உள்ளடக்கத்துக்குச் செல்

விக்சனரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விக்சனரி
Wiktionary logoWiktionary logo
Detail of the Wiktionary main page. All major wiktionaries are listed by number of articles.
விக்சனரி இணையத்தளத்தின் திரைப்பிடிப்பு காட்சி
வலைத்தள வகைஇணைய அகரமுதலி
கிடைக்கும் மொழி(கள்)பன்மொழி (170 மேல்)
உரிமையாளர்விக்கிமீடியா நிறுவனம்
உருவாக்கியவர்சிம்மி வேல்சு மற்றும் விக்கிமீடியா சமுதாயம்
மகுட வாசகம்இணையப் பன்மொழி அகரமுதலி
வணிக நோக்கம்இல்லை
பதிவு செய்தல்Optional
வெளியீடு2002 டிசம்பர் 12
அலெக்சா நிலை823[1]
தற்போதைய நிலைசெயல் நிலையில்
உரலிhttp://ta.wiktionary.org/


விக்சனரி (Wiktionary) என்பது சொற்களுக்கான பொருள், அவற்றின் மூலம், உச்சரிப்பு முதலியவற்றை உள்ளடக்கிய, கட்டற்ற பன்மொழி அகரமுதலி ஒன்றைக் கூட்டு முயற்சியில் உருவாக்கும் ஒரு திட்டமாகும். இத்திட்டம் விக்கிமீடியா நிறுவனத்தினால் வழிநடத்தப்படுகிறது. வணிக நோக்கற்ற இந்த அகரமுதலியை இலவசமாக எவரும் பயன்படுத்திக் கொள்ள முடியும்; பங்கேற்கவும் முடியும்.

விக்கிப்பீடியாவைப் போன்றே விக்சனரிகளும் பல மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளன. விக்சனரியில் சொற்களுக்குப் பொருள் தவிர விளக்கம், பயன்பாடு, சொற்பிறப்பியல், இணை சொற்கள், சொல்வளம் ஆகியவையும் தர வாய்ப்புள்ளது. ஒரு மொழியில் உருவாக்கப்படும் விக்சனரியில் அம்மொழி தவிர, பிற மொழிச் சொற்களும் இடம்பெறலாம்.

விக்சனரி வரலாறு

[தொகு]

இணையத்தில் விக்சனரியின் தோற்றம் 2002 டிசம்பர் 12 ஆம் திகதி உருவாக்கம் பெற்றது. அதனைத் தொடர்ந்து ஆங்கிலம் அல்லாத முதல் மொழி விக்சனரியாக 2004 மார்ச்சு 28 ஆம் திகதி பிரஞ்சு மற்றும் பொலிசு மொழி அகரமுதலிகள் தோற்றப்பெற்றன. அதனைத் தொடர்ந்தே ஏனைய மொழிகளிலும் விக்சனரிகள் தோற்றம் பெறத்தொடங்கின.

விக்சனரி தோற்றம் பெற்ற காலகட்டத்தில் அதன் இணைய முகவரியாக (wiktionary.wikipedia.org) என்றே 2004 மே 1 ஆம் திகதி வரை இருந்தது. தற்போது விக்சனரியின் இணைய முகவரியாக (www.wiktionary.org) [2] என்றுள்ளது.

தமிழ் விக்சனரி வரலாறு

[தொகு]
முதன்மைக் கட்டுரை: தமிழ் விக்சனரி

மேற்கோள்கள்

[தொகு]
  1. Alexa rank
  2. விக்சனரியின் தற்போதைய இணைய முகவரி www.wiktionary.org.

வெளி இணைப்புகள்

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=விக்சனரி&oldid=2761435" இலிருந்து மீள்விக்கப்பட்டது