பயனர் பேச்சு:Fahimrazick

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தொகுப்பு

தொகுப்புகள்


1 | 2

ஆசிய மாதம் - இறுதி வாரம்[தொகு]

WikipediaAsianMonth-ta.svg

வணக்கம்!

கிட்டத்தட்ட ஆயிரம் விக்கிப்பீடியர்களில் ஒருவராக விக்கிப்பீடியா ஆசியா மாதத்தில் இணைந்து கொண்டமைக்கு நன்றி. சிலர் நல்ல முறையில் போட்டியில் பங்களிப்புச் செய்து கொண்டிருக்கையில், வேறுசிலர் நல்ல பங்களிப்புக்கு முயன்று கொண்டிருக்கிறார்கள். இந்நேரத்தில், சில இற்றைப்படுத்தப்பட்ட செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

 1. விக்கிப்பீடியா ஆசியத் தூதுவர் என்ற பட்டத்தைப் பெற நீங்கள் விரும்பினால், திட்டத்தின் பக்கத்தில் மற்றவர்கள் எவ்வாறு முனைப்புடன் செயற்படுகிறார்கள் என்பதில் இருந்து அறியலாம்.
 2. ஒரு வாரத்திற்கும் குறைவான நாட்களே போட்டி முடிவடைய இருப்பதால், உங்கள் பங்களிப்புக்களை திசம்பர் 3, 2015 (UTC) இற்கு முன் தெரிவியுங்கள். ஆனால், நவம்பர் மாதத்தில் செய்யப்பட்ட பங்களிப்புக்கள் மாத்திரம் போட்டிக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
 3. நீங்கள் ஐந்து கட்டுரைகளை போட்டிக்கென தெரிவித்து, அதில் ஒன்று சிறு காரணத்திற்கான தகுதி அடையவில்லை (குறைந்தது 300 சொற்களைக் கொண்டிருக்க வேண்டும், அல்லது சிக்கலான வார்ப்புருக்கள் காணப்படல்) என்றாலும், உங்களுக்கு அஞ்சலட்டை அனுப்பி வைக்கப்படும்.
 4. நீங்கள் போட்டியை முறையாக முடித்திராவிட்டாலும், உங்களை பங்களிப்பாளராகப் பெற்றதில் மகிழ்சியடைகிறோம்.

குறிப்பு: முடிந்தால் {{WAM talk 2015}} என்ற வார்ப்புருவை போட்டிக்காக உருவாக்கும் கட்டுரைகளின் பேச்சுப் பக்கத்தில் இணைத்துவிடுங்கள்.

உங்களுக்கு ஏதும் கேள்வியிருந்தால், என்னைத் தொடர்பு கொள்ளுங்கள். --AntanO --MediaWiki message delivery (பேச்சு) 04:15, 28 நவம்பர் 2015 (UTC)

நன்றிகள்[தொகு]

அன்பு தோழமைக்கு வணக்கம் அடியேனை இனங்கண்டு மனந்திறந்து பாராட்டியமைக்கு மனமகிழ்ந்து நன்றி கூறிக்கொள்கிறேன்.Heart.pngஅன்புமுனுசாமி (பேச்சு) 05:10, 14 திசம்பர் 2015 (UTC)

உதவி[தொகு]

இக்கட்டுரையில் நான் தமிழாக்கியது சரியாகவுள்ளதாக என பார்க்கவும். பிழையேதுமிருந்தால் திருத்தி விடவும். நன்றி -- மாதவன்  ( பேச்சு  ) 10:38, 16 திசம்பர் 2015 (UTC)

இலங்கைக்கு வந்ததில் சற்று வேலைப்பளுவாக இருக்கிறேன். நாளை மீண்டும் இந்தோனேசியாவுக்குச் சென்ற பின் பார்க்கிறேன்.--பாஹிம் (பேச்சு) 13:40, 16 திசம்பர் 2015 (UTC)

நுட்பப் பயிற்சிப் பட்டறைக்கான பங்கேற்பாளர் பதிவு[தொகு]

தமிழ் விக்கிப்பீடியர்களுக்கான நுட்பப் பயிற்சிப் பட்டறைக்கான பங்கேற்பாளர் பதிவு தொடங்கியுள்ளது. பெயரைப் பதியவும் கூடுதல் விவரங்களுக்கும் இங்கு வாருங்கள். பெயரைப் பதிவு செய்ய இன்னும் இரண்டு நாட்களே உள்ளன.--இரவி (பேச்சு) 18:50, 26 மார்ச் 2016 (UTC)

உங்களுக்கு என்ன நடந்தது?[தொகு]

ஏன் இப்படி?--Kanags \உரையாடுக 11:07, 6 மே 2016 (UTC)

எனக்கு எதுவும் நடக்கவில்லை. உங்களுக்குத்தான் ஏதோ நடந்திருக்கும் போலிருக்கிறது.--பாஹிம் (பேச்சு) 11:08, 6 மே 2016 (UTC)

இல்ங்கைத் தலைப்புகள், இந்தியத் தலைப்புகள், மற்றும் உலகத் தலைப்புகள் அனைத்துக்கும் உத்தியோகப் பெயர்களை சூட்டுவோமா?--Kanags \உரையாடுக 11:13, 6 மே 2016 (UTC)
இலங்கை அதிகாரபூர்வமாக எவ்வாறு அழைக்கப்படுகிறது என்றாவது உங்களுக்குத் தெரியுமா?--Kanags \உரையாடுக 11:15, 6 மே 2016 (UTC)

உங்களுக்கு என்ன தெரியும்? முதலில் அதைக் கூறுங்கள்.--பாஹிம் (பேச்சு) 11:16, 6 மே 2016 (UTC)

விக்கிப்பீடியா கட்டுரைகள் அனைத்துக்கும் அதிகாரபூர்வமான பெயர்கள் தான் வைக்க வேண்டும் என்றால், ஆலமரத்தடியில் கேளுங்கள். அனைவரும் உடன்பட்டால், இலங்கை பற்றியது மட்டுமல்ல அனைத்துக் கட்டுரைகளுக்கும் தலைப்புகளை மாற்றுவோம்,--Kanags \உரையாடுக 11:18, 6 மே 2016 (UTC)

விக்கி மாரத்தான் 2016 - பங்கேற்க அழைப்பு[தொகு]

Ta-Wiki-Marathon-2016.png

வணக்கம்!

சூலை 31, 2016 அன்று நடக்கவிருக்கும் தமிழ் விக்கி மாரத்தான் 2016 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

சென்ற ஆண்டு மாரத்தானில் 65 பயனர்கள் கலந்து கொண்டு 24 மணி நேரத்தில் 2370 தொகுப்புகள் ஊடாக 178 கட்டுரைகளை உருவாக்கினோம். தமிழ் விக்கிப்பீடியாவின் இந்தத் தனிச்சிறப்பு மிக்க முயற்சிக்கு, இந்த ஆண்டு சில இலக்குளை முன்வைத்துள்ளோம்.

 • பஞ்சாப் மாதம் தொடர்பான தொகுப்புகள். தமிழில் தகவல் தேடுபவர்கள், போட்டித் தேர்வுக்குத் தயாராகிறவர்கள் இந்தியா பற்றிய பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. அடுத்தடுத்து தகுந்த வேளைகளில் இது போல் ஒவ்வொரு மாநிலம் குறித்தும் தகவல்களைக் குவிக்கலாம். தற்போது, பஞ்சாப் மாதத் தொடர் தொகுப்பு முயற்சியில் இந்திய அளவில் கூடுதல் தகவலைச் சேர்ப்பதில் ஆங்கில விக்கிப்பீடியாவுடன் போட்டியிட்டுச் செயற்பட்டு வருகிறோம். நீங்களும் இணைந்தால் தமிழ் விக்கிப்பீடியாவுக்கான கேடயம் வெல்லலாம் :)
 • கோயில்கள் தொடர்பான சொற்பட்டியல், மாதிரிக் கட்டுரைகளை இறுதியாக்கி தானியக்கப் பதிவேற்றம் நோக்கி நகர்வது. இதன் மூலம் 40,000+ கட்டுரைகளை உருவாக்கலாம்.
 • கூகிள் தமிழாக்கக் கட்டுரைகளைச் சீராக்குதல்

இது போக, வழமை போல தங்களுக்கு விருப்பமான தொகுப்புகளிலும் ஈடுபடலாம். நெடுநாளாக விக்கியில் செய்ய நினைத்துள்ள பணிகளை நிறைவேற்றுவதற்கு இது ஒரு நல்ல நாள் :)

தங்களின் விருப்பத்தை இவ்விடத்தில் பதிவு செய்யுங்கள்; நன்றி!

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:05, 28 சூலை 2016 (UTC)

விக்கி மாரத்தான் 2016 - பங்கேற்க அழைப்பு[தொகு]

Ta-Wiki-Marathon-2016.png

வணக்கம்!

சூலை 31, 2016 அன்று நடக்கவிருக்கும் தமிழ் விக்கி மாரத்தான் 2016 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

சென்ற ஆண்டு மாரத்தானில் 65 பயனர்கள் கலந்து கொண்டு 24 மணி நேரத்தில் 2370 தொகுப்புகள் ஊடாக 178 கட்டுரைகளை உருவாக்கினோம். தமிழ் விக்கிப்பீடியாவின் இந்தத் தனிச்சிறப்பு மிக்க முயற்சிக்கு, இந்த ஆண்டு சில இலக்குளை முன்வைத்துள்ளோம்.

 • பஞ்சாப் மாதம் தொடர்பான தொகுப்புகள். தமிழில் தகவல் தேடுபவர்கள், போட்டித் தேர்வுக்குத் தயாராகிறவர்கள் இந்தியா பற்றிய பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. அடுத்தடுத்து தகுந்த வேளைகளில் இது போல் ஒவ்வொரு மாநிலம் குறித்தும் தகவல்களைக் குவிக்கலாம். தற்போது, பஞ்சாப் மாதத் தொடர் தொகுப்பு முயற்சியில் இந்திய அளவில் கூடுதல் தகவலைச் சேர்ப்பதில் ஆங்கில விக்கிப்பீடியாவுடன் போட்டியிட்டுச் செயற்பட்டு வருகிறோம். நீங்களும் இணைந்தால் தமிழ் விக்கிப்பீடியாவுக்கான கேடயம் வெல்லலாம் :)
 • கோயில்கள் தொடர்பான சொற்பட்டியல், மாதிரிக் கட்டுரைகளை இறுதியாக்கி தானியக்கப் பதிவேற்றம் நோக்கி நகர்வது. இதன் மூலம் 40,000+ கட்டுரைகளை உருவாக்கலாம்.
 • கூகிள் தமிழாக்கக் கட்டுரைகளைச் சீராக்குதல்

இது போக, வழமை போல தங்களுக்கு விருப்பமான தொகுப்புகளிலும் ஈடுபடலாம். நெடுநாளாக விக்கியில் செய்ய நினைத்துள்ள பணிகளை நிறைவேற்றுவதற்கு இது ஒரு நல்ல நாள் :)

தங்களின் விருப்பத்தை இவ்விடத்தில் பதிவு செய்யுங்கள்; நன்றி!

-- இரவி

August 2016[தொகு]

தகவற் படவுரு வணக்கம், உங்கள் அண்மைய தொகுப்பில் பேணுகை வார்ப்புருக்களை நீக்கியுள்ளீர்கள். ஒரு பேணுகை வார்ப்புருவை நீக்கும்போது, அதில் குறிப்பிட்ட சிக்கல் தீர்ந்துவிட்டதா எனக் கவனிக்கவும். அல்லது தொகுப்புச் சுருக்கத்தில் செல்லுபடியாகும் காரணத்தைக் குறிப்பிடுங்கள். நீங்கள் தவறுதலாக இதனைச் செய்திருந்தால் வருந்தவேண்டாம். உங்கள் தொகுப்பை நான் மீளமைத்துள்ளேன். உங்களது வரவேற்புச் செய்தியில் மேலதிக விவரங்களைக் காணலாம். நீங்கள் பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல் தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி. AntanO 04:47, 6 ஆகத்து 2016 (UTC)

நடுநிலை பற்றியதாக இருந்தால் நீங்கள் அதற்கான வார்ப்புருவை இட்டிருக்க வேண்டும். மாறாக அவ்வாறு எதுவுமே நடைபெறவில்லை என்பது போன்று வேண்டுமென்றே திரிக்கும் வார்ப்புருக்களை இடக்கூடாது. நிருவாகியான உங்களுக்கு இது தெரியாதா?--பாஹிம் (பேச்சு) 04:50, 6 ஆகத்து 2016 (UTC)

பேணுகை வார்ப்புருவை நீக்கும் வேண்டாம். வார்ப்பு சரியா பிழையா என்பதை அங்கு உரையாடுக. அதற்கும் நிருவாகிக்கும் தொடர்பில்லை. --AntanO 04:52, 6 ஆகத்து 2016 (UTC)

அதற்கும் நிருவாகிக்கும் தொடர்பிருக்கிறது. ஏனென்றால் சற்றுப் பிசகிவிட்டால் நீக்கிவிடுவதும் நிருவாகிதானே.--பாஹிம் (பேச்சு) 04:54, 6 ஆகத்து 2016 (UTC)

Please stop continuing to remove maintenance templates from pages on Wikipedia without resolving the problem that the template refers to. This may be considered disruptive editing. Further edits of this type may result in your account being blocked from editing. AntanO 04:55, 6 ஆகத்து 2016 (UTC)

நான் உங்களது அடாவடித்தனத்தைக் கண்டு நிறுத்த மாட்டேன். நிருவாகி என்ற மமதையில் என்னைத் தடை செய்யப் போகிறீரா?--பாஹிம் (பேச்சு) 04:57, 6 ஆகத்து 2016 (UTC)

Stop icon You may be blocked from editing without further warning the next time you remove the maintenance templates from Wikipedia articles without resolving the problem that the template refers to. AntanO 05:02, 6 ஆகத்து 2016 (UTC)

உணர்ச்சி மிகுதியால் என்னைத் தடை செய்து விடுவதாக மிரட்டுகிறீர்கள்!--பாஹிம் (பேச்சு) 05:10, 6 ஆகத்து 2016 (UTC)

Stop icon You may be blocked from editing without further warning the next time you use talk pages for inappropriate discussions. AntanO 05:27, 6 ஆகத்து 2016 (UTC)

ஆலமரத்தடியில் நான் இட்ட பின்வரும் இடுகைகளை நீக்கி விட்டு, என்னைத் தடை செய்யப் போவதாக மிரட்டுகிறார் அன்ரன். நிருவாகி என்பதால் அவர் புரியும் அடாவடித்தனத்துக்கு ஆதாரமாக இதை எனது சொந்தப் பேச்சுப் பக்கத்தில் இடுகிறேன்.--பாஹிம் (பேச்சு) 07:06, 6 ஆகத்து 2016 (UTC)

ஆதாரம் சுட்டுதலும் பொருத்தமான/பொருந்தாத வார்ப்புரு இடுதலும்

பொத்துவில் படுகொலை எனும் கட்டுரையில் நான் போதிய ஆதாரம் தந்திருக்கும் போது, அன்ரன் என்னைத் தடை செய்ய வழி தேடுகிறார்.--பாஹிம் (பேச்சு) 05:15, 6 ஆகத்து 2016 (UTC)

அன்ரன், நீங்கள் முரண்பாடாக நடக்கும் போது, அவ்விடயத்தை ஏனைய நிருவாகிகளுக்கும் பயனர்களுக்கும் தெரியப்படுத்துவதற்கான வழி இதுவே. எதற்காக என்னை வேண்டுமென்றே தடை செய்ய முயல்கிறீர்கள்?--பாஹிம் (பேச்சு) 05:26, 6 ஆகத்து 2016 (UTC)

அன்ரன் மீண்டும் மீண்டும் முரண்படுகிறார். பேச்சு:பல்லியகொடல்லை படுகொலை பக்கத்தில் அவரது அடாவடித்தனத்தைக் காணலாம்.--பாஹிம் (பேச்சு) 07:02, 6 ஆகத்து 2016 (UTC)

Stop icon

3 நாட்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளீர்கள். தடை நீங்கியதும் பயனுள்ள பங்களிப்பினைச் செய்யுங்கள்.  AntanO 07:15, 6 ஆகத்து 2016 (UTC)

அன்ரனின் தீய நடவடிக்கை[தொகு]

அன்ரன் என்னைத் தடை செய்வதற்காகச் சுட்டிய காரணம் “Clearly not here to contribute to the encyclopedia”, அஃதாவது நான் இங்கே கலைக்களஞ்சியத்துக்குப் பங்களிக்க வரவில்லை என்பது தெளிவானதாம். எத்தனையோ முதற்பக்கக் கட்டுரைகள், எத்தனையோ உங்களுக்குத் தெரியுமா செய்திகள், ஏராளமான கட்டுரைகளின் திருத்தங்கள் என்றெல்லாம் எனது பங்களிப்பு ஆக்கபூர்வமாக இருக்கும் போது இத்தகைய ஒரு காரணத்தைக் கூறித் தடை செய்தது எந்த வகையில் நியாயம்? இது தன்னிச்சையான செயற்பாடே அன்றி வேறில்லை. இவ்வாறு தன்னிச்சையாகச் செயற்படும் ஒருவர் நிருவாகியாக இருக்கவே கூடாது.

முதலில் என்னை முடிவிலாக் காலத்துக்குத் தடை செய்தார். இவருக்கு யார் இந்த அதிகாரத்தைக் கொடுத்தது? நிருவாகி என்பதாலேயே ஏனைய பயனர்களுக்கு இவ்வாறு வெறுப்பூட்டுவதா? முரண்பாடுகள் தொடர்பில் கட்டுரைகளின் பேச்சுப் பக்கங்களில் தீர்வு எட்டும் சாத்தியம் குறைவாக இருந்தால், ஆலமரத்தடியில் உரையாடுவதே முறை. நான் ஆலமரத்தடியில் இட்ட கருத்தை அவராகவே நீக்கி விட்டார். ஆலமரத்தடியில் கருத்திடுவது பொருத்தமற்றதென்று அவர் கூறவேயில்லை. ஆனால் அவர் எனக்குக் கூறியதாகப் பொய்யுரைக்கிறார்.

ஆங்கிலக் கட்டுரையில் தரப்பட்டுள்ள பகுப்பு இதுவென்று நான் சுட்டிக் காட்டினேன். ஆனால் அவர் தனது கருத்தை என் மீது திணிக்க முயன்று மீண்டும் மீண்டும் வேறொரு புதிய பகுப்பைக் கூறி அதிலேயே இட வேண்டுமென்றார். அவர் கூறும் பகுப்பில் மட்டுமே இணைக்க வேண்டுமாம். ஆங்கில விக்கிப்பீடியவில் நான் சுட்டிக் காட்டிய பகுப்பினுள் இருக்கலாம், தமிழில் இருக்கக் கூடாது என்ற வகையில் அப்பகுப்பைச் சேர்த்தால் தடை செய்து விடுவேன் என்று கூறியதை மிரட்டல் என்று கூறாமல் வேறெவ்வாறு கூற வேண்டும்? ஆங்கிலத்தில் இருக்கும் அதே பகுப்பை மீண்டும் இணைக்க முற்பட்டால் தடை செய்யப்படுவீர்கள் என்று அவர் கூறியது மிரட்டலல்லாமல் வேறென்ன? அதனால் நான் அப்பகுப்பைச் சேர்க்கவில்லை. மாறாக நான் ஆங்கிலக் கட்டுரையிலுள்ள பகுப்பு இதுவென்று சுட்டிக் காட்டினேன். அதற்காக என்னைத் தடை செய்து விட்டார். இது நியாயமா? ஆங்கிலத்தில் இருக்கும் அதே பகுப்பினுள் தமிழில் வருவதை வேண்டுமென்றே தடுத்து என்னைத் தடை செய்யுமளவுக்குச் செயற்பட்ட ஒருவரை இனி எப்படி நம்புவது? தமிழ் விக்கிப்பீடியாவில் சிக்கல்கள் நேரும் போது ஆங்கில விக்கிப்பீடியாவிலிருந்து வழிகாட்டலைப் பெறுவதே நடைமுறையாக இருந்து வருகிறது. இந்நிலையில் அதைப் பின்பற்றியதற்காக என்னைத் தடை செய்தமையைத் தன்னிச்சையான செயல் என்று கூறாமல் வேறெப்படிக் கூற வேண்டும்?

அவர் எந்த வழிகாட்டலையும் செய்யவில்லை. ஆங்கில விக்கிப்பீடியாவிலிருக்கும் பகுப்பை வேண்டுமென்றே தவிர்த்து, அவருக்கு நினைத்த பகுப்பில் மட்டுமே வர வேண்டுமென்று கூறினார். அவ்வாறு கூறுவதற்கு விக்கிப்பீடியா அவரது தனிப்பட்ட சொத்தல்ல. பகுப்பை மீண்டும் இணைக்க முற்பட்டால் தடை செய்து விடுவதாக மிரட்டினார். எனவே, நான் அப்பகுப்பை இணைக்கவில்லை. மாறாக, ஆங்கில விக்கிப்பீடியாவிலிருக்கும் பகுப்பு இதுதானென்று எடுத்துக் காட்டினேன். அதைச் சகித்துக் கொள்ள இயலாமல் என்னைத் தடை செய்து விட்டார்.

என்னைத் தடை செய்து விட்டு தனக்கு நினைத்தவாறு என்னைப் பற்றி அவதூறாக எழுதி, மற்றவர்கள் அவரது பக்கம் நியாயம் பேச வேண்டுமென்று எதிர்பார்ப்பது சரியா? நான் விவாதம் செய்வதையே நோக்கமாகக் கொண்டு செயற்படுகிறேனாம். அவர் எனது உள்ளத்தில் புகுந்து பார்த்தாராமா? கட்டுரைகளின் பேச்சுப் பக்கங்களில் அவற்றைப் பற்றிய கருத்துரைகள் கூறப்பட்டுக் கொண்டிருக்கும் போது, அவற்றைச் சரியான முறையில் எதிர் கொள்ள முடியாமல் எடுத்த எடுப்பிலேயே என்னுடைய கருத்தை ஏற்றுக் கொள், அல்லாவிட்டால் உன்னைத் தடை செய்து விடுவேன் என்றவாறு அச்சுறுத்தத் தொடங்கிய அவரது செயல் சற்றேனும் ஏற்கத் தக்கதன்று. அத்தகையவற்றை அடாவடித்தனம் என்று சொல்வது சாலப் பொருந்தும். அவர் தன் கருத்தை ஏற்காவிட்டால் தடை செய்து விடுவதாக மிரட்டிக் கொண்டே இருப்பாராம், அதை நாம் மிரட்டல் என்றோ அடாவடித்தனம் என்றோ கூறினால், நாம் கண்ணியமற்ற பேச்சில் ஈடுபட்டோமாம். ஒவ்வொரு கருத்தையும் தெளிவாக விளக்குவதற்குரிய சொற்கள் தமிழில் இருக்கும் போது, அவற்றைச் சரியாகப் பயன்படுத்தினாலேயே நாம் கூறுவது பிறருக்குத் தெளிவாக விளங்கும். ஒருவர் தவறாக நடக்கும் போது அவரது செயல் இதுதானென்று நாம் கூறிவிட்டால் மாத்திரம் நாம் கண்ணியமற்றுப் பேசுவதாகக் குற்றஞ் சாட்டுகிறார். அவரது செயலைப் பற்றி யாரும் கருத்துரைத்து விடக் கூடாது என்பதில் குறியாக இருக்கிறார். தனது சொந்த நடவடிக்கையின் குற்றத்தை மறைப்பதற்காக அடுத்தவரது சொல்லில் குற்றம் தேடுகிறார்.

போகிறீரா என்று அவரை ஒருமையில் அழைத்ததாகவும் குற்றஞ் சாட்டியிருக்கிறார். போகிறீரா என்ற சொல் ஒருமைச் சொல்லன்று. தமிழில் ஒருமை பன்மை கூடத் தெரியாத ஒருவர் இங்கு நிருவாகியாக இருப்பதுதான் வேதனைக்குரியது. நான் தேவையற்ற வாதம் செய்யவில்லை, அன்ரன் இவ்விடயத்தில் பொய்யுரைக்கிறார். நான் எவரதும் வழிகாட்டலை அலட்சியம் செய்யவுமில்லை. அவர் திணிக்க முயலும் கருத்தை நான் உள்வாங்கிக் கொள்ள வேண்டும் என்பது வழிகாட்டலல்ல. ஆங்கில விக்கிப்பீடியாவின் வழிகாட்டலை நான் பின்பற்றியுள்ள போது, அதைப் பின்பற்றியதற்காக என்னைத் தடை செய்த அன்ரன் தனது நிருவாக அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்தவராவார்.

எனவே, இவ்வாறு துஷ்பிரயோகம் செய்த அன்ரனுக்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுப்பதே முறை. அன்ரன் தமிழ் விக்கிப்பீடியாவில் நிருவாகப் பொறுப்பிலிருக்கும் வரை, நான் இனிமேலும் தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிக்க விரும்பவில்லை.--பாஹிம் (பேச்சு) 01:37, 7 ஆகத்து 2016 (UTC)


பாகிம், எந்த ஒரு நிருவாகியின் அணுக்கத்தையும் நீக்கக் கோரி இங்கு முறையிடலாம். தொடர்பற்ற மற்ற பக்கங்களில் கருத்துகளைப் பதிவதைத் தவிர்க்கவும். உங்கள் கடந்த காலச் செயற்பாடுகளைக் கருதி நன்னோக்குடனே தடை விலக்கம் செய்யப்பட்டது. எனவே, அதனைக் கருத்திற் கொண்டு ஆக்கப்பூர்வமான பங்களிப்புகளை மட்டும் தொடர வேண்டுகிறேன். கட்டுரைப் பொருள் குறித்து மட்டும் உரையாடல்களை மேற்கொள்ளவும். தனிப்பட்ட தாக்குதல்களைத் தவிர்க்கவும். நன்றி. --இரவி (பேச்சு) 06:09, 8 ஆகத்து 2016 (UTC)

நல்லெண்ணத்துக்கு நன்றி, இரவி.--பாஹிம் (பேச்சு) 12:24, 8 ஆகத்து 2016 (UTC)

தொடர்பு கொள்ள[தொகு]

அன்புடன் பாஹிம் உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாகுக தமிழ் விக்கிபீடியாவில் அண்மையில் உங்களை தடை செய்ததும் குறித்து தனிப்பட்ட முறையில் உங்களிடம் பேச உங்களின் தொடர்ப்பு முகவரியை தரமுடியுமா?உங்களது தனிப்பட்ட தொலைபேசி என் அல்லது இசுகைப் /மின்னஞ்சல்/வாட்ஸ்ஆப் என ஏதாவது உங்களின் தொடர்பு இலக்கத்தை தர விரும்பினால் தயவு செய்து அனுப்பவும் நன்றி.

தொடர்புகளுக்கு :
Skype ID : ijazijaz405
E mail : mohamedijazz29@gmail.com --Mohamed ijazz (பேச்சு) 05:05, 10 ஆகத்து 2016 (UTC)

பயனர் கணக்கு தடை[தொகு]

வணக்கம். தனிநபர் தாக்குதல் அல்லது அச்சுறுத்தல், தணிக்கை அச்சுறுத்தல் கொள்கையின் அடிப்படையில் தங்கள் கணக்கு 20 ஆகத்து 2017 வரை முடக்கப்பட்டுள்ளது. இந்நடவடிக்கையை விக்கிமீடியா அறக்கட்டளையின் கவனத்துக்கு உட்பட்டு பன்னாட்டு விக்கிமீடியா மேலாளர்கள் மேற்கொண்டுள்ளனர். நன்றி.--இரவி (பேச்சு) 12:10, 9 செப்டம்பர் 2016 (UTC)

என் மீதான தடை அநீதியானது.--பாஹிம் (பேச்சு) 05:05, 10 செப்டம்பர் 2016 (UTC)

முதற்பக்கக் கட்டுரை அறிவிப்பு[தொகு]ஆசிய மாதம், 2017[தொகு]

WAM 2017 Banner-ta.png

வணக்கம்,

ஆசிய மாதம் போட்டியில் 2015 அல்லது 2016-ம் ஆண்டு கலந்து கொண்டு, கட்டுரைகளை உருவாக்கி வருவதற்கு பாராட்டுக்களும் நன்றிகளும்.

2017-ம் ஆண்டிற்கான ஆசிய மாதப்போட்டி நவம்பர் 1 முதல் துவங்கியது. சுமார் 44 கட்டுரைகள் தற்போது வரை உருவாக்கப்பட்டுள்ளது. நீங்களும் இப்போட்டியில் கலந்துகொண்டு தங்களுடைய பங்களிப்பை நல்க அன்போடு அழைக்கின்றோம்.

நினைவுபடுத்தலுக்காக: பின்வரும் விதிகளுக்கேற்ப கட்டுரைகளை உருவாக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

 • கட்டுரைகளை (குறுங்கட்டுரை விரிவாக்கம் அல்ல) நவம்பர் 1, 2017 00:00 முதல் நவம்பர் 30, 2017 23:59 UTC வரையான காலப்பகுதியில் புதிதாக உருவாக்க வேண்டும்.
 • கட்டுரையின் உரைப்பகுதி (வார்ப்புரு, குறிப்புகள், உசாத்துணை, ஆதாரங்கள், நூல் பட்டியல் போன்றவை தவிர்த்து) குறைந்தது 300 சொற்களைக் கொண்டிருக்க வேண்டும். wordcounttools கொண்டு சொற்கள் எண்ணிக்கை சரி பார்க்கப்படும்.
 • குறிப்பிடத்தக்கமை நிறுவப்பட வேண்டும்.
 • உசாத்துணை, சான்றுகள், மேற்கோள்கள் நிறுவப்பட வேண்டும்.
 • 100% இயந்திர மொழிபெயர்ப்புகள் நிராகரிக்கப்படும்.
 • தமிழ் விக்கிப்பீடியா ஒருங்கிணைப்பாளர்களின் முடிவே இறுதியானது.
 • பட்டியல் பக்கங்கள் எழுதலாம். ஆனால், அஞ்சல் அட்டை பெறுவதற்கான கட்டுரை எண்ணிக்கையில் கருத்தில் கொள்ளலாகாது.
 • உங்களின் சொந்த நாட்டைப் பற்றி அல்லாமல் (எ.கா: இந்தியா, இலங்கை) மற்ற ஆசிய நாடுகள் அல்லது வட்டாரங்கள், ஆசியப் புவியியல் தோற்றப்பாடுகள் (எ.கா: மலை, நதி, பள்ளத்தாக்கு), இடங்கள், வரலாற்றுத் தளங்கள், கைத்தொழில்கள், கலாசாரம் பற்றியதாக இருக்க வேண்டும். நபர்கள், மொழிகள் பற்றிய கட்டுரைகள் ஏற்கப்பட மாட்டாது.
விரிவாக்கிய கட்டுரையை இங்கு சமர்ப்பிக்க

நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 20:28, 14 நவம்பர் 2017 (UTC)

விக்கிப்பீடியா ஆசிய மாதம் 2018 பங்கேற்க அழைப்பு[தொகு]

விக்கிப்பீடியா ஆசிய மாதம் 2018

வணக்கம். கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற விக்கிப்பீடியா ஆசிய மாதத்தில் பங்குபெற்றமைக்கு நன்றி. இந்த ஆண்டும், விக்கிப்பீடியா ஆசிய மாதம் 2018 நவம்பர் 1 முதல் நடந்து வருகின்றது. உங்களுடைய பங்களிப்பை நல்கிட வேண்டும். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 04:44, 2 நவம்பர் 2018 (UTC)

முத்தரைய அரச குலம்[தொகு]

நீங்கள் சொல்வது சரிதான்.வரலாற்றில் ஒன்றுமே நடக்கவில்லை.இந்த கட்டுரை தேவையான ஒன்றா [1] ஜெ.கலையரசன் (பேச்சு) 11:25, 9 சனவரி 2019 (UTC)

முத்தரையப் பேரரசு என்றிருந்தது. அதனாலேயே அதை நீக்கப் பரிந்துரைத்தேன். ஆயினும் முத்தரையர் மரபு தொடர்பான வரலாற்று ஆதாரங்களைக் கொண்டு கட்டுரையை விரிவுபடுத்தலாம். முத்துராஜா என்றிருப்பது முத்தரையர் மரபைக் குறிக்குமா என்பது தெரியவில்லை. தவறான வழிமாற்றாகக்கூட இருக்கலாம்.--பாஹிம் (பேச்சு) 11:33, 9 சனவரி 2019 (UTC)

நான் கூறியதில் ஏதேனும் தவறு இருந்தால் மன்னித்துவிடவும்.நன்றிஜெ.கலையரசன் (பேச்சு) 13:09, 11 சனவரி 2019 (UTC)

March 2019[தொகு]

தகவற் படவுரு வணக்கம், தமிழ் விக்கிப்பீடியாவில் பல்வேறு வகையான மாற்றுக்கருத்துகளையும் கொண்டவர்களால் எழுதப்படுகின்றது. ஆயினும், கட்டுரைகள் நடுநிலை நோக்கில் எழுதப்படுவதை உறுதிசெய்வதில் நாம் கவனமாக உள்ளோம். உங்கள் அண்மைய தொகுப்பு நடுநிலை நோக்கில் அமைந்திராததாகத் தென்பட்டதால், அதனை நீக்கியுள்ளேன். நன்றி. நந்தகுமார் (பேச்சு) 02:45, 2 மார்ச் 2019 (UTC)

Warning icon தயவு செய்து தேவைற்ற தொகுப்பினை நிறுத்துங்கள். இதனைத் தொடர்ந்து நடுநிலை நோக்கில் இல்லாத உள்ளடக்கத்தை கட்டுரையில் எழுதினால், நீங்கள் தடை செய்யப்படலாம். நந்தகுமார் (பேச்சு) 03:31, 2 மார்ச் 2019 (UTC)

Final warning இன்னொரு முறை நீங்கள் அவ்வாறு செய்தால் எச்சரிக்கை இன்றி தடை செய்யப்படுவீர்கள்.நடுநிலை நோக்கில் இல்லாத உள்ளடக்கத்தை கட்டுரையில் எழுதினால். நந்தகுமார் (பேச்சு) 03:34, 2 மார்ச் 2019 (UTC)

@Ravidreams:, @Kanags: - குறிப்பிடத் தக்கமை வார்ப்புரு இடுவது நடு நிலை மீறலா? நான் கட்டுரைப் பக்கத்தில் குறிப்படத் தக்கமை வார்ப்புருவை இட்டதற்காக என்னைத் தடை செய்து விடுவதாக அச்சுறுத்துகிறார் நந்தகுமார். இது விக்கிப்பீடியாவின் கொள்கையா?--பாஹிம் (பேச்சு) 03:37, 2 மார்ச் 2019 (UTC)


@Nan:, குறிப்பிடத் தக்கமை வார்ப்புருவை இடுவது நடுநிலை மீறலென்று எங்கு சொல்லப்பட்டுள்ளது? ஆதாரம் தாருங்கள். நீங்கள்தான் முறை தவறி எனது வார்ப்புருவை நீக்கி விட்டு என்னை அச்சுறுத்துகிறீர்கள்.--பாஹிம் (பேச்சு) 03:39, 2 மார்ச் 2019 (UTC)

@Fahimrazick:, கட்டுரைகளில் குறிப்பிடத் தக்கமை வார்ப்புரு இடுவது நடு நிலை மீறல் இல்லை. ஆனால், குறிப்பிட்ட கட்டுரைகளில் தொடர்ந்து இவ்விதம் வார்ப்புரு இடுவது நடு நிலை மீறலாகும்.--நந்தகுமார் (பேச்சு) 03:43, 2 மார்ச் 2019 (UTC)

குறிப்பிட்ட கட்டுரைகளில் என்றால் எவற்றில்? குறிப்பிடு தகைமை இல்லாத எக்கட்டுரையிலும் இடலாம் என்றே நான் விளங்கியிருக்கிறேன். உங்களால் அதற்குப் பதிலளிக்க முடியாமையால் என்னைத் தடை செய்து விடுவதாக அச்சுறுத்துகிறீர்கள். முடிந்தால் அதன் குறிப்பிடு தகைமையை நிறுவுங்கள்.--பாஹிம் (பேச்சு) 03:46, 2 மார்ச் 2019 (UTC)

@Nan:, உங்களுக்கு விருப்பமான கட்டுரைகளில் ஆதாரம் இல்லாவிட்டாலும், நடுநிலை இல்லாவிட்டாலும், குறிப்பிடு தகைமை இல்லாவிட்டாலும் நாம் கேள்வி கேட்டால் கேள்வி கேட்டவர்தான் நடுநிலை மீறியவரா? நீங்கள் சொல்லும் கருத்துக்கு ஆதாரம் இருந்தால் தாருங்கள்.--பாஹிம் (பேச்சு) 03:47, 2 மார்ச் 2019 (UTC)

குறிப்பிட்ட கட்டுரைகளில் (விடுதலைப் புலிகள், அவர்கள் போராட்டம் குறித்தக் கட்டுரைகளில்) தொடர்ந்து நீங்கள் இவ்விதம் செய்து வருவதைக் கண்டபின்பே இதை செய்தேன். என்னுடைய விருப்பம், வெறுப்பு இதில் ஏதுமில்லை. இக்கட்டுரைகள் என்னால் எழுதப்படவும் இல்லை.--நந்தகுமார் (பேச்சு) 03:53, 2 மார்ச் 2019 (UTC)

@Nan: நீங்கள் சொல்லும் குறிப்பிட்ட கட்டுரைகளில் குறிப்பிடு தகைமை எதுவுமில்லாவிட்டால் கேள்வி கேட்பது நடுநிலை மீறலா?--பாஹிம் (பேச்சு) 03:55, 2 மார்ச் 2019 (UTC)

குறிப்பிடு தகைமை இல்லை என நீங்கள் முடிவு செய்து இருந்தால் அதைப் பேச்சுப்பக்கத்தில் தெரிவியுங்கள். அதை விடுத்து விடுதலைப் புலிகள், அவர்கள் போராட்டம் குறித்தக் கட்டுரைகளில் தொடர்ந்து இவ்விதம் குறிப்பிடு தகைமை இல்லை என வார்புரு இடுவது நடுநிலைச் செயலாக தெரியவில்லை. நீங்கள் இவ்விதம் செய்வதன் மூலம் பிற பயனர்களை அச்சுறுத்துகிறீர்கள்.--நந்தகுமார் (பேச்சு) 04:03, 2 மார்ச் 2019 (UTC)

@Nan: வார்ப்புருவை இட்ட பின்னரே பேச்சுப் பக்கத்தில் தெரிவிக்க வேண்டும். வார்ப்புருவை இடாமல் பேச்சுப் பக்கத்தில் தெரிவித்தால் பலருக்குத் தெரியாது அங்குள்ள பிரச்சினை. விடுதலைப் புலிகளைப் பற்றிக் கேள்வி கேட்டால் நடு நிலை மீறலாக உங்களுத் தெரிவது எப்படி? அதன் ஆதரவாளர்களுக்கு மாத்திரமே அவ்வாறு தெரியலாம். உண்மையிலேயே குறிப்பிடு தகைமை இல்லாத கட்டுரைகளில் மாத்திரமே நான் அவ்வார்ப்புருவை இட்டு, பேச்சுப் பக்கத்திலும் கருத்துத் தெரிவித்து வருகிறேன். நீங்களோ வார்ப்புருவை இடுவது நடு நிலை மீறல் என்கிறீர்கள். அப்படியானால் வார்ப்புரு எதற்கு? @Ravidreams:, @Kanags:, @Mayooranathan: வந்து தெளிவுபடுத்துங்கள்.--பாஹிம் (பேச்சு) 04:07, 2 மார்ச் 2019 (UTC)

விடுதலைப் புலிகளைப் பற்றிக் கேள்வி கேட்டால் நடு நிலை மீறலாக எனக்கு தெரிவதாக எங்கேயாவது கருத்துத் தெரிவித்து இருந்தேனா? இல்லை. நீங்கள் இங்கு உளவியல் சண்டை நடத்துவதாகக் கருதுகிறேன். உங்கள் சொந்த கருத்துகளை (சாய்வு கோணத்தில்) எழுதி உள்ளீர்கள். இது பொதுவெளி என்பதை கவனத்தில் கொள்ளவும்.--நந்தகுமார் (பேச்சு) 04:17, 2 மார்ச் 2019 (UTC)

மேலே உள்ளது:

கட்டுரைகளில் குறிப்பிடத் தக்கமை வார்ப்புரு இடுவது நடு நிலை மீறல் இல்லை. ஆனால், குறிப்பிட்ட கட்டுரைகளில் தொடர்ந்து இவ்விதம் வார்ப்புரு இடுவது நடு நிலை மீறலாகும். --நந்தகுமார் (பேச்சு) 04:29, 2 மார்ச் 2019 (UTC)

விடுதலைப் புலிகள், அவர்கள் போராட்டம் குறித்தக் கட்டுரைகளில் தொடர்ந்து இவ்விதம் குறிப்பிடு தகைமை இல்லை என வார்புரு இடுவது நடுநிலைச் செயலாக தெரியவில்லை என்று சொல்கிறீர்கள். தற்போது விடுதலைப் புலிகளைப் பற்றிக் கேள்வி கேட்டால் நடு நிலை மீறலாக எனக்கு தெரிவதாக எங்கேயாவது கருத்துத் தெரிவித்து இருந்தேனா? இல்லை என்கிறீர்கள். மேலே சுட்டப்பட்டுள்ளவற்றிலுள்ள முன்னுக்குப் பின் முரணான கருத்துக்களைப் பாருங்கள். தற்போது குறிப்பிட்ட கட்டுரைகளில் தொடர்ந்து இவ்விதம் வார்ப்புரு இடுவது நடு நிலை மீறலாகும் என்கிறீர்கள். இதற்குரிய ஆதாரம் என்ன? இவ்வாறு கொள்கை வகுக்கப்பட்டுள்ளதா?--பாஹிம் (பேச்சு) 04:33, 2 மார்ச் 2019 (UTC)

நீங்கள் இங்கு உளவியல் சண்டை நடத்துவதாகவேக் கருதுகிறேன். உங்கள் சொந்த கருத்துகளை (சாய்வு கோணத்தில்) எழுதி உள்ளீர்கள். உங்கள் புரிதல் என்னை முன்னுக்குப் பின் முரணான கருத்துகள் கூறுபவனாக சித்தரிக்கிறது. நீங்கள் இவ்விதம் வார்ப்புரு இடுவது மூலம் பிற பயனர்களை அச்சுறுத்துகிறீர்கள். இது பொதுவெளி என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.--நந்தகுமார் (பேச்சு) 04:44, 2 மார்ச் 2019 (UTC)

நான் யாருடனும் சண்டை செய்யவில்லை. மேலே நீங்கள் கூறிய கருத்துக்களை உங்களுக்குச் சுட்டிக் காட்டினேன். என்னைத் தடை செய்து விடுவதாக அச்சுறுத்தியதும் நீங்களே. இரண்டு முறை அச்சுறுத்தியுள்ளீர்கள். தற்போது நான் அச்சுறுத்துவதாகக் கூறுகிறீர்கள். நீங்களே எனக்குச் சொன்ன வார்த்தைகளை உங்களுக்குச் சொல்லிக் காட்டிவிட்டு அவற்றின் கருத்து முரண்பாடுகளைச் சுட்டிக் காட்டியதை நீங்கள் உளவியல் சண்டை என்கிறீர்கள். என்னைத் தடை செய்வதாக அச்சுறுத்தியது நீங்களல்லவா?--பாஹிம் (பேச்சு) 04:51, 2 மார்ச் 2019 (UTC)

உங்கள் புரிதல் குறித்து கருத்து கூற என்னிடம் வார்த்தைகள் இல்லை.--நந்தகுமார் (பேச்சு) 04:58, 2 மார்ச் 2019 (UTC)

நான் இன்னும் பாகிமின் தொகுப்புகளைக் காணவில்லை. ஆனால், ஒரு துறை சார்ந்த கட்டுரைகளில் மட்டும் குறிப்பிடத்தக்கமை வார்ப்புரு இடுவது நடுநிலை மீறல் என்று கருத இடம் இல்லை. அவ்வாறு ஒருவர் வார்ப்புரு இடக் கூடாது என்று கோருவதிலும் நியாயம் இல்லை. குறிப்பிடத்தக்கமை வார்ப்புரு இணைத்தால், குறிப்பிடத்தக்கமையை நிறுவ முனைய வேண்டுமே தவிர, வார்ப்புருவே இணைக்கக் கூடாது என்று சொல்லக்கூடாது. இந்தக் காரணத்தை முன்னிட்டு பாகிமுக்கு தடை எச்சரிக்கை தருவது தவறு. நானும் ஒரு காலத்தில் தொடர்ந்து பல கிரிக்கெட் வீரர்களின் கட்டுரைகளில் இவ்வாறு வார்ப்புரு இணைத்திருக்கிறேன். ஆனால், ஒரே துறை சார்ந்து நூற்றுக் கணக்கான கட்டுரைகள் இருக்கும் போது, அவை எல்லாவற்றிலும் வார்ப்புரு இணைப்பதைக் காட்டிலும், துறை சார்ந்து அத்தகைய கட்டுரைகளுக்குத் தேவைப்படும் குறிப்பிடத்தக்கமை என்ன என்று உரையாடி ஒரு முடிவுக்கு வர முனையலாம். ஆனால், இது மிகவும் சிக்கலான உரையாடல். இதற்கு முன் தமிழ் விக்கிப்பீடியாவில் இப்படி முனைந்த சில துறைகள் முடிவேதும் எட்ட இயலாமல் உள்ளன. ஆங்கில விக்கிப்பீடியாவில் துறை சார்ந்து அப்படி சில முடிவுகள் உள்ளன. Movies, Books notability என்று தேடினால் வரும். விடுதலைப் புலிகள் தொடர்பான உரையாடல் மிகவும் senstive ஆனது என்பதால், நேரடியாக அதைப் பற்றி உரையாடாமல், பொதுவாக உலகளாவிய போராளி அமைப்புகள் தொடர்பான கட்டுரைகளில் தேவைப்படும் குறிப்பிடத்தக்கமை என்னவென்று உரையாட முனையலாம். இந்த உரையாடலில் முடிவு எட்டும் வரை இதே துறை சார்ந்த அனைத்துக் கட்டுரைகளிலும் வார்ப்புரு இணைப்பதைத் தவிர்க்கலாம். இது விக்கிப்பீடியா விதிகளை நான் புரிந்து கொண்ட அளவில் முன்வைக்கும் என்னுடைய தனிப்பட்ட கருத்து. --இரவி (பேச்சு) 20:48, 3 மார்ச் 2019 (UTC)

@Ravidreams: பாகிமின் தொகுப்புகளைக் காணாமல் இங்கு கருத்துத் தெரிவிப்பது நடுநிலையானதாக இராது. குறிப்பிடத்தக்கமை கோரி வார்ப்புருவை யாரும் எந்தக் கட்டுரையிலும் முன்வைக்கலாம் என்பது உண்மை. ஆனால், அவ்வாறு வைப்பவர், அது குறித்து கட்டுரையின் உரையாடல் பக்கத்தில் தனது கருத்துகளை முன்வைக்க வேண்டும். குறிப்பாக விடுதலைப் புலிகளைப் பற்றிய கட்டுரைகளில். இங்கு அவர் எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் வார்ப்புருவை சேர்க்கிறார். இதனால் தொகுப்புப் போர் நடந்தது. பாகிம் குறிப்பாக புலிகளின் கட்டுரைகளைக் குறி வைப்பது இது முதல் தடவையும் அல்ல. ஆரம்பகாலக் கட்டுரைகள் ஏராளமானவை மேற்கோள்கள் எதுவும் இல்லாமலேயே எழுதப்பட்டுள்ளன என்பது உங்களுக்குத் தெரியாததல்ல. அதற்காக அவற்றை இப்போது அழிப்பது என்பது எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல. குறிப்பிட்ட கட்டுரை ஆங்கில விக்கியிலும் தனித்தே உள்ளது. இவ்வாறான வரலாற்றுக் கட்டுரைகள் தனித்திருப்பதே சிறந்தது. தனிக் கட்டுரைக்கான போதிய தகவல்களும் உள்ளன.--Kanags (பேச்சு) 07:04, 4 மார்ச் 2019 (UTC)

வார்ப்புருவைச் சேர்த்தவுடனேயே அவர் அதனை இரண்டு முறை மீளமைத்ததால் மீண்டும் வார்ப்புருவைச் சேர்த்து விட்டு பேச்சுப் பக்கத்தில் கருத்துத் தெரிவித்திருக்கிறேன். அதற்குள் அவர் என்னைத் தடை செய்து விடுவதாக அச்சுறுத்தத் தொடங்கினார். பேச்சுப் பக்கத்தில் கருத்துத் தெரிவிக்க முன்னரே அவரிடமிருந்து எனக்கு அச்சுறுத்தல் வரத் தொடங்கியது. அதனைத்தான் நீங்கள் தொகுப்புப் போர் என்கிறீர்கள். அடுத்தது, நான் ஒன்றும் விடுதலைப் புலிகள் தொடர்பான கட்டுரைகளைக் குறி வைக்கவில்லை. பேச்சு:தமிழ்நாட்டில் நெகிழிப் பொருட்கள் மீதான தடை போன்ற இன்னும் பல கட்டுரைகளுக்கும் குறிப்பிடு தகைமையைக் கேள்விக்குட்படுத்தியுள்ளேன். ஆனால், உங்களுக்கு விடுதலைப் புலிகள் தொடர்பான கட்டுரைகளுக்குக் குறிப்பிடு தகைமை இல்லாமையைக் கேள்வி கேட்டால் மாத்திரம் கண்ணுக்குப் புலப்படுவது எப்படியென்று தெரியவில்லை. அது எதைப் பற்றிய கட்டுரையாக இருந்தாலும் என்னுடைய பார்வைக்கு வந்தால், குறிப்பிடு தகைமை இல்லாவிட்டால் கேள்வி கேட்கத்தான் செய்வேன். அது தமிழ் விக்கிப்பீடியாவின் கொள்கைகளுக்கு முரணாக இருந்தால் கூறுங்கள். அக்கொள்கை எங்குள்ளது என்றும் சுட்டிக் காட்டுங்கள்.--பாஹிம் (பேச்சு) 07:20, 4 மார்ச் 2019 (UTC)


@Kanags: நீங்கள் மேலே சுட்டியுள்ள தொகுப்புப் போர் இணைப்பைப் பார்த்தேன். ஒருவர் மூன்று முறைக்கு மேல் ஒரு பக்கத்தின் தொகுப்புகளை மீள்வித்தால், பக்கத்தைப் பூட்டி வைத்துத் தொடர்ந்து பேச்சுப் பக்கத்தில் உரையாட வலியுறுத்தலாம். 3 Revert Rule விதியை முன்வைத்து தடை செய்யப்படக்கூடும் என்றும் கூட சுட்டிக் காட்டலாம். ஆனால், ஒரு துறை சார்ந்த கட்டுரைகளில் குறிப்பிடத்தக்கமை வார்ப்புருவே இணைக்கக் கூடாது என்று குறிப்பிடுவது முறையன்று. குறிப்பிடத்தக்கமை வார்ப்புரு இணைக்கப்பட்டால், குறிப்பிடத்தக்கமை கேள்விக்குட்படுத்துப்பட்டுள்ளது என்று தான் பொருள். இதற்கு பேச்சுப் பக்கத்தில் கருத்து தெரிவிக்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை. நூற்றுக் கணக்கான கட்டுரைகளில் இது போன்று சான்று இல்லை என்றும், குறிப்பிடத்தக்கமை இல்லை என்றும் இதற்கு முன் வார்ப்புருக்கள் இணைக்கப்பட்டுள்ளன. எந்த ஒரு பயனரையும் குறிப்பிட்ட ஒரு துறையில் தான் பங்களிக்க வேண்டும் என்றும் பங்களிக்கக் கூடாது என்றும் நாம் வலியுறுத்த இயலாது. அவரவர்களுக்கு ஆர்வம் உள்ள துறைகளில் தான் அவர்கள் பங்களிக்க முனைவார்கள். அதே வேளை, இதே வார்ப்புருவை தொடர்ந்து பல கட்டுரைகளில் இணைப்பதை விடுத்து பொதுவான கொள்கை உரையாடலை நோக்கி முன்னேறுமாறும் பாகிமுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளேன். விக்கிப்பீடியாவைக் காணும் பயனர்கள் அதனை புதிய கட்டுரை, பழைய கட்டுரை என்று பிரித்துப் பார்ப்பதில்லை. பொதுவாக, அனைத்துக் கட்டுரைகளின் தரத்தையும் தொடர்ந்து மேம்படுத்த வேண்டும் என்பது தான் நமது நோக்கம். நன்றி. --இரவி (பேச்சு) 07:26, 4 மார்ச் 2019 (UTC)
@Ravidreams: பாகிம் உண்மையில் இணைப்பு வார்ப்புருவைத் தான் சேர்த்திருக்க வேண்டும். அதன் பின்னர் அது குறித்து உரையாடியிருக்க வேண்டும். அவ்வாறில்லாமல், அவர் குறிப்பிடத்தக்கமை வார்ப்புருவை சேர்த்து, கட்டுரையை நீக்கச் சொல்லிக் கேட்கிறார். இது எவ்வாறு தகும்? இது முழு வரலாற்றையும் மூடி மறைப்பது போல அல்லவா உள்ளது? கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் அவர் பின்னர் சேர்த்த உரையாடலைக் கவனியுங்கள். இரண்டு வார்ப்புருக்களுக்கும் வேறுபாடு தெரிந்திருக்க வேண்டும். ஏராளமான கொரிய தொலைக்காட்சித் தொடர்கள், நடிக நடிகையர், திரைப்படங்கள் பற்றிய குப்பைகளை இப்போது சில தனிப்பட்டவர்கள் இங்கு ஆயிரக்கணக்கில் உருவாக்கி வருகிறார்கள். இவர்களுக்கு இவற்றை எழுதுவதற்கு யாரும் பணம் கொடுக்கிறார்களோ என்ற ஐயப்பாடு எனக்குள்ளே எழுவதுண்டு. அவற்றை நாம் கண்டும் காணாதது போலச் செல்கிறோம்.--Kanags (பேச்சு) 07:55, 4 மார்ச் 2019 (UTC)
{ping|Kanags}} குறிப்பிட்ட கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் என் கருத்துகளை இட்டிருக்கிறேன். ஒரு கட்டுரை விக்கிப்பீடியா விதிகளுக்கு உட்பட்டு எழுதப்பட்டிருக்கிறதா என்று மட்டும் பார்ப்போம். மற்ற பயனர்களின் பங்களிப்புகளைக் குப்பை என்று அழைக்க வேண்டாம். அது அக்கட்டுரைகளை எழுதுவோரைப் புண்படுத்தக் கூடும். விக்கிப்பீடியா விதிகளின் படி பணம் பெற்று எழுதுவது தவறு இல்லை. அவர்கள் பணம் வாங்கிக் கொண்டு எழுதினால், பணம் பெறுகிறார்கள் என்ற அறிவிப்பை பயனர் பக்கத்தில் இட்டால் போதுமானது. நன்றி --இரவி (பேச்சு) 08:10, 4 மார்ச் 2019 (UTC)

விக்கிபீடியாவிலிருந்து விலகல்[தொகு]

@Ravidreams:, தங்கள் கருத்துக்கு நன்றி. நீங்கள் நான் தவறு செய்ததாக கருதுவதால் இன்றுடன் விக்கிபீடியாவிலிருந்து விலகிக் கொள்கிறேன்.--நந்தகுமார் (பேச்சு) 02:13, 4 மார்ச் 2019 (UTC)
அண்ணா, உங்கள் முடிவை மீளப் பரிசீலியுங்கள். புது பயனர்களுக்கு நீங்கள் ஒரு வழிகாட்டியாக இருக்கிறீர்கள். --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 05:10, 4 மார்ச் 2019 (UTC)
@Nan: நீங்கள் தமிழ் விக்கிப்பீடியாவின் மிகச் சிறந்த பங்களிப்பாளர்களுள் முதன்மையானவர். ஒரு சிக்கல் தொடர்பாக என்னுடைய கருத்தை மட்டுமே முன்வைத்தேன். இது தொடர்பாக மற்றவர்கள் கருத்து என்னவென்றும் பார்க்கலாம். விக்கிப்பீடியா விதிகள் சில வேளைகளில் ஒரு நாட்டின் சட்டத்தை விட குழப்பமானவையாக உள்ளன. பல ஆண்டுகள் பங்களித்து வருபவர்களே சில முறை தவறான புரிதலுடன் ஒரு சிக்கலை அணுகுவது இயல்பு தான். எது சரி என்று புரிந்து கொண்டு நம் புரிதலையும் மேம்படுத்திக் கொண்டு மற்றவர்களுக்கும் வழி காட்டுவோம். அருள்கூர்ந்து, என் கருத்தைத் தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொள்ள வேண்டாம். தொடர்ந்து பங்களிக்க வேண்டுகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 06:50, 4 மார்ச் 2019 (UTC)
@Nan: இங்கு சம்பந்தப்பட்டது ஒரு sensitive issue. குறிப்பாக இலங்கையில் இருந்துகொண்டு இதுபற்றிக் கருத்துச்சொல்ல நான் விரும்பவில்லை. ஆனால், நந்தகுமார் நீங்கள் தமிழ் விக்கிப்பீடியாவின் மிக முக்கியமான பங்களிப்பாளர்களுள் ஒருவர். விலகுவதாக அறிவித்திருப்பது மிகுந்த வருத்தத்தைத் தருகிறது. தயவுசெய்து உங்கள் முடிவை மீளாய்வு செய்யவும். உங்களுடைய பணி மிகுந்த மதிப்புக்கு உரியது. அது தொடர்ந்தும் எங்களுக்குத் தேவை. ---மயூரநாதன் (பேச்சு) 18:07, 4 மார்ச் 2019 (UTC)

ரலி[தொகு]

வணக்கம். சமீபத்தில் இசுலாமிய நண்பரின் கட்டுரையில் பெயருக்குப் பின் (ரலி) என சில கட்டுரைையில் எழுதியுள்ளார். அதனைப் பற்றி விளக்கவுும். நன்றி ஸ்ரீ (talk) 16:16, 14 ஆகத்து 2019 (UTC)

வலைத்ததளத்தில் தேடியபோது இறந்தவர்களுக்கு குறிப்பது என இருந்தது. அது சரிதானா?

இல்லை. ரலி என்று குறிப்பது அறபு மொழியில் (அவரை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக என்ற பொருளில்) ரழியல்லாஹு அன்ஹு/அன்ஹா ... என்றவாறு குறிக்கப்படுவதன் சுருக்கம். இது பொதுவாக முஹம்மது நபி (ஸல்) அவர்களின் தோழர்களைக் குறிக்கும் போது அவர்களின் பின்னால் சேர்த்து எழுதப்படுகிறது.--பாஹிம் (பேச்சு) 16:28, 14 ஆகத்து 2019 (UTC)

பதிலுுக்கு நன்றி. அதனை கட்டுரைத் தலைப்பில் சேர்த்து எழுதுவது சரிதானா எனக் கூறவும். நன்றி ஸ்ரீ (talk) 16:33, 14 ஆகத்து 2019 (UTC)

கட்டுரைத் தலைப்பில் சேர்த்து எழுதுவதே நல்லது. காரணம், முஹம்மது நபி (ஸல்) அவர்களின் தோழர்களின் பெயர்களையே தமது பெயராகக் கொண்ட பல மில்லியன் கணக்கானோர் இருக்கின்றனர். அவ்வாறு சேர்த்து எழுதும் போது அது குறிப்பாக அவர்களுக்கேயுரியது என்பதால் அவ்வப் பெயர்களைக் கொண்ட ஏனையோரிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும்.--பாஹிம் (பேச்சு) 16:37, 14 ஆகத்து 2019 (UTC)

மகிழ்ச்சி. நன்றிஸ்ரீ (talk) 16:39, 14 ஆகத்து 2019 (UTC)

வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்பு[தொகு]

சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்திய அளவிலான வேங்கைத் திட்டம் 2.0 கட்டுரைக்குப் போட்டி நடைபெற உள்ளது. சென்ற முறை நாம் இரண்டாம் இடம் பெற்றோம். இந்த முறை தாங்களும் இந்தப் போட்டியில் பங்குபெற்று நம் சமூகம் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். போட்டியின் விதிமுறைகள் சுருக்கமாக

குறுக்கு வழி:
WP:TIGER2
Emoji u1f42f-2.0.svg
கவனிக்க: கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் இருந்து மட்டுமே கட்டுரை எழுத வேண்டும்

உங்கள் பெயர் பதிவு செய்க கட்டுரைகளைப் பதிவு செய்க

மேலும் விவரங்களுக்கு இங்கு காணவும். நம் சமூகம் தங்கள் ஒத்துழைப்புடன் வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி -நீச்சல்காரன்

துடுப்பாட்ட சொல்லியல்[தொகு]

துடுப்பாட்ட சொல்லியல் பக்கத்தில் தங்களின் உதவி தேவை. நன்றி ஸ்ரீ (✉) 06:58, 6 திசம்பர் 2019 (UTC)

பின்னூட்டம் தருக[தொகு]

பேச்சு:நஃபந்தான் என்ற கட்டுரையில், நீங்கள் தலைப்புக் குறித்து பின்னூட்டம் அளித்துள்ளீர்கள். மேலும், அதில் பின்னூட்டம் தருக.--உழவன் (உரை) 02:08, 14 திசம்பர் 2019 (UTC)

ஜரிகை என்ற கட்டுரை[தொகு]

ஜரிகை என்ற கட்டுரையை அல்லது பகுதியை சரிகை உடன் ஒன்றிணைக்க பரிந்துரைத்திருந்தீர்கள். அப்படியே செய்து விடலாம். நன்றி 🙏 ராம்குமார் கல்யாணி 🌿 11:45, 2 சூன் 2020 (UTC)

நகர்த்தல்[தொகு]

பேச்சுப்பக்கத்தில் உரையாடி, முடிவை எட்டியபின் கட்டுரையை நகர்த்தவும். நன்றி. --AntanO (பேச்சு) 02:18, 15 சூலை 2020 (UTC)

July 2020[தொகு]

Information icon Welcome to Wikipedia and thank you for your contributions. I am glad to see that you are discussing a topic. However, as a general rule, talk pages are for discussion related to improving the article, not general discussion about the topic or unrelated topics. If you have specific questions about certain topics, consider visiting our reference desk and asking them there instead of on article talk pages. Thank you. AntanO (பேச்சு) 03:26, 15 சூலை 2020 (UTC)

எனக்கு எதற்காக இப்போது நீங்கள் இதனைக் கூறுகிறீர்கள்? தமிழிலேயே கூறுங்களேன். ஆங்கிலம் தெரியாதவர்களும் நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பதை விளங்கிக் கொள்ளலாம்.--பாஹிம் (பேச்சு) 03:28, 15 சூலை 2020 (UTC)

We sent you an e-mail[தொகு]

Hello Fahimrazick,

Really sorry for the inconvenience. This is a gentle note to request that you check your email. We sent you a message titled "The Community Insights survey is coming!". If you have questions, email surveys@wikimedia.org.

You can see my explanation here.

MediaWiki message delivery (பேச்சு) 18:54, 25 செப்டம்பர் 2020 (UTC)

தடை முயற்சி[தொகு]

வேண்டாத பொண்டாட்டி கை பட்டாலும் குற்றம் கால் பட்டாலும் குற்றம் என்றொரு பழமொழி உண்டு. அங்ஙனமே இங்கே விக்கிப்பீடியாவில் ஒரு நிருவாகி நான் எதை எழுதினாலும் அதிற் குற்றங் காண முனைவதும் என்னைத் தொடர்ந்து அச்சுறுத்துவதும் எப்படியாவது எதையாவது காரணங் காட்டி என்னைத் தடை செய்ய முயல்வதும் பலரும் அறிந்த ஒன்றே. அவரைத் தவிர இங்குள்ள ஏனைய பயனர்கள் அனைவரும் ஒரு வகையான புரிந்துணர்வுடனும் ஒத்தாசையுடனும் நடந்து கொள்வதே வழமை. அடிக்கடி வாதப் பிரதிவாதங்கள் ஏற்படுவதும் அவற்றைக் குறை கூறிக் கொண்டிராமல் நல்லதொரு முடிவை எட்டுவதும் கிட்டத்தட்ட ஏனைய எல்லாப் பயனர்களுடனும் சாத்தியமே. அவ்வனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். ஆயினும் ஒரு நிருவாகி தடை செய்து விடுவதாகத் தொடர்ந்தும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நிலையிலும் நான் என் அறிவைத் தமிழுலகத்துக்கு வழங்கத்தான் வேண்டுமா என்பதைச் சற்று எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது. ஓய்வாகக் கிடைக்கும் சில பொழுதுகளை இவ்வழியிற் கழிப்பது எனதறிவு பிற்காலச் சமுதாயத்துக்கும் பயன் கொடுக்கட்டுமே என்ற நல்லெண்ணத்திலேயன்றி வேறெதற்காகவுமல்ல. இங்கே கழிக்கா விட்டால் எனது பொருளாதார முயற்சிகளில் எனது நேரத்தைக் கழிக்கலாம். அது எனக்கும் எனது சந்ததிக்கும் எனது உற்றார் உறவினர் நண்பர்கள் சுற்றத்தினரென என்னைச் சேர்ந்தோருக்கும் சார்ந்தோருக்கும் பயன்படும். உலக நாடுகளில் பொருளாதாரம் பின்னடைந்திருக்கும் இக்கால கட்டத்தில், அதற்காக முயற்சியெடுப்பது வீட்டுக்கும் நாட்டுக்கும் தேவையாக இருந்த போதிலும் நான் சிறிது நேரத்தை இங்கே தமிழுலகத்துக்காகக் கழித்துக் கொண்டிருப்பது வேண்டாமென்றால் அல்லது அந்த நிருவாகி நினைப்பது போல என்னைத் தடை செய்யத்தான் வேண்டுமென்றால் அல்லது அவ்வாறாகக் கூடாது என்றால் அதைப் பற்றி ஏனைய நிருவாகிகளினதும் பயனர்களினதும் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன். அதைப் பொறுத்தே நான் இனியும் விக்கித் திட்டங்களிற் பங்களிக்க வேண்டுமா அல்லது வேண்டுமென்றே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் அவர்களுக்கே விட்டு விட்டு என் வழியைப் பார்த்துக் கொண்டு செல்வதா எனத் தீர்மானிக்க வேண்டும்.--பாஹிம் (பேச்சு) 05:20, 20 அக்டோபர் 2020 (UTC)

பக்கத்தை நகர்த்துதல்[தொகு]

விக்கிப்பீடியா:பக்கத்தை நகர்த்துதல் - பக்கத்தை நகர்த்தும் முன், வார்ப்புரு இட்டு, பேச்சுப்பக்கத்தில் உரையாட வேண்டும். இவற்றைத்தவிர்த்து நகர்த்தக்கூடியதாயின், திருத்தத்திற்கான காரணத்தை "காரணம்" என்பதில் இடவும். --AntanO (பேச்சு) 03:35, 26 அக்டோபர் 2020 (UTC)

எல்லாத் தலைப்புக்களுக்கும் காரணம் கூறியாக வேண்டுமா? நான் அண்மைக் காலத்தில் நகர்த்திய பெரும்பாலான தலைப்புக்கள் வெறுமனே தமிழ் இலக்கணத்துக்கு முறைப்படுத்துதல் மாத்திரமே. அவற்றின் பெயர்களை வலிந்து மாற்ற வேண்டியவற்றுக்கு பேச்சுப் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறேன்.--பாஹிம் (பேச்சு) 03:39, 26 அக்டோபர் 2020 (UTC)

காரணம் கட்டாயம் குறிப்பிட வேண்டும். அண்மைய மாற்றங்களைக் கவனிப்பவர்களுக்கு அது உதவியாக இருக்கும். காண்க: விக்கிப்பீடியா:பக்கத்தை_நகர்த்துதல்#எவ்வாறு_ஓர்_பக்கத்தை_நகர்த்துவது --AntanO (பேச்சு) 03:46, 26 அக்டோபர் 2020 (UTC)

தலைப்பு ஐயம்[தொகு]

இசுலாமியப் பெயர்களில் வரும் Abdullatif Al-Mahmood) இந்தக் குறி தமிழில் கட்டாயம் இடம்பெற வேண்டுமா? நன்றி ஸ்ரீ (✉) 13:15, 26 அக்டோபர் 2020 (UTC)

அப்படி வரும் இடங்களில் அவ்வாறு சேர்ப்பதே நல்லது. அது மூல மொழிக்கேற்பச் சரியான ஓசையைப் பேண உதவும். கட்டாயம் என்பதில்லை.--பாஹிம் (பேச்சு) 14:51, 26 அக்டோபர் 2020 (UTC)

மற்றொரு விடயத்தையும் கவனிக்க வேண்டும். Al-Khalifa, Al Khalifa என எழுதப்படும் போது ஒரு வித்தியாசம் பேணப்படுகிறது. இங்கே Al-Khalifa என்பது அல்-கலீபா (الخليفة) என்றும் Al Khalifa என்பது ஆல் கலீபா (آل خليفة) என்றுமே வாசிக்கப்படவும் எழுதப்படவும் வேண்டும். இரண்டுக்கும் சற்று பொருள் வித்தியாசப்படும். பலர் தெரியாமல் இரண்டையும் ஒன்று போல் எழுதுகிறார்கள்.--பாஹிம் (பேச்சு) 14:58, 26 அக்டோபர் 2020 (UTC)

தாங்கள் இரண்டாவதாக கூறியதற்கு விளக்கம் தந்தால் அதனை விக்கிப்பீ
டியா: தலைப்பிடல் எனும் பக்கத்தில் சேர்க்க உதவியாக இருக்கும் அவ்வாறு சேர்ப்பதன் மூலம் இஸ்லாம் தொடர்பான பெயர்களை உருவாக்குவதற்கு அது நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். நன்றி ஸ்ரீ (✉) 16:07, 26 அக்டோபர் 2020 (UTC)

இதில் அல்-கலீபா என்றால் கலீபா எனும் கோத்திரத்தைச் சேர்ந்தவர் என்று பொருள். ஆல் கலீபா என்றால் கலீபா என்பவரின் வழித்தோன்றல் என்று பொருள். எடுத்துக் காட்டாக, சவூதி அரச குடும்பத்தவர்கள் அந்த இராச்சியத்தை நிறுவிய சவூத் என்பவரின் வழித்தோன்றல் என்பதைக் காட்ட தமது பெயருக்குப் பின்னால் ஆல் சவூத் என்று சேர்த்துக் கொள்கின்றனர். ஆனால் குவைத் அரச குடும்பத்தவர்கள் அல்-சபா என்று கூறுவதன் பொருள் சபா என்னும் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாகும். சபா என்ற பெயரில் பெருங்கோத்திரம் கிடையாதென்றே நினைக்கிறேன். அது ஒரு கிளைக் கோத்திரமாக இருக்கலாம்.--பாஹிம் (பேச்சு) 16:18, 26 அக்டோபர் 2020 (UTC)

முஸ்லிம்கள் பெயர்களை தமிழில் எழுதும்போது பலருக்கு சிக்கல் உண்டாகும். ஒலிவடிவத்தை வைத்து பெயர்களை தமிழில் எழுதுவது ஒரு சிறந்த வழியாக இருக்கும். --பாஹிம் தாங்கள் அல் மற்றும் ஆல் என்பதற்கு அளித்த விளக்கும் எனக்கு புதியதாக உள்ளது. இது தொடர்பான தரவுகள் பகிர முடிந்தால் எனது பேச்சு பக்கத்தில் பகிருங்கள். அல் விசயத்தில் ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படும் The க்கு நிகரான ஒரு சொல். இது இதற்கு அடுத்து வரும் சொல்லை பொருத்து சொல் மாறும் உதாரணமாக அல் ரஹீம் என்பது அர்ரஹீம் என்றும், அல் சாதிக் அச்சாதிக் என்றும் மாறும். அரபியர்கள் தங்களுடைய பெயருக்கு பின்னால் தந்தையின் பெயரையும் குடும்ப அல்லது கோத்திர பெயரையும் சேர்த்தே பயன்படுத்தும் வழக்கம் கொண்டவர்கள். தலைப்பில் அவர்களுடைய முழு பெயரையும் கொடுப்பது அவசியமாக இருக்காது. --Yousufdeen (பேச்சு) 14:28, 29 அக்டோபர் 2020 (UTC)


உள்ளகப் பயிற்சி-2020[தொகு]

Thanks in tamil.jpg
வணக்கம்,பாஹிம் தமிழ் விக்கிப்பீடியாவில் நடைபெற்ற விக்கிப்பீடியா:தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2020 இல் கலந்துகொண்ட மதுரை பாத்திமா கல்லூரி மாணவர்களுக்கு விக்கிப்பீடியாவில் மொழிபெயர்ப்பு தொடர்பாக பயிற்சி அளித்தமைக்காக ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பாக நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

ஸ்ரீ (✉) 13:28, 29 நவம்பர் 2020 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Fahimrazick&oldid=3066869" இருந்து மீள்விக்கப்பட்டது