விக்கிப்பீடியா:ஒத்தாசைப் பக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(விக்கிப்பீடியா:ஒத்தாசை பக்கம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
 கொள்கை தொழினுட்பம் அறிவிப்புகள் புதிய கருத்துக்கள் ஒத்தாசைப் பக்கம் 
குறுக்கு வழிகள்:
WP:HD
WP:HELP
எப்படி தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பொருத்தமாகக் கட்டுரை எழுதுவது என்று ஐயமா? பக்கங்களைத் தொகுப்பதில் சிக்கலா? உங்களுடைய கேள்விகளை இங்கே கேளுங்கள்.

கேள்விகளை எழுத, இப் பக்கத்தின் மேற்பக்கத்தில் உள்ள "தலைப்பைச் சேர்" என்பதை அழுத்துங்கள். கேள்வியை எழுதுவதற்கான கட்டம் திறக்கும். அக் கட்டத்தில் உங்கள் கேள்விகளை எழுதுங்கள். தமிழில் எழுதுவது நல்லது. தமிழில் எழுத இயலாவிட்டால் ஆங்கிலத்திலும் எழுதலாம். எழுதிய பிறகு கீழே காணும் "பக்கத்தைச் சேமிக்கவும்" என்ற பொத்தானை அழுத்தவும்.

« பழைய உரையாடல்கள்

உதவிப் பக்கங்கள் · ஒத்தாசை · உசாத்துணை · கலைச்சொல் · வரவேற்பு · பயிற்சிகள் · நினைவுக்குறித்தாள் · விக்கி சொற்கள் · கேட்க வேண்டுமா?

தொகுப்பு
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |14

பக்க இணைப்பு வழு[தொகு]

ஏசு மத நிராகரணம் கட்டுரையை ஒன்றிணைக்க முயலும் போது [XDuNHQpAMEsAALe-4ngAAADR] 2019-01-13 19:10:21: Fatal exception of type MWException என்ற பிழைப்பக்கம் காட்டுகிறது. உதவவும் நன்றி.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 19:12, 13 சனவரி 2019 (UTC)

@Parvathisri: எனக்கும் இதே வழு நேற்று வந்தது. @Neechalkaran: கவனிக்க.--Kanags (பேச்சு) 07:36, 14 சனவரி 2019 (UTC)
@Ravidreams:, @Shanmugamp7:, @AntanO:, @Kanags: கட்டுரையை ஒன்றிணைக்க முயலும் போது வரும் வழு கடந்த சில தினங்களாவே உள்ளது. சரி செய்ய என்ன செய்ய வேண்டும்?--நந்தகுமார் (பேச்சு) 05:06, 18 சனவரி 2019 (UTC)
இன்று மெரினா (திரைப்படம்)கட்டுரையை ஒன்றிணைக்க முயலும் போது [XENN3QpAAEEAAAVz3OYAAACS] 2019-01-19 16:18:38: Fatal exception of type MWException என்ற பிழைப்பக்கம் காட்டுகிறது.--நந்தகுமார் (பேச்சு) 16:20, 19 சனவரி 2019 (UTC)
@Nan மற்றும் Parvathisri: மேற்படி வழு இல்லாமல் இணைப்பதற்கு வேறு வழிகள் உள்ளன. சரியான கட்டுரைத் தலைப்பை நீக்கி விட்டு, பின்னர் அத்தலைப்புக்கு மற்றைய கட்டுரையை (மேம்பட்ட நிலையில்) வழிமாற்றி விட்டு, பின்னர் அதனை நீக்கிவிட்டு, மீண்டும் முழுமையான வரலாறுகளுடன் மீள்விக்கலாம். பார்க்க: சிதைமாற்றம்.--Kanags (பேச்சு) 22:06, 21 சனவரி 2019 (UTC)
👍 விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 01:25, 22 சனவரி 2019 (UTC)
👍 விருப்பம் இயேசு மத நிராகரணம் கட்டுரையை நீங்கள் சொன்னபடி மீளமைத்துள்ளேன. மிக்க நன்றி கனக்ஸ்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 15:27, 24 சனவரி 2019 (UTC)

உதவி[தொகு]

ஆங்கிலக் கட்டுரைகளை எடுத்து மொழியாக்கம் செய்து கட்டுரை உருவாக்கம் செய்யும் போது மதிப்பாய்வு செய்யப்படாத மொழிபெயர்ப்புகளைக் கொண்ட பக்கங்கள் என்று ஒரு பகுப்பு தானாகவே சேர்ந்து விடுகிறது. இயந்திர மொழிபெயர்ப்பு செய்யாமல் இயல்பான மொழி பெயர்ப்பை மேற்கொள்ளும் போதும் இந்தப் பகுப்பு தானாகவே சேர்கிறது. காரணம் என்ன?--TNSE Mahalingam VNR (பேச்சு) 15:24, 20 சனவரி 2019 (UTC)

மகாலிங்கம் சார் வணக்கம். நானும் ஆங்கிலக் கட்டுரைகளை எடுத்து மொழியாக்கம் செய்து கட்டுரை உருவாக்கம் செய்கிறேன். மதிப்பாய்வு செய்யப்படாத மொழிபெயர்ப்புகளைக் கொண்ட பக்கங்கள் என்ற பகுப்பு எனக்கு வரவில்லை. நீங்கள் உள்ளடக்க மொழிபெயர்ப்பின் புதிய பதிப்பை பயன்படுத்துகிறீர்கள். அதில்தான் சிக்கல் என நினைக்கிறேன். அன்புடன்--கி.மூர்த்தி (பேச்சு) 16:03, 20 சனவரி 2019 (UTC)

TNSE Mahalingam VNR எனக்கும் இந்த சிக்கல் உள்ளது. கி.மூர்த்தி குறிப்பிட்டது போல் உள்ளடக்க மொழிபெயர்ப்பின் புதிய பதிப்பை பயன்படுத்துவதாலேயே இது நேர்கிறது.--அருளரசன் (பேச்சு) 12:51, 21 சனவரி 2019 (UTC)

பக்கம் நகர்த்தல் வேண்டுகோள்[தொகு]

நிர்வாகிகள் கவனத்திற்கு, பயனர்:Fathima rifaa இப்பக்கத்தைச் சரியான பயனர் பெயரான பயனர்:Fathima rifaa lawக்கு வழிமாற்றியின்றி நகர்த்தக் கோருகிறேன். -நீச்சல்காரன் (பேச்சு) 12:06, 21 சனவரி 2019 (UTC)

பயனர் பெயரை நிர்வாகிகள் மாற்ற இயலாது. பக்கத்தை நகர்த்த மட்டுமே இயலும். அதிகாரிகள் மட்டுமே மாற்ற இயலும் என நினைக்கிறேன்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 12:58, 21 சனவரி 2019 (UTC)
பயனர் பெயரில்லை. பயனர்வெளியில் உள்ள ஒரு பக்கத்தை நகர்த்தக் கோருகிறேன். அந்தப்பயனர் தனக்குரிய பக்கத்தை உருவாக்காமல் வேறு பக்கத்தை உருவாக்கியுள்ளார். கவனிக்க @Mayooranathan, Natkeeran, Ravidreams, மற்றும் Sundar: -நீச்சல்காரன் (பேச்சு) 14:42, 21 சனவரி 2019 (UTC)
Yes check.svgY ஆயிற்று. இரண்டு கணக்குகளும் அவருடையதாக இருக்கலாம். இருந்தாலும், உங்கள் வேண்டுகோளைச் செயற்படுத்தியுள்ளேன். --இரவி (பேச்சு) 14:48, 21 சனவரி 2019 (UTC)
Fathima rifaa என்று ஒரு கணக்கில்லை என்பதாலேயே மாற்றக்கோரினேன். நன்றி-நீச்சல்காரன் (பேச்சு) 15:26, 21 சனவரி 2019 (UTC)
அட, அதைக் கவனிக்காமல் விட்டுவிட்டேன். நன்றி. --இரவி (பேச்சு) 15:35, 21 சனவரி 2019 (UTC)

மீளமைத்தலுக்கான உதவி[தொகு]

எறிபந்து என்ற கட்டுரையில் [1] இந்த மாற்றத்தினைக் காணுங்கள். ஒரு பயனரின் தீக்குறுப்பினால் நல்லக் கட்டுரை பாழ்பட்டுள்ளது. இதனை முந்தைய வடிவில் மீளமைக்க இயலவில்லை. "முரண்பாடான இடைப்பட்டத் தொகுப்புகள் காரணமாக இத்தொகுப்பை மீளமைக்க முடியாது" என செய்தி வருகிறது. நடவெடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.நன்றி-சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 03:57, 23 சனவரி 2019 (UTC)

Yes check.svgY ஆயிற்று--Kanags (பேச்சு) 04:59, 23 சனவரி 2019 (UTC)
நன்றிங்க --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 05:24, 23 சனவரி 2019 (UTC)

மொழிபெயர்ப்புக் கருவி[தொகு]

@Ravidreams: விக்கியின் மொழிபெயர்ப்புக் கருவியைப் பயன்படுத்தி கட்டுரைகளை உருவாக்குவதற்கான வழிகாட்டல் பக்கம் தமிழ்விக்கியில் உள்ளதா? அவ்வாறு இருப்பின் அப்பக்கத்திற்கான இணைப்பைத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 04:39, 24 சனவரி 2019 (UTC)

@Booradleyp1: பார்க்க - உதவி:உள்ளடக்க மொழிபெயர்ப்புக் கருவி. தற்போது இக்கருவியில் புதிய பதிப்பு வந்துள்ளது. எனவே, வழிகாட்டுதல்கள் சில இற்றைப்படுத்தப்பட வேண்டி இருக்கும். --இரவி (பேச்சு) 11:26, 24 சனவரி 2019 (UTC)