உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர் பேச்சு:Fahimrazick/2011

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள், Fahimrazick/2011! உங்களை வரவேற்கிறோம்.

வாருங்கள் Fahimrazick/2011, உங்களை வரவேற்கிறோம்!
வாருங்கள் Fahimrazick/2011, உங்களை வரவேற்கிறோம்!

விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். விக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதிப் பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள்.

விக்கிப்பீடியாவிற்குப் பங்களிப்பது பற்றி மேலும் அறிந்து கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

__________________________________________________________________________________________________________________

கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்


தாங்கள் தமிழ் விக்கிப்பீடியாவின் பேச்சுப் பக்கங்களிலும், கலந்துரையாடல்களிலும் கலந்து கொள்ளும் போது தங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள் அல்லது தொகுப்புப் பக்கத்தில் உள்ள பொத்தான்களில் (படத்தில் சிகப்பு நிற அம்புக் குறியிட்டுக் காட்டப்பட்டுள்ள) சரியான பொத்தானைச் சொடுக்கவும். __________________________________________________________________________________________________________________

  • தங்களைப் பற்றிய தகவல்களை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து கொள்ள இயலும். மேலும், விக்கிப்பீடியா தங்களுக்கு முதன் முதலில் எப்படி அறிமுகம் ஆனது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும். மேலும் கட்டுரைப் பக்கங்களில் தங்கள் தொடர்ச்சியான பங்களிப்பை எதிர்பார்க்கிறோம். நன்றி.

__________________________________________________________________________________________________________________

  • புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க, கட்டுரைக்கான தலைப்பைக் கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்குக் கீழே உள்ள பொத்தானைச் சொடுக்குங்கள்.

--Kanags \உரையாடுக 07:07, 24 ஜூலை 2010 (UTC)

வணக்கம் பாஹிம், உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தாருங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 07:07, 24 ஜூலை 2010 (UTC)

உங்களைப் பற்றி நீங்கள் தந்துள்ள தகவல்களை உங்கள் பயனர் பக்கத்துக்கு மாற்றியிருக்கிறேன்.--Kanags \உரையாடுக 09:35, 24 ஜூலை 2010 (UTC)
பாஹிம் நல்வரவு. உங்கள் ஆர்வம் கண்டு மகிழ்ச்சி. நீங்கள் கைஸ் கோத்திரத்தை சார்ந்தவர்கள் என்பதை அறிந்து மகிழ்ந்தேன். முகம்மது நபியின் குரைஷி கோத்திரம், கைஸ் கோத்திரம் போன்றவற்றைப் பற்றி கட்டுரைகள் எழுதினால் நன்றாயிருக்கும். ஆங்கில விக்கிப்பீடியாவில் தகவல்கள் உதவலாம் . -- மாஹிர் 18:47, 24 ஜூலை 2010 (UTC)

அடிப்படை அறிவிலி

[தொகு]

உங்கள் தற்குறிப்பே தான் ஒரு அடிப்படை அறிவிலி என்று கோடிட்டு காட்டுகின்றது. தன்னை தானே இந்தளவுக்கு புகழ்ந்து பெருமைப்படுத்திக்கொள்ளும் ஒரு மனிதன்!!!!

சர்வதேச ரீதியில் புகழ்ப்பெற்றவரா? சர்வநாச ரீதியில் புகழ்பெற்றவரா?? தற்புகழ்ச்சி எனும் சொல்லுக்கு எல்லையே நீங்கள் தான்!! வானமே எல்லை!!!−முன்நிற்கும் கருத்து 219.78.91.69 (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

அருள் கூர்ந்து தனியாள் தாக்குதலைத் தவிர்க்கவும். அவரது எழுத்தில் குறையிருந்தால் அதை மட்டும் சுட்டுங்கள். -- சுந்தர் \பேச்சு 05:07, 16 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]
ஒருவருடைய பயனர் பக்கத்தில் அவர் தன்னைப்பற்றி எது வேண்டுமானாலும் எழுதுவதற்கு (சட்டத்துக்கு புறம்பாகாதவரை) உரிமையுள்ளது. சுந்தர் கூறியபடி, தனிமனித தாக்குதல் வேண்டா. அவர் பங்களிப்புகளில் குறைகளைக் கண்டால் மட்டும் சுட்டிக்காட்டுங்கள்.--சோடாபாட்டில் 05:34, 16 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

சர்வதேச ரீதியில் என்பதன் பொருள் புரியாமலும் தன்னை யாரென அடையாளங் காட்டிக்கொள்ளாமலும் இங்கு இடுகையிட்டிருக்கும் கோழையே! என்னுடைய சேவையைப் பல நாடுகளின் அரசாங்கங்களும் பெற்றுக்கொண்டிருக்கின்றன. இதற்குரிய ஆதாரங்களை நான் வைத்திருக்கிறேன். தமிழைச் சரிவர எழுதவே தெரியாமல், "சர்வதேச ரீதியில் புகழ்ப்பெற்றவரா?" என்றெல்லாம் எழுதித் தள்ளியிருக்கிறீரே. நீர் குறிப்பிட்டபடி "புகழ்ப்பெறுதல்" என்று தமிழில் சேர்த்து எழுத முடியுமா? நீர்தான் என்னைத் தூற்றுவதாக நினைத்துக்கொண்டு உம்முடைய முட்டாள்தனத்தை வெளிப்படுத்தியிருக்கிறீர். "சர்வநாச ரீதியில்" என்று கூறுகிறீரே. நான் அவ்வாறு ஓரிடத்திலாவது செயற்பட்டிருந்தால், நிரூபித்துக்காட்ட முடியுமா? தமிழறியாமல் இங்கு வந்து அடுத்தவனின் குறைகளைத் தேட முயற்சிக்கும் நீங்களெல்லாம் விக்கிப்பீடியாவில் எழுத அருகதையற்றவர்களே. தமிழில் தகவல் தேடுவோருக்குப் பயன் கிடைக்கட்டுமே எனக் கருதி, ஒரு பொது முயற்சியாகவே இங்கு விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதப்படுகின்றன. இந்தத் தூய நோக்கமே இங்கு எழுத முயற்சிக்கும் அனைவரிடமும் எதிர்பார்க்கப்படுகிறது. இதை இங்கு உணர்த்திக் கூறிய சுந்தர் மற்றும் சோடாபாட்டில் ஆகிய இருவருக்கும் என்னுடைய நன்றிகள்.--பாஹிம் 01:12, 17 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

இந்தோனேசியத் தமிழர்

[தொகு]

இந்தோனேசியத் தமிழர் பற்றி அறிய ஆவல். அங்கு அதிக தமிழர்கள் வாழ்கின்றார்களா? தமிழ் ஊடகங்கள், அமைப்புகள் உள்ளனவா? தமிழ் கல்வி பெறலாமா போன்ற தகவல்கள். மிக்க நன்றி. --Natkeeran 16:13, 24 ஜூலை 2010 (UTC)

அங்கு நான் பல தமிழர்களைச் சந்தித்துள்ளேன். சிலரைத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் காண முடிகிறது. பரத நாட்டியம், கர்நாடக இசை போன்ற நிகழ்ச்சிகளும் ஆங்காங்கே இடம்பெறுகின்றன. அங்குள்ள தமிழர்களும் மற்ற இந்தியர்களும் பொதுவாக இந்தியர்கள் என்றே அழைக்கப்படுகிறார்கள். இலங்கையிலிருந்து அங்கு சென்று திருமணம் முடித்து வாழும் தமிழ் பேசும் முஸ்லிம்கள் பலரும் இருப்பதைக் காண முடிகிறது. எனினும் தமிழ் பேசுவோரைக் கண்டுகொள்வது அவ்வளவு எளிதானதல்ல. ஏனெனில், இந்தோனேஷிய அரசாங்கம் இந்தோனேசிய மொழியைப் பயன்படுத்துவதையே அங்கீகரிக்கிறது. தமிழ் பேசுவதில் பிரச்சினையில்லை. சில தமிழ் அமைப்புக்களும் இருக்கின்றன. நான் அவ்வாறான சில அமைப்புக்களை ஒன்று சேர்த்து, பரந்த இந்தோனேசிய தமிழ் அமைப்பு ஒன்றை நிறுவுவது பற்றி ஆராய்ந்துகொண்டுதான் இருக்கிறேன். தமிழ் ஊடகங்கள் பற்றிக் கூற முடியவில்லை. ஏனெனில், அவ்வாறான எதுவும் பெரிய அளவில் காணப்படுவதில்லை. சில கடைகளில் தமிழ்ப் பாடல்கள் ஒலிக்கின்றன. சில வீடுகளில் தமிழ் பேசுகிறார்கள். எனினும் அவர்கள் பரந்துபட்டு இருப்பதால், பெரியளவில் அவர்களால் எதுவும் மொழி ரீதியாகச் சாதிக்க முடியவில்லை. தமிழ்க் கல்வி பெறுவது சில வீடுகளிலும் தமிழர்கள் செறிந்திருக்கும் சில இடங்களிலும் மட்டுமே சாத்தியம். பாடசாலைகளில் தமிழ் அங்கீகரிக்கப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. நான் இருக்கும் ஜகார்த்தா மாநகரில் அதற்கான பிரத்தியேக வகுப்புக்களையேனும் இதுவரை காணமுடயவில்லை. எனினும் அங்குள்ள தமிழர்கள் சிலர் மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் தமிழ்க் கல்வி பெறுகிறார்கள். மேலும், சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் தொடர்புள்ள இந்தோனேசிய இனத்தவர்கள் (அவர்களைப் பொதுவாக ப்ரிபூமி Pribhumi என்றழைக்கிறார்கள்) சிலரும் மத்திய கிழக்கு நாடுகளில் வேலை செய்வதன் மூலம் இலங்கை, இந்தியத் தமிழர்களுடன் தொடர்புபட்டவர்களும் தமிழ் கற்க வேண்டுமென விழைகிறார்கள்.--Fahimrazick 16:40, 24 ஜூலை 2010 (UTC)
தகவல்களுக்கு மிக்க நன்றி. இவற்றைக் கட்டுரையில் சேர்க்கலாம். இந்தோனேசியத் தமிழர்களின் அல்லது அவர்கள் பற்றிய தகவல்களைக் கொண்ட எதாவது வலைத்தளங்கள், வலைப்பதிவுகள் இருந்தால் சுட்டவும். நன்றி.

எழுத்துப்பிழைகள் தொடர்பாக

[தொகு]
பாஹிம் எழுத்துப்பிழைகள் தொடர்பான உங்கள் ஆதங்கம் புரிகிறது. அவற்றை தானியங்கி உதவியுடன் களைவதற்கு முயற்சிகள் ஆரம்ப கட்டத்தில் உள்ளது. பிழைகளை நீங்களே சரிசெய்யலாம். en:Wikipedia:Lists of common misspellings போன்று தமிழில் விக்கிப்பீடியா:எழுத்துப் பிழைகள் கொண்ட வார்த்தைகளின் பட்டியல் தொகுக்க உதவுங்கள். அவை அந்த தானியங்கிக்கு உதவும். --மாஹிர் 18:59, 24 ஜூலை 2010 (UTC)

எழுத்துப் பிழைகள் மட்டுமல்ல, சொற்பிழைகளும், வசனப் பிழைகளும் ஏராளமாக இடம்பெற்றுள்ளன. அவற்றைக் களைய வேண்டுமென்றே விழைகிறேன். மேலும், வேற்று மொழிச் சொற்களைத் தமிழில் எழுதும்போது அவற்றை உச்சரிப்பின் அடிப்படையில் எழுதாவிடின் அது வேறுவிதமாக விபரீதமான பொருள் கொடுக்க வாய்ப்பிருக்கிறது. இங்கு கிரந்த எழுத்துக்களைப் பயன்படுத்துவதைக் குறைத்துக்கொள்ள ஆலோசனை வழங்கப்பட்டிருப்பதைக் கண்டேன். எனினும், வட மொழிச் சொற்கள் தவிர்த்து வேறு பல இடங்களில் அவ்வாறு செய்யப்பட முடியாத நிலை இருக்கிறது.--Fahimrazick 02:10, 25 ஜூலை 2010 (UTC)

உண்மை. முடிந்தவரையில் குறைக்கவே கூறப்பட்டுள்ளது. முற்றாக அல்ல. உதாரணமாக, உங்கள் பெயரை நீங்கள் ராஸிக் என எழுதுகிறீர்கள். ஏன் ராசிக் என எழுதக்கூடாது. ஒரே ஒலிப்புத் தானே? இஸ்லாம் என்பதை தமிழில் இசுலாம் என்றும், ஹிந்தி என்பதை இந்தி என எழுதலாம்.--Kanags \உரையாடுக 02:46, 25 ஜூலை 2010 (UTC)

நன்றி. விக்கிப்பீடியாவை ஒரு சிறந்த கூட்டு முயற்சியாகவே காண்கிறேன். என்னுடைய பெயரை றாஸிக் என எழுதக் காரணம், Razick என்ற சொல்லில் z எழுத்தை அழுத்தி உச்சரிக்க வேண்டும். அது அரபு மொழிச் சொல். மேலும், ச என்ற எழுத்தும் ஸ என்ற எழுத்தும் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி உச்சரிக்கப்படுவதில்லை.--Fahimrazick 02:53, 25 ஜூலை 2010 (UTC)

உங்கள் பெயரை ஆங்கிலத்தில் Razick என எழுதுகிறீர்கள். ஆங்கிலேயர்கள் இதனை நீங்கள் விரும்பியது போல் சரியான முறையில் (அரபு மொழியில் போல் அழுத்தி) ஒலிக்கின்றனரா என அறிய ஆவல்.--Kanags \உரையாடுக 03:07, 25 ஜூலை 2010 (UTC)

ஆங்கிலத்தில் அதற்கு வேறு வழியில்லை. மேலும், சவூதி அரேபியா அரசாங்கத்தின் வழிகாட்டல்படி அந்த எழுத்துக்கு z என்ற ஆங்கில எழுத்துத்தான் உபயோகிக்கப்படுகிறது. அரபு மொழியின் ஒவ்வொரு எழுத்தும் எவ்வாறு இலத்தீன் எழுத்துக்களில் எழுதப்பட வேண்டுமென்ற வரையறை அங்கு காணப்படுகின்றது. இதனை சிரியா நாட்டின் அரபு மொழி அபிவிருத்தி நிறுவனம் வரைமுறைப்படுத்துவதுடன், அதுவே அனைத்து அரபு நாடுகளிலும் நடைமுறைப்படுத்தப்படுகிறது.--Fahimrazick 03:14, 25 ஜூலை 2010 (UTC) இங்கு விக்கிப்பீடியாவில் சிலர் பல்வேறு இடங்களிலும் பொதுவாக அறியப்பட்ட தமிழ்ச் சொற்களையே பிழையாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். உதாரணமாக, பத்திரிகை, ஆபிரிக்கா போன்ற சொற்களைக் குறிப்பிடலாம். சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதியும் பத்திரிகை, ஆபிரிக்கா என்றே குறிப்பிடுகிறது. இவற்றைப் பிழையாக பத்திரிக்கை என்றும் ஆப்பிரிக்கா என்றும் பல்வேறு இடங்களிலும் சிலர் குறிப்பிட்டுள்ளனர். இவ்வாறான பிழையான சொற்கள் தமிழறிந்த பலரையும் குழப்பி விடுகின்றன. இவ்வாறான சொற்கள் இடம்பெற்றுள்ள அனைத்து இடங்களையும் திருத்தியாக வேண்டும்.--பாஹிம் 03:17, 19 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]

பாகிம் - தமிழகத்தில் ஆப்பிரிக்கா என்று தான் எழுதப்படுகிறது. அரபி மூலப்பொருள் குறித்த கவலையால் கிரந்தம் பயன்படுத்துகிறீர்கள் என்று எண்ணுகிறேன், தமிழில் மற்ற மொழிகளின் பல எழுத்துக்கள் கிடையாது அது போலவே மற்ற மொழிகளில் தமிழின் சில எழுத்துகள் கிடையாது. எனவே இயன்றவரை கிரந்தம் தவிர்த்து எழுதுவது சிறப்பு. ஸ ஷ என்பதற்கு பதில் தமிழ் எழுத்தான ச பயன்படுத்துங்கள், இங்கு கிரந்தம் தவிர்க்கலாம். --குறும்பன் 18:48, 17 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

பேச்சு:ஆப்பிரிக்கா என்னும் பக்கத்தில் உங்கள் கேள்விகளுக்கு மறுமொழிகள் தந்துள்ளேன். நீங்கள் இலங்கைக்குச் சென்று ஏதோ சான்றுகள் கொண்டுவருகின்றீர்கள் என்று சொன்னீர்களே, சான்றுகள் கிடைத்தனவா? பத்திரிகை என்று எழுதினால் தமிழில் paththirigai என்று ஒலிக்க வேண்டும். பத்திரிக்கை என்று எழுதினால் paththirikkai என்று ஒலிக்க வேண்டும். தமிழ் ஒலிப்பு முறை எழுத்துச்சூழல் சார்ந்தது. ஓரெழுத்துக்கு ஓரொலிப்பு மட்டும் உள்ளதல்ல. வல்லினம் சொல்லின் முதலெழுத்தாகவோ, அல்லது வல்லின ஒற்று முன்னின்றாலோதான் வலித்து ஒலிக்கும். மற்ற இடங்களில் மெலிந்து ஒலிக்கும். இது தவிர, பிறமொழிச் சொற்களை ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு வழங்குமுறை இருக்கும். Exonym என்னும் கருத்தை உள்ளத்தில் கொள்ளுங்கள். முதல் மொழியில் (மூலமொழியில்) உள்ளவாறே பிறிதொரு மொழியில் இருக்க வேண்டும் என்பது இல்லை (பெயர்ச்சொல்லே ஆயினும்). சில மொழிகள் உயிரொலிகளைக் குறுக்கும் அல்லது அகற்றும், சில மொழிகள் உயிரொலிகளைப் பெய்து (சேர்த்து) ஒலிக்கும். அடிபப்டை என்னவென்றால் தமிழில் எழுதும்பொழுது தமிழை மதித்து, தமிழ் முறைக்கு முன்னுரிமை தந்து எழுத வேண்டும் என்பதே. --செல்வா 19:03, 17 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

இங்கு உங்களுடைய கருத்தை நான் ஒப்புக்கொள்ள முடியாது. மேற்குறிப்பிட்ட விடயங்களைக் கிண்டிக் கிளறிக்கொண்டு நேரத்தை வீணாக்க வேண்டாம் என்று நீங்கள் முன்பு கூறியதற்கொப்ப அதனை நான் அப்போதே விட்டுவிட்டேன். அவ்வாறின்றி, அதுகுறித்துப் பேசத்தான் வேண்டுமென நீங்கள் கூறுவதானால், அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்யலாம். மேலும், நான் தமிழை மதிப்பதனாற்றான் இங்கு தமிழில் எழுதி வருகிறேன். தமிழில் எந்த எழுத்தையும் நான் புதிதாக உருவாக்கவில்லை. எந்தவொரு இடத்திலும் ஃ சேர்த்துப் புதிதாக ஒரு உச்சரிப்பை உருவாக்கவும் இல்லை. நான் முன்பு கூறியது, இலங்கையில் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒரு உச்சரிப்பைப் பற்றியே. அதுவொன்றும் நான் புதிதாகக் கண்டுபிடித்ததல்ல. நான் சில இடங்களில் கிரந்த எழுத்துக்களைப் பயன்படுத்தியிருப்பது தவிர்க்க முடியவில்லை என்பதனாலேயே. கிரந்த எழுத்துக்களைக் கண்டுபிடித்தவர்கள் தமிழை மதிக்காமல் தமிழுக்குக் கேடு விளைவித்துவிட்டதாக நான் நினைக்கவில்லை. அதனைப் பயன்படுத்தவே கூடாதென்றால் அல்லது அது தமிழுக்குக் கேடானதென்றால், அப்பயன்பாட்டைத் தமிழ் நாட்டிலும் இலங்கையிலும் தமிழர் வாழும் ஏனைய இடங்களிலும் தடை செய்திருக்க வேண்டும். அப்படிச் செய்ததாக யான் அறியேன்.--பாஹிம் 19:20, 17 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

நான் கூறியது நீங்கள்," கபிலர் என்பதை kabilar என்று கூறுவதில்லை. மாறாக kafilar என்றுதான் கூறுகிறார்கள். சிபி என்பதை sify என்றுதான் கூறுகிறார்கள் " என்றெல்லாம் கூறினீர்களே அதைக் கூறினேன். தமிழில் காற்றொலி வகரம் கிடையாது. அடுத்ததாக தமிழில் வடவெழுத்து ஒரீஇ என்னும் விதி உண்டு. சிலர் G.கண்ணன், M.G. ராமச்சந்திரன் என்று உரோமன் எழுத்துகளையும் கூட்டி எழுதுகிறார்கள். இதனால் எல்லாம் A-Z ஆகிய எல்லா எழுத்துகளும் தமிழாகாது. இன்று aழgappaன் என்று எழுத வசதியுள்ளதால், ஆங்கிலேயர் அதனைப் பொது வழக்கில் எழுத அனுமதிக்கமாட்டார்கள். ஆங்கிலத்தில் கூடாது என்று விதியில்லை என்று வாதிட முடியாது. கிரந்தத்தை விலக்கி எழுதுவதால் (தமிழர்களுக்கு) ஒலிப்பில் எளிமை உள்ளது. கூடிய அளவு கிரந்தம் விலக்கி எழுதுவது என்பது பரிந்துரை. ஏறத்தாழ எல்லா இடங்களிலும் எழுத இயலுகின்றது. ஆய்த எழுத்து தமிழில் சங்கக்காலத்தில் இருந்து உள்ளது. அஃது, எஃகு, பஃறுளி, கஃசு என்று பலவாறு பயன்பட்டு இருக்கின்றது. --செல்வா 19:47, 17 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

தன்னைப்பற்றி

[தொகு]

வணக்கம் பாஹிம், விக்கிப்பீடியாக் கொள்கைப்படி ஒருவர் தன்னைப்பற்றி ஒரு கட்டுரையை எழுத முடியாது. அது நடுநிலையாக இருக்க மாட்டாது. அதற்காகவே உங்களைப் பற்றி நீங்கள் எழுதிய கட்டுரையை நீக்கப் பரிந்துரைத்தேன். "புகழ்பெற்ற ஆங்கிலக் கவிஞரான இவர்": இது மிகைப்படுத்தப்பட்ட கூற்றாகக் கருதுகிறேன். ஒருவர் தன்னை இப்படிப் புகழ்ந்து எழுதுவது என்பது எந்தக் கலைக்களஞ்சியத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. நீங்கள் எழுதிய புத்தகங்களின் விவரங்களைத் தருவீர்களா? எப்போது யாரால் வெளியிடப்பட்டன (பதிப்பு விபரங்கள் போன்றவை). இவற்றை உங்கள் மீதுள்ள சந்தேகத்தினால் கேட்கவில்லை. விக்கிப்பீடியாவின் நம்பகத்தன்மைக்காகவே இவை போன்ற விபரங்கள் தேவை. இவற்றை உங்கள் பயனர் பக்கத்தில் தாருங்கள். புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன். இசுலாமிய வரலாற்றுடன் தொடர்புள்ள கட்டுரைகளை தாராளமாக எழுதுங்கள். அவை இங்கு மிகவும் குறைவு. நன்றி.--Kanags \உரையாடுக 22:54, 24 ஜூலை 2010 (UTC)

நீங்கள் கேட்டபடி நான் அவற்றை மாற்றியிருக்கிறேன். மேலும், புத்தக விபரங்களைத் தந்துள்ளேன்.--Fahimrazick 02:03, 25 ஜூலை 2010 (UTC)

நன்றி

[தொகு]

பாகிம், முதலாம் முஆவியா கட்டுரையை திருத்தியதற்கு நன்றி. கிரந்த எழுத்துகளை தவிர்க்கும், தனிப்பட்ட ஆர்வத்தின் பொருட்டே ஹிந்த், ஹாசன் என்பதை இந்த், அசன் என எழுதியிருந்தேன். 'இந்த்' என்பதில் சற்று நெருடல் இருந்தாலும் அசன் என பலரும் எழுதுகிறார்கள்தானே? அசன் என தொடர்வதில் தவறு இல்லை என்றே நினைக்கின்றேன். --அராபத்* عرفات 12:03, 8 செப்டெம்பர் 2010 (UTC) அரபு மொழிச் சொற்களைத் தமிழில் எழுதும்போது விபரீதமான பொருள்கள் உட்பட பல குழப்பங்கள் ஏற்பட வழியுள்ளது. மேலும், அரபு மொழியிலுள்ள (ء,ع) ஆகிய எழுத்துக்களை அவற்றின் உயிரடைக்கு ஏற்ப அ, இ, உ என்பனவாலும் (ح,ه) ஆகிய எழுத்துக்களை அவற்றின் "ஹ" இனாலும் (ك, ق, غ) ஆகிய எழுத்துக்களை "க" இனாலும் (ذ, ت, ط) ஆகிய எழுத்துக்களை "த" இனாலும் (س, ص, ز) ஆகிய எழுத்துக்களை "ஸ" இனாலும் குறிக்கும் வழக்கமே உள்ளது. அவற்றுக்குச் சரியான அல்லது தமிழ் வரிவடிவம் காணப்படாமையாலேயே இவ்வாறு எழுதப்படுகிறது. இவ்வெழுத்துக்கள் அல்லது அவற்றின் உயிரடை மாறும்போது அவற்றின் பொருளும் அப்படியே மாறிவிடுகின்றன. எனவே, ஹசன் என்பதை மாற்றி அசன் என எழுதும்போது அது அப்படியே பிழைத்துவிடுகிறது. தமிழில் கிரந்த எழுத்துக்கள் பயன்படுத்தப்படுவதன் நோக்கமே இவ்வாறான பிரச்சினைகளைக் கூடியளவு தவிர்க்க வேண்டும் என்பதற்காகத்தான்.--பாஹிம் 15:54, 8 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]

வாழ்த்துக்கள்

[தொகு]

இனிய ஈகைத் திருநாள் நல்வாழ்துக்கள். இறைவன் உங்கள் மீது சாந்தியையும் சமாதானத்தையும் உண்டாக்குவானாக. --அராபத்* عرفات 01:50, 10 செப்டெம்பர் 2010 (UTC) உங்களுக்கும் வல்லமை மிக்க இறைவன் அருள் பாலிக்கட்டும். புனித நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்.--பாஹிம் 03:35, 10 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]

உங்களுக்கு புனித நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.--Kanags \உரையாடுக 08:25, 10 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]

உங்களுக்கும் அவ்வாறே என்னுடைய நல்வாழ்த்துக்கள்.--பாஹிம் 10:54, 10 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]

உங்களுக்கு எனது ஈகைத் திருநாள் நல்வாழ்த்துக்கள். -- மயூரநாதன் 10:09, 10 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]

உங்களுக்கும் என்னுடைய நல்வாழ்த்துக்கள்--பாஹிம் 10:54, 10 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]

Tunisia

[தொகு]

Tunisia துனீசியா என்றே உச்சரிக்கப்படுகிறது. இங்கு கேட்டுப் பாருங்கள்: [1]. நன்றி.--Kanags \உரையாடுக 04:08, 22 சனவரி 2011 (UTC)[பதிலளி]

தூனிசியா என்றுதான் அரபியில் உள்ளது. பழைய தமிழ் இஸ்லாமிய நூல்கள் அனைத்தும் தூனிசியா என்று சரியாக அரபியில் உள்ளவாறே குறிப்பிடுவதைக் காணலாம்.--பாஹிம் 04:25, 22 சனவரி 2011 (UTC)[பதிலளி]

மதுராபுரி

[தொகு]

இந்த மதுராபுரி பற்றி சமீம் என்பவர் ஒரு ஐயப்பாடு இங்கே எழுப்பியுள்ளார். உங்களுக்கு ஏதேனும் தெரியுமா?--Kanags \உரையாடுக 11:56, 6 பெப்ரவரி 2011 (UTC)

சமீம் என்பவரது கருத்துப் பிழை. மதுராபுரி என்பது முற்றிலும் பொல்வத்து ஓயா நதியினால் சூழப்பட்ட ஒரு ஆற்றுத்தீவு. ஆற்றைக் கடக்காமல் அங்கு செல்வதற்கு எந்த வழியுமில்லை.--பாஹிம் 12:01, 6 பெப்ரவரி 2011 (UTC)

நன்றி பாஹிம்.--Kanags \உரையாடுக 12:13, 6 பெப்ரவரி 2011 (UTC)

படம்

[தொகு]

பாஹிம், சஃது அபூபக்கரின் படத்தின் ([[படிமம்:சஃது அபூபக்கர்.png]]) மூலம் என்ன?. விக்கிப்பீடியாவின் பதிப்புரிமை விதிகளின்படி உயிருடன் உள்ளவரின் படத்தை (பதிப்புரிமை பெற்றிருந்தால்) பயன்படுத்தவியலாது. இதனால் இப்படத்தை நீக்க வேண்டி வரலாம்.--சோடாபாட்டில்உரையாடுக 05:53, 24 மார்ச் 2011 (UTC)

அப்படம் பொதுவாக பல்வேறு இணையத் தளங்களிலும் காணப்படுகின்றது. அது பதிப்புரிமை பெற்றதாக இருக்க முடியாதென நினைத்துத்தான் அதனைப் பதிவேற்றினேன். அது தவறெனின், அதனை நீக்கி விடுவதில் எனக்கு ஆட்சேபனையில்லை.--பாஹிம் 05:57, 24 மார்ச் 2011 (UTC)

நீக்கிவிடுகிறேன். (அமெரிக்க பதிப்புரிமை விதிகளின் சிக்கல் இது - guilty until proven innocent என்பது போல, தெளிவாக யாரேனும் இதில் பதிப்புரிமை இல்லை என்று எழுதியிருந்தால் ஒழிய விக்கிப்பீடியாவில் பயன்படுத்த இயலாத நிலை)--சோடாபாட்டில்உரையாடுக 06:01, 24 மார்ச் 2011 (UTC)

அரபி ஒலிப்பு உதவி

[தொகு]

பாஹிம்,

El Guettar (Arabic: القطار‎) என்பதை தமிழில் எப்படி எழுதுவது?--சோடாபாட்டில்உரையாடுக 06:21, 24 மார்ச் 2011 (UTC)

அல்-கிதார் என எழுத வேண்டும்.--பாஹிம் 06:34, 24 மார்ச் 2011 (UTC)

நன்றி பாஹிம்.--சோடாபாட்டில்உரையாடுக 07:52, 24 மார்ச் 2011 (UTC)

‎இலங்கையின் தாழ்நில மழைக்காடுகள்

[தொகு]

நல்லதொரு கட்டுரை பாஹிம். வாழ்த்துக்கள். இலங்கையின் மற்றைய காடுகளையும் புன்னிலங்களையும் இவ்வாறு தொகுத்தால் பயனுடையதாயிருக்கும்.--சஞ்சீவி சிவகுமார் / உரையாடுக 04:32, 25 மார்ச் 2011 (UTC)

அப்படித்தான் நினைத்திருக்கிறேன் சஞ்சீவி சிவகுமார். நான் இப்போது இலங்கையில் தான் இருக்கிறேன். இன்னும் சில நாட்களில் ஜகார்த்தாவுக்குத் திரும்பிச் செல்ல வேண்டுமென நினைத்திருக்கிறேன். இதற்கிடையில் தொடர்பு கொள்ள வேண்டுமானால் என்னுடைய கைத்தொலைபேசி 0715249049 இல் அழையுங்கள்.--பாஹிம் 05:09, 25 மார்ச் 2011 (UTC)

பாஹிம், உங்கள் கட்டுரைகள் அனைத்தும் மிக உயர்ந்த தரத்தில் எழுதப்பட்டுள்ளன. வாழ்த்துக்கள். தொடர்ந்து பங்களியுங்கள்.--Kanags \உரையாடுக 21:50, 25 மார்ச் 2011 (UTC)

நன்றி, கனகு. முன்னெல்லாம் நேரம் கிடைத்தது குறைவென்பதாலேயே புதிய கட்டுரைகள் எழுத முடியவில்லை. இனி தொடர்ந்து பங்களிக்க வேண்டுமென்பதுதான் என் விருப்பம். நேற்று சஞ்சீவி சிவகுமார் தொலைபேசியில் கதைத்தார். அவருக்கும் என் நன்றிகள்.--பாஹிம் 02:17, 26 மார்ச் 2011 (UTC)

நல்ல விளக்கங்களுடன் கூடிய கட்டுரை. வாழ்த்துக்கள். --கலை 15:45, 28 மார்ச் 2011 (UTC)

மிக்க நன்றி கலை. நல்ல பல கட்டுரைகளை ஆக்க வேண்டுமென்பது இங்கு தேவையல்லவா? அதனை எம்மால் முடிந்தளவு நிறைவு செய்வோமே.--பாஹிம் 16:50, 28 மார்ச் 2011 (UTC)

பட உரிமங்கள்

[தொகு]

பாஹிம்,

நீங்கள் பதிவேற்றும் படங்களில் நீங்கள் எடுத்தவற்றுக்கு உரிமமாக {{PD-Self}} என்று இணைத்துவிடுங்கள். நீங்கள் எடுக்காதவற்றுக்கு மூலத்துக்கான சுட்டியை description ல் இட்டுவிடுங்கள்--சோடாபாட்டில்உரையாடுக 07:26, 26 மார்ச் 2011 (UTC)

மேலும் http://www.lakdasun.org என்ற தளத்திலிருந்து நீங்கள் பதிவெற்றிய படங்கள் பதிப்புரிமை பெற்றவை. (தளத்தில் பதிப்புரிமை அறிவிப்பு உள்ளது). பிற தளங்களில் உள்ள படங்களில் தெளிவாகப் பதிப்புரிமை இல்லை என்று போட்டிருந்தால் மட்டும் இங்கு பதிவேற்ற இயலும் (அல்லது பதிப்புரிமம் காலாவதியாகியிருக்க வேண்டும் - இந்தியா/இலங்கையில் 60 ஆண்டுகள் ஆனால் காலாவதியாகும், பிரிட்டன்/அமெரிக்காவில் 1923 முந்தைய படைப்புகள் காலாவதியானவை). lakdasun.org படங்களை நீக்கி விடுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 07:30, 26 மார்ச் 2011 (UTC)

அப்படியே செய்யலாம்.--பாஹிம் 07:35, 26 மார்ச் 2011 (UTC)

ஒரு வேண்டுகோள்

[தொகு]

பாஹிம்,

கட்டுரைகளில் "category" எனபதற்கு பதில் “பகுப்பு” என்ற சொல்லை உபயோகிக்க வேண்டுகிறேன். நடைமுறையில் இரண்டுக்கும் வித்தியாசம் இல்லை. ஆனால், பகுப்பு பராமரிப்பு கருவியான hotcat இல் "பகுப்பு” என்று இருந்தால் மட்டுமே நீக்கம்/மாற்றம்/சேர்த்தல் செய்ய இயலுகின்றது என்பதால், பகுப்பு என பயன்படுத்தினால், பின்னர் hotcat பயன்படுத்தி பகுப்பு பராமரிப்பு செய்பவர்களுக்கு வசதியாக இருக்கும்.--சோடாபாட்டில்உரையாடுக 13:30, 16 ஏப்ரல் 2011 (UTC)

அப்படியே செய்கிறேன், சோடாபாட்டில். உங்கள் அறிவுரைக்கு நன்றி. நான் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்ப்புச் செய்துதான் என் கட்டுரைகளை அமைத்துள்ளேன். அதனால் இவ்விடயத்தைக் கவனிக்கவில்லை. முடிந்தளவு விலங்குகள், தாவரங்கள் பற்றிய கட்டுரைகளைத் தர வேண்டுமென்பது என் அவா. ஒரு சிலர் பிழையாகத் தலைப்பிட்டு தாம் எழுதியது எந்த விலங்கைப் பற்றி அல்லது எந்தத் தாவரத்தைப் பற்றி என்றே அறியாதுள்ளனர். வேறு சிலர், அரைகுறையாக மொழிபெயர்த்து தேவையான பகுதிகளை அறவே இல்லாமல் விட்டொழித்து அமைத்த கட்டுரைகளைக் காணும்போது உள்ளம் வருந்துகிறது. அவ்வாறானவற்றைத் திருத்துவதை விட நான் எழுதும் கட்டுரைகளை முடிந்தளவு முழுமையாகத் தருவதே (அதாவது, ஆங்கிலக் கட்டுரையை முழுமையாக மொழிபெயர்த்துத் தருவது) என் விருப்பம்.--பாஹிம் 13:55, 16 ஏப்ரல் 2011 (UTC)

நன்றி

[தொகு]

தலைப்புகளில் திருத்தங்களைச் செய்தமைக்கு என் நன்றிகள் பாஹிம்--P.M.Puniyameen 16:07, 27 மே 2011 (UTC)[பதிலளி]

Wael Ghonim தலைப்பு

[தொகு]

நண்பரே! இங்கும் (Forvo.com - [2]) இங்கும் (youtube -[3]) வேயில் ஓனீம் (அ) வேஇல் ஒனிம் என்றல்லவா ஒலிக்கின்றார்கள். தலைப்பை மறுபடியும் பரிசீலனை செய்ய வேண்டும். --பரிதிமதி 13:17, 1 சூன் 2011 (UTC)[பதிலளி]

அவர்கள் ஆங்கில வழக்கப்படி அப்படி ஒலித்தாலும் அரபு வழக்கப்படி நான் குறிப்பிட்டவாறே ஒலிக்க வேண்டும். ஏனெனில், அவரது பெயர் அரபு மொழியிலேயே உள்ளது.--பாஹிம் 14:01, 1 சூன் 2011 (UTC)[பதிலளி]

முதற்பக்க அறிமுகம்

[தொகு]

பாஹிம்,

முதற்பக்க விக்கிப்பீடியர் அறிமுகத்தில் இடம்பெற உங்களைப் பற்றிய சிறுகுறிப்பு + படத்தினை பின் வரும் இணைப்பில் தருமாறு வேண்டிக் கொள்கிறேன்.

பாஹிம், இலங்கையில் வெலிகமையைச் சேர்ந்தவர். இந்தோனேசியாவின் ஜகார்த்தா மாநகரில் வணிகம் புரிவதுடன் பன்னாட்டளவில் மொழிபெயர்ப்பாளராகவும் மொழியியலாளராகவும் பணியாற்றுகிறார். 2010 முதல் விக்கிப்பீடியாவுக்குப் பங்களித்து வருகிறார். இவர் முதன்மையாகப் பங்களித்த கட்டுரைகளுள் ஆசிய மரநாய், இலங்கையின் மலைசார் மழைக்காடுகள், இலங்கைச் சிங்கம், செம்முகப் பூங்குயில், ஓஊ, ஈஈ, கருமுதலை, வெண் புள்ளிச் சருகுமான், யால தேசிய வனம், அச்சே சுல்தானகம், இப்றாகீம் பாசா என்பன குறிப்பிடத் தக்கவை. இவை தவிர ஏற்கனவே உள்ள கட்டுரைகளின் உரைதிருத்தத்திலும் மொழிசார் கலந்தாய்வுகளிலும் இவர் ஆர்வத்துடன் ஈடுபட்டுள்ளார்.

--சோடாபாட்டில்உரையாடுக 05:19, 15 சூன் 2011 (UTC)[பதிலளி]

அன்புக்கு நன்றி, சோடாபாட்டில். தேவையான விபரங்களைக் கூடிய விரைவில் தருகிறேன்.--பாஹிம் 10:25, 15 சூன் 2011 (UTC)[பதிலளி]

முதற்பக்கத்தில் இட்டுள்ளேன். --சோடாபாட்டில்உரையாடுக 16:38, 15 சூன் 2011 (UTC)[பதிலளி]

வாழ்த்துக்கள்

[தொகு]

உங்களைப் பற்றிய முதற் பக்க அறிமுகம் கண்டு மகிழ்வடைகிறேன். வாழ்த்துக்கள் பாஹிம். விக்கியில் உங்கள் பணி மேலும் சிறக்கட்டும்--P.M.Puniyameen 16:44, 15 சூன் 2011 (UTC)[பதிலளி]

பாஹிம், முதற்பக்கத்தில் உங்கள் அறிமுகம் கண்டேன். மிக்க மகிழ்ச்சி. தமிழ் விக்கியில் உங்கள் பங்களிப்பு நீண்டகாலம் தொடரட்டும். -- மயூரநாதன் 18:15, 15 சூன் 2011 (UTC)[பதிலளி]

வாழ்த்துக்களுக்கு நன்றி, நண்பர்களே. தமிழ் விக்கிப்பீடியாவுக்கு என்னாலான பங்களிப்புக்களை வழங்க வேண்டும் என்பதே என் விருப்பம்.--பாஹிம் 01:15, 16 சூன் 2011 (UTC)[பதிலளி]

முதல் பக்க அறிமுகம் கண்பதில் மகிழ்ச்சி.--சஞ்சீவி சிவகுமார் 03:21, 17 சூன் 2011 (UTC)[பதிலளி]

நன்றிகள்

[தொகு]
எனக்கு நிருவாக அணுக்கம் வேண்டி வாக்களித்த,ஊக்கந்தந்த,மனம் நிறையப் பாராட்டிய உங்களுக்கு நன்றிகள். என்னாலான பணிகளை விக்கிக்கு தொடர்ந்து தருவேன். நன்றிகள்--சஞ்சீவி சிவகுமார் 03:21, 17 சூன் 2011 (UTC)[பதிலளி]

ஃகொங்கொங் பெயர்

[தொகு]

பேச்சு:ஃகொங்கொங் இணைத்துள்ள கருத்துப்பற்றி அறிய ஆவல்00:41, 18 சூலை 2011 (UTC)உழவன்+உரை..


குயில் கட்டுரைகள்

[தொகு]

நீங்கள் தொடர்ச்சியாகக் குயில்கள் குறித்த கட்டுரைகள் எழுதியது கண்டு மகிழ்ச்சி. ஆனால், அவற்றின் பெயர்கள் எங்கிருந்து எடுக்கப்பட்டவை? இது நீங்களாக அளித்த பெயர்களா அல்ல ஏதேனும் நூலில் பயன்படுத்தப்பட்ட பெயர்களா என அறிய ஆவல். நீங்களே இட்டபெயரெனில், பெயர்க்காரணத்தையும் சேர்க்க வேண்டுகிறேன். --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 16:44, 18 சூலை 2011 (UTC)[பதிலளி]

குயில்கள் பற்றிய கட்டுரைகளுக்கான ஆங்கிலக் கட்டுரைகளிற் சிங்களப் பெயர்களை அப்படியே பயன்படுத்தியிருக்கிறார்கள். Malkoha என்பதன் பொருள் தமிழில் "பூங்குயில்" என்பதாகும். "பூங்குயில் ராகமே ..." எனும் பாடலை வைத்து எது பூங்குயில் என்று கேட்க முடியாது. என் கட்டுரைகளிலுள்ள பெயர்களுக்கான முன்னொட்டுக்கள் ஆங்கிலத்தைத் தழுவி நான் தமிழில் ஆக்கியவை. இலங்கையிலும் வேறு பல நாடுகளிலுமுள்ள உயிரினங்கள் குறித்து நான் இவ்வாறான வேறு பல கட்டுரைகளையும் ஆக்க எண்ணியுள்ளேன். அவற்றுக்கான தமிழ்ப் பெயர்கள் கிடையவே கிடையாது. இலங்கை அரசு வெளியிட்ட தாவர,விலங்கினப் பெயரீட்டு ஏடுகளில் இலங்கையிற் காணப்படும் உயிரினங்கள் பலவற்றுக்குச் சிங்களப் பெயரை மாத்திரம் தந்திருக்கிறார்கள். எனினும், ஊர்ப் பகுதியிற் பயன்படுத்தப்படும் பெயர்களில் பெரும்பாலானவற்றை நான் அறிவேன். உதாரணமாக, Imperial Pigeon என்பதை எனது ஊரார் தமிழில் "மானில்" என அழைக்கின்றனர். இப்பெயரை நான் வேறெங்கேயும் காண முடியவில்லை. பறவைப் பெயர்க் கையேடுகள் எவற்றிலும் அது பற்றிக் காணவில்லை. இவ்வாறான சொற்களை நான் அப்படியே ஊராரைப் பின்பற்றிப் பயன்படுத்த வேண்டியிருக்கிறது. நான் இவ்வாறான பெயரீடுகள் பற்றி முன்னர் பயனர் சஞ்சீவி சிவகுமாருடன் தொலைபேசியில் உரையாடியிருக்கிறேன். அவரும் என் கருத்தை ஆமோதித்தார். வேறு நாடுகளிலுள்ள உயிரினங்களின் பெயர்களைத் தமிழில் ஆக்கும் போது அவற்றுக்கு நானே தான் பெயரிட வேண்டியிருக்கிறது. அது கடினமான செயலும் கூட. எனினும், நான் உயர்தர வகுப்புக்களில் தாவரவியலும் விலங்கியலும் கற்றமை எனக்கு இவ்விடயத்திற் பயன்படுமென நினைக்கிறேன். புதிய தமிழ்ப் பெயர்களை ஆக்கும் போது நான் குறித்த பகுதியில் வாழும் மக்களைத் தொடர்பு கொள்வது வழமை. அண்மையில் இவ்வாறான பல பறவைகள் குறித்து இங்கே இந்தோனேசியாவிலும் நான் கலந்துரையாடினேன்.--பாஹிம் 00:43, 19 சூலை 2011 (UTC)[பதிலளி]

தாங்கள் உருவாக்கும் புதிய பெயர்களின் தொகுப்பைத் தங்கள் பயனர் பக்கத்தில் தொகுத்துத் தரலாம் அல்லது விக்சனரியில் இடுவது மூலம் அங்கு சொற்களைக் கூட்டலாம், மற்றவருடன் ஆராயப்படவேண்டிய சொற்களை விக்கிப்பீடியா:கலைச்சொல் ஒத்தாசை/உயிரியல் பக்கத்தில் இடலாம் என்பது எனது கருத்து. அருமையாக கட்டுரைகளை ஆக்கிவருகின்றீர்கள். --செந்தி--ஃ உரையாடுக ஃ-- 11:07, 20 சூலை 2011 (UTC)[பதிலளி]

நன்றி செந்தி. அப்படியே செய்யலாம்.--பாஹிம் 12:43, 20 சூலை 2011 (UTC)[பதிலளி]

பொதுப் பெயர் இல்லாத போது, பறவைகளின் ஊர்ப் பெயர்களை இடுவது பொருத்தமே. அருமையான கட்டுரைகள். நன்றி. --Natkeeran 15:09, 20 சூலை 2011 (UTC)[பதிலளி]

நன்றி

[தொகு]

நன்றி பாஹிம். பிழைகள் ஏற்படுமிடத்து திருத்திவிடுங்கள் ஆங்கில உச்சரிப்பில் எனக்குக் கூடுதலான பிழைகள் வந்து விடுகின்றன. --P.M.Puniyameen 16:09, 4 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

அப்படியே செய்யலாம். சிங்களப் பெயர்களுக்கான ஆங்கில உச்சரிப்பு பெரும்பாலும் பிழையாக வந்துவிடுவதுண்டு. அதனை நாம் சரியான சிங்களப் பெயர்களுடன் ஆக்கினால் சரிதானே. நான் வருகின்ற ஞாயிற்றுக் கிழமை இலங்கைக்கு வர ஏற்பாடாகியுள்ளது. அப்போது, உங்களைச் சந்திக்கலாம் என எண்ணியுள்ளேன்.--பாஹிம் 16:39, 4 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

தம்பி பாஹிம், இலங்கை வருவது அறிந்து மகிழ்கின்றேன். இலங்கை வந்தால் கட்டாயமாக சந்திப்போம். தங்கள் இலங்கை தொலைபேசி இலக்கத்தை எனக்கு அனுப்பி வையுங்கள். தங்கள் பயணம் வெற்றிகரமாக அமைய வாழ்த்துகிறேன்.--P.M.Puniyameen 06:48, 6 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

Invite to WikiConference India 2011

[தொகு]

Hi Fahimrazick,

The First WikiConference India is being organized in Mumbai and will take place on 18-20 November 2011.
You can see our Official website, the Facebook event and our Scholarship form.

But the activities start now with the 100 day long WikiOutreach.

Call for participation is now open, please submit your entries here. (last date for submission is 30 August 2011)

As you are part of Wikimedia India community we invite you to be there for conference and share your experience. Thank you for your contributions.

We look forward to see you at Mumbai on 18-20 November 2011

ஈத் முபாரக்

[தொகு]

இம் மாதம் முழுவதும் நோன்பிருந்து பல்வேறுபட்ட நற்கருமங்களில் ஈடுபட்டு புனித ரமழான் பெருநாளை கொண்டாடிக் கொண்டிருக்கும் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எமது இதயம் கனிந்த பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் அகமகிழ்வடைகின்றோம். விக்கி குடும்பத்தின் சார்பில்--P.M.Puniyameen 00:45, 31 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

என் இனிய வாழ்த்துகள்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 00:54, 31 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

நன்றி. உங்களுக்கும் என் நல்வாழ்த்துக்கள்!--பாஹிம் 04:07, 31 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]


அஸ்ஸலாமு அலைக்கும் Fahimrazick/2011 அவர்களே , எனது இனிய நோம்புப் பெருநாள் நல்வாழ்த்துக்கள் !
இந்நாள் உங்களுக்கு இனிய நாளாக அமையட்டும்!
--சமீர்உரையாடுக!

ம்ஹ்ஹம்

[தொகு]

வணக்கம்.

மஹ்றம் தொகுப்பிற்கு நன்றிகள். அப்படியே (முதல்பக்கக் கட்டுரைஹஜ்), உம்றா,மீக்காத்,இஹ்றாம் முதலியவற்றையும் சரி பார்த்து விடுங்கள். --Parvathisri 13:33, 23 சனவரி 2012 (UTC)[பதிலளி]

அப்படியே செய்யலாம்.--பாஹிம் 14:33, 23 சனவரி 2012 (UTC)[பதிலளி]

மறுமொழி தந்துள்ளேன்

[தொகு]

நீங்கள் பகுப்பு பேச்சு:இந்திய முஸ்லிம் எழுத்தாளர்கள் இப்பக்கத்தில் கேட்ட கேள்வியை இப்பொழுதுதான் பார்த்தேன். மன்னிக்கவும், காலம் தாழ்ந்து என் மறுமொழியையும், கருத்தையும் பகிர்வதற்கு. இப்பொழுது அங்கே பதிவு செய்துள்ளேன். பார்க்கவும். நன்றி. --செல்வா 00:11, 28 சனவரி 2012 (UTC)[பதிலளி]

அரபி உதவி

[தொகு]

பாஹிம், ஆங்கிலத்தில் agha என எழுதப்படும் அரபிப் பெயரை (agha khan) தமிழில் எப்படி எழுதுவது?. அக்ஹா, ஆகா/ஆக்ஹா எது பொருந்தும்?--சோடாபாட்டில்உரையாடுக 09:40, 28 சனவரி 2012 (UTC)[பதிலளி]

அது பாரசீக மொழிச் சொல். آغا خان என்பதை ஆகா கான் என்று எழுதவதுதான் பொருத்தம். இதில் உள்ள "غ" என்பதைத் தற்காலத்தில் "ங" என்று குறிக்கும் வழக்கமும் உள்ளது. எனவே, ஆஙா என்று எழுதினாலும் தவறில்லை.--பாஹிம் 09:49, 28 சனவரி 2012 (UTC)[பதிலளி]

நன்றி பாஹிம்--சோடாபாட்டில்உரையாடுக 09:57, 28 சனவரி 2012 (UTC)[பதிலளி]

சோழர் பற்றிய கேள்வி வேழமா வேளமா?

[தொகு]

இது பற்றி பார்வதி அவர்களும் நீங்களும் உரையாடிய கருத்துகளை, பேச்சு:சோழர்#வேழமா வேளமா? என்னும் இடத்தில் குறிப்பு ஒன்றை இட்டுள்ளேன். இது பற்றி எனக்குத் தெரியாது. சோழர் பக்கத்தில் தொடர்வது, பின் வருபவர்களுக்கும் உதவியாக இருக்கும்.--செல்வா 22:49, 28 சனவரி 2012 (UTC)[பதிலளி]

வேண்டுகோள்

[தொகு]

பாஹிம்,

விக்கிப்பீடியா பயனர்களை, நம் பயனர் பக்கத்தில் நாம் குறிப்பிடும் தகவல்களைக் கொண்டு அவ்வப்போது எட்டிப்பார்க்கும் அனானிகள் அவதூறு செய்வது வழமையான ஒன்றே. நானும் பலமுறை விக்கிக்குள்ளும் வெளியிலும் தூற்றப்பட்டுள்ளேன். விக்கிக்கு உங்கள் பங்கு எத்தகையது என்பதையும், நீங்கள் செய்துவரும் அரும்பணிகளையும் வழக்கமான பங்களிப்பாளர்கள் அனைவரும் அறிவோம். திடீரென்று வந்த ஒரு அனானியின் பேச்சுகளால் நீங்கள் மனம் வருந்தி இத்தகைய முடிவு எடுக்க வேண்டாம். அந்த உரையாடலை விக்கியிலிருந்து நீக்கப்போகிறேன். (இதனை சற்று தாமதமாகப் பார்த்து விட்டேன். இல்லையெனில் முன்பே தலையிட்டு அனானியின் தனிமனிதத் தாக்குதலை நீக்கியிருப்பேன்). நீங்கள் வழக்கம் போலத் தொடர்ந்து பங்களிக்க வேண்டுகிறேன். --சோடாபாட்டில்உரையாடுக 09:38, 8 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

அன்பிற்குரிய பாஹிம், உங்களைப் போன்ற மொழியியல் வல்லுனர்கள் தமிழுக்கு வேண்டும். தயவுசெய்து நீங்கள் உங்களின் சேவையை தொடர்ந்து செய்யவேண்டும் என்பது எனது வேண்டுகோள். --Selvasivagurunathan m 09:55, 8 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

வணக்கம் பாஹிம், பொது இடங்களில் பங்களிக்கும் போது இவ்வாறான அநாமதேயத் தாக்குதல்கள் இடம்பெறுவது தவிர்க்க முடியாததே. சோடாபாட்டில் உடனடியாக இதில் தலையிட்டது நல்லது. அருள் கூர்ந்து உங்கள் பங்களிப்புகளைத் தொடர்ந்து வழங்குவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.--Kanags \உரையாடுக 10:06, 8 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

பாஹிம், உங்களது பங்காற்றல் தமிழ் விக்கிக்கு மட்டுமல்லாது தமிழ் கூறும் நல்லுலகி்ற்கே மிகத் தேவையானதொன்று. சில விசமிகளின் பேச்சுக்களால் நீங்கள் மனம் வருந்தி இங்கிருந்து வெளியேறுவது அவர்களது வெற்றிக்கு வழிகாட்டுவதாக அமையும். தயவுசெய்து தங்கள் பங்காற்றலை எப்போதும் போல தொடர்க என வேண்டுகிறேன்.--மணியன் 10:10, 8 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

பாஹிம், உங்களது பங்களிப்பு தமிழ் விக்கிக்கு என்றும் தேவை. விசமிகளின் பேச்சுக்களால் நீங்கள் மனம் வருந்தி வெளியேறுவதால் விசமிகளின் விசமத்தனம் முடிவடைந்து விடப் போவதில்லை மாறாக விசமிகளின் வெற்றிக்கு வழிகாட்டுவதாக அமையும். எப்போதும் போல உங்களது பங்களிப்பு தொடர வேண்டும். இது இந்த அண்ணாவின் அன்புக் கட்டளை. நிச்சியமாக தொடர்வீர்கள் இந்த நம்பிக்கை எனக்குண்டு. --P.M.Puniyameen 11:51, 8 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

அன்பு நண்பர்களே! என் பேச்சுப் பக்கத்திலும், மின்னஞ்சலிலும், தொலைபேசியிலும் எனக்கு ஆதரவு தெரிவித்து என் பங்களிப்புக்காக வேண்டுகோள் விடுத்த உங்களனைவருக்கும் என் நன்றிகள். அனானியின் பண்பற்ற நடத்தை எனக்குள் மன வருத்தத்தை ஏற்படுத்தினாலும், உங்களது ஆதரவு என்னை மனம் நெகிழச் செய்கிறது. நான் விக்கியில் என்னுடைய பணியை வழமை போலத் தொடர்கிறேன்.--பாஹிம் 13:15, 8 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

நண்பரே, Deloitte என்ற ஆங்கில வார்த்தையை டெலாய்ட் என்று தான் உச்சரிக்கப்படுகிறது.தயவு செய்து சரி பார்க்கவும்.நன்றி! Abdul raja 09:24, 29 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

அப்துல் ராஜா, டெலொய்ற் என்பது பிரித்தானிய நிறுவனம். பிரித்தானிய ஒலிப்பில் டெலொய்ற் என்பதுதான் சரி. இந்திய வழக்கில் டெலாய்ற் என்று பயன்படுத்தக்கூடும்.--பாஹிம் 09:47, 29 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

முதற்பக்கச் செய்திகள்

[தொகு]

பாஹிம், முதற்பக்கச் செய்திகளை இற்றைப்படுத்துவதற்கு நன்றி. முதற்பக்கத்தில் தரும் செய்திகளுக்கு வெளி இணைப்புகள் தருவது நல்லதல்ல. பதிலாக அதே செய்தியை வெளி இணைப்புடன் இங்கு தரலாம். நன்றி.--Kanags \உரையாடுக 20:26, 29 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

அப்படியே செய்யலாம், கனகு.--பாஹிம் 00:39, 30 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

பூக்கும்தாவரம்

[தொகு]

பூக்கும் தாவரங்களின் பெயரீடு புதிய முறை கொடுத்திருந்தீர்கள். புதிய தகவல். நன்றி. அதற்குரிய மேற்கோளையும் கொடுத்தீர்கள் என்றால் மேலதிக தகவல்களைப் பெற விரும்புபவர்களுக்கு உதவியாக இருக்குமே.--கலை 11:31, 13 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]

ஒன்றுமில்லை. ஆங்கிலத்தில் இருந்ததை அப்படியே மொழிபெயர்த்தேன். ஆங்கிலப் பெயர்களை எவ்வெக்காரணங்கள் கொண்டு அவர்கள் அமைத்திருக்கின்றனரோ, அதே காரணங்களைக் கருதித்தான் நான் தமிழ்ப் பெயர்களை ஆக்கினேன்.--பாஹிம் 12:11, 13 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]

பூக்கும் தாவரங்களின் புதிய வகுப்பாக்கம் குறித்து அக்கறை எடுத்துக்கொண்டமைக்குப் பாராட்டுக்கள் பாஹிம்.--சஞ்சீவி சிவகுமார் 15:04, 15 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]

நன்றி, சஞ்சீவி சிவகுமார்.--பாஹிம் 16:26, 15 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]

பகுப்புகள்

[தொகு]

புதிதாகப் பகுப்புகளை உருவாக்கும் போது அப்பகுப்பு குறைந்தது இரண்டு தாய்ப்பகுப்புக்குள் உள்ளடக்கலாம். உதாரணமாக, சீனத் தாவரங்கள் என்ற உபபகுப்பு "நாடுகள் வாரியாகத் தாவரங்கள்" (தாவரங்களைக் குறிக்கும் தாய்ப்பகுப்பு). மற்றும் அது சீனா என்ற தாய்ப்பகுப்பிலோ அல்லது சீனாவின் வேறு பொருத்தமான உபபகுப்பு ஒன்றினிலோ உள்ளிட வேண்டியது அவசியம்.--Kanags \உரையாடுக 09:53, 15 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]

சரி. அப்படியே செய்யலாம்.--பாஹிம் 10:12, 15 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]

ஆக்ஸிஜன்-ஒட்சிசன்

[தொகு]

வணக்கன் பாஹிம்.

எனது கட்டுரைகளைக் கவணித்து உடனுக்குடன் பிழைகளைத் திருத்தியும் தகுந்த இணைப்புகள் கொடுத்தும் வருகிறீர்கள். நன்றி! 'ஆக்ஸிஜன்' என்பதற்கு 'ஓட்சிஜன்' என்று மாற்றியுள்ளீர்கள். இரண்டுமே ஆங்கில ஒலிப்புகள் தான். தமிழகத்தில் உயிர்வளி என்றே வழங்கப்படுகிறது. பாடப்புத்தகங்களிலும் இடம்பெற்றுள்ளது. இது தமிழ்ப் பெயர் தானே. எனவே உயிர்வளி என்றே மாற்றிவிடுங்கள். மேலும் சில தமிழகத்தில் வழங்கும் ஒலிப்புச் சொற்களை இலங்கை வழக்குக்கு மாற்ற விரும்பினால் அடைப்புக்குள் அதனைத் தந்து விடுங்கள்' குழப்பம் இராது. நன்றி--Parvathisri 03:46, 18 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]
இலங்கை வழக்கு ஒக்சிஜன். ஒட்சிஜன் எனவும் சிலர் எழுதுவார்கள், ஆனால் அது தவறு. தமிழக, இலங்கை வழக்கு குளறுபடி ஏற்படாமல் இருக்க உயிர்வளி எனத் தரலாம்.--Kanags \உரையாடுக 03:52, 18 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]
குளறுபடி இல்லாமல் இருக்க “உயிர்வளி” என்று எழுதலாம் என்றாலும். தமிழக வழக்கிலோ, இலங்கை வழக்கிலோ முதலில் எழுதுவதை மாற்றாதிருப்பதே தமிழ் விக்கி மரபு. "ஆக்ஸிஜன்” என்று எழுதப்பட்டிருந்தால் அருள் கூர்ந்து மாற்ற வேண்டாம்.--சோடாபாட்டில்உரையாடுக 04:14, 18 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]

அப்படியான நிலைமைகளின் போது "உயிர்வளி" என்று மாற்றுகிறேன். அப்போது குளறுபடி ஏற்படாதல்லவா?--பாஹிம் 04:41, 18 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]

கேள்விக்கான பதில்

[தொகு]

பேச்சு:குமரிக்கண்டம் பகுதியில் இலங்கையின் புவிச்சரிதவியல் வரலாறு என்ற உள்ளடக்கத்தில் நீங்கள் கேட்டுள்ள கேளவிக்கு ஒரு புத்தகத்தில் இருந்து என்னால் பதில் தரப்பட்டுளது. இதற்கான நம்பகத்தன்மை பற்றியும் இது சம்பந்தமான எதிர் கேள்விகள் இருந்தாலும் தெரிவிக்கவும். நான் முடிந்தளவு புத்தகங்களில் இருந்து பதில் கூற முடியும்.--தென்காசி சுப்பிரமணியன் 08:04, 29 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]

விக்கிப்பீடியா விதிமுறைகளை பார்க்கவும் !

[தொகு]

தொகுக்கப்படுகிறது வார்ப்புரு இட்டிருக்கும் பொழுதே பக்கத்தினை நகர்த்தியுள்ளீரகள்! விக்கிப்பீடியா விதிமுறைகளை பார்க்கவும். ---- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 09:57, 10 மே 2012 (UTC)[பதிலளி]

அதே விதிமுறைகளில் விக்கிப்பீடியாத் தலைப்புக்கள் மெய்யெழுத்திற் தொடங்குவதில்லை என்றிருப்பதை நீங்கள் பார்க்கவில்லை போலும். அத்துடன் ஒருவருக்கு ஏதோ ஒன்றை அறிவுறுத்துவதற்காக இத்தனை விளிப்புக் குறிகளைப் பயன்படுத்துவது விக்கிப்பீடியா விதிமுறைகளுக்கு உட்பட்டதா என்று அறியத் தரவும். ஏனெனில், அத்தனை விளிப்புக் குறிகளைப் பயன்படுத்துவது நீங்கள் என் மீது எரிந்து விழுவது போன்று உணர்கிறேன்.--பாஹிம் (பேச்சு) 10:49, 10 மே 2012 (UTC)[பதிலளி]

விக்கிப்பீடியா விதிகளைச் சில வேளைகளில் மீறலாம். பார்க்க: விக்கிப்பீடியா:விதிகளை மீறு --மதனாகரன் (பேச்சு) 11:54, 10 மே 2012 (UTC)[பதிலளி]
பாஹிம், தாங்கள் செய்தது தவறு என்பது என் கருத்தல்ல, தொகுக்கப்படுகிறது என்ற வார்ப்புரு இட்டே கட்டுரை ஆரம்பித்துள்ளேன், நீங்கள் பெயரை மாற்ற விரும்பியிருந்தால், என்னுடைய பேச்சு பக்கத்திலோ, அப்பக்கத்தின் உரையாடல் பகுதியிலோ ஒரு சிறு குறிப்பிட்டிருக்கலாம். உங்கள் மேல் நான் கோபம் கொள்ளவில்லை, நான் தமிழில் தட்டச்சு செய்து வைத்திருந்தவை வீணாயிற்று அதன் காரணமாகவே உங்கள் பேச்சு பக்கத்தில் பதிவு செய்து உங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தேன். மதனாஹரன் சொன்னது விக்கிப்பீடியாவின் விதிகளை சில சமயங்களில் மீறலாம், ஆயினும் ஒருவருடைய உழைப்பிற்கும் நேரத்திற்கும் மதிப்பளிக்க தவறக்கூடாது. விக்கிப்பீடியாத் தலைப்புக்கள் மெய்யெழுத்திற் தொடங்குவதில்லை என எனக்கும் தெரியும். பயனர்களின் விருப்பத்தேர்வில் உள்ள இடத்தில் தமிழில் ப்ரூவ் இட் என்று உள்ள காரணத்தினால், குழப்பங்களைத் தவிர்க்க அப்பெயரினை இட்டேன். சரியான இடத்தில் அப்பக்கத்தினை நகர்த்திடவும் குறிப்பிட்டுள்ளேன். பார்க்க. -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 12:08, 10 மே 2012 (UTC)[பதிலளி]

மதனாகரன் சுட்டிக்காட்டியிருப்பது சரிதான். எப்படியிருந்தாலும், தினேஷ்குமாருக்கு வந்தது போன்ற இக்கட்டு எனக்கும் முன்னர் ஏற்பட்டது. அவ்வாறு ஒருவருடைய உழைப்பும் நேரமும் பயன் தருவதாயிருக்குமிடத்து அவற்றுக்குக் கட்டாயம் மதிப்பளிக்க வேண்டும். ஆதலின், நான் நகர்த்தியதனால் ஏற்பட்டை வசதிக் குறைவை அருள் கூர்ந்து பொறுத்துக் கொள்க.--பாஹிம் (பேச்சு) 12:21, 10 மே 2012 (UTC) 👍 விருப்பம் --மதனாகரன் (பேச்சு) 14:35, 10 மே 2012 (UTC) 👍 விருப்பம் -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 16:07, 10 மே 2012 (UTC)[பதிலளி]

இலக்கண விதிமுறைகளைப் பின்பற்றல்

[தொகு]

பாகிம், சொல்லின் இறுதியில் ஆய்தம் வராது என்ற விதியைச் சுட்டிக் காட்டிய பிறகு, பல்வேறு பக்கங்களில் உள்ள இலக்கணப் பிழைகளைச் சற்று மெனக்கெட்டுச் சுட்டி வருகிறீர்களோ என்று தோன்றுகிறது. அதற்கு முன்பும் இவ்வாறான பங்களிப்புகளைச் செய்து வருவீர்கள் என அறிவேன். தனிப்பட்ட முறையில் நீங்கள் சுட்டியுள்ள மாற்றங்கள் ஏற்பே. ஆனால், தொல்காப்பிய விதிகளை முற்று முழுதாக நடைமுறைக்குக் கொண்டு வருவது இன்றைய தமிழ் பயன்பாட்டில் இருந்தும் பங்களிப்பாளர்களிடம் இருந்தும் தமிழ் விக்கிப்பீடியாவை அன்னியப்படுத்திவிடக்கூடும். ஆய்தம் என்ற ஒரு தனிப்பட்ட எழுத்தின் பயன்பாடு முற்றிலும் சிதைந்து போகும் வாய்ப்புக்கும் மற்ற இலக்கணப் பிழைகளின் தீமைகளுக்கும் வேறுபாடு உண்டு. உயிராகவும் இல்லாமல் மெய்யாகவும் இல்லாமல் தனி எழுத்தாக ஆய்தத்தை வைத்துள்ளதன் தன்மை அறிந்து அதனைப் பயன்படுத்துவது நன்று. இலக்கணத்தை முற்றிலும் நடைமுறைப்படுத்துவது, முற்றிலும் புறக்கணிப்பது ஆகிய இரு எல்லைகளுக்கு இடையே ஒவ்வொரு விதியாக உரையாடித் தீர்வுக்கு வருவது நல்லது என்று கருதுகிறேன்.--இரவி (பேச்சு) 08:16, 14 சூலை 2012 (UTC)[பதிலளி]

இரவி, நான் இப்பொழுது அதற்கென்றே செய்யவில்லை. இதற்கு முன்னரும் பல தடவைகள் நான் இவ்வாறான பிழைகளைச் சுட்டிக் காட்டியும் திருத்தியும் வந்துள்ளதை நீங்கள் அறிவீர்கள். அத்துடன் ஆய்த எழுத்தின் பயன்பாட்டிலும் ஏனைய இடங்களிலும் இன்றை கால, சூழ்நிலைகளுக்கு ஏற்பத் தமிழ் இலக்கணத்தைத் திருத்தி எழுத வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. தொல்காப்பிய விதிகளில் எத்தனை விதிகள் இன்று மாற்றம் பெற்றுள்ளன என அறியேன். ஆயினும் மொழி என்பது புரிந்து கொள்ள எளிதாகவும் நடைமுறைச் சிக்கல் அற்றதாகவும் இருக்க வேண்டும். ஏனைய மொழிகளுக்குத் தமிழ் இலக்கணம் வளைந்து கொடுக்கத் தேவையில்லை என்று ஒரு சாரார் கருதினாலும், அவ்வாறு குறிப்பிட்ட பெயர்ச் சொற்களிலாவது வளைந்து கொடுக்காவிட்டால் வேறு பல சிக்கல்கள் ஏற்படுவதை நாம் அறிவோம். இதனாற்றான், இங்கு இலக்கணச் சிக்கல்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக, நாம் வேற்று நாடுகளின் அல்லது வேற்று மொழிகளின் பெயர்களை எழுதும் போதுதான் கூடிய சிக்கல்கள் தோன்றுகின்றன. சிலர் சமசுகிருதத்துக்கு மாத்திரம் தனித்த அல்லது உயரிய தகுதியை வழங்கி, அது வடமொழி என்றும் அதை ஏற்கலாமென்றும் ஏனையவற்றை ஏற்க முடியாதென்றும் கூறுவதைப் பார்த்திருக்கிறேன் (இலங்கையில் உள்ள தமிழ் வாத்தியார்களே அப்படிச் சொல்வதைப் பார்த்திருக்கிறேன்). நாம் இங்கு விக்கிப்பீடியாவில் வேற்று மொழிச் சொற்களைப் பற்றிய தெளிவான விதிமுறையொன்றைக் கொண்டிராவிடின், தமிழ் இலக்கணத்தைச் சார்ந்து எழுதுவதே சரியெனக் கருதுகிறேன்.--பாஹிம் (பேச்சு) 08:36, 14 சூலை 2012 (UTC)👍 விருப்பம் --மதனாகரன் (பேச்சு) 14:23, 14 சூலை 2012 (UTC)[பதிலளி]

பாகிம், தங்கள் மறுமொழிக்கு நன்றி. நீங்கள் வழமையாகவே இப்பணியைச் செய்து வருவதையும் எனது முதல் செய்தியிலேயே குறித்திருந்தேன். எனினும், ஒரே வகையான இலக்கணப் பிழைகளைப் பல்வேறு பக்கங்களில் சுட்டிக் காட்டுவதற்குப் பதில் அது குறித்து ஒரு பக்கத்தில் கொள்கை நிலைப்பாடு ஏற்பட உரையாடுவது நன்று என்றே இங்கு பயனர் பக்கத்தில் கவனம் ஈர்த்தேன். காலத்துக்குத் தகுந்த இளக்கத் தன்மை தகும் என்பதாலேயே முற்றிலும் தொல்காப்பியத்தை நடைமுறைப்படுத்த இயலாது என்று கூறி இருந்தேன். 1) சொற்கள் மெய்யெழுத்துகளில் தொடங்கலாமா? 2) ல, ர, ட முதலிய எழுத்துகளில் சொற்கள் துவங்கலாமா? 3) இலக்கணம் ஏற்காத மெய்யொலிக்கூட்டங்களைப் பயன்படுத்தலாமா? எவற்றை ஏற்கலாம், எவற்றைத் தவிர்க்கலாம்? 4) ஏற்றுக் கொள்ளக்கூடிய ஆய்த எழுத்துப் பயன்பாடுகள் எவை?.. இது போன்ற பல கேள்விகளையும் தனித்தனியே உரையாடி ஒரு நிலைப்பாடு / புரிந்துணர்வு எட்ட வேண்டி உள்ளது. விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் இலக்கண முறைகள் குறித்த தமிழ் விக்கிப்பீடியா நிலைப்பாடு பக்கத்தில் தொடர்வோமா?--இரவி (பேச்சு) 14:54, 14 சூலை 2012 (UTC)👍 விருப்பம்--பாஹிம் (பேச்சு) 15:00, 14 சூலை 2012 (UTC)[பதிலளி]

வணிகப் பெயர்களை மாற்றலாமா என்பது குறித்தும் முடிவு எடுக்கப்பட வேண்டியது இன்றியமையாத தேவையாகும். கிரந்த எழுத்துப் பயன்பாட்டை நீக்குவது தொடர்பிலும் ஏதேனும் முடிவை எடுப்பது நன்று. --மதனாகரன் (பேச்சு) 15:02, 14 சூலை 2012 (UTC)[பதிலளி]

இருக்கிற தமிழ் எழுத்துகளைக் கொண்டு வணிகப் பெயர்களை மாற்றாமல் அப்படியே எழுதுவதே தகும். கிரந்த உரையாடலுக்கு இன்னும் கொஞ்சம் காலம் எடுப்போமே :) --இரவி (பேச்சு) 15:06, 14 சூலை 2012 (UTC)[பதிலளி]

வணிகப் பெயர்களின் அலுவல் முறைப் பெயர்கள் இருந்தாலேயொழிய அவற்றை மாற்றுவது சரியென எனக்குத் தோன்றவில்லை. அப்படியே மாற்றுவதாக இருந்தால் எல்லா இடங்களிலும் அப்படி மாற்ற வேண்டிய சிக்கல் ஏற்படும். எனினும் வணிகப் பெயர்கள் விடயத்தில் நான் சற்று அனுபவம் பெற்றுள்ளேன். கூகுள் நிறுவனத்தின் பல்வேறு வலைத்தளங்களினதும் செயற்பணிகளிலும் உள்ள பெயர்களை மொழிபெயர்த்த போது, அவற்றுக்குச் சிங்களப் பெயர்களை ஆக்கியவன் நானே. அவ்வேலையின் போது "பொருத்தமான மொழிபெயர்ப்புத் தாருங்கள்" என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. அது அந்நிறுவனத்தைப் பொருத்தவரையிற் சரியே. எனினும், எல்லா நிறுவனப் பெயர்களுக்கும் நாம் மொழிபெயர்ப்புக் கொடுக்கப் போனால், உண்மையான பெயரைக் கொண்டு தேடுவோர் சரியாகக் கண்டுகொள்வரோ என்பது சந்தேகமே.--பாஹிம் (பேச்சு) 15:13, 14 சூலை 2012 (UTC)[பதிலளி]

நிச்சயமாக வணிகப் பெயர்களை மொழிபெயர்க்கக்கூடாது. வணிகப் பெயர்களின் எழுத்துப்பெயர்ப்பு பற்றியே இங்கு கேட்டேன். எடுத்துக்காட்டாக, விக்சனரியையே கொள்ளலாம். ககர மெய்யை அடுத்துச் சகரம் வருவதில்லை. ஆனால், விக்சனரியில் அவ்வாறே பயன்படுத்தப்படுகின்றது (இங்கே விக்கித் திட்டம் என்பதால் வேண்டுகோளொன்றை முன்வைத்து மாற்ற முடியும். வணிக நிறுவனங்களெனின்?). நாம் விக்கனரி என்றெழுதுவதா? அல்லது விக்சனரி என்றெழுதுவதா? விக்ஷனரி என்றே ஆங்கிலத்தில் ஒலிப்பதால் விட்சனரி என்றும் ஒலிக்கலாம். ஒரு வணிகப் பெயர் தமிழ் எழுத்துகளில் இருந்தால் மாற்றக்கூடாது என்று கொள்கையொன்றை முன்வைக்கலாம். அப்படியானால், விக்சனரி என்றே எழுதலாம். ஜீ தமிழ் என்றே ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பயன்படுத்தப்படுகின்றது. ஜகரம் தமிழ் எழுத்தும் அல்ல. அப்போது அதனை சீ தமிழ் என்று மாற்றி எழுதலாமா? இது தொடர்பாகவும் கொள்கை தேவை. மேலும் ஒரு திரைப்படத்தின் பெயர் ப்ரண்ட்ஸ். தமிழில் மெய்யெழுத்தில் கட்டுரை தொடங்கக்கூடாது. ஆனால், திரைப்படத்தின் பெயர் என்ற வகையில் ப் என்ற எழுத்திலேயே தொடங்கி எழுத வேண்டும். தவிர, தமிழெழுத்தல்லாத ஸகரத்தை நீக்கி ப்ரண்ட்சு என எழுதுவதா என்பது தொடர்பிலும் கொள்கை தேவை. --மதனாகரன் (பேச்சு) 15:21, 14 சூலை 2012 (UTC)[பதிலளி]

மதனாகரன், உங்களது கருத்து எனக்கு ஏற்புடையதே. எனினும் மெய்யெழுத்துக்களிற் சொற்கள் (அல்லது பெயர்கள்) தொடங்கினால் அம்மெய்யெழுத்தின் இகாரத்திற் தொடங்குவதே தமிழ் வழமை (உதாரணம்: ப்ரச்ன - பிரச்சினை, ப்ரியம் - பிரியம்). அத்துடன் நீங்கள் குறிப்பிட்டிருந்த f பற்றிய செய்தியைப் பார்த்தேன். எனினும் அவை b இற்கே பொருத்தமாக உள்ளன (உதாரணம்: bus - பஸ் - வசு, biscuit - பிஸ்கிட் - விசுக்கோத்து; மட்டக்களப்பு-அம்பாறைப் பகுதியில் bata என்பதை வாட்டா என்கின்றனர்; நாங்கள் அரபு மொழியிற் தந்தையைக் குறிக்கும் சொல்லான பாபா - baba - بابا என்பதைத் தமிழ்ப் படுத்தி வாப்பா என்கிறோம்). ஏனெனில், மொழிக்கு முதலில் வரும் பகரம் எப்போதும் p எழுத்தின் ஓசையிலேயே வர வேண்டும். அவ்வாறில்லாத எச்சொல்லும் தூய தமிழ்ச் சொல்லன்று. அவ்வாறே f எழுத்தை p எழுத்தின் ஓசையைக் கொண்டு பிரதியிடுவதே வழமை (உதாரணம்: France - பிரான்சு, Finance - பினான்சு அல்லது பைனான்சு, Fahian - பாகியன்). மேலும் ஜகரத்தை சகரமாக மாற்றிப் பிறமொழிப் பெயர்களை எழுதுவது எல்லா இடத்திலும் உடனாபாடாக அமைவதில்லை. அல்ஜீரியா என்பதை அல்சீரியா என மாற்றப்பட்டுள்ளதைப் பாருங்கள்.--பாஹிம் (பேச்சு) 15:41, 14 சூலை 2012 (UTC)[பதிலளி]

எடுத்துக்காட்டுகளைத் தவறாகக் குறிப்பிட்டு விட்டேன். ஆனாலும் Fஇற்குப் பதிலாக வகரத்தைப் பயன்படுத்துவது இலங்கையில் வழக்கில் உள்ளது. --மதனாகரன் (பேச்சு) 15:44, 14 சூலை 2012 (UTC)[பதிலளி]

வணக்கம் பாஹிம், மைன்ட்ட்ரீ கட்டுரையில் துப்புரவு செய்ய நினைத்தது இதுவா? அல்லது வேறு ஏதும் செய்ய வேண்டுமா? சற்று விளக்கினால் சரி செய்ய இயலும் (இனி எழுதும் கட்டுரைகளிலும் சரி செய்து கொள்வேன் :)). நன்றி--சண்முகம்ப7 (பேச்சு) 04:20, 30 சூலை 2012 (UTC)[பதிலளி]

ஆம். அத்துடன் ஆங்கிலச் சொற்களை ஒலிபெயர்க்கும் போது சற்றுத் தமிழ் நடைக்கு ஏற்ப ஒலிபெயர்க்க வேண்டும் என்பதுதானே முறை.--பாஹிம் (பேச்சு) 05:24, 30 சூலை 2012 (UTC)[பதிலளி]
நன்றி பாஹிம், அந்த மாற்றங்கள்தான் எனில் {{விக்கியாக்கம்}} வார்ப்புருவை உபயோகிக்கலாம், என்னுடைய கருத்து: பெரும்பாலும் ஆங்கிலப் பெயர்களை மொழிபெயர்க்கும் போது அதன் ஒலிப்பிற்கேற்ப மொழிபெயர்க்க வேண்டும் என்பதே--சண்முகம்ப7 (பேச்சு) 06:02, 30 சூலை 2012 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Fahimrazick/2011&oldid=1196604" இலிருந்து மீள்விக்கப்பட்டது