உள்ளடக்கத்துக்குச் செல்

துடுப்பாட்ட சொல்லியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

துடுப்பாட்டத்தில் பயன்படுத்தப்படும் சொற்களின் பட்டியல்:[1]

| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | |


அகல வீச்சு (wide)

[தொகு]
 • வீசப்பட்ட பந்து முறையற்ற வகையில் மட்டையாளரை விட்டு அகன்று செல்வது. இதன் விளைவாக மட்டையாடும் அணிக்கு கூடுதல் ஓட்டம் வழங்கப்படும். ஒவ்வொரு நிறைவிலும் வீசப்படும் ஆறு முறையான வீச்சுகளில் அகல வீச்சு சேர்க்கப்படாது என்பதால் அதை ஈடுசெய்யும் வகையில் கூடுதலாக ஒரு வீச்சு இடம்பெறும்.

அரைநூறு (half century)

[தொகு]
 • மட்டையாளர் 50 ஓட்டங்களை எட்டுவது. இது உயர்வரிசை மட்டையாளருக்குக் குறிப்பிடத்தக்க சாதனையாகவும் கீழ்வரிசை மட்டையாளருக்கு சிறந்த சாதனையாகவும் கருதப்படுகிறது.
 • தனது அணியின் ஆட்டத்தை முடித்துக் கொள்வதாக தலைவர் அறிவித்தல்

அனைத்திழப்பு (all out)

[தொகு]
 • அணியின் பத்து மட்டையாளர்களும் ஆட்டமிழத்தல்

ஆடுபவர் (striker)

[தொகு]
 • பந்துவீச்சை எதிர்கொள்ளத் தயாராக நிற்கும் மட்டையாளர்

ஆட்ட நாயகன் (man of the match)

[தொகு]
 • ஆட்டத்தின் சிறந்த வீரருக்கு வழங்கப்படும் விருது

ஆட்ட நேரம் (playing time)

[தொகு]
 • விளையாடும் நேர அளவு

ஆட்ட நேர முடிவு (stumps)

[தொகு]
 • ஒன்றிற்கும் மேற்பட்ட நாட்கள் நடைபெறும் போட்டியில் அன்றைய நாளின் ஆட்ட நேரம் முடிவடைதல் (எ-டு: முதல் நாள் ஆட்ட நேர முடிவு, stumps on day 1)
 • ஆட்டத்தின் பகுதி- ஒரு அணி அல்லது அதன் மட்டையாளர் தங்களின் முறை வரும்போது களமிறங்கி விளையாடுவதைக் குறிக்கும்.
 • மட்டையாளர் ஆட்டமிழந்து வெளியேறுதல்

ஆறு (six)

[தொகு]
 • மட்டையாளர் அடித்த பந்து நிலத்தில் பட்டு எகிறாமல் எல்லையைத் தாண்டிச் செல்வது- இதனால் மட்டையாளருக்கும் அவரது அணிக்கும் 6 ஓட்டங்கள் கிடைக்கும்
 • ஒளிக்குறைந்த நேரத்தில் ஒரு நாளின் ஆட்டநேரத்தில் மீதமுள்ள நிறைவுகளை ஆடுவதற்காக களமிறக்கப்படும் கீழ்வரிசை மட்டையாளர். ஆட்டநேரம் முடியும் வரை களத்தில் தன்னுடன் உள்ள அணியின் முக்கியமான மட்டையாளரை ஆட்டமிழக்காமல் காப்பாற்றுவதே இவரது பணியாகும்.

இரவுணவு (dinner)

[தொகு]
 • பகல்/இரவுத் தேர்வுப் போட்டியில் வழங்கப்படும் உணவு இடைவேளை

இரட்டையடி (hit the ball twice)

[தொகு]
 • வீசப்பட்ட பந்தை தனது மட்டையால் இருமுறை அடித்தால் மட்டையாளர் ஆட்டமிழப்பார். எனினும் இழப்பைக் காக்கும் நோக்கில் அடித்திருந்தால் ஆட்டமிழக்க மாட்டார்.
 • குச்சிகளும் மரத்துண்டுகளும் கொண்டு அமைக்கப்படும் கருவி;
 • வீசுகளம்.
 • மட்டையாடுபவருக்கு அருகில் உள்ள இலக்கின் பின்பு நிற்கும் களத்தடுப்பு வீரர். களத்தடுப்பு அணியில் இவருக்கு மட்டுமே கையுறைகளும் கால் பட்டைகளும் அணிய அனுமதி வழங்கப்படுகிறது.

இலக்குக் குச்சி (stump)

[தொகு]
 • இழப்பின் ஒரு பகுதி- ஒரு இழப்பில் மூன்று செங்குத்தான மரக்குச்சிகள் இருக்கும்
 • மட்டையாளரை ஆட்டமிழக்கச் செய்யும் முறைகளில் ஒன்று- மட்டையாளர் தனது எல்லைக்கோட்டை விட்டு தாண்டியிருக்கும்போது வீசப்பட்ட பந்தைப் பிடித்து இழப்புக் கவனிப்பாளர் அவருக்கு அருகில் உள்ள இழப்பை அடித்து அதன் மேலுள்ள மரத்துண்டுகளை விழச்செய்தால் மட்டையாளர் ஆட்டமிழப்பார்
 • வீசப்படும் பந்து மட்டையாடுபவருக்கு அருகில் உள்ள இழப்பைத் தாக்குவது- இது மட்டையாளரை ஆட்டமிழக்கச் செய்யும் முறைகளில் ஒன்றாகும்.[2]

இலக்கு அடி (hit wicket)

[தொகு]
 • வீசப்பட்ட பந்து மட்டையாளரின் மட்டை அல்லது உடல் பகுதியில் பட்டு இழப்பைத் தாக்குவது.

இலவச அடி (free hit)

[தொகு]
 • பிழை வீச்சை அடுத்து வீசப்படும் பந்தில் மட்டையாடுபவரை ஆட்டமிழக்கச் செய்ய இயலாது என்பதால் அவர் எவ்வித தயக்கமும் இன்றி பந்தை அடிப்பது.

இழப்பின் போது (fall of wicket)

[தொகு]
 • மட்டையாளர் ஆட்டமிழந்தபோது அவரது அணி எடுத்திருந்த ஓட்டங்கள்
 • மட்டையாளரின் ஆட்டமிழப்பு

இழப்புக்கு ஓட்டங்கள் விகிதம் (runs per wicket ratio)

[தொகு]
 • குழுநிலைப் போட்டிகளின் புள்ளிப்பட்டியலில் அணிகளுக்கான தரவரிசையை நிர்ணயிக்கும் முறை

இறுதிக்கட்ட நிறைவுகள் (death overs)

[தொகு]
 • ஒரு போட்டியின் இறுதிக்கட்டத்தில் வீசப்படும் நிறைவுகள்

இறுதிக்கட்ட வீச்சாளர் (death bowler)

[தொகு]
 • ஒரு போட்டியில் இறுதிக்கட்ட நிறைவுகளை வீசும் பந்துவீச்சாளர்[3]

உள்-மாறுவீச்சு (in-swing)

[தொகு]
 • வீசப்படும் பந்து மட்டையாளரின் எதிர்ப்பக்கத்தில் இருந்து நேர்ப்பக்கமாக மாறி எகிறுவது

எடுக்காத ஓட்டம் (bye)

[தொகு]
 • மட்டையாளர் எடுக்காமல் அவரது அணிக்கு கிடைக்கும் இலவச ஓட்டம். பொதுவாக மட்டையாளரின் மட்டை அல்லது உடலில் படாமல் செல்லும் பந்தை கவனிப்பாளர் பிடிக்கத் தவறும்போது எடுக்கப்படும் ஓட்டங்கள் மட்டையாளரின் கணக்கில் இல்லாமல் நேரடியாக அவரது அணியின் கணக்கில் சேர்க்கப்படும்.

எதிர் சுழல் (off spin)

[தொகு]
 • எதிர் பக்கத்தில் இருந்து நேர் பக்கமாக வீசப்படும் சுழல் வீச்சு

எதிர் விலகு (off break)

[தொகு]
 • தனது திசையில் இருந்து விலகிச் செல்லும் வகையில் வீசப்படும் எதிர் சுழல்

எதிர் நடு (mid off)

[தொகு]
 • எதிர்ப்பக்கத்தின் நடுவில் அமைந்துள்ள களத்தடுப்புப் பகுதி

எதிர் தொலைவு (long off)

[தொகு]
 • எதிர்ப்பக்கத்தின் தொலைவில் அமைந்துள்ள களத்தடுப்புப் பகுதி

எதிர் பக்கம் (off side)

[தொகு]
 • மட்டையாடுபவருக்கு எதிர் பக்கத்தில் அமைந்துள்ள களம். வலது-கை மட்டையாளருக்கு இடப்பக்கமும் இடது-கை மட்டையாளருக்கு வலப்பக்கமும் எதிர் பக்கங்களாகும்.

எல்லை (boundary)

[தொகு]
 • ஆடுகளத்தின் எல்லை
 • நான்கு ஓட்டங்கள்
 • ஒரே ஆட்டப் பகுதியில் ஒரு பந்துவீச்சாளர் ஐந்து மட்டையாளர்களை வீழ்த்துவது

ஒதுக்கீடு நாள் (reserve day)

[தொகு]
 • மழையால் இடைநிறுத்தப்பட்ட போட்டியை தொடர்வதற்காக ஒதுக்கப்படும் நாள். இது வரையிட்ட நிறைவுப் போட்டிகளின் முக்கியமான கட்டத்தில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

ஒளிக்குறைவு (bad light)

[தொகு]
 • ஆடுகளத்தில் உள்ள கதிரவ ஒளி பந்தை அடையாளம் காணமுடியாத அளவுக்கு குறைவாக இருந்தால் ஆட்டநேரம் முடிவதாக நடுவர் அறிவிப்பார். பொதுவாக செயற்கை ஒளிதரும் விளக்குகள் இல்லாத அரங்குகளில் இந்நிலை ஏற்படும்.

ஒற்றை (single)

[தொகு]
 • இழப்புகளுக்கிடையே ஒருமுறை ஓடுவதால் மட்டையாளருக்கு கிடைக்கும் ஓட்டம்

ஓட்ட இலக்கு (target)

[தொகு]
 • தனது எதிரணியை வீழ்த்துவதற்காக ஒரு அணி எடுக்க வேண்டிய மொத்த ஓட்டங்களின் எண்ணிக்கை. இது எதிரணி எடுத்த ஓட்டங்களை விட ஒரு ஓட்டம் கூடுதலாக இருக்கும். மழையால் பாதிக்கும் வரையிட்ட நிறைவுப் போட்டிகளில் டலூ முறையைக் கொண்டு இலக்கு மாற்றியமைக்கப்படும்
 • ஒரு மட்டையாளரின் மொத்த ஓட்டங்களை அவரது மொத்த ஆட்டமிழப்புகளின் எண்ணிக்கையைக் கொண்டு வகுப்பதன் மூலம் கிடைக்கும் அளவு

ஓட்டத் துரத்தல் (run chase)

[தொகு]
 • போட்டியில் வெற்றி பெறத் தேவையான ஓட்டங்களைத் துரத்துதல்
 • ஒவ்வொரு நிறைவிற்கும் எடுக்கப்பட்ட ஓட்டங்களின் சராசரி எண்ணிக்கை
 • வீசுகளத்தில் ஓடிக்கொண்டிருக்கும் மட்டையாளர் வரைகோட்டைத் தொடும் முன்பு அதன் அருகிலுள்ள இழப்பை களத்தடுப்பு வீரருள் ஒருவர் பந்தால் தாக்குவதன் மூலம் மட்டையாளரை ஆட்டமிழக்கச் செய்வது
 • மதிப்பெண்களின் அலகு

ஓய்வு (retire)

[தொகு]
 • காயம் அல்லது உடல்நலக்குறைவு காரணமாக போட்டியில் இருந்து விலகிய வீரர். இவர் போட்டியின் எந்த நேரத்திலும் களத்திற்கு திரும்பி வந்து ஆட்டத்தை விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்து விளையாடலாம்.

ஓய்வகம் (pavilion)

[தொகு]
 • அரங்கில் வீரர்கள் ஓய்வெடுப்பதற்காக அமைந்துள்ள பகுதி

கடைநிலை வீரர்கள் (tail-enders)

[தொகு]
 • மட்டையாடும் அணியின் கீழ்வரிசையில் களமிறங்கும் வீரர்கள்

கவனிப்பாளர் (keeper)

[தொகு]
 • இழப்புக் கவனிப்பாளரின் சுருக்கப் பெயர்

கழுகுப் பார்வை (hawk-eye)

[தொகு]
 • மட்டையாளரின் மட்டையில் படாமல் இருந்தால் பந்து எந்த வழியில் சென்றிருக்கும் என்பதைக் கணினி தொழில்நுட்ப உதவியுடன் கணிக்கும் முறை

கவனிப்பாளரிடம் பிடிபடுதல் (caught behind)

[தொகு]
 • மட்டையாளர் தனக்கு பின்னால் உள்ள இழப்புக் கவனிப்பாளரிடம் பிடிபடுதல்

களத்தடுப்பாளர் (fielder)

[தொகு]
 • களத்தடுப்பில் ஈடுபடும் வீரர். ஒரு அணியில் இழப்புக் கவனிப்பாளர், பந்து வீச்சாளர் ஆகிய இருவரையும் தவிர மற்ற அனைவரும் களத்தடுப்பாளர்களாக இருப்பர்.

களத்தடுப்பு (fielding)

[தொகு]
 • மட்டையாடுபவர் அடிக்கும் பந்தை எதிர்கொண்டு தடுக்கும் பணி

கள இடைமறிப்பு (obstructing the field)

[தொகு]
 • மட்டையாளர், களத்தடுப்பு அணியை தனது சொல் அல்லது நடவடிக்கை மூலம் அவர்களைப் பணி செய்ய விடாமல் இடைமறித்தால் அவர் ஆட்டமிழப்பார்.

காத்திருப்பவர் (non-striker)

[தொகு]
 • மட்டையாடுபவருக்கு எதிர்முனையில் காத்திருக்கும் மட்டையாளர்

காலடி வீச்சு (yorker)

[தொகு]
 • மட்டையாளரின் காலடிக்கு அருகில் வீசப்படும் பந்து

கால் பக்கம் (leg side)

[தொகு]
 • ஆடுகளத்தில் மட்டையாடுபவர் முன் வைத்திருக்கும் காலின் பக்கத்தில் அமைந்திருக்கும் பகுதி. இது நேர் பக்கம் என்றும் அறியப்படுகிறது. வலது-கை மட்டையாளருக்கு வலதுப் பகுதியும் இடது கை மட்டையாளருக்கு இடதுப் பகுதியும் காற்புறங்களாகும்.

கூடுதல்கள் (extras)

[தொகு]
 • மட்டையாளர் எடுக்கமால் அணிக்கு இலவசமாகக் கிடைக்கும் கூடுதல் ஓட்டங்கள்-

கூட்டாண்மை (partnership)

[தொகு]
 • களத்தில் உள்ள இரு மட்டையாளர்களும் கூட்டாக இணைந்து எடுத்த மொத்த ஓட்டங்கள்.

கையுறைகள் (gloves)

[தொகு]
 • கையில் பாதுகாப்புக்காக அணியப்படும் உறை- இதை மட்டையாளரும் இழப்புக் கவனிப்பாளரும் அணிந்திருப்பர்.

சமநிலை (tie)

[தொகு]
 • இரு அணிகளும் எடுத்த ஓட்டங்கள் சமநிலையில் முடிதல்

சராசரி (average)

[தொகு]
 • வீச்சு சராசரி என்பது பந்துவீச்சாளர் வீசிய மொத்த வீச்சுகளையும் அவர் வீழ்த்தல்களால் வகுப்பதன் மூலம் கிடைக்கும் அளவு
 • ஓட்ட சராசரி என்பது மட்டையாளரின் மொத்த ஓட்டங்களை அவரது மொத்த ஆட்டமிழப்புகளின் எண்ணிக்கையைக் கொண்டு வகுப்பதன் மூலம் கிடைக்கும் அளவு.
சிலந்தி வரைபடம் (Spider graph)
இது ஆட்டத்தில் ஆடப்பட்டு ஓட்டம் பெற்ற பந்துகளின் பாதையைக் குறிக்கும் ஒரு வரைகலை விளக்கப்படமாகும். இது ஓட்டம் பெற்ற பந்தின் திசை, பயணம் செய்த தொலைவு, உயரம், துள்ளுவீச்சு ஆகியவற்றைக் காட்டுகின்றது. ஓட்டம் பெற்ற பந்துகளின் பாதை வண்ண வரிகளால் குறிக்கப்படுகிறன்றன. சிலந்தி வரைபடம் பாரம்பரிய வேகன் வீல் (Wagon Wheel) வரைபடத்தின் விரிவான பதிப்பாகும்.
 • வரையிட்ட நிறைவுப் போட்டிகளில் சமநிலை ஏற்படும் போது வெற்றியாளரைத் தீர்மானிக்க பயன்படுத்தப்படும் முறை

சுழிய இழப்பு (duck)

[தொகு]
 • எந்த ஓட்டமும் எடுக்காமல் சுழியத்தில் ஆட்டமிழந்த மட்டையாளர்

சுற்றுப்பயணம் (tour)

[தொகு]
 • ஒரு அணி தனது எதிரணியுடன் விளையாட சொந்த நாட்டில் இருந்து வெளிநாட்டிற்குற்ப் பயணம் செய்து விளையாடுத

செயலற்ற பந்து (dead ball)

[தொகு]
 • வீசப்படும் பந்து செயலற்ற நிலையில் இருக்கும் போது ஓட்ட இழப்போ ஆட்டமிழப்போ செய்ய இயலாது. ஒவ்வொரு வீச்சிற்கு பிறகும் நடுவர் தனது சைகையால் பந்தின் செயலற்ற நிலையை அறிவிப்பார். அதன்பிறகு அடுத்த வீச்சு வரை அது செயலற்ற நிலையில் இருக்கும்.
 • மழையால் பாதிக்கப்பட்ட வரையிட்ட நிறைவுப் போட்டியில் வெற்றியாளர் அல்லது வெற்றிக்குத் தேவையான இலக்கை நிர்ணயிக்கப் பயன்படுத்தப்படும் கணித முறை

தலைவர் (captain)

[தொகு]
 • அணியை வழிநடத்தும் வீரர்

திறன் விகிதம் (strike rate)

[தொகு]
 1. (மட்டையாட்டம்) மட்டையாளர் ஒவ்வொரு 100 வீச்சுகளுக்கும் எடுத்த மொத்த ஓட்டங்களின் சராசரி அளவு
 2. (பந்துவீச்சு) பந்துவீச்சாளர் ஒவ்வொரு வீழ்த்ததலுக்கும் வீசிய மொத்த வீச்சுகளின் சராசரி அளவு

துடுப்பாட்டக்காரர் (cricketer)

[தொகு]
 • துடுப்பாட்டம் விளையாடும் வீரர்

துள்ளு வீச்சு (bouncer)

[தொகு]
 • வீசப்படும் பந்து மட்டையாளரின் தலைக்கு அருகில் உயரமாகத் துள்ளிச் செல்வது
 • உயர்தரம் கொண்ட துடுப்பாட்டப் போட்டி வகை. .பொதுவாக 5 நாட்கள் வரை நடைபெறும். இரு அணிகளுக்கும் இரண்டு பகுதிகள் என்ற வீதத்தில் மொத்தம் 4 ஆட்டப்பகுதிகள் இடம்பெறும்.

தேவைப்படும் ஓட்ட விகிதம் (required run rate)

[தொகு]
 • மட்டையாடும் அணிக்கு வெற்றிபெறத் தேவைப்படும் ஓட்ட விகிதம்

தொடக்க வீரர் (opener)

[தொகு]
 • மட்டையாடும் அணியில் முதல் பந்துவீச்சை எதிர்கொள்ளும் மட்டையாளர்
 • பந்துவீசும் அணியில் முதல் பந்தை வீசும் பந்துவீச்சாளர்.

தொப்பி (cap)

[தொகு]
 • களத்தடுப்பு வீரர்கள் தலையில் அணியும் உடுப்பு. பன்னாட்டுப் போட்டியில் முதன்முதலாக அறிமுகமாகும் வீரருக்கு தொப்பி அணிவித்து அணியில் சேர்ப்பது வழக்கம்.
 • துடுப்பாட்ட விதிமுறைகளை செயல்படுத்துபவர்- களத்தில் இரு நடுவர்களும் களத்திற்கு வெளியே மூன்றாம் நடுவரும் இருப்பர்
 • கள நடுவரின் முடிவை மீளாய்வு செய்யும்படி மூன்றாம் நடுவரிடம் முறையிடுவது. மூன்றாம் நடுவர் தொழில்நுட்ப உதவியுடன் முடிவெடுத்து  அறிவிப்பார்

நடுவரிசை (middle order)

[தொகு]
 • மட்டையாடும் வரிசையில் 5 முதல் 7 வரை உள்ள இடங்களில் களமிறங்கும் மட்டையாளர்கள். பொதுவாக இந்த வரிசையில் அணியின் பன்முக வீரர்களும் இழப்புக் கவனிப்பாளரும் இருப்பர்

நழுவு (slip)

[தொகு]
 • களத்தடுப்பு இடங்களில் ஒன்று. மட்டையாளரின் மட்டையில் நழுவிச் செல்லும் பந்தைப் பிடிக்கும் இடம் என்பதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது. இது எதிர் பக்கத்தில் அமைந்திருக்கும்.

நாணயச்சுழற்சி (toss)

[தொகு]
 • நாணயத்தை சுழற்றி எறிவதன் மூலம் இரு அணிகளில் எந்த அணியின் தலைவருக்கு மட்டையாட்டம் அல்லது களத்தடுப்பைத் தேர்வு செய்ய உரிமையுள்ளது என்பதைத் தீர்மானிக்கும் முறை

நான்கு (four)

[தொகு]
 • அடிக்கப்பட்ட பந்து நிலத்தில் பட்ட பிறகு எல்லையைத் தொடுவதன் மூலம் நான்கு ஓட்டங்கள் கிடைக்கும்

நிகர ஓட்ட விகிதம் (net run rate)

[தொகு]
 • ஒரு போட்டியில் ஒரு அணி எடுத்த ஓட்ட விகிதத்தை அதன் எதிரணியின் ஓட்ட விகிதத்தால் கழிப்பதன் மூலம் கிடைக்கும் அளவு
 • ஒரு தொடரில் நிகர ஓட்ட விகிதம் கணக்கிடப்படும் முறை: (மொத்தம் எடுத்த ஓட்டங்கள்) / (மொத்தம் ஆடிய நிறைவுகள்) – (மொத்தம் விட்டுக்கொடுத்த ஓட்டங்கள்) / (மொத்தம் வீசிய நிறைவுகள்).
 • ஒரு பந்துவீச்சாளரின் முறையான ஆறு வீச்சுகளை உள்ளடக்கிய அளவு

நிறைவு விகிதம் (over rate)

[தொகு]
 • ஒரு மணி நேரத்தில் வீசப்பட்ட மொத்த நிறைவுகள்

நீளம் (length)

[தொகு]
 • வீசுகளத்தில் வீசப்படும் பந்து எகிறிச்செல்லும் நீளம்

நூறு (century)

[தொகு]
 • ஒரு மட்டையாளர் நூறு ஓட்டங்கள் எடுத்தல்.

நேர் சதுரம் (square leg)

[தொகு]
 • நேர் பக்கத்திற்கு சதுரமாக அமைந்துள்ள பகுதி

நேர் சுழல் (leg spin)

[தொகு]
 • நேர் பக்கத்தில் இருந்து எதிர் பக்கமாக வீசப்படும் சுழல் வீச்சு

நேர் தொலைவு (long on)

[தொகு]
 • நேர் பக்கத்தின் தொலைவில் அமைந்துள்ள களத்தடுப்புப் பகுதி.

நேர் நடு (mid on)

[தொகு]
 • நேர்ப்பக்கத்தின் நடுவில் அமைந்துள்ள களத்தடுப்புப் பகுதி

நேர் பக்கம் (on side)

[தொகு]
 • மட்டையாடுபவருக்கு நேர் பக்கத்தில் அமைந்துள்ள களம். இது மட்டையாடுபவர் முன்வைத்திருக்கும் காலுக்கு அருகில் அமைந்துள்ளதால் கால் பக்கம் என்றும் அறியப்படுகிறது. வலது-கை மட்டையாளருக்கு இடப்பக்கமும் இடது கை மட்டையாளருக்கு வலப்பக்கமும் நேர் பக்கங்களாகும்.

நேர் விலகு (leg break)

[தொகு]
 • தனது திசையில் இருந்து விலகிச் செல்லும் வகையில் வீசப்படும் நேர் சுழல்

நேரடி வீச்சு (clean bowled)

[தொகு]
 • வீச்சாளர் வீசும் பந்து மட்டையாடுபவரின் மட்டை அல்லது உடலில் படாமல் நேரடியாக இழப்பைத் தாக்குவது

நேரடித் தாக்கு (direct hit)

[தொகு]
 • வீசப்பட்ட பந்தைக் கொண்டு களத்தடுப்பாளர் நேரடியாக இழப்பை நோக்கி வீசித் தாக்குவதன் மூலம் மட்டையாளரை ஆட்டமிழக்கச் செய்வது.
 • பகலில் தொடங்கி இரவில் முடியும் துடுப்பாட்டப் போட்டி. கதிரவன் மறைந்த பிறகு ஒளிவிளக்குகளின் உதவியுடன் போட்டி நடைபெறும்

பதினொருவர் (eleven)

[தொகு]
 • ஒரு அணியில் உள்ள பதினொரு வீரர்கள்

பந்து (ball)

[தொகு]
 • மட்டையாளரை நோக்கி பந்துவீச்சாளர் வீசும் உருளைவடிவப் பொருள். இது தனக்கு அருகில் உள்ள இழப்பைத் தாக்காத வகையில் மட்டையாளர் தனது மட்டையால் தடுத்தாடுவார்.
 • வரையிட்ட நிறைவுப் போட்டிகளில் வெள்ளைநிறப் பந்துகளும் தேர்வுப் போட்டிகளில் சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு நிறப் பந்துகளும் பயன்படுத்தப்படுகின்றன.

பந்தை சேதப்படுத்துதல் (ball tampering)

[தொகு]
 • பந்தின் தன்மையை முறையற்ற வகையில் மாற்றுதல்

பந்தைக் கையாளல் (handled the ball)

[தொகு]
 • இது வீசப்படும் பந்தை மட்டையாளர் வேண்டுமென்றே கையால் தொடுவதைக் குறிக்கும். இது கள இடையூறாகக் கருதப்படுவதால் மட்டையாளர் ஆட்டமிழப்பார். எனினும் காயம் ஏற்படுவதைத் தடுக்கவே பந்தைக் கையாண்டிருந்தால் அது ஆட்டமிழப்பாகக் கருதப்படாது.
 • பந்துவீச்சு, மட்டையாட்டம் ஆகிய இரண்டிலும் சிறந்து விளக்கும் துடுப்பாட்ட வீரர்.[4]

பான இடைவேளை (drinks)

[தொகு]
 • போட்டியின் போது வழங்கப்படும் சிறு இடைவேளை. பொதுவாக அணியின் பன்னிரெண்டாவது வீரர் களத்திற்கு பானங்களை எடுத்து வந்து வீரர்களுக்கும் நடுவர்களுக்கும் அளிப்பார். குறிப்பாக வெப்ப நாடுகளில் இந்த இடைவேளை அதிகம் இடம்பெறுகிறது.

பிடித்தல் (catch)

[தொகு]
 • மட்டையாளர் அடித்த பந்து நிலத்தில் படும் முன்பே களத்தடுப்ப வீரர் ஒருவர் தனது கையால் பிடித்தல்- இதனால் மட்டையாளர் பிடிபடுவார்

பிடிபடுதல் (caught)

[தொகு]
 • மட்டையாளர் (மட்டை அல்லது மட்டையைப் பிடித்திருக்கும் கையுறையால்) அடித்த பந்து நிலத்தில் படும் முன்பே களத்தடுப்பு வீரரிடம் பிடிபடுதல்- இதனால் பிடிபட்ட மட்டையாளர் ஆட்டமிழப்பார்[5]
 • முறையற்ற வகையில் வீசப்படும் பந்து- இதன் விளைவாக மட்டையாடும் அணிக்கு கூடுதலாக ஒரு ஓட்டம் வழங்கப்படும். இது நிறைவில் ஒன்றாக கணக்கிடப்படாது என்பதால் அதை ஈடுசெய்யும் வகையில் பந்துவீச்சாளர் கூடுதலாக ஒருமுறை பந்துவீச வேண்டும். அந்த வீச்சில் மட்டையாளரை ஆட்டமிழக்கச் செய்ய இயலாது.

பிறழ் எதிர்ச்சுழல் (doosra)

[தொகு]
 • எதிர்ச்சுழலில் வீசப்படும் பந்து திசைமாறி எகிறுவது- இந்த வீச்சு முறை சக்லேன் முஸ்டாக் என்ற வீரரால் கண்டறியப்பட்டதாகும். தூஸ்ரா என்றால் உருதுமொழியில் இரண்டாவது என்று பொருள்.

பிறழ் நேர்ச்சுழல் (googly)

[தொகு]
 • நேர்ச்சுழலில் வீசப்படும் பந்து திசைமாறி எகிறுவது

பிறழ் மாறுவீச்சு (reverse swing)

[தொகு]
 • மாறுவீச்சில் விசப்படும் பந்து திசைமாறி எகிறுவது

பின்சுழல் (backspin)

[தொகு]
 • பின்புறமாகச் சுழற்றி வீசப்படும் பந்து. இதனால் பந்து மெதுவாக எகிறும்
 • தனது முதல் முறையில் மட்டையாடும் அணி எதிரணியை விட குறைந்தபட்ச அளவு ஓட்டங்களை எடுத்த நிலையில் ஆட்டமிழந்தால் அதன் இரண்டாவது முறையையும் பின்தொடர்ந்து ஆடுமாறு எதிரணியின் தலைவர் கட்டாயப்படுத்துதல்- பொதுவாக 5 நாள் போட்டிகளில் 200 ஓட்டங்களும் 3 அல்லது 4 நாள் போட்டிகளில் 150 ஓட்டங்களும் குறைந்தபட்ச அளவுகளாகும்.

பின் வரிசை (lower order/tail)

[தொகு]
 • மட்டையாடும் வரிசையில் 8 முதல் 11 வரை உள்ள இடங்களில் களமிறங்கி மட்டையாடும் வீரர்கள். பொதுவாக இது பந்துவீச்சாளர்களைக் கொண்ட வரிசை என்பதால் மட்டையாடும் திறன் குறைவாக இருக்கும்

மட்டை (bat)

[தொகு]
 • வீசப்படும் பந்தை அடிக்க மட்டையாளர் பயன்படுத்தும் மரக் கருவி

மட்டையாட்ட வரிசை (batting order)

[தொகு]
 • அணியின் மட்டையாளர்கள் களமிறங்கும் வரிசை- இது தொடக்க வீரர்களில் தொடங்கி உயர் வரிசை, நடு வரிசை, கீழ் வரிசை என்று மூன்று வரிசைகளாக இருக்கும்.
 • வீசப்படும் பந்து இழப்பைத் தாக்காமல் மட்டையால் தடுத்தும் பந்தை அடித்துவிட்டு ஓட்டங்கள் எடுத்தும் ஆடுவது
 • மட்டையாடும் வீரர்- வீசுகளத்தில் ஆடுபவர், காத்திருப்பவர் என்று இரு மட்டையாளர்கள் இருப்பர்.

மணிக்கட்டுச் சுழல் (wrist spin)

[தொகு]
 • சுழல் வீச்சு வகை- பந்துவீச்சாளர் தனது மணிக்கட்டின் உதவியுடன் பந்தைச் சுழற்றி வீசுவது

மதிய உணவு (lunch)

[தொகு]
 • தேர்வுப் போட்டிகளில் வழங்கப்படும் உணவு இடைவேளை

மரத்துண்டுகள் (bails)

[தொகு]
 • மூன்று இழப்புக் குச்சிகளின் மேற்பள்ளங்களில் பிடிமானமின்றி இரு மரத்துண்டுகள் வைக்கப்பட்டிருக்கும்

மழையால் தாமதம் (rain delay)

[தொகு]
 • மழையால் போட்டியில் தாமதம் ஏற்படுவது

மன்கட் முறை

[தொகு]
 • பந்து வீசப்படும் முன்பு, காத்திருக்கும் மட்டையயாளர் தனது வரைகோட்டைத் தாண்டியிருந்தால் அவருக்கு அருகில் உள்ள இழப்பைத் தாக்கி ஓட்ட இழப்பு செய்யும் முறை. பன்னாட்டுத் துடுப்பாட்டத்தில் இந்த முறையை முதன்முதலில் பயன்படுத்திய வினோ மன்கட் என்ற இந்திய பந்துவீச்சாளரின் பெயரால் இவ்வாறு அறியப்படுகிறது.[6][7][8]தற்போது இம்முறையில் ஒரு துடுப்பாட்ட்ட வீரை வீழ்த்தக் கூடாது அறிவுரை வழங்கப்படுகிறது.[9]

மாறு வீச்சு (swing)

[தொகு]
 • வீசப்படும் திசைக்கு மாறான திசையில் எகிறிச்செல்லும் பந்து

மாற்று வீரர் (substitute)

[தொகு]
 • களத்தடுப்பு அணியில் உள்ள வீரருக்கு மாற்றாக களத்தில் இறங்கும் மற்றொரு வீரர். இவரால் களத்தடுப்பு மட்டுமே செய்ய இயலும். மட்டையாட்டம், பந்தவீச்சு, இழப்புக் கவனிப்பு ஆகியவற்றைச் செய்ய அனுமதியில்லை

மித வேகம் (medium)

[தொகு]
 • மிதமான வேகத்தில் பந்துவீசுவது

முடிவு (result)

[தொகு]
 • ஒரு போட்டியின் இறுதி முடிவு- இதில் வெற்றி, தோல்வி, சமநிலை அல்லது வெற்றி-தோல்வி இன்றி முடிவு என்ற நான்கு விதமான முடிவுகளுக்கு வாய்ப்புள்ளது. இதுதவிர மழையால் தொடர முடியாத போட்டி முடிவின்றி கைவிடப்படும்.

முடிவு இல்லை (no result)

[தொகு]
 • வரையிட்ட நிறைவுப் போட்டிகளில் முடிவுக்குத் தேவையான நிறைவுகளை ஆட இயலாத நிலை ஏற்படும்போது முடிவு இல்லாமல் ஆட்டம் கைவிடப்படுதல்
 • பந்துவீச்சாளர் ஒரு ஆட்டத்தில் தனது மூன்று தொடர் வீச்சுகளில் மூன்று மட்டையாளர்களை வீழ்த்துவது.

முழு வீச்சு (full toss)

[தொகு]
 • வீசுகளத்தில் பட்டு எகிறும்படி இல்லாமல் முழுமையாக மட்டையாளரை நோக்கி வீசப்படும் பந்து

முன் வரிசை (top order)

[தொகு]
 • மட்டையாடும் வரிசையில் முதல் 4 இடங்களில் இருந்து களமிறங்கும் மட்டையாளர்கள். பொதுவாக அணியில் சிறந்த மட்டையாடும் திறனுள்ள வீரர்களாக இருப்பர்

முன்சுழல் (top spin)

[தொகு]
 • முன்புறமாக சுழற்றி வீசப்படும் பந்து. இதனால் பந்து வேகமாக எகிறும்
 • வீசப்படும் பந்து, மட்டையாளர் அடிக்கும் முன்பு அல்லது அடிக்கத் தவறிய பிறகு அவரது முன்னங்கால் அல்லது உடற்பகுதியில் படுவது. இது இழப்பு வீச்சை இடைமறித்தது போல் கருதப்படும். எனவே மட்டையாளர் ஆட்டமிழப்பார்.

முனை (end)

[தொகு]
 • காத்திருக்கும் மட்டையாளருக்கு அருகில் உள்ள இழப்புக்குப் பின்பு ஆடுகளத்தில் உள்ள இரு முனைகள். இதில் ஏதேனும் ஒரு முனையில் இருந்து வீச்சாளர் பந்து வீசுவார்.

மூன்றாம் நடுவர் (third umpire)

[தொகு]
 • களத்தில் இல்லாத நடுவர்- இவர் களத்தில் உள்ள நடுவர்களுக்கு முடிவெடுப்பதில் குழப்பம் ஏற்படும்போதோ கள நடுவரின் முடிவு மேல்முறையீடு செய்யப்படும்போதோ தொழில்நுட்ப உதவியுடன் தனது முடிவை அறிவிப்பார்.

மெய்படு ஓட்டம் (leg bye)

[தொகு]
 • மட்டையாடுபவரின் மட்டையில் படாமல், மட்டைபிடித்திருக்கும் மணிக் கட்டைத் தவிர அவரது உடலின் மற்ற பாகத்தில் பட்டு இலக்கைக் கடந்து செல்லும்போது அவர் எடுக்கும் ஓட்டம். இது எடுக்காத ஓட்டத்தின் (bye) வகையாகும்.
 • ஆட்டமிழப்புக்காக நடுவரிடம் முறையிடுதல்- ஆட்டமிழப்பு ஏற்படும்போது பந்துவீச்சாளரோ களத்தடுப்பு வீரரோ ஆட்டமிழப்பு என்று நடுவரை நோக்கி முறையிடுவர். ஒருவேளை அவ்வாறு முறையிடத் தவறினால் அது ஆட்டமிழப்பாகவே இருந்தாலும் நடுவரால் அவ்வாறு அறிவிக்க இயலாது. எனினும் இழப்பு வீச்சு போன்ற உறுதியான ஆட்டமிழப்புகளின் போது முறையீடு தேவைப்படுவதில்லை. அப்போது மட்டையாளர் ஆட்டமிழப்பை உணர்ந்து தானாகவே வெளியேறிவிடுவார்.

வரவிருக்கும் மட்டையாளர் (incoming batsman)

[தொகு]
 • ஆட்டமிழப்புக்குப் பிறகு களமிறங்கவிருக்கும் மட்டையாளர்

வலது கை (right hand/right arm)

[தொகு]
 • வலது கையால் மட்டையாடும் மட்டையாளர்
 • வலது கையால் வீசும் பந்துவீச்சாளர்
 • விரைவாக வீசப்படும் பந்துவீச்சு
 • ஆடுகளத்தின் நடுவே அமைந்துள்ள களம்

வீச்சுப் பிடி (caught and bowled)

[தொகு]
 • வீசிய பந்துவீச்சாளரிடம் பிடிபட்டு மட்டையாளர் ஆட்டமிழத்தல்

வீழ்த்தல் (taking a wicket)

[தொகு]
 • பந்துவீச்சாளர் மட்டையாளரை ஆட்டமிழக்கச் செய்து வீழ்த்துவது (எ-டு: அவர் இந்தப் போட்டியில் 3 மட்டையாளர்களை வீழ்த்தினார்.)

வீழ்தல் (fall)

[தொகு]
 • ஆட்டமிழப்பைக் குறிக்கும் வினைச்சொல், (எ-டு: அவர் இந்தப் போட்டியில் 3 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து வீழ்ந்தார்.)

வெளி-மாறுவீச்சு (out-swing)

[தொகு]
 • வீசப்படும் பந்து மட்டையாளரின் கால்பக்கத்தில் இருந்து புறப்பக்கமாக மாறி எகிறுவது

வெற்றி-தோல்வியின்றி முடிவு (draw)

[தொகு]
 • ஒரு அணி அனைத்து மட்டையாளர்களையும் இழக்கவில்லை என்றாலும் ஆட்டநேர முடிவில் வெற்றிக்குத் தேவையான இலக்கை எட்டத் தவறினால் அந்தப் போட்டி வெற்றி-தோல்வியின்றி முடியும்

வெற்று நிறைவு (maiden over)

[தொகு]
 • ஓட்டம் எதுவுமின்றி வெறுமையாக முடியும் நிறைவு

மேற்கோள்கள்

[தொகு]
 1. "A glossary of cricket terms". ESPNcricinfo (in ஆங்கிலம்). 2007-04-17. பார்க்கப்பட்ட நாள் 2019-12-05.
 2. "Law 30 (Bowled) - Laws - Laws of Cricket - Laws & Spirit - Lord's". web.archive.org. 2012-11-25. Archived from the original on 2012-11-25. பார்க்கப்பட்ட நாள் 2019-12-05.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
 3. Sam Sheringham (3 April 2014). "World Twenty20 2014: The secret of death bowling". BBC. https://www.bbc.co.uk/sport/cricket/26852992. பார்த்த நாள்: 05 December 2019. 
 4. Barclays World of Cricket – 2nd Edition, 1980, Collins Publishers, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-00-216349-7, pp 636–643.
 5. "Law 32 (Caught) - Laws - Laws of Cricket - Laws & Spirit - Lord's". web.archive.org. 2012-12-25. Archived from the original on 2012-12-25. பார்க்கப்பட்ட நாள் 2019-12-05.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
 6. The Hindu Explains: What is ‘Mankading’?
 7. The Laws and Spirit of the Mankad
 8. What is Mankading? All you need to know about the controversial cricket rule
 9. மன்கட் முறையில் யாரையும் அவுட் செய்யக்கூடாது - அஸ்வினுக்கு பாண்டிங் எச்சரிக்கை
"https://ta.wikipedia.org/w/index.php?title=துடுப்பாட்ட_சொல்லியல்&oldid=3486593" இலிருந்து மீள்விக்கப்பட்டது