ஈஈ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஈஈ
ஈஈ பழம்
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: ஒருவித்திலை
வரிசை: Pandanales
குடும்பம்: Pandanaceae
பேரினம்: Freycinetia
இனம்: F. arborea
இருசொற் பெயரீடு
Freycinetia arborea
கௌடிசோட்[1]
தைல மரமொன்றில் ஏறும் ஈஈ கொடியொன்று

ஈஈ (Freycinetia arborea) என்பது மிக அடர்த்தியாகக் கிளைத்து வளரும் கொடித் தாவரம் ஒன்றாகும். இத்தாவரம் பசுபிக் தீவுகளுக்குத் தனிச் சிறப்பான தாவரங்களுள் ஒன்றாகும். இத்தாவரம் ஹவாய்த் தீவுகளின் அயனமண்டல அகன்ற இலை ஈரக்காடுகளிலும் ஏனைய தீவுக் கூட்டங்களான மர்கிசாசு தீவுகள், ஒசுற்றல் தீவுகள், சங்கத் தீவுகள், குக் தீவுகள் என்பவற்றிலும் காணப்படுகின்றன. காட்டு மரங்களின் விதானம் வரை வளரும் இத்தாவரம் காற்றுக்குரிய வேர்களால் அம்மரங்களைப் பற்றிப் பிடித்துக்கொள்கிறது.[2] அவ்வாறே காட்டு நிலத்திலும் இது நன்கு பரந்து வளரும்.[3]

இதன் இலைகள் ஒளிர் பச்சை நிறத்திலும், கூரிய முனைகளையும் நடு விளிம்பினதும் ஓரங்களினதும் கீழ்ப் பகுதியில் முட்களையும் கொண்டிருக்கும்.[4] ஈஈ தாவரத்தின் இலைகள் 40–80 சதமமீட்டர் (16–31 அங்குலம்) நீளமும் 1–3 சதமமீட்டர் (0.39–1.2 அங்குலம்) அகலமும் கொண்டிருப்பதுடன் கிளைகளின் தொங்கல் வரை சுருளி வடிவில் அமைந்திருக்கும். கிளைகளின் முடிவில் தண்டில் தோன்றும் பூக்கள் நிலைத்த அல்லது நிலையற்ற முள்போன்ற அமைப்புக்களைக் கொண்டிருக்கும். மஞ்சனித்த வெள்ளை நிறத்தில் காணப்படும் நிலைத்த முட்கள் 10 சதமமீட்டர் (3.9 அங்குலம்) வரை வளரும் அதேவேளை 3–4 சதமமீட்டர் (1.2–1.6 அங்குலம்) வரையே வளரும் நிலையற்ற முட்கள் இத்தாவரம் பழங்கள் காய்க்கும் காலங்களில் 7.5–9.5 சதமமீட்டர் (3.0–3.7 அங்குலம்) வரை வளர்ந்து காணப்படும். மூன்று அல்லது நான்கு முட்கள் செம்மஞ்சள் நிறக் குவிய இலைகளால் மூடப்பட்டிருக்கும்.

ஈஈ கொடியின் பழங்கள் 1 சதமமீட்டர் (0.39 அங்குலம்) வரை வளரும். அவற்றிலுள்ள விதைகள் 1.5 மில்லிமீட்டர் (0.059 அங்குலம்) இருக்கும்.[2] ஈஈ தாவரத்தின் குவிய இலைகளையும் பழங்களையும் ஓஊ (Psittirostra psittacea) பறவை விரும்பி உண்ணும். முற்காலத்தில் இப்பழங்களின் விதைகள் ஹவாய் காடுகளில் பரவுவதற்கு ஓஊ பறவையே முக்கிய காரணமாகும்.[5] அவ்வாறே, தற்போது இயலிடத்தில் அற்றுவிட்ட அலலா (Corvus hawaiiensis) காகங்களும் இத்தாவரத்தின் பழங்களை விரும்பி உண்ணும்.[6]

பயன்பாடு[தொகு]

ஹவாய்வாசிகள் ஈஈ தாவரத்தைப் பயன்படுத்தி மீன் கூடைகளையும், மீன் பொறிகளையும், மீனவத் தொப்பிகளையும் செய்வர்.[3]

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Freycinetia arborea Gaudich.". Germplasm Resources Information Network (United States Department of Agriculture). 2008-07-01. http://www.ars-grin.gov/cgi-bin/npgs/html/taxon.pl?318185. பார்த்த நாள்: 2009-03-21. 
  2. 2.0 2.1 "Freycinetia arborea". Meet the Plants (National Tropical Botanical Garden). http://ntbg.org/plants/plant_details.php?plantid=5350. பார்த்த நாள்: 2009-03-21. 
  3. 3.0 3.1 "ieie, ie". Hawaiian Ethnobotany Online Database (Bernice P. Bishop Museum). http://www2.bishopmuseum.org/ethnobotanydb/resultsdetailed.asp?search=ieie. பார்த்த நாள்: 2009-03-21. [தொடர்பிழந்த இணைப்பு]
  4. Menninger, Edwin Arnold (1967). Fantastic Trees. New York City: Viking Press. https://archive.org/details/isbn_9780670307180.  Cited by Schmidt RJ in BoDD – தாவரத் தோலியல் தரவுத்தளம் under Freycinetia arborea
  5. "ʻŌʻū" (பி.டி.எவ்). Hawaii's Comprehensive Wildlife Conservation Strategy (State of Hawaiʻi). 2005-10-01. http://www.state.hi.us/dlnr/dofaw/cwcs/files/NAAT%20final%20CWCS/Chapters/Terrestrial%20Fact%20Sheets/Forest%20Birds/ou%20NAAT%20final%20!.pdf. பார்த்த நாள்: 2009-03-21. 
  6. (பி.டி.எவ்) Draft Revised Recovery Plan for the ʻAlalā (Corvus hawaiiensis). ஐக்கிய அமெரிக்க மீன் மற்றும் காட்டுயிர்ச் சேவை. October 2003. p. 8. http://www.fws.gov/pacific/ecoservices/endangered/recovery/documents/AlalaDraftRevisedRecoveryPlan.pdf. பார்த்த நாள்: 2011-04-18. 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Freycinetia arborea
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈஈ&oldid=3583442" இருந்து மீள்விக்கப்பட்டது