட்டுரைகளை உருவாக்கி இருக்கிறோம் என்பதே உண்மையான மகிழ்ச்சி. வாட்சாப்பு, முகநூலில் போட்டியார்கள் பங்கு பெறும் குழு அரட்டை உள்ளது. அங்கு இணைந்து கொண்டால் அனைவரும் கூடி உற்சாகமாகப் பங்களிக்கலாம். நாம் கற்ற மொத்த வித்தையும் இறக்குவோமா? வெல்வோம்! ஜெய் மகிழ்மதி :) --இரவி

வேங்கைத் திட்டம் - இறுதி 5 மணி நேரம்

[தொகு]

வணக்கம். வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி இன்னும் ~5 மணி நேரத்தில் நிறைவுறும். அதாவது சூன் 1 இந்திய நேரம் காலை 05:29:29 வரை. தற்போதைய நிலவரம் தமிழ் 1229 ~ பஞ்சாபி 1316. வெல்ல முடியுமா என்பதே அனைவர் மனதிலும் உள்ள கேள்வி. ஒரு பத்து பேர் அடுத்த 5 மணி நேரம் மணிக்கு ஒரு கட்டுரை எழுதினாலும் நம்மால் வெல்ல இயலும் என்று கணக்குப் போட்டுச் சொல்லும் கட்டத்தைத் தாண்டி விட்டோம். கடந்த மூன்று மாதங்களில் 1200+ தரமான கட்டுரைகளை உருவாக்கி இருக்கிறோம். இதனால் 1,00,000 பேருக்கு மேல் புதிதாகப் பயன் பெற்றுள்ளார்கள். இனி நாம் உருவாக்கும் ஒவ்வொரு கட்டுரையும் இப்பயனைக் கூட்டுவதே. இப்போட்டியை வாய்ப்பாகப் பயன்படுத்தி கடைசி பந்து வரை அடித்து விளையாடுவோம்! -- இரவி

நிர்வாக அணுக்கம்?

[தொகு]

வணக்கம், சிவா. இந்தப் புதிய பயனர் கணக்கில் மீண்டும் நிர்வாக அணுக்கம் பெற விரும்புகிறீர்களா? நடைபெறும் நிருவாகத் தேர்தலில் உங்களைப் பரிந்துரைக்க விரும்புகிறேன். --இரவி (பேச்சு) 15:34, 7 சனவரி 2019 (UTC)[பதிலளி]

வணக்கம் இரவி, நன்றி. 2019-ஆம் ஆண்டிலிருந்து மீண்டும் முன்பு போல பங்களிக்க முனைந்துள்ளேன் :) ஆம், நிர்வாக அணுக்கம் பயனுள்ளதாக இருக்கும்.--சிவக்குமார் (பேச்சு) 05:06, 8 சனவரி 2019 (UTC)[பதிலளி]
தேர்தல் பக்கம் பார்த்து உங்கள் ஏற்பைத் தெரிவியுங்கள். மூன்று மாதம் கழித்து நிருவாக அணுக்கத்தைப் பெற சம்மதமா இல்லை உடனடியாகப் பெறுவது பயன் மிக்கதாக இருக்குமா என்றும் குறிப்பிடுங்கள். நன்றி--இரவி (பேச்சு) 12:12, 8 சனவரி 2019 (UTC)[பதிலளி]

பழைய பயனர் கணக்கு விவரம்

[தொகு]

விக்கிப்பீடியா:கைப்பாவை விதிகளின் படி பழைய பயனர் கணக்கு பற்றி தங்கள் பயனர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள். அப்படியே பழைய கணக்கின் பெயரையும் குறிப்பிட்டால் சிறப்பு. நன்றி -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 15:37, 8 சனவரி 2019 (UTC)[பதிலளி]

தகவலுக்கு நன்றி. கொடுத்துள்ளேன்.--சிவக்குமார் (பேச்சு) 16:43, 8 சனவரி 2019 (UTC)[பதிலளி]

TTT bid

[தொகு]

Train the trainer என்ற நிகழ்ச்சிக்காக இங்கு உரையாடல் நடைபெறுகிறது. தங்களுக்கு விருப்பமிருந்தால் உரையாடலில் கலந்துகொள்ளுங்கள். நன்றி. -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 14:03, 13 சனவரி 2019 (UTC)[பதிலளி]

நிருவாக அணுக்கத் தேர்தலில் கேள்வி

[தொகு]

வணக்கம். நிருவாக அணுக்கத் தேர்தலில் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்கான மறுமொழியை அளித்தீர்கள் என்றால் தேர்தலை நிறைவு செய்ய உதவியாக இருக்கும். நன்றி. --இரவி (பேச்சு) 09:52, 18 சனவரி 2019 (UTC)[பதிலளி]

நினைவூட்டியமைக்கு நன்றி இரவி. அப்பக்கத்தில் மறுமொழி அளித்துள்ளேன்.--சிவக்குமார் (பேச்சு) 10:47, 20 சனவரி 2019 (UTC)[பதிலளி]

நிருவாகப் பணி சிறக்க வாழ்த்துகள்

[தொகு]

வணக்கம், சிவக்குமார். இந்தப் புத்தாண்டில் தமிழ் விக்கிப்பீடியாவில் மீண்டும் நிருவாக அணுக்கத்தைப் பெற்றமைக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். முதலில் வேட்பு மனு செய்த ஆறு பேருக்கு முன்னுரிமை கொடுக்கும் காரணத்தால், உங்கள் நிருவாகப் பணிக் காலம் ஏப்ரல் 1, 2019 முதல் தொடங்கும். அது வரை விக்கிப்பீடியா:நிர்வாகிகள் பள்ளி வழிகாட்டுதல்களைக் கவனித்து வருவதும் பயனுள்ளதாக இருக்கும். நன்றி. --~~

நன்றி, இரவி.--சிவக்குமார் (பேச்சு) 06:26, 21 சனவரி 2019 (UTC)[பதிலளி]
தங்கள் பயனர் கணக்குக்கு நிருவாக அணுக்கம் செயற்படுத்தப்பட்டுள்ளது. வாழ்த்துகள். --இரவி (பேச்சு) 16:21, 5 ஏப்ரல் 2019 (UTC)
நன்றி, இரவி. என்னால் இயன்ற அளவு தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்குப் பணியாற்றுவேன்.--சிவக்குமார் (பேச்சு) 06:24, 8 ஏப்ரல் 2019 (UTC)
@Ravidreams:: எனது நிருவாக அணுக்கக் காலம் முடிந்து விட்டது. மீண்டும் புதுப்பிக்க வேண்டுகிறேன்.--சிவக்குமார் (பேச்சு) 10:40, 27 மார்ச் 2020 (UTC)
Y ஆயிற்று--இரவி (பேச்சு) 08:25, 28 மார்ச் 2020 (UTC)
நன்றி :) --சிவக்குமார் (பேச்சு) 13:35, 28 மார்ச் 2020 (UTC)

தலைப்பை மாற்ற

[தொகு]
மாற்றியுள்ளேன். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.--சிவக்குமார் (பேச்சு) 13:59, 11 பெப்ரவரி 2019 (UTC)

நிருவாக அணுக்கம் நீட்டிப்பு

[தொகு]

வணக்கம். தங்கள் நிருவாக அணுக்கம் அடுத்த ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சிறப்பாகச் செயற்பட வாழ்த்துகள்.--இரவி (பேச்சு) 11:23, 17 சூலை 2019 (UTC)[பதிலளி]

நன்றி இரவி :) --சிவக்குமார் (பேச்சு) 13:34, 17 சூலை 2019 (UTC)[பதிலளி]

Project Tiger 2.0

[தொகு]

Sorry for writing this message in English - feel free to help us translating it

இலங்கை-2019-அக்டோபர் 19, 20

[தொகு]

மேற்குறித்த தேதிகளில் இலங்கை செல்லவிருக்கிறோம். அதற்காக அங்கு செல்வோரிட்டத்தில், அலைப்பேசி, மின்னஞ்சல், கடவுச்சீட்டு, இன்னும் சிலவிவரங்கள் பெற்று, தனியே கூகுள் ஆவணமாக, உரியவரிடம் பகிர்ந்து கொள்ள மட்டும் உருவாக்கி வருகிறோம். எனவே, உங்களின் விவரங்கள் தருக. எனது மின்னஞ்சல் tha.uzhavanஅட்சிமெயில்டாட்காம். எனது அலைப்பேசி எண் தொண்ணூறு 95 34 33 நாற்பத்திரண்டு. உடன் தொடர்பு கொள்ளவும்.--உழவன் (உரை) 04:26, 9 செப்டம்பர் 2019 (UTC)

பேச்சுப்பக்கத்தில் மறுமொழி இட்டுள்ளேன்.--சிவக்குமார் (பேச்சு) 06:28, 9 செப்டம்பர் 2019 (UTC)

வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்பு

[தொகு]

சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்திய அளவிலான வேங்கைத் திட்டம் 2.0 கட்டுரைக்குப் போட்டி நடைபெற உள்ளது. சென்ற முறை நாம் இரண்டாம் இடம் பெற்றோம். இந்த முறை தாங்களும் இந்தப் போட்டியில் பங்குபெற்று நம் சமூகம் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். போட்டியின் விதிமுறைகள் சுருக்கமாக

குறுக்கு வழி:
WP:TIGER2
கவனிக்க: கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் இருந்து மட்டுமே கட்டுரை எழுத வேண்டும்

மேலும் விவரங்களுக்கு இங்கு காணவும். நம் சமூகம் தங்கள் ஒத்துழைப்புடன் வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி -நீச்சல்காரன்

ஆசிய மாதம், 2019

[தொகு]

வணக்கம்.

இந்த ஆண்டு விக்கிப்பீடியா ஆசிய மாதம் நவம்பர் 1 முதல் நடைபெற்று வருகின்றது. கடந்த ஆண்டுகளைப் போல இந்த ஆண்டும் உங்கள் பங்களிப்பினை தொடர்ந்து நல்க வேண்டுகிறேன். வேங்கைத் திட்டம் 2.0 போட்டிகளில் ஆசிய மாதம் குறித்து எழுதி வந்தால் அவற்றையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 23:12, 3 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]

வேங்கைத் திட்டம் 2.0 - முன்னணியில் தமிழ்!

[தொகு]
குறுக்கு வழி:
WP:TIGER2

வணக்கம். வேங்கைத் திட்டம் 2.0 ஒரு மாதம் நிறைவுற்ற நிலையில் தமிழ் விக்கிப்பீடியா 1,000 போட்டிக் கட்டுரைகள் இலக்கை நோக்கிச் செல்கிறது. இந்தியாவில் உள்ள மற்ற மொழி விக்கிப்பீடியாக்களைக் காட்டிலும் சுமார் 250 கட்டுரைகள் முன்னிலையில் உள்ளது.

இந்த மகழ்ச்சியான செய்தியை உங்களுக்குத் தெரிவிக்கும் இதே வேளையில், இது வரை வெறும் 17 பேர் மட்டுமே இப்போட்டிக்கு என பத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார்கள் என்பதையும் உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். இன்னும் குறிப்பாகச் சொல்வதானால், நூற்றுக்கணக்கில் கட்டுரைகளைத் தனி ஆளாக எழுதிக் குவித்து வரும் @Sridhar G, Balu1967, Fathima rinosa, Info-farmer, and கி.மூர்த்தி: ஆகியோருக்கும் உடனுக்கு உடன் கட்டுரைகளைத் திருத்தி குறிப்புகள் வழங்கி வரும் நடுவர்கள் @Balajijagadesh, Parvathisri, and Dineshkumar Ponnusamy: ஆகியோருக்கும் தேவையான கருவிகள் வழங்கி ஒருங்கிணைப்பை நல்கி வரும் நீச்சல்காரன் போன்றோருக்கும் நாம் மிகவும் கடமைப்பட்டிருக்கிறோம்.

இப்போட்டியில் தமிழ் முதலிடத்தைத் தக்க வைப்பதன் மூலம், தனி நபர்களுக்குக் கிடைக்கும் மாதாந்த பரிசுகள் போக, நம்முடைய தமிழ் விக்கிப்பீடியா சமூகம் அனைவருக்கும் பல இலட்சம் ரூபாய் மதிப்புள்ள சிறப்புப் பயிற்சி என்னும் மாபெரும் பரிசை வெல்ல முடியும். கடந்த ஆண்டு போட்டியில் பெற்ற வெற்றியின் காரணமாக, இருபதுக்கு மேற்பட்ட தமிழ் விக்கிப்பீடியர்கள் பஞ்சாபில் உள்ள அமிர்தசரசு நகருக்கு விமானம் மூலம் சென்று பயிற்சியில் கலந்து கொண்டோம்.

சென்ற ஆண்டு இறுதி நேரத்திலேயே நாம் மும்முரமாகப் போட்டியில் கலந்து கொண்டதால், இரண்டாம் இடமே பெற முடிந்தது. மாறாக, இப்போதிருந்தே நாம் திட்டமிட்டு உழைத்தால், நாம் அனைவரும் ஒவ்வொரு நாளும் ஒரே ஒரு கட்டுரை எழுதினாலும், அடுத்துள்ள இரண்டு மாதங்களில் இன்னும் 2,000 கட்டுரைகளைச் சேர்க்க முடியும்.

இப்போட்டிக்காகக் கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகள் யாவும் முக்கியத்துவம் வாய்ந்த தலைப்புகள். இப்போட்டியை ஒரு வாய்ப்பாகக் கொண்டு இத்தலைப்புகளைப் பற்றி எழுதினால் தமிழ் வாசகர்களுக்கும் பெரும் உதவியாக இருக்கும்.

போட்டியில் பங்கு கொள்வது பற்றி ஏதேனும் ஐயம் எனில் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். Facebook தளத்தில் Ravishankar Ayyakkannu என்ற பெயரில் என்னைக் காணலாம். அங்கு தொடர்பு கொண்டாலும் உதவக் காத்திருக்கிறேன். அங்கு நம்மைப் போல் போட்டிக்கு உழைக்கும் பலரும் குழு அரட்டையில் ஈடுபட்டு உற்சாகத்துடன் பங்களித்து வருகிறோம். அதில் நீங்களும் இணைந்து கொள்ளலாம்.

இப்போட்டிக்குப் பெயர் பதிந்த அனைவருக்கும் இத்தகவலை அனுப்புகிறேன். உங்களில் பலர் ஏற்கனவே உற்சாகத்துடன் பங்கு கொண்டு வருகிறீர்கள். நானும் என்னால் இயன்ற பங்களிப்புகளை செய்ய உறுதி பூண்டுள்ளேன். அவ்வண்ணமே உங்களையும் அழைக்கிறேன்.

வாருங்கள், தமிழ் விக்கிப்பீடியாவின் சிறப்பை நிலை நாட்டுவோம்.

நன்றி. --MediaWiki message delivery (பேச்சு) 21:34, 10 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]

சுற்றுக்காவல்

[தொகு]

14:31, 6 ஏப்ரல் 2020 பக்கம் ஷேக் ஜாயித் சாலை இன் திருத்தம் 2946577 ஐ SivakumarPP பேச்சு பங்களிப்புகள் தடு பார்வையிட்டுக் குறிக்கப்பட்டது. ஆனால் அங்கு உசாத்துணை / மேற்கோள் இருக்கவில்லை.

விக்கிப்பீடியா:சுற்றுக்காவல்#புதிய பக்கங்களை எப்படி சுற்றுக்காவலுக்குட்படுத்துவது --AntanO (பேச்சு) 15:29, 7 ஏப்ரல் 2020 (UTC)
@AntanO: சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. இணைப்பில் உள்ள எப்படி பக்கத்தினைப் பார்த்தேன். இனி அவற்றைக் கருத்தில் கொள்கிறேன்.--சிவக்குமார் (பேச்சு) 05:50, 8 ஏப்ரல் 2020 (UTC)

முபக பயனர் அறிவிப்பு

[தொகு]


--AntanO (பேச்சு) 04:23, 3 மே 2020 (UTC)[பதிலளி]

@AntanO: : நன்றி :) --சிவக்குமார் (பேச்சு) 05:21, 3 மே 2020 (UTC)[பதிலளி]

சுப்பிரமணியன் பூபதி

[தொகு]

இவரைப்பற்றி எழுத இயலுமா? பூபதியின் கேழல்மூக்கனுக்கு நன்றி. --PARITHIMATHI (பேச்சு) 11:51, 5 மே 2020 (UTC)[பதிலளி]

@PARITHIMATHI: நன்றி :). கட்டாயம் முயல்கிறேன்.--சிவக்குமார் (பேச்சு) 13:16, 5 மே 2020 (UTC)[பதிலளி]

We sent you an e-mail

[தொகு]

Hello SivakumarPP,

Really sorry for the inconvenience. This is a gentle note to request that you check your email. We sent you a message titled "The Community Insights survey is coming!". If you have questions, email surveys@wikimedia.org.

You can see my explanation here.

MediaWiki message delivery (பேச்சு) 18:54, 25 செப்டம்பர் 2020 (UTC)

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters

[தொகு]

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:36, 30 சூன் 2021 (UTC)[பதிலளி]

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.

வேங்கைத்திட்டப் பயிற்சியில் கலந்து கொள்ள அழைப்பு

[தொகு]
வணக்கம். வேங்கைத் திட்டம் 2.0 போட்டியில் இந்திய அளவில் தமிழ் விக்கிப்பீடியா சமூகம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அளிக்கப்படவுள்ள மூன்று நாள் திறன் மேம்பாட்டுப் பயிற்சியானது பெரும்பான்மையோரின் கருத்துகளின் படி சனவரி 26, 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் கோவை அருகே உள்ள ஆனைக்கட்டியில் நடைபெற உள்ளது. கலந்து கொள்ள விரும்பும் பயனர்களுக்கான நிதிநல்கைப் படிவம் திறக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஏற்கெனவே வேங்கைத்திட்டம் கட்டுரைப் போட்டியில் பங்கு பெற்றதன் காரணமாக இந்த அழைப்பு விடுக்கப்படுகிறது. நிதிநல்கைப் படிவமானது நவம்பர் 15 முதல் நவம்பர் 30 வரை மட்டுமே திறந்திருக்கும். நீங்கள் இந்தப் பக்கத்திற்குச் சென்று விண்ணப்பிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். - ஒருங்கிணைப்பாளர்கள்

You have been a medical translators within Wikipedia. We have recently relaunched our efforts and invite you to join the new process. Let me know if you have questions. Best Doc James (talk · contribs · email) 12:34, 2 August 2023 (UTC)

நல்ல கட்டுரை- அழைப்பு

[தொகு]

வணக்கம், நல்ல கட்டுரைகள் என்பது விக்கிப்பீடியாவில் குறிப்பிட்ட அளவுகோல்களைக் கொண்டிருக்கும் கட்டுரைகள் முன்மொழிவுகள் மூலம் தரமுயர்த்தப்படும் நிலையினைக் குறிக்கிறது. இதன்மூலம், புதிய பயனர்களுக்கும், பயிற்சிப் பட்டறைகளின் போதும், குறிப்பிட்ட துறை சார்ந்த கட்டுரைகள் எவ்வாறு இருக்க வேண்டும் எனும் புரிதலை ஏற்படுத்த அவர்களுக்குக் காண்பிக்க உதவும். தற்போது விக்கிப்பீடியாவில் உள்ள 1,67,601 கட்டுரைகளில் சரியான கட்டுரைகளை நீங்களும் இங்கு முன்மொழியலாம். கட்டுரைகளை மதிப்பாய்வு செய்ய உங்களால் இயலும் எனில் இங்கு உங்களது பெயர்களைப் பதிவு செய்யுங்கள். நன்றி -- MediaWiki message delivery (பேச்சு) 03:40, 18 மே 2024 (UTC)[பதிலளி]

தொடர்-தொகுப்பு 2024

[தொகு]

வணக்கம்!

தமிழ் விக்கிப்பீடியாவிலுள்ள கட்டுரைகளை மேம்படுத்தும் நோக்கில், தொடர்-தொகுப்பு நிகழ்வு (Edit-a-thon) ஒன்றினை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்திலுள்ள ஏற்காடு நகரில், செப்டம்பர் 28, 29 (சனி, ஞாயிறு) ஆகிய இரு நாட்கள் நிகழ்வு நடைபெறும். இந்த நிகழ்வில் கலந்துகொள்ள உங்களை அழைக்கிறோம்!

நிகழ்வில் கலந்துகொள்வதற்கு இந்த இணைப்பின் வழியாகச் சென்று விண்ணப்பியுங்கள்; நன்றி!

- ஒருங்கிணைப்புக் குழு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:SivakumarPP&oldid=4059532" இலிருந்து மீள்விக்கப்பட்டது