விக்கிப்பீடியா:நிர்வாக அணுக்கத்தைத் திரும்பப் பெறுதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தொகுப்பு

தொகுப்புகள்


தொகுப்பு1

இராசன் முறையீடு[தொகு]

Theni.M.Subramaniயின் நிர்வாக அணுக்கத்தைத் திரும்பப் பெறுதலுக்கான கோரிக்கையும் அதற்கான காரணங்களும்.

1. இவர் பயனர்களை அனுசரித்துப் போகும் போக்கற்றவர். கட்டுரை உருவாக்கி ஒரு சில நிமிடங்களில் நீக்கி விடுவார் அல்லது நீக்கல் / விக்கியாக்கம் வார்ப்புரு இட்டுவிடுவார். ஆனால் அவர் இரு வரி உட்பட்ட சிறு கட்டுரைகள் முதல் ஆதாரமற்ற/தகுந்த ஆதாரமற்ற கட்டுரைகளை உருவாக்குகிறார்.

ஆதாரம்:

2. விக்கி பற்றி அவதூறு பரப்பிய தமிழ் கம்ப்யூட்டர் இதழில் வெளியிட்டுள்ளார். மேலும் ‘’பயனர்கள் பலரும் விரும்புகின்றனர்’’ என தற் கூற்றுக்கு ஆதாரமாக மற்றப் பயனர்களை வலிந்து குறிப்பிட்டுள்ளார். இவர் குறிப்பிட்ட ‘’பயனர்கள் பலர்’’ என்பது யார்?

ஆதாரம்: விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு90# முதற்பக்கக் கட்டுரைகள் சிறந்த கட்டுரைகளா?, பயனர் பேச்சு:Theni.M.Subramani# விக்கி வியாபாரம்

3. முதற்பக்க கட்டுரைகள் தரமற்றவை என்பதற்காக கம்ப்யூட்டர் இதழில் விக்கியை மட்டம் தட்டிய இவர் நடைமுறையை மீறியும், தரமற்ற முதற்பக்க கட்டுரைகளை காட்சிப்படுத்தியுமுள்ளார்.

ஆதாரம்: விக்கிப்பீடியா பேச்சு:முதற்பக்கக் கட்டுரைகள்/செப்டம்பர் 8, 2013, விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/செப்டம்பர் 29, 2013 (ஆழிப்பேரலை)

4. தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள் கருத்திடலில் குறை கண்ட இவரும் ஒரு பத்தாண்டு கொண்டாட்ட ஒருங்கிணைப்பாளர் அல்லவா? குறைக்கு விளக்கம் சொல்ல வேண்டிய இவர் ஏன் கேள்வி கேட்கிறார்?

ஆதாரம்: பயனர் பேச்சு:Theni.M.Subramani#பத்தாண்டு கொண்டாட்டப் பொறுப்புகள் - விளக்கம் கோரல்

5. பண்பற்று, மிரட்டும் தொனியில், தனி மனிதத் தாக்கதலிலும் ஈடுபட்டுள்ளார். வன் சொற்கள், சுய பெருமை பேசும் இவரின் செயற்பாடுகள் விக்கிக்கு ஏற்றதா? இது ஒரு நிருவாகிக்கு ஏற்றதா?

ஆதாரம்:

6. சுப்பிரமணிக்கு ஆதரவாக கருத்திட்ட பயனர்:786haja, அதேகாலத்தில் விசமத்தனத்தில் ஈடுபட்ட‎ பயனர்:Vaarana18 ஆகிய பயனர்களுக்கும் சுப்பிரமணிக்கும் தொடர்பு உண்டா? கைப்பாவைகளா?

ஆதாரம்: விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்/கூடல்கள்/சென்னை/கருத்துகள், பயனர்:786haja கணக்கு உருவாக்கியது 5 சனவரி 2012‎, பங்களிப்பு, பயனர்:Vaarana18 கணக்கு உருவாக்கியது 7 அக்டோபர் 2013‎, பங்களிப்பு

7. ‘’நற்கீரன்,சுந்தர் ஆகியோர் இந்நிகழ்வில் என்னுடைய தமிழ் விக்கிப்பீடியா நூல் குறித்து அறிமுகம் செய்யப்படவில்லை என்று நான் ஆதங்கப்பட்டதாகவும், வருந்துவதாகவும் தெரிவித்த கருத்து தவறானது’’ என்ற சுப்பிரமணி பயனர்:Gcsekaran நூலுக்கான அறிமுத்தினைக் கேட்டபோது மறுக்கவில்லை. மறுத்திருந்திருக்கலாமே?

8. உன்னுடைய...., முட்டாள் வழங்கும்... போன்ற நற்பண்பு அற்ற சொற்களை இவர் பயன்படுத்தியுள்ளார்.

ஆதாரம்: பயனர் பேச்சு:Theni.M.Subramani# ???, & [1]

9. தனக்கு இ-மெயில் வந்ததாகக் குறிப்பிட்டரே. அந்த திரைக்காட்சியில் இருந்த அனுப்புனரின் இ-மெயில் ஐடி பிழையானது என்பதை யாரும் கவனித்தீர்களா?

ஆதாரம்: [2]

10. இவருக்கு எதிரான கருத்துகளுக்கு முறையாக பதிலளிக்காமல், பேச்சைத் திசை திருப்புகிறார்.

ஆதாரம்:
//என்னுடைய நிர்வாக அணுக்கத்தைத் திரும்பப் பெறுவதற்கான பரிந்துரையினை அவருடைய போலியான முகமூடிகளைத் தூக்கியெறிந்து விட்டு அவருடைய உண்மையான பயனர் பெயரில் பரிந்துரைக்கலாம். வரவேற்கிறேன்.// //என்னுடைய மின்னஞ்சல் பெயரிலேயே மின்னஞ்சல்களை உருவாக்கிக் கொண்டால் தன்னை யாரென்று கண்டுபிடிக்க முடியாது என நினைக்கிறார் போல் இருக்கிறது// விக்கிப்பீடியா:ஆலமரத்தடி#நெற்றிக் கண் திறப்பினும்...

11. விக்கிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றார்.

ஆதாரம்: //தன்னை யாரென்று அடையாளம் காட்டாமல் என் மீது தனிப்பட்ட தாக்குதல் நடத்தி வரும் தமிழ் விக்கிப்பீடியா பயனர் யாரென்பதை நான் அவருடைய உரையாடல் (எழுத்து நடையினைக் கொண்டு) மூலம் அறிந்து கொண்டேன். // விக்கிப்பீடியா:ஆலமரத்தடி#நெற்றிக் கண் திறப்பினும்...
//அடையாளம் காட்டாமல் வந்தாலும் யாரென்பதை நான் கண்டு கொண்டேன். (ஒருவரின் எழுத்து நடையைக் கொண்டே யார் என்பதைக் கண்டறிந்து விட முடியும்)// பயனர் பேச்சு:Theni.M.Subramani# ???

மேற்குறிப்பிட்ட காரணங்களுக்காக Theni.M.Subramaniயின் நிர்வாக அணுக்கத்தைத் திரும்பப் பெறும்படி கேட்டுக் கொள்கிறேன். --Rajan s (பேச்சு) 15:34, 17 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

கேள்விகள்[தொகு]

  1. இவ்வேண்டுகோளை விடுத்த எஸ். ராஜன் அவர்களுக்கு, தேனி. எம். சுப்ரமணி அவர்கள் நிர்வாகியாக பணியாற்றிய போது அவர் ஒரு நிருவாகியாக தமிழ் விக்கியில் செய்த நற்பணிகள் ஏதேனும் சொல்ல இயலுமா? --பழ.இராஜ்குமார் (பேச்சு) 09:37, 18 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

நான் கேட்ட கேள்விகளுக்கு பதில் இல்லை. நீங்கள் என்ன என்னை பேட்டியா எடுக்கிறீர்கள்? --Rajan s (பேச்சு) 10:14, 18 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

தங்களின் பதிலுக்கு நன்றி. --பழ.இராஜ்குமார் (பேச்சு) 11:29, 18 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

கருத்துக்கள்[தொகு]

இவரது கருத்துக்களை ஏற்று எனது கருத்தைக் கூறுகிறேன். பார்க்கும் பொழுது இது எனக்குச் சரியாகப் படவில்லை. Rajan s தேனீ சுப்பிரமணி மீது சுமத்தியுள்ள குற்றங்களுக்கு அவர் ஆதாரங்களும் அளித்துள்ளார். இவற்றில் பெரும்பாலானவை ஒரு ஐ.பி முகவரியின் கருத்துக்களுக்கு கருத்துக் கூறும் போது கூறப்பட்ட கருத்துக்களாகும். அந்த வகையில் ஒரு நிர்வாகியின் அணுக்கத்தை திரும்பப்பெற ஒருவர் விரும்பின் அவரது பேச்சுப்பக்கத்தில் ஐ .பி முகவரி ஒன்றில் அவரை எதிர்த்துக் கருத்துக்கூறி அதில் அப்பயனர் கூறும் விளக்கங்களிற்கு ஏற்ப குறைகள் கண்டு பிடித்து நிர்வாக_அணுக்கத்தைத்_திரும்பப்_பெறுதல் இப்பக்கத்தில் பதிந்து விடலாம். அதைப்போன்றே இதுவும் உள்ளது. ஆக இது சம்பந்தமாக மற்றவர்களின் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.--♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 15:54, 17 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

//கருத்துக்களை ஏற்று// //இது எனக்குச் சரியாகப் படவில்லை// என்ன சொல்ல முற்படுகிறீர்கள்? ஏற்றுக்கொள்கிறீர்களா இல்லையா? ஐ.பி முகவரியில் இல்லாது வருமாறு சுப்பிரமணி கேட்டிருந்தார். எது உங்களுக்கு வசதி? மொட்டையாக குற்றம் சாட்டுதலைத் தவிர்த்தல் நன்று என்று ஆலமரத்தடி கேட்டுக் கொண்டதற்கிணங்க ஆதாரத்துடன் கருத்திடுகிறேன். மறுப்பதாயிருந்தால் மொட்டையாக என் மீது குற்றம் சாட்டாது குறிப்பான ஆதாரங்கள் இருந்தால் முன்வையுங்கள். //இவற்றில் பெரும்பாலானவை ஒரு ஐ.பி முகவரியின் கருத்துக்களுக்கு கருத்துக் கூறும் போது கூறப்பட்ட கருத்துக்களாகும்// ஐ.பி முகவரிக்கு வேறு கருத்தா? இதில் பெரும்பாலானவை என்பது எத்தனை வீதம்? //ஐ .பி முகவரி ஒன்றில் அவரை எதிர்த்துக் கருத்துக்கூறி// ஐ .பி முகவரி அப்பால் சுப்பிரமணி பற்றிய எதிர்க் கருத்துக்களை நீங்கள் வாசிக்கவில்லையா? --Rajan s (பேச்சு) 16:33, 17 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

அன்டன் முறையீடு[தொகு]

  • தமிழ் கம்ப்யூட்டர் இதழில் தேனி. மு. சுப்பிரமணி தமிழ் விக்கிப்பீடியாவுக்கு எதிராக கருத்து வெளியிட்ட செயற்பாடுகள் மற்றம் அதனைத் தொடர்ந்த செயற்பாடுகள்.
  1. நிருவாகியாக இருந்து கொண்டு, தமிழ் விக்கிப்பீடியாவுக்கு எதிராக கருத்து வெளியிட்ட செயற்பாடு. (Misusing the administrative tools is considered a serious issue. The administrative tools are provided to trusted users for maintenance and other tasks, and should be used with thought. Serious misuse may result in sanction or even their removal. பார்க்க: en:Wikipedia:Administrators. தமிழ் கம்ப்யூட்டர் இதழில், நிருவாகியாகிய தேனி. மு. சுப்பிரமணி எழுதியது பிழையாக நிருவாக கருவியைப் பாவித்ததற்கு ஒப்பாகும்.) இது தொடர்பில் 26 ஆகத்து 2013 அன்றே திருத்தி வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டும், இதுவரை மெளனமாக இருப்பது.
  2. பெயர் குறிப்பிடாது விக்கிப்பீடியர் ஒருவர் இந்த விடயத்தில் குற்றஞ்சாட்டியது. 26 ஆகத்து 2013 முதல் பல தடவைகள் இது பற்றி விளக்கம் கேட்கப்பட்டும் மெளனமாக இருப்பது.
  3. தமிழ் கம்ப்யூட்டர் இதழில் தன் கருத்தை "பயனர்கள் பலரும் விரும்புகின்றனர்" என பயனர்கள் அனுமதியில்லாது பயனர்கள் பற்றிக் குறிப்பிட்டது.
  4. முதற்பக்க கட்டுரைகள் தரமற்றவை என்ற இவர் தானே தரமற்ற கட்டுரையினை காட்சிப்படுத்திய செயல். இது பற்றி குறிப்பிட்டும் இதுவரை கருத்துக் கூறாமை.
  5. முதற்பக்கங்களின் அனைத்துத் தகவலுக்கும் மாற்றங்களுக்கான சில பணிகள் செய்யப்பட்டிருக்கின்றன. (இங்கும் என் மீது தனித்தாக்குதல்கள்) என தன்மீது தனித்தாக்குதல்கள் நடத்துவதாகக் பயனர்களைக் குற்றம் சாட்டியமை. இது பற்றி குறிப்பிட்டும் இதுவரை கருத்துக் கூறாமை
  • http://www.muthukamalam.com என்ற தன் இணையத்தளத்திற்கு 175 க்கு மேற்பட்ட தடவைகள் வெளியிணைப்பை ஏற்படுத்தியுள்ளார். ஒரு பயனரே இவ்வாறு செய்வது கூடாது. அப்படியிருக்க நிருவாகி அணுக்கம் உள்ள பயனர் ஒருவர் அவ்விதம் செயற்பட்டது மிகவும் தவறு. இதன் முலம் பின்வரும் விதிகளை மீறுகிறார்.
  1. ஒரு பயனர் தனது சொந்த வலைத்தளத்துக்கோ, வலைப்பதிவுக்கோ வெளி இணைப்பு தரக்கூடாது.
  2. வணிக நோக்குடன் வெளி இணைப்புகளை சேர்க்கக் கூடாது.

பார்க்க: விக்கிப்பீடியா:வெளி இணைப்புகள்

பலபேரின் தன்னலமற்ற உழைப்பை ஒரு நிருவாகி இவ்வாறு தன் இலாப நோக்கத்திற்குப் பயன்படுத்தியிருக்கக் கூடாது.

  • முட்டாள் என்ற சொற் பயன்பாடு, மரியாதையற்று ஒருமையில் குறிப்பிட்டது தவறு. இது பற்றி பல முறை அவரிடம் சுட்டிக்காட்டியும், இதற்கு இதுவரைக்கும் வருத்தம் தெரிவிக்கவில்லை. இது (14 அக்டோபர் 2013) இப்படியிருக்கையில் 22 அக்டோபர் 2013 அன்று ஒருவரை மீண்டும் விசமி என்று அழைத்து விக்கி நற்பண்பு அற்றவராக நடந்துள்ளார். தேனி. மு. சுப்பிரமணியுடன் விக்கி நற்பண்பு அற்று உரையாடியவர்கள் தடை செய்யப்பட்டுள்ளனர். ஆனால் சுட்டிக்காட்டப்பட்டும் தொடர்ச்சியாக விக்கி நற்பண்பு அற்று நடந்து கொள்ளப்பட்ட நிருவாகி தேனி. மு. சுப்பிரமணி மீது முறையான நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. நிருவாக அணுக்கமுள்ள ஒருவர் இவ்விதம் நடந்து கொண்டது முற்றிலும் பிழை.
  • பல இடங்களில் பல பயனர்களால் தேனி. மு. சுப்பிரமணியிடம் வேண்டுகோள்கள் பல விடுக்கப்பட்டும், அவர் செயற்பாடு கிட்டத்தட்ட இரு மாதங்களுக்கு மேலாகியும் திருப்திகரமானதாக இல்லை. (எ.கா: பேச்சுப்பக்கம் திறந்துவிட வேண்டுகோள்) பயனர்கள் முறையாக பதிலுரைக்காவிட்டால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவதுபோல் தேனி. மு. சுப்பிரமணி விடயத்தில் நடந்து கொள்ளப்படவில்லை. 26 ஆகத்து 2013 முதல் (கிட்டத்தட்ட 50 நாட்கள்) ஒத்துழையாமை செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளார்
  • அ.) தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள் கூடல்கள் கருத்திடலில் குறிப்பிட்ட சில பயனர்களை குற்றம் சுமத்தியமை. ஆ.) அதற்காக இதுவரை எவ்வித நல் நடத்தையிலும் ஈடுபடாமை. இங்கு இவருக்குச் சார்பாக செயற்பட்ட பயனர் Gcsekaran என்ற பயனர் செய்த பங்களிப்புக்களாக தன் இணையத்தளத்திற்கு வெளியிணைப்பிட்டதும், தேனி. மு. சுப்பிரமணிக்கு ஆதரவாக நிருவாக அணுக்கத்திற்கு வாக்களித்ததும், பத்தாண்டுகள் கூடல்கள் கருத்திடலில் குற்றம் சுமத்தியதும்தான். இவற்றை பார்க்கும்போது தேனி. மு. சுப்பிரமணியின் "கையாள்” (Meatpuppets) ஆக செயற்பட்டாரோ எனவும் கருத இடமிருக்கிறது. இ.) இச்செயற்பாட்டினால் தமிழ் விக்கிப்பீடியாவில் கிட்டத்தட்ட 1.5 மாதங்களாக குழப்பமான செயற்பாட்டிற்கு வழி வகுத்தமை. அதன் விளைவுகளாக பயனர்களை சேர்வுக்குள்ளாக்கியமை, சந்தேகிக்கும்படியான நிலைமையினை ஏற்படுத்தியமை, சில பயனர்களிடையே தோழமையான உறவுக்கு பங்கம் ஏற்படுத்தியமை உட்பட்ட தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு தற்காலிக பங்கம் ஏற்படுத்தியமை.
  • தமிழ் விக்கிப்பீடியா சார்பாக தமிழக அரசு மட்டத்தில் உள்ளவர்களுடன் தொடர்பு கொண்டமை தொடர்பான குற்றச்சாட்டு.

அ.) மேலே குறிப்பிட்ட காரணங்களுக்காக தேனி. மு. சுப்பிரமணியின் நிருவாக அணுக்கத்தைத் திரும்பப் பெறுப்படியும், அவர் தொடர்ந்தும் தமிழ் விக்கிப்பீடியாவில் இயங்குவதாயின் இவர் ஆதாரமில்லாது குற்றஞ்சாட்டிய பயனர்களிமும் தமிழ் விக்கிப்பீடியா சமூகத்திடமும் மன்னிப்புக் கேட்க வேண்டும். அத்துடன் தான் மீண்டும் இப்பிழைகளைவிட மாட்டேன் என்று உறுதி கூறுவதுடன் அவரால் தன் இணையத்தளத்திற்கு இணைத்துள்ள வெளியிணைப்புக்களை நீக்க வேண்டும். ஆ.) இங்கே குறிப்பிட்ட விடயங்கள் உண்மையாக இருந்து, விக்கிப்பீடியாவுடன் ஓத்துழைக்க விரும்பாவிட்டால், அவராகவே நிர்வாக அணுக்கத்தில் இருந்து சுயமாக விடுபட விண்ணபிக்குமாறு தேனி. மு. சுப்பிரமணியிடம் வேண்டுகோள் விடுக்கிறேன்.

இங்கே விடயங்களை சுருக்கமாகவும், ஏற்கெனவே உடையாடிய விடயங்களில் முக்கியமான பகுதிகளை உள்வாங்கியும், நிச்சயமில்லாத விடயங்களைத் தவிர்த்தும் இங்கு இட்டுள்ளேன். மேலதிக விபரங்கள், ஆதாரங்கள், கருத்துக்கள் இருந்தால் குறிப்பிடுங்கள். விளக்கம் இல்லாத இடங்களில் மேலும் விளக்கமாக கருத்தினை முன்வைக்க முடியும். தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியைக் கருத்திற் கொண்டு, தேனி. மு. சுப்பிரமணியும், தமிழ் விக்கிப்பீடியா சமூகமும் விரைவாகவும் செயற்பட்டு பிணக்கினை தீர்த்துக்படி கோரிக்கை வைக்கிறேன்.

சேர்க்கை 1[தொகு]

முகநூல் விடயங்கள் இங்கு கொண்டு வரப்படுவதால், தேனி. மு. சுப்பிரமணியின் முகநூலின் பதியப்பட்டுள்ள விடயங்கள் இங்கே பதிகிறேன்.

தேனி. மு. சுப்பிரமணி (October 31)

விபத்து என்றாலும்
ஆபத்து என்றாலும்
நம்மைக் காக்க
நூற்று எட்டு இருக்கிறது...!

சென்னையில் நடந்த
வி “பத்து”க்குப் பின்
கோ “பத்து”க்கும்
சா “பத்து”க்கும் ஆளான
என்னைக் காக்க
அமைதி ஒன்றுதான் இருக்கிறது...!

அதையும் கலைத்து
என்னைத் தொலைத்து விட
கைகோர்த்து அலைகிறது
சின்னக் கூட்டம்...!

சின்னச்சின்ன விடயங்களைச்
சிக்கலான தடயங்களாக்கித்
தங்களுக்கு ஆதாயம் தேடும்
அவர்களுக்கில்லை தனி முகம்
முன்னால் பெயரில்லாமல் அலைந்தது
பின்னால் நான் இராஜா என்றது
இராஜாதி இராஜா
சொந்த வேடத்தை விட்டுட்டு
மாறுவேடத்தில் உலா வருகிறது...!

எனக்கான அணுக்கம்
திரும்பப் பெற வேண்டும்
இதுதான் அவர்களின் கோரிக்கை...!
இதுவும் நல்லதொரு வேடிக்கை...!!

எனக்கான அணுக்கம்
எனக்கு இனி தேவையில்லை
எடுத்துக் கொள்ளுங்கள்...
வி “பத்து” வழியாக வந்த வடு
“தவி”க்கும் எனக்கு(ம்) வந்த கேடு!

Chandra Sekaran

புல்லுருவிகளுக்கெல்லாம் கவிதை பாடியுள்ளீரே... கற்பூர வாசனை அவர்கள் அறிவார்களோ?...

Sridhar Narayanasamy

பொதுநலன் கருதி விட்டுக்கொடுப்பவனே வீரன்

தேனி. மு. சுப்பிரமணி

//பொதுநலன் கருதி விட்டுக்கொடுப்பவனே வீரன்// அனைத்தையும் விட்டுக் கொடுத்து அங்கிருந்து வெளியேறுவதுதான் எனக்கு மரியாதை...!

இது கண்ணக்குப் புலப்பட்ட விடயம் மாத்திரமே. இங்கேயும் தேனி. மு. சுப்பிரமணி குற்றச்சாட்டில்தான் ஈடுபட்டுள்ளார். இவையெல்லாம், நல் அறிகுறிகள் இல்லை. நான் தேனி. மு. சுப்பிரமணிக்கு எதிராகவும், இரவி, புரூனோ, இராசன் போன்றவர்களுக்கு ஆதரவாகவும் செயற்படுவதாகக் கருத வேண்டாம். சுப்பிரமணி, சேகரன் ஆகியோர்தான் முதலில் குழப்ப நிலையை ஏற்படுத்தினர். அதன்பின் கைப்பாவைகள், ஐ.பி.கள், இராசன் எனத் தொடர்ந்த குழப்ப நிலைக்கு வித்திடல் சுப்பிரமணி, சேகரன் மூலம்தான் ஏற்பட்டது. ஆகவே என் கவனம் குறிப்பிட்ட நிருவாகியின் முன் உதாரணமற்ற விக்கி நடத்தைகள் மீதுதான்.

கருத்து[தொகு]

குறிப்பு: இதற்கு மேலுள்ள நடைமுறையிலிருக்கும் தேனி. மு. சுப்பிரமணியின் நிருவாக அணுக்கத்தைத் திரும்பப் பெறுதலுக்கான வேண்டுகோள்கள் இதுவும் ஒன்றல்ல. இதனை வேறாக கருத்திற் கொள்ளவும். நன்றி. --Anton·٠•●♥Talk♥●•٠· 12:14, 13 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

அன்ரன், இதையும் தனிக் கோரிக்கையாக ஏற்கனவே அமைத்துள்ள குழுவே எடுத்துக் கொள்ளட்டும். -- சுந்தர் \பேச்சு 12:20, 14 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
சுந்தர், ஏற்கெனவே வைக்கப்பட்டுள்ள கோரிக்கைக்கும் இதற்கும் வேறு பரிமாணங்கள் உண்டு. ஏற்கெனவே ஆலமரத்தடியில் குறிப்பிட்டவாறு, நடைமுறையில் உள்ள கோரிக்கை முடிவுற்றதும், இதனைப்பற்றிப் பேசலாம். நிலைமையின் தீவிரத்தைப் பொருத்து மேலும் சில விடயங்களை முன் வைக்கவுள்ளேன். --Anton·٠•●♥Talk♥●•٠· 15:43, 14 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
சரி அன்ரன். -- சுந்தர் \பேச்சு 17:20, 14 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
ஒரு தனிப் பயனரோ ஒரு குழுவினரோ தமது நோக்கம் நிறைவேறும் வரையில் 1, 2, ..... என்று வரிசை எண் போட்டுக் குற்றம் சுமத்திக்கொண்டே போகலாமா? ஒரு விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. அது முடியு முன் இன்னொன்று. அதிலும் சேர்க்கை ஒன்று, சேர்க்கை 2 என்று ஒட்டுக்களும் வருகின்றன. இதையும் எடுத்துக்கொண்டு விசாரித்தால், இன்னொன்று வராது என்பதற்கு என்ன நிச்சயம்? இங்கே கலைக்களஞ்சியம் உருவாக்குகிறோமா? அல்லது வழக்கு மன்றம் நடத்தப் பயிற்சி பெறுகிறோமா? இங்கே பயனர்கள் தமது சொந்த நேரத்தைப் பயனுள்ள வகையில் செலவு செய்ய எண்ணித்தான் வருகிறார்கள். ஒருவர் மீது ஒருவர் சுமத்தும் குற்றச்சாட்டுகளுக்கு விசாரணை நடத்தவல்ல. இது போன்ற சூழ்நிலைகளே தொடருமானால் நாம் எடுத்துக்கொண்ட பணிகளைச் செய்ய முடியாது. இப்படியான விடயங்களில் தொடர்ந்து ஈடுபடுவதற்குத் தமிழ் விக்கியில் போதிய வளங்கள் கிடையாது. எனவே, இவ்வகையான சூழ்நிலைகளைத் தவிர்ப்பதற்குத் தமிழ் விக்கிச் சமூகம் கடுமையான விதிகளை உருவாக்கிக்கொள்ள வேண்டும். முறைப்படி முதல் குற்றச்சாட்டையே கவனத்துக்கு எடுத்துக்கொண்டிருக்கக்கூடாது. அப்படிச் செய்ததன் மூலம் ஒரு பயனரின் பக்கத்து வீட்டுக்காரருக்கு பயனருடன் எல்லைச் சண்டை இருந்தால் அவர் தமிழ் விக்கியில் ஒரு பயனர் கணக்குத் தொடங்கி அன்றே அப்பயனர் மீது ஒரு குற்றச் சாட்டை முன் வைக்கலாம். அது சரிவராது போல் தெரிந்தால் இடையிலேயே இன்னொரு குற்றச் சாட்டைக் கொண்டுவரலாம். ஒரே பயனர்மீது அடுத்தடுத்து குறைந்த கால இடைவெளியில் குற்றச்சாட்டுக் கொண்டுவருவது எந்த நியாயத்துக்கும் பொருத்தமில்லாதது. இதற்கு இடங்கொடுத்து முற்காட்டு ஒன்றை ஏற்படுத்தினால், தமிழ் விக்கியை முடக்க விரும்புபவர்களும் இதே வழியைக் கையாள வழி ஏற்படுத்திக் கொடுத்தவர்களாவோம். சரியான வழி காட்டுதல்களை உருவாக்கும்வரை எந்தக் குற்றச் சாட்டுகளையும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளக்கூடாது என்பது எனது கருத்து. ---மயூரநாதன் (பேச்சு) 19:21, 14 நவம்பர் 2013 (UTC)--👍 விருப்பம்--Kanags \உரையாடுக 20:05, 14 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
குற்றச்சாட்டுகளில் நியாயம் இருக்கின்றதா இல்லையா என்றுதான் பார்க்க வேண்டுமேயன்றி, குற்றச்சாட்டு வைக்கலாமா இல்லையா என வழி தேடுவது நியாயமாகாது. நான் ஏற்கெனவே குறிப்பிட்டவாறு, நடைமுறையில் உள்ள கோரிக்கை முடிவுற்றதும், இதனைப்பற்றிப் பேசலாம். இதனை சகலரும் விளங்கிக் கொள்ள வேண்டும். // இங்கே கலைக்களஞ்சியம் உருவாக்குகிறோமா? // இதனைத் தான் நானும் கேட்கிறேன். இதை இன்னும் அழுத்தமாக மேலே குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளுடன் சுப்பிரமணியிடம் கேட்கிறேன். சுப்பிரமணி எதுவும் பேசாமல் இருக்க அவருக்காக "வழக்காட" வருபவர்களிடமும் கேட்ட விரும்புகிறேன். சுப்பிரமணி சார்பாக பேசினால் சனநாயகவாதி, எதிர்த்தால் தீவிரவாதி எனும் நோக்கில் அணுகுபவர்களிடமும் கேட்கிறேன். // இங்கே பயனர்கள் தமது சொந்த நேரத்தைப் பயனுள்ள வகையில் செலவு செய்ய எண்ணித்தான் // நானும் அவர்களில் ஒருவன்தான். நான் பலமுறை இச்சிக்கலைத் தீர்க்க வேண்டியும் யாரும் தீவிரம் காட்டாமல், இப்போது என்னை பேசாமல் இருக்கச் சொல்வது தன் இணைத்தளத்திற்கு மற்றவர்களின் உழைப்பில் வெளியிணைப்பினை ஏற்படுத்திய சுப்பிரமணிக்கு வலுச்சேர்ப்பதாகிவிடும். //வீட்டுக்காரருக்கு பயனருடன் எல்லைச் சண்டை இருந்தால் // இந்த உதாரணம் இங்கு பொருத்தமற்றது. சுப்பிரமணி பற்றிய குற்றச்சாட்டு எல்லைச் சண்டை பற்றியதல்ல, நிருவாகி பிறழ்வாக நடந்தது பற்றியது. //சரியான வழி காட்டுதல்களை உருவாக்கும்வரை எந்தக் குற்றச் சாட்டுகளையும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளக்கூடாது// இது போன்ற சூழ்நிலைகளே தொடருமானால் நாம் எடுத்துக்கொண்ட பணிகளைச் செய்ய முடியாது போகும் என்பதால் சிக்கலைத் தீர்க்க வேண்டும். --Anton·٠•●♥Talk♥●•٠· 01:45, 15 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]


//இந்த உதாரணம் இங்கு பொருத்தமற்றது.// இது தொடர்பில் ராசன் கொடுத்த விளக்கத்தைப் பார்த்தால் இதன் பொருத்தம் விளங்கும்//
அன்டன், குற்றச்சாட்டுகளில் நியாயம் இருக்கிறதா இல்லையா என்பது மட்டும் பார்த்து நியாயத்தை நிறுவ முடியாது. குற்றச்சாட்டு வைப்பதன் உள்நோக்கம் மிகவும் முக்கியம். அண்மையில் தவியில் இடம்பெற்று வருகின்ற நிகழ்வுகளில் உள்நோக்கங்கள் இருப்பது தெரிகிறது. தமிழ் விக்கியை முடக்குவது பற்றிச் சிந்திப்பவர்கள் இருக்கின்றனர். இவ்வாறான முயற்சிகளில் இருந்து தமிழ் விக்கியைப் பாதுகாப்பது மிகவும் முக்கியம். எந்தவொரு தனிப்பட்ட பயனருக்கும் ஆதரவாகவோ எதிராகவோ பேசவேண்டிய தேவை எனக்குக் கிடையாது. நியாயம் கேட்கிறோம் என்ற போர்வையில் இங்கே நடைபெறும் நியாயத்துக்குப் புறம்பான செயற்பாடுகளைப் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. நீங்கள் எதைப் பலி கொடுத்தாயினும் ஒரு பயனரைக் குற்றவாளியாக்குவதற்கு முயற்சி செய்வது சரி என்றால், தமிழ் விக்கிப்பீடியாவின் நலனுக்காக அதற்கு எதிராகச் செயற்படுவது எந்தவகையிலும் குற்றம் இல்லை. ---மயூரநாதன் (பேச்சு) 09:53, 15 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

──────────────────────────────────────────────────────────────────────────────────────────────────── இது நான் கொண்டு வந்த கோரிக்கை. இராசனோ மற்றவர்களையோ இங்கு உதாரணத்திற்கு கொண்டு வரத் தேவையில்லை. உங்கள் கூற்றின் மொத்த வடிவமும் நான் உள்நோக்கம் கொண்டு செயற்படுவது போல் தெரிகிறது. தயவு செய்து என் கருத்துக்களை விமர்சியுங்கள். அல்லது என்னையும் உள்நோக்கம் கொண்டவனாக நீங்கள் கருதுவதாக இருந்தால் அதையும் தெரிவியுங்கள். தமிழ் விக்கியை முடக்குவது பற்றிச் சிந்திப்பவர்கள் யார்? இங்கே நடைபெறும் நியாயத்துக்குப் புறம்பான செயற்பாடுகள் யாவை? எவர் செய்கின்றனர்? இதற்கும் எனக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. நீங்கள் என்னைச் சுட்டுகிறீர்களா? அப்படியாயின் அதற்கான காரணம் என்ன? இது நான் கொண்டு வந்த கோரிக்கை. இதற்குக் கருத்திடுவதானால், என்னுடன் சம்பந்தப்பட்ட விடயங்களை மட்டும் முன் வையுங்கள். நான் யாருடைய கையாளுமல்ல, யாரும் எனக்குக் கையாளுமல்ல. --Anton·٠•●♥Talk♥●•٠· 12:37, 15 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

//எந்தவொரு தனிப்பட்ட பயனருக்கும் ஆதரவாகவோ எதிராகவோ பேசவேண்டிய தேவை எனக்குக் கிடையாது. நியாயம் கேட்கிறோம் என்ற போர்வையில் இங்கே நடைபெறும் நியாயத்துக்குப் புறம்பான செயற்பாடுகளைப் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. நீங்கள் எதைப் பலி கொடுத்தாயினும் ஒரு பயனரைக் குற்றவாளியாக்குவதற்கு முயற்சி செய்வது சரி என்றால், தமிழ் விக்கிப்பீடியாவின் நலனுக்காக அதற்கு எதிராகச் செயற்படுவது எந்தவகையிலும் குற்றம் இல்லை.// நன்றாகச் சொன்னீர்கள். அதைத்தான் நானும் சொல்கிறேன். மேலும், சற்று சேர்த்துச் சொல்வதென்றால், எதைப் பலி கொடுத்தாயினும் ஒரு பயனரைக் காப்பாற்ற முயற்சி செய்வது சரி என்றால், தமிழ் விக்கிப்பீடியாவின் நலனுக்காக அதற்கு எதிராகச் செயற்படுவது எந்தவகையிலும் குற்றம் இல்லை.--Anton·٠•●♥Talk♥●•٠· 13:22, 15 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]


எல்லோரும் சற்றுப் பொறுமைக் காக்க. நாம் ஏன் இந்தளவு இழுபடுகிறோம். அன்ரன், உங்கள் கருத்துக்கள் அலசப்படும். மயூரநாதனின் நோக்கையும் இங்கு பிற பயனர்கள் உணர்ந்து கொள்ள வேண்டுகிறேன். நெடுங்காலம் காலம் பல நல்நோக்குப் பங்களிப்புக்களை தேனி வழங்கி உள்ளார். அதே வேளை அவரின் சில செயற்பாடுகள் பாதகமாக அமைந்துள்ளன. ஒரு பயனர் தவறாகச் செயற்பட்டால், அவர் மீது ஏற்ற நடவடிக்கைகளை படிப்படியாக எடுக்க வேண்டும். எமது நோக்கம், அப் பயனர் தனது செயற்பாடுகளில் மாற்றங்கள் கொண்டுவருவதாகும். அவ்வாறு கொண்டு வர முடியாவிட்டால் அதன் பின் தீவரமான நிலைப்பாடுகளை எடுக்கலாம். வெளி இணைப்புக்கள் போன்ற சிக்கல்களை அவ்வப்போது எடுத்துச் சொல்லி திருத்தியிருக்க வேண்டும். எல்லாச் சிக்கல்களையும் குவித்தல் நியாமன்று. அது படிப்படியாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்ற விக்கி நிலைப்பாட்டுக்கு எதிரானதாகும், போதிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட வேண்டும் என்ற விக்கி வழமைக்கு எதிரானதாகும். --Natkeeran (பேச்சு) 14:49, 15 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
நக்கீரன், எனக்கு சிக்கலை இழுத்தடிக்க விருப்பமில்லை. இதை பல முறை தெரிவித்துள்ளேன். நான் கோரிக்கையை தயாராக (stand-by) வைத்துவிட்டு இருக்கிறேன். நீங்களும் சுந்தரும் விலக்கிக் கொள்ள கேட்டபோது, இதுபற்றி பின்னர் விவாதிக்கலாம் என இருந்தபோது நான் குழப்பம் விளைவிப்பவன் என்ற தொனியில் கருத்துக்கள் குவிவதை ஏற்றுக் கொள்ள முடியாது. தெளிவுக்காக: வெளி இணைப்புக்கள் சிக்கல்கள் என் கண்ணில் புதிதாகத்தான்பட்டன. தமிழர் கட்டுரையில் இருந்த பிழையான உரலியைத் திருத்தும்போது http://www.muthukamalam.com/muthukamalam_katturai55.htm தென்பட்டது. அது பிழையான உரலி இருந்ததால் செய்த சோதனையில்தான் வெளி இணைப்புக்கள் சிக்கல் தெரிய வந்தது. ஆகவே, கூடல் கருத்துகள், அரசு மடல் போன்றவற்றின் தொடர்ச்சியாக இதைக் கருத இடமளித்தது. பொதுவாக பயனருக்குத்தான் எடுத்துச் சொல்லி திருத்தித்துவதுண்டு. நிருவாக அணுக்கம் உடையவர் இது பற்றி அறியாமல் இருப்பது வியப்பானது. படிப்படியாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்ற உங்கள் கூற்றில் நியாயம் உண்டு, ஆனால் ஒத்துழையாமை ஈடுபட்டமை இங்கு என்னையும் இழுத்துவிட்டது. ஒத்துழையாமை புரிந்த இராசனை நீங்கள் தடை செய்தபோது யாரும் கேள்வி கேட்கவில்லை. (நானாகவிருந்தால் காலத்தை முடிவிலியாக நீட்டியிருப்பேன்.) சுப்பிரமணி விடயத்தில் என்ன செய்கிறோம்? அவரின் கருத்திடலில் "கேட்டுக் கொண்டதால் மீண்டும் வந்தேன்", "தங்களின் வேண்டுகோளுக்கேற்ப எனது பதில்கள் பதிவு செய்யப்பட்டுவிட்டன" என்று யாருக்காகவேதான் செயற்படுகிறார். கேட்கிறார்கள் என்பதற்காக வருத்தம்கூட தெரிவிக்கலாம். இது பிழையான முன்னுதாரணமாக அமையக்கூடாது. ஒற்றுமையாக இருந்த எம்மில் அன்ரன் எதிர் xxx, நக்கீரன் எதிர் xxx என்று மோதவிட்டதன் மூலகாரணம் யார்? பிரச்சனை மர ஆய்வில் (problem tree analysis) கிளையில் உள்ள பிரச்சினையைத் தீர்க்காது, ஆணிவேரில் (மூலகாரணம்) உள்ள பிரச்சனையைத்தான் தீர்க்க வேண்டும். --Anton·٠•●♥Talk♥●•٠· 16:47, 15 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
கருத்துக்களுக்கு நன்றி அன்ரன். நாம் எப்பொழுது கருத்துக்களுடன்னும் சில வேளைகளில் நடத்தைகளுடனும்தான் வேறுபாடுகள் கொண்டுள்ளோம். மனிதர்களுடன் இல்லை. மயூரநாதனின் உள்நோக்கம் என்ற கருத்துடன் உடன்படவில்லை. --Natkeeran (பேச்சு) 18:43, 15 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]


மயூரநாதன், உங்களின் தொடக்க கட்ட கருத்துக்களுடன் பெரிதும் உடன்படுகிறேன். அதவாது தனிப்பட்ட சிக்கல்களுக்காக குற்றச்சாட்டுக்களை அள்ளிவீச முடியாது. அது தொடர்பான செயல்முறையில் நாம் இறுக்கமாக இருக்க வேண்டும். அதே வேளை, இரண்டாவது பதிவில் குற்றச்சாட்டுகள் எதோ உள்நோக்குடன் பதியப்பட்டுள்ளன என்ற கருத்து தவறானது. உரையாடல்களின் சூழ்நிலையில் நீங்கள் அவ்வாறு சுட்டி இருக்கலாம். ஆனால் அது தவறான கருத்து, குற்றச்சாட்டு. தமிழ் விக்கி பல்வகைத்தன்மையைக் கொண்டது, சுயமாகப் பகுத்தறிவாகச் சிந்திக்க கூடியவர்களால் ஆனது. ஆகவே ஒரு குறிப்பிட்ட பயனருக்கு எதிரான conspiracy என்பது சாத்தியமற்றது. இது தொடர்பாக என்னால் விரித்துக் கூற முடியும், ஆனால் தவிரிக்கிறேன்.--Natkeeran (பேச்சு) 19:00, 15 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
நற்கீரன், உள்நோக்கம் என்பது conspiracy அல்ல. "உள்நோக்கம்" என்பது உள்ளே மறைவாக ஒரு நோக்கத்தை வைத்துக்கொண்டு வேறொரு ஏற்றுக்கொள்ளத்தக்க வேறொரு நோக்கத்துக்காகச் செயல்படுவதுபோலக் காட்டிக்கொள்வது ஆகும். அதாவது, hidden agenda அல்லது ullterior motive. ---மயூரநாதன் (பேச்சு) 07:55, 16 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
அன்ரன் நான் எப்போது உங்களிடம் கோரிக்கையை விலக்கிக் கொள்ளுமாறு கேட்டேன்? -- சுந்தர் \பேச்சு 15:50, 17 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
உங்களை பெயரை பொருத்தம் இல்லாது பயன்படுத்திவிட்டேன். அசெளகரியம் ஏற்படுத்தியிருந்தால் வருத்தங்களைத் தெரிவிக்கிறேன். --Anton·٠•●♥Talk♥●•٠· 04:17, 19 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
தெளிவுபடுத்தியதற்கு நன்றி அன்ரன். சிக்கல் எதுவும் இல்லை. -- சுந்தர் \பேச்சு 07:26, 19 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
மயூரநாதன், அப்படியே ஒருவர் உள்நோக்கம் கொண்டு குற்றம் சாட்டினாலும் அது குற்றைத்தைப் பற்றிய நமது பார்வையில் குறுக்கே வரக்கூடாது என்று கருதுகிறேன். இதை நீங்கள் ஒரு கேள்வியாகக் கேட்டிருக்கிறீர்கள், முடிவாக எதுவும் சொல்லவில்லை. ஆனால், குழுவின் முடிவுகளில் இதை நீங்கள் வலியுறுத்துகிறீர்கள் என்றால் நான் மேலும் எனது கருத்தை விரிவாக விளக்குகிறேன். -- சுந்தர் \பேச்சு 05:52, 18 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
உள்நோக்கத்தைக் கணக்கில் எடுத்துக்கொள்வது முக்கியம். குற்றச்சாட்டின் உள்நோக்கம் கவனிக்கப்படாவிட்டால் சரியான நியாயம் வழங்க முடியாது.
இங்கே நடைபெறுகின்ற விசாரணையில் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லை. குற்றஞ்சாட்டியவருக்கு குழுவில் உள்ள ஒருவரைப் பிடிக்காவிட்டால் அவர் நீக்கப்படுகிறார். குற்றச் சாட்டுக்கு உள்ளானவருக்கு அந்த உரிமை கிடையாது என்ற பதில் வருகிறது. குற்றச் சாட்டுக் கொண்டுவரப்பட்ட நேரம், குற்றச் சாட்டுகளின் தன்மை என்பவற்றைப் பார்க்கும் போது தெளிவான உள்நோக்கம் இருப்பது தெரிகிறது. குறிப்பிட்ட அளவு தொகுப்புக்களைச் செய்யாத பயனர் இது போன்ற குற்றச் சாட்டுகளை வைக்கலாம் என்று எந்த விக்கியிலும் இல்லை. ஆனால், தமிழ் விக்கியில் குற்றச் சாட்டு வைப்பதற்காகவே பயனராகப் பதிவு செய்துகொண்ட ஒருவருக்குச் சிறப்புச் சலுகை வழங்கப்பட்டது. இந்த விசாரணையில் போதே குற்றஞ்சாட்டப்பட்டவரை, குற்றம் நிரூபிக்கப்படாமலே ஒரு வழி பண்ணியாகிவிட்டது. முதல் குற்றச் சாட்டு சரியாக வராதோ என்ற எண்ணத்தில் புதிதாக ஒரு குற்றச் சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இப்படியான குற்றச் சாட்டுகளை அனுமதிப்பதன் மூலம் குற்றம் எதுவும் நிரூபிக்கப்படாமலே குற்றச் சாட்டுக்கு உள்ளானவருக்குத் தண்டனை வழங்கப்படுகிறது. எதிர்காலத்தில் இங்குள்ள எந்தப் பயனருக்கும் இந்த நிலை ஏற்படாது என்று சொல்ல முடியாது. எதிப்புக் கருத்துகளை முன்வைப்பதால் நாளைக்கே எனக்கு எதிராகவும் இவ்வாறான குற்றச்சாட்டுகளை ஒருவர் முன்வைக்கலாம். நீதிமன்றங்களில் கூட சரியான ஆதாரங்கள் இல்லாவிட்டால் வழக்கை அனுமதிக்க மாட்டார்கள். இங்கே அப்படியல்ல யாராவது ஒருவர் குற்றம் என்று எதையாவது முன்வைத்தால் போதும் ஆளுக்கு ஆள் கேள்விகளால் துளைத்து எடுத்து விடலாம்.
எத்தனை முறை இப்படிக் குற்றச் சாட்டுகள் வந்தாலும் குழு அமைத்து விசாரிப்பீர்களா என அறிய விரும்புகிறேன். ----மயூரநாதன் (பேச்சு) 11:21, 19 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
வருங்காலத்தில் எவர்மீதும் எந்தவித அடிப்படையும் இல்லாமல் யாரும் குற்றம் சாட்டினால் அதை இவ்வாறு நாம் எடுத்துக் கொள்ளப்போவதில்லை. அது வழமையான பங்களிப்பாளரிடமிருந்து வந்திருந்தாலும் புதுப்பயனரிடமிருந்து வந்திருந்தாலும் அதே நிலைதான். அதற்கான கொள்கைகளையும் முறையாக வகுப்போம், இதுபோன்ற இடைக்காலக்குழு அமைக்கும் தேவை இனி எழாது என நினைக்கிறேன். உள்நோக்கம் கொண்டு ஒருவர் தனிநபர் தாக்குதலில் ஈடுபட்டால் அதைத் அதற்கான கொள்கையின்கீழ் தனியாக அணுகித் தீர்வு காணலாம். அதே வேளையில் ஒரு குற்றச்சாட்டு எழும்போது அதை ஒரு முறைவைத்துத் தீர்க்க வேண்டியதிருக்கிறதே? இதுபோல நிகழாமல் இருந்தால் பரவாயில்லை, நிகழும்போது அதைத் தீர்த்துத் தான் ஆக வேண்டியதுள்ளது. இங்கே ஆதாரமே இல்லாமல் குற்றம் சாட்டப்பட்டிருப்பதாக கருத முடியவில்லை (அதாவது முடிவெடுப்பதற்கு அல்ல, முதல்நிலையில் இதைப் பற்றி உண்மை அறிய வேண்டும் என்பதற்கான தேவை இருப்பதாகவே தெரிகிறது.) அப்படி ஆதாரம் இல்லாவிட்டாலும் குழுவினர் ஒன்றும் தவறாக ஒருவர் மீது குற்றம் காணப் போவதில்லையே? அதேபோல் இங்கே கேள்வி கேட்டதாலேயே தேனி மு. சுப்பிரமணி வருத்தமடையும் அளவிற்கு எதுவும் நடந்துள்ளதாகத் தெரியவில்லை. அவர்மீதான தனிநபர்த் தாக்குதல்கள் யாரால் தொடுக்கப்பட்டன என்று அறிந்தால் அவற்றின்மீது முறையான நடவடிக்கை எடுக்கலாம். மற்றபடி இந்த விசாரணையினால் அவருக்குப் பாதிப்புள்ளதாகத் தெரியவில்லை. -- சுந்தர் \பேச்சு 09:49, 24 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

──────────────────────────────────────────────────────────────────────────────────────────────────── ஐபி பயனர் குற்றஞ்சாட்டக்கூடாது, புதுப்பயனர் குற்றஞ்சாட்டக்கூடாது என்ற இழுத்தடிப்பு இப்போது புதுப்பரிமாணம் பெற்றது வியக்க வைக்கிறது. குற்றஞ்சாட்டு உண்மையா பொய்யா என்று விசாரிக்காமல் உள்நோக்கம், வெளிநோக்கம் என நியாயம் கற்பிப்பது மேலும் வியக்க வைக்கிறது. //முதல் குற்றச் சாட்டு சரியாக வராதோ என்ற எண்ணத்தில் புதிதாக ஒரு குற்றச் சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.// en:Justice delayed is justice denied. //எதிப்புக் கருத்துகளை முன்வைப்பதால் நாளைக்கே எனக்கு எதிராகவும் இவ்வாறான குற்றச்சாட்டுகளை ஒருவர் முன்வைக்கலாம்.// விக்கியில் பெரியவர் சிறியவர் என்ற பேதமில்லை என நினைக்கிறேன். யார் பிழை செய்யதாலும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கத்தான் வேண்டும். யார் மீது குற்றம் சுமத்தப்படுகின்றது என்பதல்ல, குற்றச்சாட்டு உண்மையா பொய்யா என்பதுதான் முக்கியம். "சுய விசாரனையும் வேண்டாம், சர்வதேச விசாரனையும் வேண்டாம், நாங்கள் குற்றமே செய்யவில்லை" என்ற தொனியில் பேசுவது அழகல்ல. பிழை இல்லாவிட்டால் முகம் கொடுக்க அஞ்சத்தேவையில்லை. //நீதிமன்றங்களில் கூட சரியான ஆதாரங்கள் இல்லாவிட்டால் வழக்கை அனுமதிக்க மாட்டார்கள்.// இங்கேயுள்ளவை ஆதாரங்கள் இல்லாதவையா? மேலும், இது நீதிமன்றம் அல்லவே. என்னுடைய நேரமும் உழைப்பும் இங்கு விதைக்கப்பட்டுள்ளன. எனவே, பிழையான ஒரு விடயத்தை கேள்வி கேட்பதை நிராகரிப்பது பலபேர் சேர்ந்து செயல்படும் இடத்தில் பொருத்தமற்றது. கேள்வி கேட்கக் கூடாது என்ற கொள்கை விக்கி விதியாக உள்ளதா? குற்றஞ்சாட்டலில் உள்நோக்கம் உள்ளது எனும் ஏரணம், குற்றஞ்சாட்டலை தடுப்பதில் உள்நோக்கம் இருப்பதாகவும் கருத இடமளிக்கிறது. எனவே சுற்றி வளைத்துப் பேசாது (Don't beat around the bush) விடயத்தை அணுகுவோம். --Anton·٠•●♥Talk♥●•٠· 13:31, 19 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

அன்டன், என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதைத் தெளிவாக வாசித்த பின் பதில் எழுதுவது நல்லது. //எதிர்ப்புக் கருத்துகளை முன்வைப்பதால் நாளைக்கே எனக்கு எதிராகவும் இவ்வாறான குற்றச்சாட்டுகளை ஒருவர் முன்வைக்கலாம்// என்றுதான் நான் சொல்லியிருக்கிறேன், இங்கே பெரியவர், சிறியவர் என்ற கருத்து எங்கேயுள்ளது?
//நாங்கள் குற்றமே செய்யவில்லை// எனப் பன்மையில் எழுதப்பட்ட இக்குறிப்பில் நாங்கள் என்பது யார் யாரைக் குறித்து எழுதப்பட்டுள்ளது? விளக்கம் தேவை. ---மயூரநாதன் (பேச்சு) 03:28, 20 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
நீங்கள் பெரியவர், சிறியவர் என்ற கருத்தினை தெரிவிக்கவில்லை. நான்தான் அவ்வாறான கருத்து விக்கியில் இல்லை என்பதைக் குறிப்பிட்டேனேயன்றி உங்களைக் குற்றம் சுமத்தவல்ல. //நாங்கள்// உதாரணம் என்பதால், மேற்கோள் குறியினுள் சொல்லப்பட்டிருப்பதைக் கவனியுங்கள். --Anton·٠•●♥Talk♥●•٠· 03:43, 20 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

வாக்கெடுப்பு[தொகு]

நிருவாகியின் மறுமொழி[தொகு]

(இதற்கான காலம் 05 பிப்ரவரி வரை. உரிய காரணத்துடன் கோரினால் மேலும் 7 நாட்கள் காலம் தரப்படும்) தேனி சுப்பிரமணி விளக்கம் ஏதும் அளிக்கவில்லை என்பதால் நிருவாக அணுக்க நீக்கல் நடைமுறையின் அடுத்த கட்டமாக பயனர் உரையாடலுக்குச் செல்கிறோம். --இரவி (பேச்சு) 14:41, 8 பெப்ரவரி 2014 (UTC)

பயனர் உரையாடல்[தொகு]

தேனி சுப்பிரமணி மீதான நிருவாக அணுக்க நீக்கல் கோரிக்கை தொடர்பாக பயனர்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம். வெறும் ஆம், இல்லை, வேண்டாம், விருப்பம் போடாமல் விரிவாக, தெளிவாக பயன் இடர்களை முன்வைத்து உரையாடுவது வரவேற்கப்படுகிறது. 22 பிப்ரவரி, 2014 வரை உரையாடல் நடக்கும். அதற்கு அடுத்த ஒரு வாரம் உரையாடலில் சாரத்தைத் தொகுத்து எழுதும் பணி நடக்கும். --இரவி (பேச்சு) 14:41, 8 பெப்ரவரி 2014 (UTC)

ஆன்டன்[தொகு]

நான் ஏற்கெனவே முன்மொழிந்த கோரிக்கை நிலுவையில் உள்ளதால் இது பற்றி அதிகம் குறிப்பிடாமல் சுருக்கமாகக் குறிப்பிடுகின்றேன். குறித்த காலம் கொடுத்தும் நிருவாகியின் மறுமொழி அளிக்காததாலும், குழுவின் பரிந்துரையின்படி உறுதியளிக்க வேண்டியவற்றுக்கு உறுதி அளிக்காதாலும், நிருவாக அணுக்கத்தைத் திரும்பப் பெற்று, அவர் இணைத்த இணையத்தள முகவரிகளை நீக்குமாறும் பரிந்துரைக்கிறேன். மறுமொழி அளிக்காததால் வாக்கெடுப்பு தேவையில்லை எனக் கருதுகிறேன்.--AntonTalk 12:37, 16 பெப்ரவரி 2014 (UTC)

இரவி[தொகு]

உண்மையில், இராசன் முதல் முறையீட்டை வைத்த பிறகும் கூட, தேனி சுப்பிரமணி மீதான குற்றச்சாட்டுகள் நிருவாகப் பொறுப்பை நீக்குவதற்குப் போதுமானவை அல்ல என்றே கருதினேன். ஆனால், ஐவர் குழுவின் பரிந்துரையைப் புறக்கணித்ததும் ஒட்டு மொத்தமாக ஒத்துழையாமையைத் தொடர்வதும் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இல்லை. பின்வரும் காரணங்களுக்காக தேனி சுப்பிரமணியை நிருவாகப் பொறுப்பில் இருந்து விலக்கக் கோருகிறேன்:

  1. கட்டுரைப் பக்கங்களில் கொள்கை மீறல் தொகுப்புகளைச் சுட்டிக் காட்டியும் அவற்றைத் திருத்திக் கொள்ள முன்வராமை.
  2. தமிழ் விக்கிச்சமூகத்துடன் ஒத்துழையாமை.
  3. தமிழ் விக்கிப்பீடியா பற்றி உண்மைக்குப் புறம்பான தகவலை அச்சு இதழ் ஒன்றில் பரப்புதல். அதற்கு மறுப்பு வெளியிடுமாறு கோரினாலும் ஏற்றுக் கொள்ளாமை. சர்ச்சைக்குரிய கட்டுரை வெளியான அதே இதழில் அண்மையில் Uncyclopedia என்னும் விக்கிப்பீடியா நையாண்டித் தளத்தைப் பற்றி முழுமையான கட்டுரையை எழுதியுள்ளார் என்பது வெந்த புண்ணில் வேல்.
  4. தமிழ் விக்கிப்பீடியா தொடர்பாக அரசுடன் வெளிப்படைத்தன்மை அற்ற உறவாட்டம்.
  5. உடன் பங்களிக்கும் தமிழ் விக்கிப்பீடியரை நாகரிகமின்றி ஒருமையில் விளித்தல். அதற்கு வருத்தம் தெரிவிக்க மறுத்தல்.
  6. கையாள் பயன்படுத்தினார் என்ற முறையீடு இவர் மீது உள்ளது.
  7. பலரும் வேண்டுகோள் விடுத்த பிறகும் தனது பேச்சுப் பக்கத்தை மூடி வைத்துக் கொண்டமை. இது அவருடைய நிருவாக அணுக்கத்தை முறைகேடாக பயன்படுத்தியமைக்கு ஈடாகும்.
  8. குறிப்பிட்ட விக்கிப்பீடியர்கள் கேட்டுக் கொண்டால் மட்டும் பதில் தந்து ஏனைய விக்கிசமூகத்தைப் புறக்கணிக்கின்றமை.
  9. கைப்பாவை ஒருவர் கூறும் நிறுவப்படாத அவதூறை வழிமொழிந்து நிருவாகப் பொறுப்பின் கண்ணியத்தில் இருந்து தவறியமை.
  10. உடன் பங்களிப்பவர்கள் மீதான முறையான ஆதாரமற்ற அவதூறுகளை தெரிவிக்கிறார்.
  11. அறிவுரை என்ற பெயரில் பயனர் ஒருவர் தானே எழுதி நீக்கிவிட்ட ஒரு கருத்தைத் தோண்டியெடுத்து அவரது கல்வி / பணி வாழ்வுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. இது ஒரு நுணுக்கமான மிரட்டல் என்றே கருத வேண்டியுள்ளது.

சுருக்கமாகச் சொன்னால், அடுத்து நிருவாகப் பொறுப்புக்கு வர விரும்பும் ஒருவர், தற்போது இருக்கும் சிறந்த நிருவாகியை விட ஒரு படி மேலே இருக்க வேண்டும். அதற்கு நல்ல முன்மாதிரிகளை நாம் ஏற்படுத்த வேண்டும். நன்றி.--இரவி (பேச்சு) 14:59, 16 பெப்ரவரி 2014 (UTC)

சர்ச்சைக்குரிய தமிழ் கம்பியூட்டர் கட்டுரை உட்பட வெளிவந்த தொடர் இப்போது நூல் வடிவம் பெறுகிறது. இதிலாவது தவறான கருத்து திருத்தப்படுமா?

https://www.facebook.com/photo.php?fbid=619772898077848&set=a.103745293013947.5662.100001354294278&type=1&stream_ref=10

விக்கிப்பீடியா பற்றிய விவரங்களை நூலாக்கி ஆதாயம் அடையும் ஆவலை சுட்டிக்காட்டப்பட்டுள்ள கொள்கை மீறல்களைத் திருத்துவதிலும் காட்டலாமே?

தொடர்ந்து விக்கிப்பீடியா தொடர்பாக வெளியிடங்களிலும் பேச எண்ணியுள்ளார். விக்கிப்பீடியாவைப் பற்றி யார் பேசலாம், கூடாது என்று தடை போட ஏதும் இல்லை என்றாலும், தமிழ் விக்கிப்பீடியாவில் நிருவாகப் பொறுப்பில் இருந்து கொள்கை மீறலில் ஈடுபடுபவர் வெளியிடங்களில் விக்கிப்பீடியா பரப்புரையில் ஈடுபடுவது முரண்நகையாக இருக்கிறது. விக்கிப்பீடியா திட்டம் சரியான வகையில் முன்வைக்கப்படுமா என்ற அச்சத்தையும் தருகிறது.

https://www.facebook.com/photo.php?fbid=623004531088018&set=a.103745293013947.5662.100001354294278&type=1&stream_ref=10

--இரவி (பேச்சு) 18:22, 17 பெப்ரவரி 2014 (UTC)

சுந்தர்[தொகு]

மேலேயுள்ள குற்றச்சாட்டுக்களில் எனக்கு மிகவும் முக்கியமானதாகப்படுவது இரண்டாம் எண்ணிட்ட ஒத்துழையாமைதான். அடுத்தபடியாக அரசுடனான உறவாட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லாததும் விக்கிப்பீடியாவின் நடுநிலைத்தன்மைக்கு ஊறுவிளைவிக்கும் வாய்ப்புள்ளபடி நடந்து கொண்டதும். அந்த அடிப்படையில் நான் இம்முன்மொழிவை ஆதரிக்கிறேன்.

மற்ற சாட்டுக்களைப்பற்றிய எனது கருத்துகள்:

// கட்டுரைப் பக்கங்களில் கொள்கை மீறல் தொகுப்புகளைச் சுட்டிக் காட்டியும் அவற்றைத் திருத்திக் கொள்ள முன்வராமை. //

// உடன் பங்களிக்கும் தமிழ் விக்கிப்பீடியரை நாகரிகமின்றி ஒருமையில் விளித்தல். அதற்கு வருத்தம் தெரிவிக்க மறுத்தல். //

இவ்விரண்டுக்கும் தகுந்த இணைப்புகள் தரவும்.

// தமிழ் விக்கிப்பீடியா பற்றி உண்மைக்குப் புறம்பான தகவலை அச்சு இதழ் ஒன்றில் பரப்புதல். அதற்கு மறுப்பு வெளியிடுமாறு கோரினாலும் ஏற்றுக் கொள்ளாமை. சர்ச்சைக்குரிய கட்டுரை வெளியான அதே இதழில் அண்மையில் Uncyclopedia என்னும் விக்கிப்பீடியா நையாண்டித் தளத்தைப் பற்றி முழுமையான கட்டுரையை எழுதியுள்ளார் என்பது வெந்த புண்ணில் வேல். //

உண்மைக்குப்புறம்பான தகவலை வெளியிட்டது தவறு. மறுப்பு வேண்டி எழுதியிருக்க வேண்டும், பதிப்பதும் பதியாமல் விடுவதும் பதிப்பாசிரியர் முடிவு. ஆனால், முயன்றிருக்க வேண்டும். அன்சைக்குளோப்பீடியா பற்றி எழுதியதில் தவறில்லை என நினைக்கிறேன். அக்கட்டுரையில் விக்கிப்பீடியாபற்றி தரக்குறைவாக எதுவும் எழுதியிருக்கிறாரா?

// கையாள் பயன்படுத்தினார் என்ற முறையீடு இவர் மீது உள்ளது. //

இது நிறுவப்படாத நிலையில் இதைக் கருத்தில் கொள்ள முடியாது.

எட்டாம் எண்ணிட்ட குற்றச்சாட்டு இரண்டாம் எண்ணுடன் சேர்த்தி. 9, 10 ஆகிய கண்ணியக்குறைபாடுகளைத் தனியாகப் பார்க்கையில் நிருவாக அணுக்கத்தை நீக்கும் அளவில் இல்லை எனத் தோன்றுகிறது. 11-ஆம் எண்ணிட்ட குற்றச்சாட்டில் அவரது நோக்கத்தைப் பற்றிய ஊகத்தின் அடிப்படையில் இவ்வளவு பெரிய நடவடிக்கை எடுக்கமுடியாது. ஊகத்தின் அடிப்படையில் பலரும் பலரைப்பற்றியும் தவறாக எண்ண நிறைய வாய்ப்புள்ளது. -- சுந்தர் \பேச்சு 05:45, 18 பெப்ரவரி 2014 (UTC)

சுந்தர் , தடித்த வார்த்தைகளைப் பயன்படுத்தாமைக்கு உறுதியளிக்குமாறு ஐவர் குழு பரிந்துரைத்திருந்தது. இப்பரிந்துரையை இவர் இன்னும் ஏற்கவில்லை. உன் என்ற ஒருமை விளிப்பை இங்கு பயன்படுதியுள்ளார். உடன் பங்களிக்கும் பயனரை முட்டாள் என்று இங்கு விளித்துள்ளார் (தொகுப்புச் சுருக்கம் பார்க்கவும்).

கட்டுரைப் பக்கத்தில் கொள்கை மீறலுக்கு, பின்வரும் இணைப்புகளைப் பார்க்கவும்:

//அக்கட்டுரையில் விக்கிப்பீடியாபற்றி தரக்குறைவாக எதுவும் எழுதியிருக்கிறாரா?//

விக்கிப்பீடியா பற்றிய பிழையான தகவலுக்கு மறுப்பு தெரிவித்து எழுதவில்லை. (அல்லது எழுதி பதிப்பிக்கவில்லை என்றால், அப்படி ஒரு விளக்கத்தையேனும் தமிழ்விக்கிப்பீடியாவில் இது வரை தெரிவிக்கவில்லை). ஆனால், அதனைத் தொடர்ந்து அன்சைக்ளோபீடியா பற்றி எழுத இயல்கிறது என்றால் ஊடக அரசியல் புரிபவர்களுக்கு இதில் உள்ள நையாண்டி புரியும். இல்லை, இதுவும் ஊகம் என்றால் விட்டுவிடலாம். இங்கு அவர் விக்கிப்பீடியாவை நையாண்டி செய்கிறாரா என்பதைத் தாண்டி, அதே இதழில் தொடர்ந்து இயங்குகிற ஒருவர், ஏன் தமிழ் விக்கிப்பீடியர்களின் வேண்டுகோளுக்குச் செவி சாய்க்க மறுக்கிறார்? இதுவும் ஒரு வகை ஒத்துழையாமையே.

//இது நிறுவப்படாத நிலையில் இதைக் கருத்தில் கொள்ள முடியாது.//

நிறுவப்படவில்லை என்பது வேறு. இது தொடர்பான விசாரணையைத் தொடங்கக் கூட யாரும் முன்வரவில்லை என்பது வேறு. இவர் மீது சமூக முறையீட்டுக் கூடத்தில் வைத்த இரண்டு முறையீடுகளும் அப்படியே உள்ளன. எனவே, இப்படி ஒரு முறையீடு பதியப்பட்டுள்ளது என்று குறிப்பிடுவது அவசியமாகிறது.--இரவி (பேச்சு) 21:41, 21 பெப்ரவரி 2014 (UTC)

இணைப்புகளுக்கு நன்றி, இரவி. தேனி சுப்பிரமணி ஒருமையில் விளித்ததும் முட்டாள் என்றதும் கடுமையான தவறு. அதற்கு வருத்தம் எதுவும் தெரிவிக்காதநிலையில் இந்த முன்மொழிவில் கட்டாயம் அதைக் கருத்தில் கொள்ளவேண்டும். வணிக வெளியிணைப்பு தந்தது தவறு, சுட்டிக்காட்டியபின்னும் தொடர்ந்து செய்திருந்தால் அதையும் கருத்தில் கொள்ளலாம்.
// ஊடக அரசியல் புரிபவர்களுக்கு இதில் உள்ள நையாண்டி புரியும். //
தமிழ் விக்கிப்பீடியாவில் நுழைந்துள்ள நையாண்டிப் பண்பாட்டைப்பற்றி நான் பல இடங்களில் கவலை தெரிவித்துள்ளேன் இரவி. எனக்குத்துளிகூட ஏற்பில்லாதது அது. நகைச்சுவையுணர்வு நல்லதுதான், இறுக்கத்தையும் குறைக்கும். ஆனால், நையாண்டி என்பது ஒருவருக்கொருவர் வைத்திருக்கும் (வைத்திருக்க வேண்டிய) மதிப்புணர்வைக் காற்றில் விடுவது. இதைத்தெளிவாக வரையறுத்து கொள்கை ஒன்றை எழுதவேண்டும். இந்தக்குற்றச்சாட்டுக்குத் தொடர்பில்லாவிட்டாலும் இதே போக்கைப்பற்றியது என்பதால் குறிப்பிடுகிறேன்: அண்மையில் பல பயனர்கள் நையாண்டி என்ற பெயரில் மிகவும் தரக்குறைவாக நடந்து கொண்டது எனது பத்தாண்டுகால விக்கிவாழ்வில் மிகுந்த வலியேற்றியுள்ளது. :( (இதை வெறுஞ்சொல்லுக்குச் சொல்லவில்லை.) அதில் மிகப்பெரிய ஏமாற்றம் உங்களுடைய நிலைத்தகவல்களும் சில விக்கிப்பதிவுகளும்தான். அதற்கு நீங்கள் இன்னும் வருத்தம் தெரிவிக்கவில்லை என்பதை மீண்டும் நினைவூட்டுகிறேன். அன்சைக்குளோப்பீடியா கட்டுரை நையாண்டி செய்யும் நோக்கில் எழுதியது என்ற உங்கள் ஊகத்தை ஏற்றுக்கொண்டாலும் (நம்பமுடியாத ஊகமில்லைதான்) அதிலுள்ள நயம்கூட உங்கள் கீழ்த்தரமான நிலைத்தகவல்களில் இல்லை. (உடனடியாக அவரவர் நயவுணர்வையும் எழுத்துத்திறமையையும் நாம் காட்டத் தொடங்க வேண்டும் எனக்கூறவில்லை, யாரும் அப்படிக் கிளம்பிவிட வேண்டாம். :) வெளிப்படையான கோபமொழிகள் நயமான நையாண்டியைவிட மேல்தான்.) அதையும்காட்டிலும் வேறு பயனர்கள் சிலர் எழுதியிருந்தாலும் உங்களிடம் இருந்த (எனது தனிப்பட்ட) எதிர்பார்ப்பு அவர்களைக்காட்டிலும் பல மடங்கானது. நிற்க. மற்றபடி தொடர்ந்து அந்த இதழில் எழுதிவரும்போதும் மறுப்பை எழுதவில்லை என்ற குற்றச்சாட்டை ஏற்கிறேன். -- சுந்தர் \பேச்சு 05:55, 22 பெப்ரவரி 2014 (UTC)
  • சுந்தர் , உங்களிடம் ஏன் வருத்தம் தெரிவிக்கவில்லை என்றும், பல்வேறு இடங்களில் உங்களுக்குத் தர வேண்டிய மறுமொழிகள் குறித்தும் தற்போது நடைபெறும் வாக்கெடுப்பு முடிந்த பின் முறையாக விளக்குகிறேன். எனக்கும் உங்களிடம் சில கேள்விகள் உள்ளன. என்னுடைய செயற்பாடுகளில் நிறைவு இல்லையென்றால் நடவடிக்கை கோருங்கள். நான் முழு ஒத்துழைப்பு தருகிறேன். அதை விட்டு விட்டு, இங்கு நடைபெறும் உரையாடலைத் திசை திருப்ப வேண்டாம்.
  • முகநூலில் விக்கிப்பீடியாவைப் பற்றிய எந்த ஒரு குறிப்பும் இல்லாமல் நான் போட்ட நிலைத்தகவலுக்கு நான் ஏன் விக்கிப்பீடியாவில் பதில் அளிக்கக் கடமைப்பட்டுள்ளேன்? இது என் அந்தரங்க உரிமையில் தலையிடுவதாக உள்ளது. இதைக் கீழ்த்தரமானது என்று வேறு குறிப்பிடுவதை வன்மையாக கண்டிக்கிறேன். தற்போது நடக்கும் வாக்கெடுப்பு முடிந்த பிறகு, இது தொடர்பான கொள்கை முன்மொழிவைக் கொண்டு வருவேன்.
  • இந்த வாக்கெடுப்பு தொடர்புடையது என்று பொத்தாம் பொதுவாக நீங்கள் சில கருத்துகளைக் குறிப்பிடுவதால், நான் குறிப்பாக உங்களிடம் இருந்து ஒரு தகவலை எதிர்பார்க்கிறேன். அக்டோபர் 11, 2013 அன்று 8.15 PM மணிக்கு செல்வா, நற்கீரன், எனக்கு நீங்கள் எழுதிய மடலினை இங்கு இட முடியுமா? அதில் உள்ள தகவலை நிறுவ தங்களிடம் ஆதாரம் இல்லை என்றால் தாராளமாக அதனைக் குறிப்பிட்டே இடலாம். ஏற்கனவே, தாங்கள் எழுதிய எந்த ஒரு மடலையும் பொதுவில் இட முடியும் என்று குறிப்பிட்டிருந்தீர்கள். நானும் அவ்வாறு முன்வைக்க சம்மதமே. நன்றி.--இரவி (பேச்சு) 06:59, 22 பெப்ரவரி 2014 (UTC)
// சுந்தர் , உங்களிடம் ஏன் வருத்தம் தெரிவிக்கவில்லை என்றும், பல்வேறு இடங்களில் உங்களுக்குத் தர வேண்டிய மறுமொழிகள் குறித்தும் தற்போது நடைபெறும் வாக்கெடுப்பு முடிந்த பின் முறையாக விளக்குகிறேன். // விளக்கத்துக்குக் காத்திருக்கிறேன்.
// எனக்கும் உங்களிடம் சில கேள்விகள் உள்ளன. என்னுடைய செயற்பாடுகளில் நிறைவு இல்லையென்றால் நடவடிக்கை கோருங்கள். நான் முழு ஒத்துழைப்பு தருகிறேன். அதை விட்டு விட்டு, இங்கு நடைபெறும் உரையாடலைத் திசை திருப்ப வேண்டாம். //
நையாண்டி குறித்து கொள்கை இல்லாத நிலையில் என்ன நடவடிக்கை கோருவது. தவிர, எதற்கெடுத்தாலும் நடவடிக்கை எடுத்துத்தான் ஒத்துழைப்பைப்பெற வேண்டும் என்ற நிலையில் விக்கியில் பங்களிக்க வேண்டிய தேவை எனக்கோ எந்தவொரு பயனருக்குமோ இல்லை. இந்த அயர்ச்சியில்தான் அவ்வப்போது நேரம் கிடைத்தாலும் இங்கு வரமுடியவில்லை. வந்து விருப்பமான தலைப்பில் கட்டுரை எழுத விரும்பினால், அந்த உரையாடலுக்கு இந்தத் தேதியில் பங்களித்த நீங்கள் இந்தத் தேதியில் இதைப்பற்றி கட்டுரை எழுதமுடிந்த சுந்தர் ஏன் இன்னும் இவரைப்பற்றிய கொள்கை முடிவில் கருத்திடவில்லை என்று யாரும் கேட்டுவிடுவார்களோ என்ற அஞ்சும் நிலை உள்ளது. இப்போதுகூட ஒருவரும் எட்டிப்பார்த்துக் கருத்திடாத இந்த முன்மொழிவில் எனக்குச் சரியென்று பட்டதின் அடிப்படையில் கருத்திட்டது நான் மட்டும்தான். இந்த அச்சுறுத்தல் நிலையைப் புரிந்து கொள்ளாமல் ஏன் சமுதாய முறையீட்டுக்கூடத்தைக் கலைக்கக் கூடாது என்ற உங்கள் கேள்விக்கு விடை கிடைக்காது இரவி. மற்றபடி உங்களுக்கு என்னிடம் ஏதாவது கேள்விகள் இருந்தால் என் பேச்சுப்பக்கத்தில் கேளுங்கள்.
// ::* முகநூலில் விக்கிப்பீடியாவைப் பற்றிய எந்த ஒரு குறிப்பும் இல்லாமல் நான் போட்ட நிலைத்தகவலுக்கு நான் ஏன் விக்கிப்பீடியாவில் பதில் அளிக்கக் கடமைப்பட்டுள்ளேன்? இது என் அந்தரங்க உரிமையில் தலையிடுவதாக உள்ளது. இதைக் கீழ்த்தரமானது என்று வேறு குறிப்பிடுவதை வன்மையாக கண்டிக்கிறேன். தற்போது நடக்கும் வாக்கெடுப்பு முடிந்த பிறகு, இது தொடர்பான கொள்கை முன்மொழிவைக் கொண்டு வருவேன். //
இப்போது உங்கள் ஊகம், பொது அறிவு, நையாண்டி, எங்கு வேண்டுமானாலும் கூறியதை விளக்க முடியும் பற்றிய கருத்துக்களை மாற்றிக் கொண்டுவிட்டீர்களா, இரவி? நான் என்றுமே மேலோட்டமான ஊகத்தின் அடிப்படையில் எந்த முடிவுக்கும் வருவதில்லை, ஏதும் சந்தேகம் இருந்தாலும் நேரடியாகக் கேட்க முடிந்தால் கேட்டுவிடுவேன். நான் தனிமடலில் கேட்டபோதே அதற்கும் விக்கிக்கும் தொடர்பில்லை சுந்தர் என்று ஒற்றை வரியில் சொல்லியிருந்தால் நான் ஏன் அதைக் கேட்டிருப்பேன் என எண்ணிப்பாருங்கள். (அந்த நிலைத்தகவல் பொதுப்பார்வையில் இருந்ததால்தான் அதைப் பகிர்ந்தேன், நண்பர்களுக்கு மட்டும் என்றிருந்தால் உங்கள் அந்தரங்கத் தகவலை உங்கள் அனுமதியில்லாமல் பொதுவில் இட்டிருக்க மாட்டேன்.) அந்த நிலைத்தகவல் என் கருத்தில் கீழ்த்தரமானதுதான், தவறென்றால் நிறுவுங்கள் திருத்திக் கொள்கிறேன். மன்னிப்பும் கேட்கிறேன். மேல்நடவடிக்கை எடுக்க வேண்டுமானாலும் எடுங்கள்.
// அக்டோபர் 11, 2013 அன்று 8.15 PM மணிக்கு செல்வா, நற்கீரன், எனக்கு நீங்கள் எழுதிய மடலினை இங்கு இட முடியுமா? அதில் உள்ள தகவலை நிறுவ தங்களிடம் ஆதாரம் இல்லை என்றால் தாராளமாக அதனைக் குறிப்பிட்டே இடலாம். //
அந்த மடலின் subject போன்ற மேலதிகத் தகவலோ ஏதும் குறிச்சொல்லோ இருந்தால் தாருங்கள், தேடி எடுத்துப் போடுகிறேன். -- சுந்தர் \பேச்சு 07:31, 22 பெப்ரவரி 2014 (UTC)

// எதற்கெடுத்தாலும் நடவடிக்கை எடுத்துத்தான் ஒத்துழைப்பைப்பெற வேண்டும் என்ற நிலையில் விக்கியில் பங்களிக்க வேண்டிய தேவை எனக்கோ எந்தவொரு பயனருக்குமோ இல்லை. இந்த அயர்ச்சியில்தான் அவ்வப்போது நேரம் கிடைத்தாலும் இங்கு வரமுடியவில்லை.//

கட்டுரைப் பெயர்வெளியில் உள்ள மூன்று முக்கியமான கொள்கை மீறல்களைச் சுட்டிக் காட்டினால் கூட துணிந்த நடவடிக்கை எடுக்க இங்கு ஒரு பயனரும் இல்லை. நிருவாகியும் இல்லை. இந்த அளவுக்கு சாய்வு உள்ள ஒரு சமூகத்தில் ஏன் தொடர்ந்து பங்களிக்க வேண்டும் என்று எனக்கு கூட அயர்ச்சியாகத் தான் இருக்கிறது.

//அந்த உரையாடலுக்கு இந்தத் தேதியில் பங்களித்த நீங்கள் இந்தத் தேதியில் இதைப்பற்றி கட்டுரை எழுதமுடிந்த சுந்தர் ஏன் இன்னும் இவரைப்பற்றிய கொள்கை முடிவில் கருத்திடவில்லை என்று யாரும் கேட்டுவிடுவார்களோ என்ற அஞ்சும் நிலை உள்ளது.//

சுந்தர், எடுத்த செயலை இறுதி வரை நின்று முடிக்கும் துணிவும் நேர்மையும் இல்லாவிட்டால் எதற்குப் பிணக்குத் தீர்வு, சமூக முறையீட்டுக் கூடம், ஐவர் குழு என்று சுற்றியடித்துப் பயனர்களின் நேரத்தை வீணாக்குகிறீர்கள்? யாராவது ஒருவர் நியாயமாக செயற்படுவார் என்ற நம்பிக்கையில் தானே நீங்கள் வகுக்கிற கொள்கைளைப் பின்பற்றி அமைதி காக்கிறோம். என்ன வேண்டுமானாலும் முறையீடு செய்து கொள்ளுங்கள், இங்கு நடவடிக்கை எடுக்க யாரும் வர மாட்டார்கள் என்பது என்ன மாதிரியான சமூகம்? விக்கியில் ஒருவர் தான் எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என்றில்லை, ஒருவர் எடுத்த பணியை அடுத்தவர் தொடரலாம் என்று சொல்ல வேண்டாம். இப்பிரச்சினையில் எனக்குத் தொடர்பிருந்தாலும் வேறு வழியில்லாமல் நானே கொள்கை முன்மொழிந்து இந்த வாக்கெடுப்பு நடைமுறை முன்னெடுக்க வேண்டிய நிலையில் தான் தமிழ் விக்கிப்பீடியாவின் நடுநிலைத் தன்மையும் கொள்கைச் செயற்பாடுகளும் இருக்கிறது.

//இப்போது உங்கள் ஊகம், பொது அறிவு, நையாண்டி, எங்கு வேண்டுமானாலும் கூறியதை விளக்க முடியும், மடியில் கனமில்லை பற்றிய கருத்துக்களை மாற்றிக் கொண்டுவிட்டீர்களா, இரவி?//

மாற்றம் இல்லை. உங்களின் அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் தருவேன். ஆனால், இதே நிலை வருங்காலத்தில் யாருக்கும் வரக்கூடாது. அதன் தொடர்பாகவே கொள்கை முன்மொழிவு. "விக்கிப்பீடியாவில் எழுதப் போனால் நீ வேற எங்க என்ன எழுதினாலும் கேள்வி கேட்பாங்கடா" என்ற நிலை இருப்பது உவப்பானது அன்று.

//நான் என்றுமே மேலோட்டமான ஊகத்தின் அடிப்படையில் எந்த முடிவுக்கும் வருவதில்லை, ஏதும் சந்தேகம் இருந்தாலும் நேரடியாகக் கேட்க முடிந்தால் கேட்டுவிடுவேன்.//

நல்லது, தேனி சுப்பிரமணி பற்றி நீங்கள் எழுதிய மடற் கருத்துக்கும் இது பொருந்தும் என்று நம்புகிறேன்.

//அந்த நிலைத்தகவல் பொதுப்பார்வையில் இருந்ததால்தான் அதைப் பகிர்ந்தேன், நண்பர்களுக்கு மட்டும் என்றிருந்தால் உங்கள் அந்தரங்கத் தகவலை உங்கள் அனுமதியில்லாமல் பொதுவில் இட்டிருக்க மாட்டேன்.//

விக்கிப்பீடியாவில் இயங்குபவர்களுக்கு வேறு களங்களில் பேசுவதற்கான, எழுதுவதற்கான உரிமை இருக்கிறதா இல்லையா? அதற்கு ஏன் ஒருவர் இங்கு விளக்கம் கொடுக்க வேண்டும்? (என்னுடைய நிலைத்தகவலுக்கு நான் பதில் தருகிறேன் என்று ஏற்கனவே சொல்லி விட்டேன்)..

//அந்த நிலைத்தகவல் என் கருத்தில் கீழ்த்தரமானதுதான், தவறென்றால் நிறுவுங்கள் திருத்திக் கொள்கிறேன். மன்னிப்பும் கேட்கிறேன். மேல்நடவடிக்கை எடுக்க வேண்டுமானாலும் எடுங்கள்.//

Sweet எடு கொண்டாடு என்று ஒரு விளம்பரப்படத்துக்கான இணைப்பை மட்டும் பகிர்ந்திருந்தேன். இதில் என்ன கீழ்த்தரம் இருக்கிறது? இதற்கு ஏன் நான் விளக்கம் அளிக்க வேண்டும்? ஏன், அன்று என் தனிப்பட்ட வாழ்வில் ஏதும் நல்லது நடந்திருந்தால் கூட அதை நான் இங்கு விளக்கிக் கொண்டிருக்க வேண்டும். இப்படி பிற இடங்களில் எழுதும் விசயங்களுக்கு இங்கு விளக்கம் கேட்டுக் கொண்டிருப்பது தவறான போக்கு.

குறிப்பிட்ட மடலின் subject: Theni

"மிகவும் அசிங்கமாகப் போய்க்கொண்டிருக்கிறது. " என்று தொடங்கும் மடல். --இரவி (பேச்சு) 07:58, 22 பெப்ரவரி 2014 (UTC)

நான் கீழ்த்தரமானது எனக்குறிப்பிட்ட நிலைத்தகவல்:

"Ravishankar Ayyakkannu மாட்டாமல் திருடுவாரே திருடர் மற்றெல்லாம் தரும அடி வாங்குவார் - டுபாக்குறள் 1.

http://www.youtube.com/watch?v=UKFBWQbN25U"

நீங்கள் குறிப்பிட்ட மடலைத் தேடியெடுத்துப் பதிகிறேன். -- சுந்தர் \பேச்சு 08:04, 22 பெப்ரவரி 2014 (UTC)

இரவி, நீங்கள் கேட்ட மடலின் உரை கீழே (|நற்கீரன், மடலின் சூழலைக்கருதி அதற்குமுன் நீங்கள் அனுப்பிய உரையையும் சேர்த்து பதிந்துள்ளேன். உங்களிடம் முன் அனுமதி பெற இயலாமைக்கு வருந்துகிறேன்.). ஆம், அங்கு நான் குறிப்பிட்ட தனியாகப் பேசிய நிகழ்வை நிறுவ சான்று இல்லாதபடியாலும், பல ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த அவ்வுரையாடலின் தொனி மட்டுமே எனக்கு நினைவில் இருந்தபடியாலும் அதைவைத்து என்னால் எந்த நடவடிக்கையும் எடுக்கமுடியவில்லை. அவ்வளவு இருந்தும் என்னுடைய எச்சரிக்கையுணர்வையும் ஒதுக்கிவைத்துவிட்டு இரவி இன்னலுறுவதைக் கண்டு வருந்தி இந்தக் கருத்தில் பொதுவில், விக்கியிலேயேகூட அதை மெலிதாகக் கோடிட்டுக் காட்டியுள்ளேன். அதை நீங்கள் படித்துப் பார்க்கும் மனநிலையில் இருந்தீர்களா தெரியாது இரவி. :(


சுந்தர், மடல் விவரங்களைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

Sweet எடு கொண்டாடு விளம்பரத்தையும் சேர்த்து தான் என் பேச்சுப் பக்கத்தில் விளக்கம் கேட்டிருந்தீர்கள். இந்த டுபாக்குறள் நிலைத்தகவலில் என்ன கீழ்த்தரம் இருக்கிறது என்று தெரியவில்லை. In a closed society where everybody's guilty, the only crime is getting caught. In a world of thieves, the only final sin is stupidity. என்று ஏற்கனவே உள்ள மேற்கோளைத் தான் தமிழில் எழுதிப் பார்த்தேன்.

தேனி சுப்பிரமணி மீதான உரையாடலில் இருந்து விலக வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். என் மீதான உரையாடலைப் பிறகு தொடர்வோம்.

உங்கள் மடலில் இருந்து ஒரு பகுதியை எடுத்துக் காட்டுவதுடன் இந்த வாக்கெடுப்பு தொடர்பான என் உரையாடலை முடிக்க விரும்புகிறேன். நன்றி.

தேனி சுப்பிரமணி தனியாகப் பேசும்போது வெளிப்படையாகவே எவ்வித குற்றவுணர்வுமின்றி விக்கியை வைத்து நீங்களும் பிழைக்க மாட்டேன் என்கிறீர்கள் மற்றவர்களையாவது அரசு சலுகைகளை அனுபவிக்க விடக்கூடாதா என்ற தொனியில் கூறியிருக்கிறார்.--இரவி (பேச்சு) 08:27, 22 பெப்ரவரி 2014 (UTC)

அதைத்தான் வேண்டிய அளவுக்கு இந்தப்பதிவில் ஏற்கனவே சொல்லியிருக்கிறேனே? அதிலிருந்தே மேற்கோள் காட்டியிருக்கலாம். எப்படியோ இப்போதாவது உங்களுக்கு நிறைவென்றால் சரி. -- சுந்தர் \பேச்சு 08:32, 22 பெப்ரவரி 2014 (UTC)
தென்காசி சுப்பிரமணியன்[தொகு]

இந்த சிக்கல் தொடர்பான உரையாடல் தொடங்கிய ஆரம்பத்தில் எனக்கு தேனியாரின் நிர்வாக அணுக்கம் நீக்கப்படுவதில் விருப்பமில்லை. இருந்தாலும் அவரின் தொடர் செயல்கள் மூலம் அதை விரும்பவைத்துவிட்டார். பின்வரும் காரணங்களுக்காக அவரின் நிர்வாக அணுக்கத்தை நீக்க வேண்டுகிறேன். என்னைப் பொறுத்தவரை மறுமொழி அழிக்காதததால் இந்த வாக்கெடுப்பு கூட தேவையில்லை என நினைக்கிறேன்.

  1. தேனியாரின் தொடர் ஒத்துழையாமை.
  2. முதற்பக்கக் கட்டுரை இற்றைப்பட்டுத்தல் தொடர்பான அவர் கருத்தை தவறு என விக்கியில் உள்ள தரவுகள் படிக் காட்டியும் திரும்பப் பெறாமை. (விக்கியில் கூட)
  3. சிலரின் கேள்விகளுக்கு மட்டும் பதிலளித்துவிட்டு மற்றவர் கேட்ட பதில் சொல்ல வேண்டிய நியாயமான கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் இருப்பது. # சரியாக அவரின் தவறு வெளிவருகிற மாதிரி கேள்வி கேட்டவுடன் அதுவரைக்கும் அவர் பேச்சுப் பக்கத்தில் பேசிக்கொண்டிருந்துவிட்டு அதன்பிறகு உரையாடலை தொடராமை.
  4. கட்டுரைப் பக்கங்களில் கொள்கை மீறல் தொகுப்புகளைச் சுட்டிக் காட்டியும் அவற்றைத் திருத்திக் கொள்ள முன்வராமை. (தன்வரலாறு தொகுத்தல், தன் வலைதளத்தின் வெளியிணைப்புகள் சேர்த்தல்)
  5. தமிழ் விக்கிப்பீடியா பற்றி உண்மைக்குப் புறம்பான தகவலை அச்சு இதழ் ஒன்றில் பரப்புதல். அதற்கு மறுப்பு வெளியிடுமாறு கோரினாலும் ஏற்றுக் கொள்ளாமை.
  6. தமிழ் விக்கிப்பீடியா தொடர்பாக அரசியல் கட்சி/அதிகாரங்களுடன் வெளிப்படை இல்லாமல் உரையாடியது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:20, 22 பெப்ரவரி 2014 (UTC)
குறும்பன்[தொகு]

எனக்கு தென்காசியாரின் கருத்தை போன்றே என் கருத்தும் உள்ளதால் நான் நிறைய எழுதவில்லை. அவற்றில் சிலவற்றை மட்டும் எழுதுகிறேன்.

  • தேனியாரின் குற்றச்சாட்டுக்கு தென்காசியார் பதில் கொடுத்தும் அதற்கு தேனியார் பதில் அளிக்கவில்லை
  • நிருவாகியே அச்சு இதழில் உண்மைக்கு மாறாக எழுதுவது மிக தவறான முன்செய்கை. அவர் சொன்னது தவறு என்று எடுத்துச்சொல்லியும் மறுப்பு போடாமை அதை விக்கியிலும் ஒத்துக்கொள்ளாமல் உரையாடலை நிறுத்தியது. விக்கியில் தவறு என்று தெரிந்தால் அதை முன்பே விக்கியில் சொல்லியிருக்கலாமே?
  • சிலருக்கு மட்டும் பதில்
  • தொடர் ஒத்துழையாமை

--குறும்பன் (பேச்சு) 14:14, 22 பெப்ரவரி 2014 (UTC)

கனக சிறீதரன்[தொகு]

(உரையாடல் காலம் முடிந்த பிறகு நடந்த இவ்வுரையாடல், வாக்கெடுப்புக்கு முந்தைய உரையாடல் தொகுப்பில் இடம்பெறவில்லை) ஒரு பயனரின் நிர்வாக நீக்கம் தொடர்பாக இராசன் போன்ற பயனர்கள் முறையீடு செய்ய முடியாது என்று ஏற்கனவே நாம் உரையாடியுள்ளோம். எனவே அவரது (நிருவாக அணுக்கம் தொடர்பான) முறையீடுகள் உடனடியாகவே நீக்கப்பட்டிருக்க வேண்டியவை. மேலும், முறையீடு செய்யப்பட்ட பின்னர் இது குறித்த கொள்கை வகுக்கப்பட்ட படியால் மேற்படி அன்ரனின் முறையீடு புதிய கொள்கைக்கு பொருந்தாது. எனவே இம்முறையீடு செல்லாது என அறிவித்து தேனி சுப்பிரமணியின் நிருவாக அணுக்கம் நீடிக்க வேண்டுகிறேன்.--Kanags \உரையாடுக 08:26, 26 பெப்ரவரி 2014 (UTC)

1) மீண்டும் என்னால் முறையிட முடியும். 2) தேனியாரின் தொடர் ஒத்துழையாமைக்கு என்ன தீர்வு. 3) ஏற்கெனவே உள்ள குற்றச்சாட்டுகளுக்கு யார் பதில் சொல்வது? 4) 02 மார்ச்சு, 2014 வரை ஏன் நிருவாக அணுக்கத்தை நீக்க வேண்டும் என்பதை தொகுத்து எழுதுவதற்கான காலமே. தேனி பதில் சொல்வதற்கும், பயனர் கருத்திடுவதற்குமாக காலம் என இரு முறைகளைத் தாண்டியபடியால், முதலிருந்து கருத்திடத் தேவையில்லை (தேவைப்பட்டால் பேச்சுப்பக்கத்தில் கருத்திடவும்). எனவே, இதனைக் கருத்திற்கொள்ளத் தேவையில்லை. --AntonTalk 10:06, 26 பெப்ரவரி 2014 (UTC)
இது அடாவடித்தனம். உரையாடல் பகுதி மூடப்பட்டுள்ளதாகத் தெரியவில்லை. தவிர்க்கச் சொல்லித் தான் சொல்லப்பட்டுள்ளது. மேலும், இது நிருவாக அணுக்க நீக்கம் தொடர்பானது மட்டுமே. அதனால் கொள்கை வகுக்க முன்னர் இடம்பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் இங்கு கவனத்தில் எடுக்கப்பட வேண்டியதில்லை. எனவே தேனியின் நிருவாக அணுக்க நீக்கம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க முடியாது என அறிவிக்க வேண்டுகிறேன்.--Kanags \உரையாடுக 10:22, 26 பெப்ரவரி 2014 (UTC)
தேனியாரின் தொடர் ஒத்துழையாமைக்கும், ஏற்கெனவே உள்ள குற்றச்சாட்டுகளுக்கு யார் பதில் சொல்வது? --AntonTalk 10:39, 26 பெப்ரவரி 2014 (UTC)

எது அடாவடித்தனம்?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:25, 26 பெப்ரவரி 2014 (UTC)

முறையற்ற வாதமும் அடாவடித்தனத்துள் வரும்:). அன்ரன், தேனியாரின் தொடர் ஒத்துழையாமையும் நீங்கள் வைக்கும் குற்றச்சாட்டுகளும் இப்பக்கத்தில் விவாதித்து முடிவெடுக்க முடியாது என்பதைத் தான் நான் கூறினேன். நிருவாக அணுக்க நீக்கம் செல்லுபடியாகாது.--Kanags \உரையாடுக 12:17, 26 பெப்ரவரி 2014 (UTC)

சிறீதரன், ஐவர் குழுவின் பரிந்துரையை ஏற்று தேனி சுப்பிரமணி செயற்படாவிட்டால் நிருவாக அணுக்க நீக்கம் தொடர்பான நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என்று ஐவர் குழு கூறியது. அவ்வாறு நடவடிக்கை எடுக்க கொள்கை ஏதும் இல்லை என்பதாலேயே இது தொடர்பான கொள்கை முற்றிலும் திறந்த முறையில் போதிய காலம் கொடுத்து அனைவரின் கருத்துகளையும் உள்வாங்கி உருவாக்கப்பட்டது. கொள்கை உருவாவதற்கு முன் அன்டன் முன்வைத்த முறையீட்டுக்கு இக்கொள்கை பொருந்தாது என்பது முடிவுறாத கோழி-முட்டை சிக்கலுக்கே இட்டுச் செல்லும். பிரச்சினை -> கொள்கை - > அதன் அடிப்படையில் தீர்வு என்பதற்கு தமிழ் விக்கிப்பீடியாவில் எண்ணற்ற முற்காட்டுகள் உள்ளன. தற்போது வாக்கெடுப்பின் மீது கருத்து சொல்லி உரையாடும் காலம் முடிந்துவிட்டது. எனவே, உங்கள் கருத்துகளை வாக்கிடும்போது உங்கள் தனிப்பட்ட கருத்தாக பதிவு செய்யலாம். ஒரு வேளை, இந்த முறையீடு பிணக்குத் தீர்வாயத்துக்குச் சென்றால் அவர்கள் உங்கள் கருத்துகளைக் கணக்கில் எடுப்பர். நன்றி.--இரவி (பேச்சு) 14:32, 26 பெப்ரவரி 2014 (UTC)

எனில் கனகசிறீதர நிகண்டின் உரைப்படி அவரின் வாதம் அடாவடித்தனம் ஆகும். ஒரு தீர்வை எட்டிவிட்ட போது அந்த முறைப்படி ஒரு தவறானத் தகவலை குறிப்பிட்ட காலம் கொடுத்தும் திரும்பிப் பெறவில்லை. திரும்பிப் பெறாத காலம் தீர்வை எட்டிய பிறகே நடந்திருக்கிறது. அதனால் அடாவடி கனக சிறீதரன் அடாதவடி கனக சிறீதரனாக மாறும் படிக் கேட்டுக் கொள்கிறேன். முக்காற்புள்ளி அடைப்புக்குறி --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:33, 26 பெப்ரவரி 2014 (UTC)

நன்றி நக்கல் தென்காசியாரே. இரவி, இத்தீர்ப்பாயம் இங்கு பொருந்தாது என்பதே எனது வாதம். குற்றச்சாட்டு வைத்த பின்னர், அதனைத் தீர்க்கக் கொள்கை வகுக்கப்பட்டு, அதற்கேற்பத் தீர்ப்பு வழங்குவது என்பது ஒரு அடாவடித்தனம் என்பதையே இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன். இது முடிவுறாத கோழி-முட்டை சிக்கலுக்கு இட்டுச் சென்றாலும் பரவாயில்லை. கருத்துக் காலம் முடிந்து விட்டதாக நீங்கள் எங்கும் அறிவிக்கவில்லை.--Kanags \உரையாடுக 20:35, 26 பெப்ரவரி 2014 (UTC)

நான் செய்தது நக்கல் அல்ல சாய்ந்து எழுதும் கனக சிறீதரனாரே.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 18:02, 1 மார்ச் 2014 (UTC)

இதன் கீழுள்ள "பயனர் உரையாடல் தொகுப்பு" என்பதில் இச்சுருக்கத்தை எழுதும் காலத்தில் உரையாடல்கள் ஏதும் நிகழ்வதைத் தவிர்க்க வேண்டும். என்பதைக் கவனிக்கவும். மேலும், தேனியாரின் தொடர் ஒத்துழையாமைக்கும், ஏற்கெனவே உள்ள குற்றச்சாட்டுகளுக்கும் யார் பதில் சொல்வது? இதில் விக்கிச் சமூகத்தின் கருத்து என்ன?--AntonTalk 01:41, 27 பெப்ரவரி 2014 (UTC)

சிறீதரன், உரையாடலுக்கான காலம் 22 பிப்ரவரி, 2014 வரை என்று மேலே தெளிவாகத் தரப்பட்டுள்ளது. இந்த நடைமுறையின் ஒவ்வொரு படியும் தெளிவாக காலம் வகுக்கப்பட்டே செயற்படுத்தப்படுகிறது. இதற்கான காலம் கொள்கைப் பக்கத்தில் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. நிருவாக அணுக்கம் நீக்கல் குறித்த கொள்கை வழிமுறைகளைப் பற்றி பேசுகிறதே ஒழிய எந்தத் தீர்ப்பையும் வழங்கவில்லை. இந்த நடைமுறையின் தீர்ப்பு என்பது வழக்கம் போல் பயனர்கள் எப்படி வாக்களிக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே. எனவே, இதில் குறிப்பிட்ட ஒரு சிலர் அடாவடித்தனமாகச் செய்ய ஒன்றுமில்லை. கட்டுரைப் பக்கங்களில் நிகழ்ந்த கொள்கை மீறல்களுக்குக் கூட தக்க ஒத்துழைப்பைத் தருமாறு நீங்கள் ஏன் தேனி சுப்பிரமணியிடம் கோரி இருக்கக்கூடாது? இச்சிக்கல் இவ்வளவு தூரம் இழுபடுவதற்கு அவருடைய ஒத்துழையாமை ஒரு முக்கிய காரணம் என்பதை ஏற்கிறீர்களா? இந்த நிருவாக அணுக்க நீக்கல் முறையீட்டைக் கைவிடுவது என்றால் அவர் மேல் உள்ள குற்றச்சாட்டுகளுக்கு என்ன பதில்? தமிழ் விக்கிப்பீடியாவின் நலனைக் கருத்தில் கொண்டு குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கான பக்கங்களில் அவர் நிகழ்த்தியுள்ள கொள்கை மீறல்களைச் சீரமைக்க உதவலாமே?--இரவி (பேச்சு) 06:01, 27 பெப்ரவரி 2014 (UTC)

மாயவத்தான்[தொகு]

(உரையாடல் காலம் முடிந்த பிறகு நடந்த இவ்வுரையாடல், வாக்கெடுப்புக்கு முந்தைய உரையாடல் தொகுப்பில் இடம்பெறவில்லை)

பேசாமல் தமிழ் விக்கிப்பீடியாவையே ஊத்தி மூடிவிட பரிந்துரை செய்யலாம். நிலைமை அந்தளவுக்கு கீழ்த்தரமாகப் போய்க் கொண்டிருக்கிறது. இது என்ன அரசியல் கட்சியா?

எனக்கு எழும் கேள்விகளும், சந்தேகங்களும் :

//நூற்றுக் கணக்கான பக்கங்களில் கட்டுரைப் பக்கங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட கொள்கை மீறல்கள். சுட்டிக் காட்டியும் திருத்தி எழுத முன்வராமை//

அவர் திருத்தம் செய்ய முன் வராவிட்டால், குற்றம் சுமத்தியவரே திருத்தம் செய்யலாம். அல்லது தவறு என்று தெரிந்தால் யார் வேண்டுமானாலும் திருத்தம் செய்து கொள்ளலாமே. விக்கிப்பீடியாவிலிருக்கும் கட்டுரைகள் அனைத்தும் மாற்றங்களுக்குட்பட்டவைதானே? விக்கிப்பீடியாவின் மூல ஆதாரமே அதானே! எனவே குற்றம் சுமத்திய பயனரை நீக்கக் கோரிக்கை வைக்கலாமா?

//தமிழ் விக்கிப்பீடியா தொடர்பாக அரச நிறுவனங்களுடனான தொடர்பாடல் குறித்த வெளிப்படைத் தன்மையின்மை// - இது முழுக்க ஆதாரமற்ற புகார். ஆதாரமாக எதையும் குறிப்பிடவில்லை. இங்குள்ள உரையாடலில் ஏதோ சலுகை பற்றி அவர் தெரிவித்ததாகப் பொதுவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதை எப்போது, எங்கு தெரிவித்தார் என்பது பற்றியும் குறிப்பிடவில்லை.

இதையெல்லாம் விட, மத்திய, மாநில அரசுகள்தமிழ் விக்கிபீடியாவிற்கு எந்தச் சலுகையும் வழங்குகின்றனவா என்ன?

//தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உண்மைக்குப் புறம்பான செய்தியை மாத இதழ் ஒன்றில் எழுதுதல். அதன் தவறைச் சுட்டிக் காட்டி மறுப்பு வெளியிடக் கோரியும் எதிர்வினை ஆற்றாமை// - தமிழ் கம்ப்யூட்டர் இதழில் வெளியான செய்தி எதையும் இங்கு ஆதாரமாகக் காண்பிக்கவில்லை. மேலும் அந்தக் கட்டுரையின் தொடர்ச்சியாக என்ன வெளியானது என்பதை அறியாமல் முடிவு செய்வது சிரமம்.

//உடன் பங்களிக்கும் ஒருவரை ஒருமையிலும் முட்டாள் என்றும் விளித்தது. இது முறையற்றது என்று சுட்டிக்காட்டியும் வருத்தம் தெரிவிக்க மறுப்பது// -

உடன் பங்களிக்கும் ஒருவரை நடிகர் என்று சுட்டி தேனி சுப்பிரமணியின் பக்கத்தில் பதக்கம் அளித்ததை மறைத்து, அதற்கு தேனி சுப்பிரமணி முட்டாள் என்று குறிப்பிட்டதை மட்டும் குறிப்பிட்டுப் புகார் பெரிது படுத்தப்பட்டுள்ளது. அது மட்டும் சரியா? அப்படிப்பார்த்தால் முதலில் நீக்க வேண்டியது அந்த ‘நடிகர்’ பதக்கம் அளித்தவரை தான்! எனவே அவரை நீக்க பரிந்துரைப்போமா?

//பயனர்களின் வேண்டுகோளுக்கு மாறாக தனது பேச்சுப் பக்கத்தைப் பூட்டி வைத்துக் கொண்டது நிருவாக அணுக்கத்தை முறைகேடாகப் பயன்படுத்தியதாகும்//

பயனரின் உரையாடல் பக்கத்தில் சமபந்தமில்லாமல் ஒருவர் ’நடிகர்’ என பட்டம் கொடுத்து பதக்கம் கொடுத்த பின்பே அவர் அதை நீக்கி அவருக்கான பக்கத்தைப் பூட்டியிருக்கிறார். இதையெல்லாம் பெரிய குறை என்று சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதில்லை.

ஆக, என்னுடைய கருத்து என்னவென்றால், தமிழ் விக்கிப்பீடியாவில் பல கருத்து உள்ளவர்கள் நிருவாகத்தில் இருப்பது அவசியமே. இல்லையென்றால் ஒரு குழு மட்டும் இங்கே dominate செய்து எல்லாவற்றையும் தங்கள் விருப்பம் போல மாற்றியமைத்து தமிழ் விக்கிப்பீடியாவையே சீரழித்து விட வாய்ப்புகள் அதிகம். இந்த பிரச்னையில் குற்றம்சாட்டும் தரப்பு வேண்டுமென்றே குழு மனப்பான்மையோடு இணைந்து தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் ஒரு நிருவாகியை நீக்கக் கோரிக்கை வைப்பது சரியே அல்ல. அடுத்து அவர் தரப்பில் ஒரு குழுவைச் சேர்ந்து நீக்கக்கூடாது என்று பதிலுக்கு குரலெழுப்பினால் என்னவாகும்?

மொத்தத்தில் இப்படி ஒரு வாக்கெடுப்பே அவசியம் இல்லாதது! இதில் ஏற்படுத்தும் காலவிரயத்தை வேறு பயனுள்ள வகையில் செலவழிக்கலாம்.

எனவே தேனி சுப்பிரமணியின் நிருவாக அணுக்கத்தைத் தொடரச் செய்திட வேண்டுகிறேன்.

-மாயவரத்தான் (மாயவரத்தான்) 14:03, 03 மார்ச்சு 2014 (UTC)

மாயவரத்தான், உரையாடலுக்கான காலம் முடிந்துவிட்டதால் உங்கள் கருத்துக்கு பதில் அளிப்பதைத் தவிர்க்கிறேன். இப்பக்கத்தின் இறுதியில் வாக்கெடுப்பு நடக்கிறது. அங்கு நேரடியாக உங்கள் வாக்கை இடுவதுடன் கருத்தையும் தெரிவிக்கலாம். நன்றி.

கோபி[தொகு]

(உரையாடல் காலம் முடிந்த பிறகு நடந்த இவ்வுரையாடல், வாக்கெடுப்புக்கு முந்தைய உரையாடல் தொகுப்பில் இடம்பெறவில்லை)

பயனர் உரையாடலுக்கான காலம் முடிந்துவிட்டமை சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. மேலும் வாக்களிப்பில் தரப்படும் காரணங்கள் பற்றி உரையாடுவது சரியல்ல. ஆனால் இக்குறிப்பினைச் சொல்லியேயாக வேண்டும் என எண்ணுவதால் குறிப்பிடுகிறேன். மன்னிக்கவும். //பல ஆண்டுகளாக இடம்பெற்ற விடயங்களை ஒன்றாகக் குவித்து இங்கே குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவை எல்லாமே அந்தந்த நேரங்களில் குறித்த பயனரின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டு அவற்றைச் சரி செய்வதற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.// என்று கீழே மயூரநாதன் குறிப்பிடுகிறார். பயனர்கள் பிழை விடுகையில் சுட்டிக் காட்டிச் சரிசெய்யவே நிர்வாகிப் பொறுப்பு வழங்கப்படுகிறது. அவ்வாறிருக்கையில் பல ஆண்டுகளாகப் பிழைவிடும் ஒருவருக்கு நிர்வாக அணுக்கம் எதற்கு? நன்றி கோபி (பேச்சு) 03:37, 5 மார்ச் 2014 (UTC)

பயனர் உரையாடல் தொகுப்பு[தொகு]

மேற்கண்ட உரையாடலைத் தொகுத்து "ஏன் நிருவாக அணுக்கத்தை நீக்கக் கூடாது", "ஏன் நிருவாக அணுக்கத்தை நீக்க வேண்டும்" என்று இரு நோக்குகளிலும் கருத்துகள் தொகுத்து எழுத வேண்டும். இத்தொகுப்புச் சுருக்கத்தை கூட்டாக எழுதும் பொறுப்பை ஓரிருவர் முன்வந்து மேற்கொள்ளலாம். இச்சுருக்கத்தை எழுதும் காலத்தில் உரையாடல்கள் ஏதும் நிகழ்வதைத் தவிர்க்க வேண்டும். இந்த நடைமுறைக்கான கால எல்லை 02 மார்ச்சு, 2014 வரை.

ஏன் நிருவாக அணுக்கத்தை நீக்கக்கூடாது[தொகு]

இந்த அடிப்படையில் யாரும் உரையாடவில்லை என்பதால் தொகுத்து எழுதுவதற்கு ஒன்றும் இல்லை.

ஏன் நிருவாக அணுக்கத்தை நீக்க வேண்டும்[தொகு]
  1. நூற்றுக் கணக்கான பக்கங்களில் கட்டுரைப் பக்கங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட கொள்கை மீறல்கள். சுட்டிக் காட்டியும் திருத்தி எழுத முன்வராமை.
  2. நிருவாக அணுக்க நீக்கம் மற்றும் பல சிக்கல்கள் குறித்தான தமிழ் விக்கிப்பீடியர்களின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்காமை.
  3. தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உண்மைக்குப் புறம்பான செய்தியை மாத இதழ் ஒன்றில் எழுதுதல். அதன் தவறைச் சுட்டிக் காட்டி மறுப்பு வெளியிடக் கோரியும் எதிர்வினை ஆற்றாமை.
  4. தமிழ் விக்கிப்பீடியா தொடர்பாக அரச நிறுவனங்களுடனான தொடர்பாடல் குறித்த வெளிப்படைத் தன்மையின்மை.
  5. உடன் பங்களிக்கும் ஒருவரை ஒருமையிலும் முட்டாள் என்றும் விளித்தது. இது முறையற்றது என்று சுட்டிக்காட்டியும் வருத்தம் தெரிவிக்க மறுப்பது.
  6. பயனர்களின் வேண்டுகோளுக்கு மாறாக தனது பேச்சுப் பக்கத்தைப் பூட்டி வைத்துக் கொண்டது நிருவாக அணுக்கத்தை முறைகேடாகப் பயன்படுத்தியதாகும்.

பயனர் வாக்குகள் (12 / 6 / 9)[தொகு]

திசம்பர் 1, 2013க்கு முன்பு பயனர் கணக்கு பதிந்து 150+ தொகுப்புகள் கொண்டிருப்போரின் வாக்குகள் மட்டும் செல்லும். வாக்கிடும் அனைவரும் தாங்கள் ஏன் அவ்வாறு வாக்கிடுகிறோம் என்பதை விளக்கும் வகையில் குறைந்தது ஐந்து வரி அளவு கருத்திட வேண்டும். முடிவு பிணக்குத் தீர்ப்பாயத்துக்குச் செல்லும் நிலையில், வெறும் வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் இன்றி விக்கிச்சமூகத்தின் மனநிலை, கருத்து அறிந்து முடிவை அறிவிக்க இவ்வாறு கருத்திடுவது உதவும். முறையீட்டை எதிர்கொள்ளும் தேனி சுப்பிரமணியும் முறையீடுகளை முன்வைத்த அன்டன், இராசன் ஆகியோரும் வாக்கிட முடியாது. வாக்கெடுப்புக் காலம் முடிந்த பிறகு செல்கிற வாக்குகளைக் கணக்கெடுத்து இறுதி வாக்கு நிலவரம் இற்றைப்படுத்தப்படும். வாக்கிடும் காலத்தில் பயனர்களின் கருத்துக்கு எதிர் கருத்து இடுவது, உரையாடுவது ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். நன்றி. வாக்கெடுப்பு முடியும் காலம்: மார்ச்சு 10, 06:00 UTC

நிருவாக அணுக்கத்தை நீக்க வேண்டும்[தொகு]

1. நிருவாகியே அச்சு இதழில் உண்மைக்கு மாறாக எழுதுவது மிக தவறான முன்செய்கை. அவர் சொன்னது தவறு என்று எடுத்துச்சொல்லியும் மறுப்பு போடாமை அதை விக்கியிலும் ஒத்துக்கொள்ளாமல் உரையாடலை நிறுத்தியது ( முதற்பக்கக் கட்டுரை இற்றைப்பட்டுத்தல் தொடர்பான அவர் கருத்தை தவறு என விக்கியில் உள்ள தரவுகள் படிக் காட்டியும் திரும்பப் பெறாமை ). விக்கியில் தவறு என்று தெரிந்தால் நான்\யாரும் நீக்கலாம், ஆனால் இது குற்றச்சாட்டு எனவே அவர் நீக்குவது அல்லது மறுப்பு சொல்வது தான் முறை. அச்சு இதழில் வந்தது விக்கியில் போடப்பட்டுள்ளது. (ஆலமரத்தடியில் என்று நினைக்கிறேன்)

  • அச்சு இதழில் நான் மறுப்பு சொல்லலாம், நிருவாகியாக இருப்பவர் சொன்னதை குற்றமாக சொல்லுவது போல இருக்கும் (நான் சொல்லுவது தவறாகும், இது பல வகைகளில் தவறாக புரிந்து கொள்ளப்பட வாய்ப்பு உண்டு). மேலும் அச்சு இதழில் எல்லோருக்கும் வாய்ப்பு கொடுப்பார்களா?? (எனக்கு தெரிந்து இல்லை, கொடுப்பார்கள் என்றால் எந்த இதழில்?) முகநூல், வலைப்பதிவு, டிவிட்டர் போன்றவற்றில் என்றால் சொல்லலாம் ஆனால் இது நிருவாகியை தவறாக சொல்வது போல் ஆகும், அதனால் எங்கு என்றாலும் அவரே சொல்வதே முறை
  • அச்சு இதழில் உறுதியாக மறுப்பு வந்திருக்க வேண்டும்
  • தொடர் ஒத்துழையாமை --குறும்பன் (பேச்சு) 15:20, 3 மார்ச் 2014 (UTC)

2. தேனி சுப்பிரமணியின் நிருவாக அணுக்கத்தை பின்வரும் காரணங்களுக்காக நீக்க வேண்டும்.

  • ஒரு நிருவாகி விக்கிப்பீடியாவின் கொள்கைகளை நன்கு அறிந்து அவற்றைப் பின்பற்ற வேண்டும், மற்ற பயனர்களின் தொகுப்புகளைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், நூற்றுக் கணக்கான கட்டுரைகளில் கொள்கை மீறல்களைச் செய்த தேனி சுப்பிரமணி, இவற்றைச் சுட்டிக் காட்டியும் திருத்திக் கொள்ள முன்வராதது தவறான முற்காட்டு. ஒரு நிருவாகியே கொள்கை மீறும் போது, தான் ஏன் மீறக்கூடாது என்று ஒரு பயனர் கேட்பாரானால் அதற்கான விடை என்ன?
  • மாற்றுக் கருத்துகளைத் தீர்க்கும் நோக்கில் இணக்கமாக உரையாடி முடிவு நோக்கி நகர்வதே விக்கிப்பீடியா செற்பாடுகளுக்கான அடிப்படை. ஆனால், மற்ற பயனர்கள் கோரிக்கை விடுத்த பிறகும் தன்னுடைய பேச்சுப் பக்கத்தைப் பூட்டி வைத்துக் கொண்டு உரையாட மறுப்பது ஒரு நிருவாகிக்குரிய தகுதியில்லை என்பதை விட அவருடைய நிருவாக அணுக்கத்தைத் தவறாக பயன்படுத்துவதாகும். பிறகு இன்னொரு நிருவாகி வந்து அவருடைய பேச்சுப் பக்கத்தைத் திறந்து விடும் அளவுக்கே அவருடைய ஒத்துழைப்பு இருக்கிறது.
  • யார் எவ்வளவு தரம் தாழ்ந்து தாக்கினாலும் உணர்ச்சி வயப்படாமல் எதிர்வினையாற்றுவதே ஒரு நிருவாகிக்குரிய தகுதி. சரி, எல்லாரும் மனிதர்களே. எனவே, அப்படியே உணர்ச்சி வயப்பட்டாலும், பிறர் அதைச் சுட்டிக் காட்டும் போது, சில நாட்கள் கழித்து நிதானமாகச் சிந்தித்துப் பார்த்தேனும் அதனை ஏற்றுக் கொண்டு வருத்தம் தெரிவிப்பது முறை. தமிழ் விக்கிப்பீடியர் சார்பான ஐவர் குழு பரிந்துரைத்த பிறகும் இது குறித்து இவர் எந்த உறுதியும் அளிக்கவில்லை.
  • சுந்தரின் மடலில் தேனி சுப்பிரமணி பற்றிய கருத்து பின்வருமாறு:

தேனி சுப்பிரமணி தனியாகப் பேசும்போது வெளிப்படையாகவே எவ்வித குற்றவுணர்வுமின்றி விக்கியை வைத்து நீங்களும் பிழைக்க மாட்டேன் என்கிறீர்கள் மற்றவர்களையாவது அரசு சலுகைகளை அனுபவிக்க விடக்கூடாதா என்ற தொனியில் கூறியிருக்கிறார்.

பல நூறு பேரின் தன்னார்வ உழைப்பில் உருவாகும் ஒரு திட்டத்தில் இத்தகைய நோக்கங்களோடு இயங்குபவர்களை ஏற்றுக் கொள்ள இயலாது. தற்போது தமிழ் விக்கிப்பீடியா தளத்தில் ஒத்துழையாமையைத் தொடர்பவர் தொடர்ந்து பல களங்களில் விக்கிப்பீடியா சார்பாக பேசி வருகிறார். இத்தகைய நோக்கமுடைய ஒருவர் தன்னைத் தமிழ் விக்கிப்பீடியா நிருவாகி என்று முன்னிறுத்திக் கொள்ள வாய்ப்பளிப்பது ஆபத்தானதாகும். 2010ல் தமிழ் விக்கிப்பீடியா தொடர்பில்லாத ஒருவர் அரசுடன் பேசிக் கொண்டிருந்ததை அடுத்தே முறையான வெளியுறவுத் தொடர்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் சூழல் வந்தது என்பது நினைவுகூரத்தக்கது.

தேனி சுப்பிரமணி தமிழக அரசுக்கு எழுதிய கடிதத்தில் இருந்து சில பகுதிகள் பின்வருமாறு:

//(தமிழக அரசின் உயர்பொறுப்பில் உள்ளவரைப் பற்றிய புகழ்மொழிகள்) அவர்களின்

ஆணையின்படி, இணையக் கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியா உலகிலுள்ள 285 மொழிகளில் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது//

விக்கிப்பீடியாவை சிம்மிவேல்சு உருவாக்கினாரா இல்லை தமிழக அரசின் உயர் பொறுப்பில் உள்ளவர்கள் உருவாக்கினார்களா? எதற்கு இந்தக் குழைவு? தமிழ் விக்கிப்பீடியாவின் நிருவாகப் பொறுப்பில் இருந்து தமிழ் விக்கிப்பீடியா சார்பாக எழுதுபவர் இப்படி அடிப்படை விசயங்களைத் தவறாக எழுதலாமா?

// தன்னார்வலர்களைக் கொண்டு இலாபநோக்கமின்றி செயல்படுத்தப்படும் விக்கிப்பீடியாவில் தமிழ் மொழியை முன்னிலைப்படுத்த மதுரை, உலகத் தமிழ்ச் சங்கத்தில் தனிப்பிரிவு ஒன்று தொடங்கப்படும். இந்தப் பிரிவின் மூலம்

தமிழ் விக்கிப்பீடியாவில், தமிழ்ப் பங்களிப்புகளை அதிகப்படுத்திடவும், ஆசிரியர் மற்றும் மாணவர்களை ஊக்கப்படுத்திடவும் பள்ளி, கல்லூரிகளில் தமிழ் விக்கிப்பீடியாவிற்கான பயிலரங்குகள் நடத்தப் பெறும்.//

தமிழ் விக்கிப்பீடியாவில் வெளிப்படையாக உரையாடாமல் எதற்குத் தேனிக்கு அருகே உள்ள மதுரையில் அவர் வழக்கமாகச் செய்து வரும் பரப்புரைப் பணியை முன்வைத்து ஒரு அரசு வேலைக்குக் கோரிக்கை வைக்க வேண்டும்? விக்கியை வைத்து நீங்களும் பிழைக்க மாட்டேன் என்கிறீர்கள் மற்றவர்களையாவது அரசு சலுகைகளை அனுபவிக்க விடக்கூடாதா என்று கூறிய தேனி சுப்பிரமணி இந்த வேண்டுகோளின் உள்நோக்கம் குறித்து தெளிவுபடுத்தவில்லை.

அரசுடனான வேறு ஏதேனும் உறவாட்டங்கள் மேற்கொண்டுள்ளீர்களா என்பதற்கு எந்த வித பதிலையும் அளிக்கவில்லை. இது குறித்த முறையீட்டை விசாரிக்கவும் ஆள் இல்லை.

  • இராசன், சில அடையாளம் காட்டாத பயனர்களின் செயற்பாடுகள் காரணமாக தேனி சுப்பிரமணியின் ஒத்துழையாமைக்கு நியாயம் கற்பிக்கத் தேவையில்லை. ஏனெனில், நிருவாக அணுக்க நீக்கல் கோரும் பல பிரச்சினைகள் இந்தப் புதிய பயனர்களின் வரவுக்கு முந்தையவை. இராசனின் பயனர் கணக்கு ஒரு வாரம் தடுக்கப்பட்டது. அவரும் பிற அடையாளம் காட்டாத பயனர்களும் தொடர்ந்து செயற்படவில்லை. தேவைப்படும் போது, இத்தகைய பயனர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். இவர்களின் செயற்பாடுகளின் தாக்கும் குறைந்து பல வாரங்கள் கழிந்தும் கூட வழமையான பயனர்கள் முறையாக கேட்ட பல கேள்விகளுக்குமே தேனி சுப்பிரமணி எந்த வித ஒத்துழைப்பும் தரவில்லை.
  • இவர் மீது கையாள் பயன்படுத்தினார் என்ற முறையீடு உள்ளது. இதற்கு இவர் முறையான விளக்கம் அளிக்க மறுப்பதாலும், இந்த முறையீட்டை விசாரிக்க ஆள் இல்லாததாலும், இந்த முறையீட்டையும் கணக்கில் கொண்டு நிருவாக அணுக்கத்தை நீக்கக் கோருகிறேன். நிருவாகப் பொறுப்பில் இருப்பவர் செய்யவே கூடாத கொள்கை மீறல் இது.

நிருவாக அணுக்க நீக்க நடைமுறை குறித்து சில தெளிவுபடுத்தல்கள்:

  • பழைய பிரச்சினைகளை ஒட்டு மொத்தமாக குவிக்கக்கூடாது. தனித்தனியே அணுக வேண்டும் என்று சொல்வோருக்கு: இவருடைய நிருவாக அணுக்கத்தை நீக்க வேண்டும் என்று யாருக்கும் நோக்கம் இல்லை. இவர் செய்த தவறுகள் பலவும் தனித்தனியே அவருடைய பேச்சுப் பக்கத்தில் சுட்டிக்காட்டப்பட்டன. அவற்றைத் திருத்திக் கொள்ள முன்வரவில்லை. குறைந்தது அவர் செய்த கொள்கை மீறல்களைத் திருத்தி எழுதவோ, அவர் மீது வைக்கும் முறையீடுகளை விசாரிக்கவோ கூட நடுநிலை வாய்ந்த ஒரு விக்கிப்பீடியரைக் காணவில்லை. எனவே தான், அவருடைய தொடர் தவறுகளை முன்வைத்து நிருவாக அணுக்க நீக்கத்தை ஒரு நடவடிக்கையாக கோர வேண்டியிருக்கிறது. நிருவாக அணுக்கம் வேண்டினால் கொள்கை இல்லை என்பதும் கொள்கை உருவாக்கி விட்டு வேண்டினால் பழைய முறையீடுகளுக்கு கொள்கை செல்லாது என்பதும் முறையா? தமிழ் விக்கிப்பீடியர் சார்பான ஐவர் குழுவின் பரிந்துரையின் படியே இக்கொள்கை உருவாக்கப்பட்டது என்பதைக் கருத்தில் கொள்வது நலம்.
  • கட்டுரைப் பக்கங்களில் சொந்தத் தளத்துக்கு இணைப்பு தரக்கூடாது, வணிக இணைப்புகளைத் தரக்கூடாது, தன்னைப் பற்றி தானே எழுதக்கூடாது என்பது எல்லாம் பல ஆண்டுகளாக தமிழ் விக்கிப்பீடியாவில் எழுத்தில் உள்ள கொள்கைகள். பிறரை மரியாதையின்றி நடத்தக்கூடாது, அரசுடன் வெளிப்படைத்தன்மையின்றி உரையாடக்கூடாது என்பது எல்லாம் பொது அறிவு. நலமுரண் செயற்பாடுகளில் ஈடுபடக்கூடாது, கையாள் பயன்படுத்தக்கூடாது என்பது எல்லாம் விக்கிஉலகில் பொதுவான ஏற்பில் உள்ள கொள்கைகள். எனவே, ஏற்கனவே உள்ள இந்த கொள்கைகள், பொது அறிவு, புரிதல்களின் அடிப்படையிலேயே நிருவாக அணுக்க நீக்கம் கோரப்படுகிறது. நிருவாக அணுக்க நீக்கம் தொடர்பான புதிய கொள்கையானது, முறையீடுகளை எதிர்கொள்வதற்கான வழிமுறைகளைப் பற்றியே பேசுகிறதே ஒழிய நிருவாகக் குணங்களை வரையறுக்க முற்படவில்லை. எனவே, புதிய கொள்கை பழைய தவறுகளுக்குச் செல்லாது என்ற வாதம் ஏற்புடையதில்லை.
  • தமிழ் விக்கிப்பீடியா நிருவாகிகளின் எண்ணிக்கை அடிப்படையில் உலக அளவில் 13வது இடத்தில் இருக்கிறது. பல வளர்ந்த விக்கிகளே கூட நம்மளவு 39 நிருவாகிகளைக் கொண்டிருக்கவில்லை. நிருவாகப் பணியைத் துப்புரவுப் பணியாகப் பார்க்கவேண்டும், பொறுப்புகளைப் பகிர்ந்து பரவலாக்க வேண்டும், புதியவர்களுக்கு உற்சாகத்தையும் அங்கீகாரத்தையும் அளிக்க வேண்டும் என்ற நோக்கிலேயே பல நிருவாக அணுக்க முன்மொழிவுகளை மனமுவந்து செய்தேன். ஆனால், நிருவாக அணுக்கத்தை ஒரு செங்கோல் போலவும் பொன்முடி போலவும் பார்க்கும் மனநிலை வந்திருப்பது வருத்தத்தை அளிக்கிறது. நிருவாக அணுக்க நீக்கலுக்கான வழிமுறைகளைத் தொடங்குமாறு ஐவர் குழு பரிந்துரைத்த பிறகும் கண்டு கொள்ளாமலும் வாக்கெடுப்பே வரவிடாமல் சிலர் முனைந்ததையும், முறையீட்டை முன்வைப்பவர்களே தங்களுக்கான கொள்கைகளை வகுத்து நீதி கோர வேண்டிய நிலையிலும் தமிழ் விக்கிப்பீடியா இருப்பதைப் பார்க்க வேதனையாக உள்ளது. அடுத்து நிருவாகப் பொறுப்புக்கு வருபவர்களை மிகுந்த எச்சரிக்கையுடனும் நிறைந்த தகுதிகளுடனும் தேர்ந்தெடுக்க வேண்டிய தேவையை வலியுறுத்துகிறது. இவ்வளவு இறுக்கமான சூழல் வந்திருக்கத் தேவையில்லை.

தேனி சுப்பிரமணியை நிருவாக அணுக்கத்தில் இருந்து நீக்கி மற்ற பயனர்களுக்கு ஒரு நல்ல முற்காட்டைத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 08:05, 4 மார்ச் 2014 (UTC)

3. கட்டற்ற இயக்கங்களில் சிலர் நெறிகளைப் பின்பற்றாமல் செயல்படுவது வழக்கமே, அதை நெறியாளார்கள், நிருவாகிகள் போன்றவர்கள் களைந்து, மற்ற பங்களிப்பாளர்களுக்கு நெறிகளை விளக்குபவர்களாகவும், அதன்படி நடக்க பங்களிப்பார்களை ஊக்குவிப்பவராகவும் திகழ வேண்டும். ஆனால், கொள்கை மீறல்களை நிருவாகியே முன்னெடுத்ததும், சுட்டிக்காட்டிய பிறகும் தொடர்ந்து அவ்வாறே செயல்பட்டதும் (இவ்வாறு உருவாக்கப்பட பிழைகளையும் குறைகளையும் பிற பயனர்களால் திருத்த முடியும் என்றாலும், ஒரு நிருவாகியே மீண்டும் மீண்டும் அவ்வாறு செயல்பட்டு பிறரின் உழைப்புச்சக்தியை வீணடிக்கப்படுவதை ஏற்க முடியாது) போன்ற காரணங்களால் நிருவாக அணுக்கத்தை நீக்க வேண்டும். --தமிழினியன் (பேச்சு) 13:38, 4 மார்ச் 2014 (UTC)


4. மேலே குறித்த காரணங்கள்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:40, 4 மார்ச் 2014 (UTC)

5. மேலே குறித்த காரணங்கள். புருனோ மஸ்கரனாஸ் (பேச்சு) 17:33, 4 மார்ச் 2014 (UTC)

6. இது குறித்த ஐந்து பேர் கொண்ட பரிந்துரைக் குழுவில் நானும் இருந்தேன். விக்கிச் சமூகம் இக்குழுவின் பரிந்துரைகளை ஏற்கின்றதா? இல்லையா? என்பதை முதலில் முறைப்படுத்த வேண்டும். பரிந்துரைகளை ஏற்றால் தேனி சுப்பிரமணி அதற்கு இசையப் பொறுப்புக் கூற வேண்டும். இல்லையேல் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி இல்லாமல் பரிந்துரைகளைப் புறந்தள்ளிவிட்டு வாக்கெடுப்பு என்றபேரில் தொடர்ந்து தொடகத்திலிருந்தே விவாதத்தை ஆரம்பிப்பதென்றால் குறைந்தபட்சம் குழுவின் பரிந்துரை ஏற்கப்படவில்லை என்பதையாவது விக்கிச் சமூகம் வெளிப்படுத்த வேண்டும். இப்படி மன உளைச்சலை தொடர்ந்து நீட்டிக் கொண்டிருப்பது கடினமானது. எனது கருத்து யாரையும் புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும். பத்தாண்டுக் கொண்டாட்டத்திற்குப் பின் நம்மால் ஆரோக்கியமாக உரையாட முடியாத தேக்கமனநிலையில் இக்கருத்துகளைக் கூறுகின்றேன்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 05:44, 5 மார்ச் 2014 (UTC)

மேலும் தேனி சுப்பிரமணி தற்போதும் கூட த.வி யை குறைகூறும் முகநூல் உரையாடல்களைத் தொடர்கின்றார். விக்கியில் பங்களித்து ஒதுங்கியிருக்கும் பயனர்களுக்கு மேலும் முரண்பாடுகளை தூண்டும் வகையில் கருத்துக்களைப் பகர்கின்றார் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டுகின்றேன்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 05:56, 5 மார்ச் 2014 (UTC)


7.நிருவாக அணுக்கத்தை நீக்கலாம்:

  • அரசிடம் சலுகைகள் பெற‌ முயற்சிப்பது
  • மூத்த‌ விக்கிப்பீடியர் நெகிழ்வுத் தன்மையின்றி இருப்பது
  • தவறான தகவல்களை ஊடகங்களில் வெளியிடுவது

போன்றவை முன்னுதாரணமாய் ஆகிவிடக் கூடாது என்பதற்காக இவரை நிருவாக அணுக்கத்திலிருந்து நீக்கலாம் எனக் கருதுகிறேன்.ஆர்.பாலா (பேச்சு) 05:35, 6 மார்ச் 2014 (UTC)

8. இந்தச் சிக்கலால் பல விக்கிப்பீடியர்களின் உழைப்பு வீணடிக்கப்படுவதையிட்டு மிகுந்த வருத்தம். இது குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும். இல்லையேல் இனிவரும் எந்தவொரு சிக்கலுக்கும் ஒரு குழுவை அமைத்து ஆராய்வதென்பது முடியாததாகிவிடும். இவ்வகையில் கனக்ஸ், நற்கீரன், மயூரநாதன் போன்ற பெரியவர்கள் பரிந்துரையை ஏற்காமை முறையல்ல. இங்கே நிர்வாகிகளுக்கு சில சிறப்புரிமைகள் இருந்து தேனியார் அதனை தவறாகப் பயன்படுத்தியதுமல்லாமல் நியாயமான கேள்விகளுக்குத் தொடர்ந்து பதிலளிக்காமல் இருப்பதால் அச்சிறப்புரிமையை நீக்குவது கட்டாயமாகின்றது. ஆதாரபூர்வமான குற்றச்சாட்டுக்களுக்குத் தேனியாரிடமிருந்து தெளிவான விளக்கமேதும் கிடைக்கவில்லை. இதற்கு மேலும் தேனியாரை நிர்வாகியாக நீடிக்க அனுமதிப்பதன் மூலம் எந்த நிர்வாகியும் என்னவும் செய்யலாம் என்ற தவறான முன்னுதாரணம் ஏற்படும். தேனியாருடன் தொடர்பு கொண்டு இனியாவது இத்தவறுகள் நடைபெறாதென்பதை (உ+ம்: நூலாக்கம் பெறும் தமிழ் கம்பியூட்டர் தொடரில் திருத்தம் மேற்கொள்ளல்) கனக்ஸ், மயூரநாதன் போன்ற பெரியவர்கள் யாராவது உறுதிப்படுத்தினால் அவர் நிர்வாகியாகத் தொடர அனுமதிக்கலாம். --சிவகோசரன் (பேச்சு) 09:39, 6 மார்ச் 2014 (UTC)

9. மேலே குறிப்பிட்டுள்ள காரணங்களில் 2, 4, 5 ஆகியவற்றை இந்த முன்மொழிவுக்கு ஏற்புடையதாகக் கருதுகிறேன். இம்முன்மொழிவை எதிர்த்து மயூரநாதன் எழுப்பியுள்ள கேள்விகளையும் கருத்துக்களையும் பெரும்பாலும் ஏற்கிறேன். ஆனால், தேனி சுப்பிரமணி ஒத்துழைத்திருந்தால் சமூகத்தீர்வில் அதைக் கணக்கில் கொண்டிருக்கலாம். இப்போது இந்த முன்மொழிவில் இயலாது, இதில் தொடர்புடையவர்கள்மீதான குற்றச்சாட்டுக்களை இப்போது தனியாகத்தான் கையாளவேண்டும். இருந்தாலும், அதில் ஒரு கருத்து மிக முக்கியமானது. இங்குள்ள குற்றச்சாட்டுக்களில் பல, பழைய நடவடிக்கைகளைத் தோண்டியெடுத்துப் பதிந்திருப்பவை. அது எனக்கும் உறுத்துகிறது. ஒத்துழையாமை என்ற குற்றச்சாட்டு எழாவிட்டால் நானும் அந்த அடிப்படையில் இம்முன்மொழிவை ஆதரித்திருக்கமாட்டேன். -- சுந்தர் \பேச்சு 10:52, 7 மார்ச் 2014 (UTC)

10.மேலே குறித்த காரணங்கள். --Commons sibi (பேச்சு) 13:22, 7 மார்ச் 2014 (UTC)

11.  ஆதரவு --Surya Prakash.S.A. (பேச்சு) 11:10, 8 மார்ச் 2014 (UTC)

12.  ஆதரவு கண்டிப்பாக இவருடைய நிருவாக அணுக்கம் நீக்கப்பட வேண்டும். அதற்கான காரணங்கள் பின்வருமாறு:

  1. நிர்வாகி தரம் குறித்த விழிப்புணர்வு இன்மை.
  2. நிருவாக அணுக்கத்தை முறைகேடாகப் பயன்படுத்தியது (தனது பேச்சுப் பக்கத்தைப் பூட்டி வைத்துக் கொண்டது).
  3. தவறு சுட்டிக்காட்டப்பட்ட பிறகும் மன்னிப்பு கோராமை / வருத்தம் தெரிவிக்காமை / தவறை சரிசெய்ய முன்வராமை.
  4. விக்கிப்பீடியாவில் வெளிப்படையாக உரையாடாமல் அரசு உயரதிகாரிகளிடம், தமிழ் விக்கிப்பீடியா பரப்புரைக்கு ஒரு தனிப்பிரிவு கோரி தமிழக அரசு உயர் அலுவலர் மூலம் தமிழக அமைச்சுகளைத் தொடர்பு கொண்டது.
  5. ஐவர் குழுவில், நானும் ஒருவனாக இருந்தேன், இவருடைய குறைகள் சுட்டிக்காட்டப்பட்டன. ஆயினும் எந்த ஒத்துழைப்பும் அவரிடத்தில் இல்லை. தன்மீது சாற்றப்பட்ட குற்றத்தை அவரே ஏற்றுக்கொள்ளும் விதமாக விக்கிப்பீடியர்களின் பல்வேறு கேள்விகளுக்கு மவுனமாக இருக்கிறார்.
  6. இவருடைய தவறுகளுக்காகவும், பிற பயனர்கள் தமிழ் விக்கிப்பீடியாவுடைய கொள்கைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டுமென்ற காரணத்திற்காகவும் இவரை நிருவாக அணுக்கத்தில் இருந்து நீக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டுள்ளோம். --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 13:07, 8 மார்ச் 2014 (UTC)
நடுநிலை[தொகு]
  1. தேனி சுப்பிரமணி பற்றிய உரையாடல் த.வி. பயனர்களின் பொறுமையை நீண்டகாலம் சோதித்துவிட்டது. எனினும், அவர் த.வி. வளர்ச்சிக்குத் துணைநின்ற ஒருவர் என்ற முறையிலும், தானாகவே முன்வந்து நிர்வாக அணுக்கத்திலிருந்து விலக விருப்பம் தெரிவிக்கவில்லை என்ற முறையிலும், உரையாடல் போன போக்கிற்கு அவர் மட்டும் காரணம் அல்ல என்ற முறையிலும் அவர்மீது ஒழுங்குமுறை நடவடிக்கை எடுக்கவா வேண்டாமா என்ற கேள்விக்கு ஆம் அல்லது இல்லை என்று பதில்கூற முடியாத நிலையில் உள்ளேன். அண்மைக்காலத்தில் த.வி.யில் அவருடைய பங்களிப்புகள் எதுவும் என் கண்ணுக்குப் படவில்லை. ஒருவேளை அவரே விக்கியிலிருந்து விலகிவிட்டாரோ என்றுகூட எண்ணத் தோன்றுகிறது. தற்போது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல், நீண்டகாலம் அவரது பங்களிப்பு இல்லையென்றால், அவர் தானாகவே விக்கிப் பொறுப்பிலிருந்து விலகியதாகக் கொள்ளலாமா? கடந்த காலத்தில் அவ்வாறு சில நிர்வாகிகள் பொறுப்பிலிருந்து விடுதலைபெற்றதாக எங்கோ பார்த்த நினைவு.--பவுல்-Paul (பேச்சு) 23:52, 3 மார்ச் 2014 (UTC)
    1. நான் இருமுறை "நடுநிலை" வாக்கு அளிக்க முனையவில்லை. ஆனால் சற்று முன்பு சிவகோகசரன் கூறிய கருத்தைப் பார்த்ததும் என் உள்ளத்தில் எழுந்ததைப் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன். சிவகோசரன் கூறுவது: //தேனியாருடன் தொடர்பு கொண்டு இனியாவது இத்தவறுகள் நடைபெறாதென்பதை (உ+ம்: நூலாக்கம் பெறும் தமிழ் கம்பியூட்டர் தொடரில் திருத்தம் மேற்கொள்ளல்) கனக்ஸ், மயூரநாதன் போன்ற பெரியவர்கள் யாராவது உறுதிப்படுத்தினால் அவர் நிர்வாகியாகத் தொடர அனுமதிக்கலாம்.// "இனியாவது இத்தவறுகள் நடைபெறாது" என்று தேனி சுப்பிரமணி உறுதிப்படுத்த முன்வராவிட்டால் நிர்வாக அணுக்கத்தை நீக்கலாம் என்று கொள்ளலாமா என்றொரு கருத்தை முன்வைக்க விரும்புகிறேன். நன்றி--பவுல்-Paul (பேச்சு) 16:31, 6 மார்ச் 2014 (UTC)
  2. (1) நான் உட்பட எவருமே இந்தப் பிரச்சினையை சரியான முறையில் அணுகவில்லை என்பது எனது கருத்து. (2) திடீரென புகுபதிகை செய்து கருத்துகளை இட்ட இராசன் என்பவர் குறித்தும், புகுபதிகை செய்யாது அனைவரையும் சிக்கலில் மாட்டிவிட்ட (மிரட்டிய) மற்ற அனானிப் பயனர்கள் குறித்தும் எனக்கு நம்பிக்கையில்லை. (3) நம் பிள்ளை என்ன தவறு செய்தாலும், அவனை முறைப்படி கண்டிக்க வேண்டுமே தவிர்த்து, வெளியில் அவனை எப்போதும் விட்டுக் கொடுக்கக் கூடாது! அதையேத் தான் விக்கியில் நாம் ஒவ்வொருவரும் செய்ய வேண்டும். என்ன பிரச்சினை என்றாலும் இங்கேயே முறைப்படி நயமுடன் உரையாடி, தமிழ் விக்கியினை வளர்க்க வேண்டும். - அதாவது தமிழ் விக்கி குறித்து நாமே தவறாக வெளியில் பேசலாமா? தமிழ் விக்கியை தனது குழந்தையாக ஒவ்வொருவரும் கருதவேண்டும்! (4) இளைய தலைமுறைக்கு வயதில் பெரியவர்களும், அனுபவத்தில் சிறந்தவர்களும் நல்ல முன்னுதாரணங்களாக இருந்து தமிழ் விக்கியை தொடர்ந்து நல்ல நிலைக்கு கொண்டுசெல்ல வேண்டும் என்பது எனது வேண்டுகோள். (5) இங்கு பயனர்களாக இருக்கும் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் அனைத்து துடிப்பான இளைஞர்களும் பொறுப்புடனும், பொறுமையுடன் நடந்துகொள்ள வேண்டும் எனவும் வேண்டுகிறேன்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:20, 4 மார்ச் 2014 (UTC)
  3. வெளிப்படயாக வாசிக்கும் போது தேனி அவர்கள் விக்கி பண்பாடுகளுக்கு அப்பாற்பட்டு செயற்பட்டதாகத் தெரிகின்றது. ஆயினும் இதனை முதலில் இருந்து தொடராத காரணத்தாலும் இது போன்ற நிகழ்வுகளினால் விக்கியில் பங்களிக்கும் சிறிதளவு நேரமும் சிதறிவிடக்கூடாது என்பதற்காகவும், நடுவுநிலையை எடுத்துக்கொள்கின்றேன். இறுதியாக தமிழ் விக்கி சமூகம் எடுக்கும் முடிவிற்கு நானும் உடன்படுவேன். அப்போது வந்து கூக்குரலிட்டு அடம்பிடிக்கேன். --ஜெ.மயூரேசன் (பேச்சு) 08:41, 4 மார்ச் 2014 (UTC)
  4. விக்கிப்பீடியா பத்தாண்டுக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளாததாலும் முகநூல் பதிவுகளையும் இங்கு நடந்த நீண்டநெடிய உரையாடல்களைப் படித்தும் ஒரு முடிவுக்கு வர இயலாததால் நடுநிலை வகிக்கிறேன். தற்போது பயனர் கனக்சின் பேச்சுப் பக்கத்தில் நடக்கும் உரையாடல் எங்கு போய் முடியுமோ எனத் தெரியவில்லை. இந்த வாக்கெடுப்பு முடிந்து பக்கம் மூடப்படக் காத்திருக்கிறேன்.--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 11:33, 4 மார்ச் 2014 (UTC)
  5. எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. குற்றச்சாட்டு, விசாரணை என்று நேரத்தைச் செலவழிக்காமல் அனைவரும் பங்களிக்கலாம் என நினைக்கின்றேன். --G.Kiruthikan (பேச்சு) 10:48, 7 மார்ச் 2014 (UTC)
  6. காலம் கடந்த நீதி மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம்--ஸ்ரீதர் (பேச்சு) 14:49, 9 மார்ச் 2014 (UTC)
நிருவாக அணுக்கத்தை நீக்க வேண்டாம்[தொகு]
  1. ஒரு பயனரின் நிர்வாக நீக்கம் தொடர்பாக இராசன் போன்ற பயனர்கள் முறையீடு செய்ய முடியாது என்று ஏற்கனவே நாம் உரையாடியுள்ளோம். எனவே அவரது (நிருவாக அணுக்கம் தொடர்பான) முறையீடுகள் உடனடியாகவே நீக்கப்பட்டிருக்க வேண்டியவை. மேலும், முறையீடு செய்யப்பட்ட பின்னர் இது குறித்த கொள்கை வகுக்கப்பட்ட படியால் மேற்படி புதிய கொள்கைக்கு பொருந்தாது. எனவே இம்முறையீடு செல்லாது என அறிவித்து தேனி சுப்பிரமணியின் நிருவாக அணுக்கம் நீடிக்க வேண்டுகிறேன்.--Kanags \உரையாடுக 07:09, 3 மார்ச் 2014 (UTC)
  2. தேனி சுப்பிரமணி 2011 இலிருந்தே தன்னைப் பற்றிய கட்டுரையினைத் தொகுத்துவருகிறார். தனது இணையத் தளத்துக்குப் பெருமளவில் இணைப்புக்களை வழங்கியுள்ளார். இவையெல்லாம் அந்தக் காலப்பகுதியிலேயே சுட்டிக் காட்டப்பட்டுத் தடுக்கப்பட்டிருக்க வேண்டியவை. தமிழக அரசுடனான தொடர்பு/ முயற்சி போன்றவையும் பலகாலத்துக்கு முந்தையவையே. இவற்றை அந்த அந்தக் காலத்தில் தடுத்திருந்தால் இந்த உரையாடலே தேவையில்லை. இங்கே மிகப்பெருவளவு விக்கிநேரம் வீணாக்கப்படுகிறது. கனகு சுட்டியபடி கொள்கை புதியது. தமிழ் கம்பியூட்டரில் த.வி பற்றித் தவறாக எழுதியிருந்தால் அதற்கான மறுப்பினை வேறெவரேனும் கூட எழுதியனுப்பலாம். நன்றி. கோபி (பேச்சு) 10:11, 3 மார்ச் 2014 (UTC)
  3. தேனி சுப்பிரமணி மீது தனிப்பட்ட முறையில் ‘நடிகர்’ என்ற பதக்கம் வழங்கி பிரச்னையை ஆரம்பித்து வைத்தவர்களை நீக்குவது தான் முறை. தமிழ் விக்கிப்பீடியாவில் பல கருத்து உள்ளவர்கள் நிருவாகத்தில் இருப்பது அவசியமே. இல்லையென்றால் ஒரு குழு மட்டும் இங்கே dominate செய்து எல்லாவற்றையும் தங்கள் விருப்பம் போல மாற்றியமைத்து தமிழ் விக்கிப்பீடியாவையே சீரழித்து விட வாய்ப்புகள் அதிகம். இந்த பிரச்னையில் குற்றம்சாட்டும் தரப்பு வேண்டுமென்றே குழு மனப்பான்மையோடு இணைந்து தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் ஒரு நிருவாகியை நீக்கக் கோரிக்கை வைப்பது சரியே அல்ல. அவர் கட்டுரை இணைப்புகள் கொடுத்ததில் தவறு என்றால் அதனை இவர்கள் நீக்கலாமே? ஏன் அதனைச் செய்யாமல் இத்தனை காலம் கழித்து இப்போது பிரச்னை எழுப்ப வேண்டும்? தவிர அடுத்து அவர் தரப்பில் ஒரு குழுவைச் சேர்ந்து நீக்கக்கூடாது என்று பதிலுக்கு குரலெழுப்பினால் என்னவாகும்? மொத்தத்தில் இப்படி ஒரு வாக்கெடுப்பே அவசியம் இல்லாதது! இதில் ஏற்படுத்தும் காலவிரயத்தை வேறு பயனுள்ள வகையில் செலவழிக்கலாம்.மாயவரத்தான் (பேச்சு) 11:31, 3 மார்ச் 2014 (UTC)
  4. --Natkeeran (பேச்சு) 21:47, 3 மார்ச் 2014 (UTC)
  5. பல ஆண்டுகளாக இடம்பெற்ற விடயங்களை ஒன்றாகக் குவித்து இங்கே குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவை எல்லாமே அந்தந்த நேரங்களில் குறித்த பயனரின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டு அவற்றைச் சரி செய்வதற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. மாற்றாக, பத்தாண்டுக் கொண்டாட்டங்கள் தொடர்பாகத் குற்றஞ்சாட்டப்பட்டவர் விமர்சித்ததைத் தொடர்ந்து இவற்றைக் குற்றச்சாட்டுகளாக முன்வைத்திருப்பது இக்குற்றச் சாட்டுகளின் பின்னணியில் உள்நோக்கங்கள் இருக்கலாமோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகின்றது. எனவே இதன் அடிப்படையில் குறித்த பயனரின் நிர்வாக அணுக்கத்தை நீக்குவது இது ஒரு பழிவாங்கல் நடவடிக்கை என்ற எண்ணத்தை ஏற்படுத்தும்.
    இந்தக் குற்றச் சாட்டுக்களை முதலில் முன்வைத்த இராசன் என்ற பயனர் குற்றச் சாட்டுகளை முன்வைப்பதற்காகவே தன்னைப் பயனராகப் பதிவு செய்து கொண்டவர். இவர் விக்கிப்பீடியாவின் ஒரு பக்கத்தில் அளித்துள்ள ஒரு விளக்கத்தில் விக்கிப்பீடியாவுக்கு வெளியே குற்றஞ்சாட்டப்பட்டவரோடு அவருக்குத் தனிப்பட்ட பிரச்சினைகள் இருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது. எனவே விக்கிப்பீடியாவின் நலன் அல்லாது தனது பகையைத் தீர்த்துக்கொள்வதே குற்றச்சாட்டுக்களின் நோக்கமாக இருக்கலாம். இவ்வாறான நடவடிக்கைகளுக்கு விக்கிப்பீடியர்கள் இடமளிக்கக்கூடாது.
    பயனர் இராசன் தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்தவரோ, கலந்துரையாடல்களில் கலந்து கொண்டவரோ அல்ல. ஆனால் அவர் இங்கே பல ஆண்டுகளுக்கு முன் நடந்த விடயங்களைக் கூடத் தெரிந்து வைத்திருக்கிறார். அத்துடன் தனிப்பட்ட மடல்களில் விவாதிக்கப்படும் விடயங்களும் அவருக்கு உடனுக்குடன் தெரிந்து விடுகிறது. எனவே இவர் ஒரு கையாளாக அல்லது கைப்பாவையாக இருக்கக்கூடிய வாய்ப்புக்கள் குறித்து ஐயம் ஏற்படுகிறது. விடயம் தெரிந்தவர்கள் பிடிபடாமல் இவ்வாறு செயற்பட முடியும்.
    தனிப்பட்ட முறையில் வாய்மொழியாகச் சொன்ன விடயங்கள் குற்றச் சாட்டுகளாகச் சொல்லப்படுகின்றன. இவற்றைச் சான்றுகளாக எடுத்துக்கொள்ள முடியாது. குறித்த கருத்து எந்தச் சூழலில் சொல்லப்பட்டது, குறித்த பயனர் இங்கு முன்வைக்கப்படும் அதே பொருளைத்தான் எண்ணிச் சொன்னாரா என்பவற்றையெல்லாம் தீர்மானித்தல் கடினம்.
    இங்கே முன்வைக்கப்பட்ட சில குற்றங்களில், குறிப்பாகக் கண்ணியமற்ற சொற்களின் பயன்பாடு போன்றவைகளில் ஈடுப்பட்டதாகக் கூறப்படும் காலத்தில் இடம்பெற்ற அனைத்துக் கலந்துரையாடல்களையும் ஒருமித்துப் பார்க்காமல் குறித்த குற்றத்தின் தன்மையைப் புரிந்து கொள்ள முடியாது. உண்மையில், குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்தவர்களில், நிர்வாகிகள் உட்படப் பலர் கடுமையான தனிமனிதத் தாக்குதல்களிலும், நடிகர் பட்டம் கொடுப்பது போன்ற கண்ணியமற்ற செயல்பாடுகளிலும் ஈடுபட்டுக் குற்றஞ்சாட்டப்பட்டவரைச் சீண்டிவிட்டார்கள் என்பதை இது குறித்த உரையாடல்களைக் கவனித்தவர்கள் எவரும் இலகுவில் புரிந்து கொள்ளலாம். இதனால், இவ்விடயத்தில் குற்றஞ் சாட்டப்பட்டவரை மட்டும் பொறுப்பாக்குவது ஒருபக்கச் சார்பானது.
    குற்றஞ்சாட்டப்பட்டவரின் பயனர் பக்கத்தில் அடையாளம் காட்டாத பயனர்கள் கண்ணியமற்ற சொற்களைப் பயன்படுத்திக் கண்டதையும் எழுதினார்கள். இதை வேறு பயனர்கள் நீக்கியபோது அதை எதிர்த்தவர்களும் உண்டு. எனவே இதைத் தடுப்பதற்காகப் தனது பயனர் பக்கத்தைப் பூட்டிவைப்பது அவருடைய உரிமை. இதை ஒரு குற்றச் செயலாகக் கொள்ள முடியாது.
    விக்கிப்பீடியாவின் பக்கங்களில்தான் இப்படியென்றால் அவரது தனிப்பட்ட மின்னஞ்சலுக்கும் மோசமான உள்ளடக்கங்களைக் கொண்ட மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டதாகத் தெரிகிறது. இவ்வாறான ஒரு சூழ்நிலையை உருவாக்கி விட்டு குற்றஞ்சாட்டப்பட்டவர் சரியாக ஒத்துழைக்க வேண்டும் என்று எப்படி எதிர்பார்க்கலாம்?
    குற்றஞ்சாட்டியவரும், அவருக்குச் சார்பாகக் கலந்துரையாடிய சிலரும் தமக்குச் சாதகமான கருத்துக் கொண்டிராத பலரோடு நடந்துகொண்டவிதம் கண்ணியமாக இருக்கவிரும்பிய பயனர்கள் பலரை இவ்விவாதங்களில் கலந்துகொள்ள விடாமல் செய்துவிட்டது.
    அரசுக்கு எழுதிய கடிதம் குறித்த விடயத்தை ஒரு மோசமான குற்றச்சாட்டாக முன்வைத்திருப்பது மிகவும் துரதிட்டவசமானது. இந்தக்கடிதம் முன்னர் சில பயனர்களோடு பகிர்ந்துகொள்ளப்பட்டபோது, இன்று பெருப்பித்துக் காட்ட முற்படுபவர்கள் உள்ளிட்ட எவரும் இதை அப்போது நிர்வாகி அணுக்கம் நீக்குவதற்குரிய குற்றமாக எடுத்துக்காட்டவில்லை. இப்போது அதைக் குற்றமாக்கி நிர்வாக அணுக்கம் நீக்கக்கோருவது எந்த நியாயத்துக்குள்ளும் அடங்காது.
    இப்படியான சூழ்நிலையில் குற்றஞ்சாட்டப்பட்டவரை ஒரு தனிப்பட்ட பயனராகவன்றி எதிர்காலத்திலும் இம்மாதிரிப் பாதிப்புக்குள்ளாகக் கூடிய பயனர்களின் பிரதிநிதியாகத்தான் பார்க்க்க முடிகிறது. தங்களுக்குப் பிடிக்காவிட்டால் ஒரு பயனருக்கு எவ்வாறெல்லாம் தொல்லை கொடுக்கமுடியும் என்பதற்கும் இதன்போது எவ்வாறெல்லாம் விக்கிப்பீடியாவின் வழமையான நடவடிக்கைகள் பாதிப்படையக்கூடும் என்பதற்கும் இது நல்ல எடுத்துக்காட்டு. இந்தமாதிரியான நடவடிக்கைகளை ஊக்குவிப்பது த.வியின் எதிர்காலத்துக்கு நல்லதல்ல. எனவே இந்த நிர்வாக அணுக்க நீக்க முயற்சியைக் கடுமையாக எதிர்க்கிறேன். --மயூரநாதன் (பேச்சு) 09:10, 4 மார்ச் 2014 (UTC)
    1. //வாக்கிடும் காலத்தில் பயனர்களின் கருத்துக்கு எதிர் கருத்து இடுவது, உரையாடுவது ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்// என்ற ஒர் வேண்டுகோளை (அல்லது நிபந்தனை) ஏற்று அதன்படி நடப்பதே எனக்கு விருப்பம் என்றாலும், இங்கே கருத்து இட்ட சில பயனர்கள் எதிர்ப்பு வாக்கு இட்டதற்காக எனது பெயர் குறிப்பிட்டுக் குறைகூறியிருப்பதாலும், //.... மயூரநாதன் போன்ற பெரியவர்கள் யாராவது உறுதிப்படுத்தினால் ...// என்றவாறு கருத்திட்டிருப்பதாலும் இவற்றுக்குப் பதிலளிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
      முதலாவதாக வாக்கெடுப்பு என்பது ஏற்கெனவே எல்லாராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட நடை முறையின் ஒரு பகுதியே. அப்படிப் பரிந்துரைக்கு எதிராக வாக்களிப்பது குற்றம் என்று யாராவது கருதிவதாக இருந்தால் முன்பே இது குறித்துத் தமது கருத்தை வெளியிட்டிருக்க வேண்டும். வாக்கெடுப்பு என்று வந்தால் ஒவ்வொருவரும் தமது கருத்துக்களுக்கு அமைவாக வாக்களிப்பதற்கான உரிமை இருக்கவேண்டும். வாக்கெடுப்பு வைக்கலாம் ஆனால் எல்லோரும் ஒரு குறிப்பிட்ட கருத்துக்கு ஆதரவாகத் தான் வாக்களிக்க வேண்டும் என்று கருதுவது வாக்கெடுப்பின் அடிப்படைகளுக்கே முரணானது.
      என்னுடைய எதிர் வாக்குக்கு என்ன காரணம் என்பதை நான் தெளிவாகவே விளக்கியுள்ளேன். தேனீ மீதான நிர்வாக அணுக்க நீக்கக் குற்றச் சாட்டின் தன்மை குறித்தும் அதை ஏன் நான் ஏற்கவில்லை என்பதையும் இதற்கு முன்னரும் மிகத் தெளிவாகவே எடுத்துக்கூறியுள்ளேன். என்னுடைய நிலைப்பாட்டுக்குக் காரணம் தேனி சுப்பிரமணி என்ற ஒரு தனி மனிதர் மீது கொண்ட அக்கறை அல்ல, தமிழ் விக்கிப்பீடியாவின் நலனே ஒரே காரணம் என்பதையும் வலியுறுத்திச் சொல்லியிருக்கிறேன்.
      குற்றஞ்சாட்டப்பட்டவர் மீது சுமத்தப்பட்ட பல குற்றங்களை, அவரை வெளியேற்றியே ஆகவேண்டும் என்ற முனைப்பில் அவரின் எதிர்ப்பாளர்கள் (நிர்வாகிகள் உட்பட) புரிந்துள்ளார்கள். பின்வருவனவும் இவற்றுள் அடங்கும்.
      • மோசமான தனிமனிதத் தாக்குதல்.
      • கண்ணியமாக உரையாடுபவர்கள் மீது குற்றம் சுமத்துதல், கேலி கிண்டல்களில் ஈடுபடல்,
      • விக்கிப்பீடியாவுக்கு வெளியே முகநூல் போன்ற பொதுத் தளங்களில் விக்கிப்பீடியாவில் இடம்பெறுபவைகள் பற்றிக் (விசாரணை உட்பட) கேலி செய்து கிண்டல் அடித்தல்,
      • தமிழ் விக்கிப்பீடியாவின் பயனர்களை வெளியில் எதிர்ப் பரப்புரை செய்யலாம் என்று தூண்டும் வகையில் எழுதுதல்,
      • கைப்பாவைகளாக, அல்லது கையாட்களக இருக்கிறார்கள் அல்லது அவற்றை இயக்குகிறார்கள் என்னும் ஐயத்துக்கு உட்பட்டிருத்தல். (தேனீ மீது சுமத்தப்பட்டுள்ள இதே விதமான குற்றச்சாட்டு நியாயமானதாக இருப்பதாகக் கருதுபவர்களுக்கு)
      • பத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்குப் பின்னர் நிலைமை இவ்வளவு மோசமானதற்குத் தேனிக்கு எவ்வளவு பொறுப்பு இருப்பதாகக் கருத முடியுமோ அதற்குக் குறையாத பொறுப்பு தேனி எதிர்ப்பாளர்களுக்கும் உண்டு.
      இவற்றை முன்னரே நான் பல தடவைகள் எடுத்துக்கூறியும் அவற்றைத் திருத்திக்கொள்ளச் சம்பந்தப்பட்டவர்கள் மறுத்துவருகிறார்கள். விசாரணையின் போது இவற்றையெல்லாம் கவனிக்கவேண்டும் என்று கோரியிருந்தேன் ஆனால் இவை எதுவுமே கவனத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. ஒவ்வொரு விடயத்தையும் தனித்தனியாகவே விசாரிக்கவேண்டும் என்றால் தமிழ் விக்கிப்பீடியாவில் வேறு எதுவுமே செய்ய நேரம் இருக்காது. தேனீ சுப்பிரமணிக்கு விதித்தது போல், இது சம்பந்தமாக முறையில்லாத வகையில் நடந்துகொண்டவர்கள் அனைவரையும் இனிமேல் அப்படி நடந்து கொள்ள மாட்டோம் என்று உறுதியளிக்கும்படி கேட்டுக்கொள்வதுதான் முறை. அப்படி இல்லாமல் ஒருவரை மட்டும் குற்றவாளியாக்குவது எந்தவகையிலும் நியாயம் ஆகாது.
      இந்தவகையில் தேனீயை மட்டும் குறிப்பிட்ட விடயங்களைச் செய்ய மாட்டேன் என உறுதியளிக்கக் கோருவதற்கு எனக்கோ வேறெவருக்குமோ தார்மீக உரிமை இருப்பதாக நான் கருதவில்லை. பவுல், உங்கள் மீது எனக்கு நிரம்ப மதிப்பு உண்டு ஆனால் மேற்சொன்ன காரணங்களுக்காக உங்கள் கோரிக்கையை ஏற்கமுடியாமல் இருப்பதற்காக வருந்துகிறேன். என்னுடைய அறிவுக்கும் அனுபவத்துக்கும் எட்டியவகையில் சரியான முறையில் நான் நடக்கிறேன் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. உங்கள் மனச்சாட்சிப்படி வாக்களிக்க உங்களுக்கு இருக்கும் உரிமையையும் மதிக்கிறேன். குற்றம் எதுவுமே செய்யாதவர் முதற் கல்லை விட்டெறியலாம் என யேசு பிரான் சொன்னதாக அறிந்திருக்கிறேன். இங்கே குற்றம் செய்துகொண்டே கல்லெறிந்து கொண்டிருக்கிறார்கள். இதற்கு ஆதரவாகச் செயற்படுவது என்னைப் பொறுத்தவரை சாத்தியமாகாது. ---மயூரநாதன் (பேச்சு) 07:10, 7 மார்ச் 2014 (UTC)
      1. விளக்கத்திற்கு நன்றி. //தேனீ சுப்பிரமணிக்கு விதித்தது போல், இது சம்பந்தமாக முறையில்லாத வகையில் நடந்துகொண்டவர்கள் அனைவரையும் இனிமேல் அப்படி நடந்து கொள்ள மாட்டோம் என்று உறுதியளிக்கும்படி கேட்டுக்கொள்வதுதான் முறை// - விருப்பம். இந்தக் குழப்பத்தையெல்லாம் யார் ஆரம்பித்தார்கள் என்று புரியவில்லை. அனுபவம் மிக்க பயனர்/பயனர்கள் கைப்பாவை/கையாட்களாக இருந்து குற்றச்சாட்டுக்களை வைத்தமை ஏற்றுக்கொள்ள முடியாததே. யாராவது மூத்த பயனர்கள் தேனியாரிடம் தொடர்பு கொண்டு இந்தச் சிக்கலை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்பதே என் அவா. அதனாலேயே தங்களைப் பெயர் குறிப்பிட்டுக் கருத்திட நேர்ந்தது. இதனால் உங்களுக்கு மனவருத்தம் ஏற்பட்டிருப்பின் மன்னிக்கவும். தமிழ் விக்கிப்பீடியா ஒரு குடும்பமாக ஒன்றுபட்டிருக்க வேண்டுமென்பதே எனது விருப்பம். --சிவகோசரன் (பேச்சு) 09:01, 7 மார்ச் 2014 (UTC)
  6. இங்குள்ள கனகு, கோபி, மயூரநாதன் ஆகியோரின் கருத்துகளை முழுமனதோடு ஏற்கிறேன். மேலும்,
    //விக்கிப்பீடியா தண்டனைக் களமல்ல// ஓடோடி வந்து கற்றுத்தரும் களம்.
    தேவையற்றதை நீ்க்கும் அணுக்கம் நம் ஒவ்வொருக்கும் உண்டு.
    // ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, நம்மில் ஒற்றுமை நீங்கினால் அனைவருக்கும் தாழ்வு//--≈ உழவன் ( கூறுக ) 03:23, 5 மார்ச் 2014 (UTC)
  7. . என்னை தமிழ் விக்கிபீடியாவில் கட்டுரைகள் எழுதத் தூண்டியதற்கு காரணம், தற்செயலாக புத்தகக் கண்காட்சியில் வாங்கிப் படித்த தேனி. மு. சுப்பிரமணி எழுதிய தமிழ் விக்கிப்பீடியா என்ற நூலே. தேனி சுப்பிரமணி மீது குறைகள் கூறி அவரை நிருவாக அணுக்கல் நீக்கலுக்கு வாக்கு அளித்தவர்கள், அவரது நிறையை (தமிழ் விக்கிபீடியாவிற்காக ஆற்றிய பணிகள்) மதிப்பிட மறந்து விட்டார்கள் என நினைக்கிறேன். எனவே ஒருவரைப் பற்றிய மதிப்பீடு செய்யும் போது அவரின் குறைகளை மட்டும் மதிப்பிடுவதுடன் நின்று விடாது, அவரது நிறைகளையும் (Values) கணக்கில் கொள்ள வேண்டும். குற்றம் பார்க்கின் சுற்ற்ம் இல்லை என்பதை மனதில் கொண்டு, தேனி. மு. சுப்பிரமணியை நிருவாக அணுக்கல் நீக்கல் முயற்சியை எதிர்க்கிறேன்.--கிருஷ்ணமூர்த்தி (பேச்சு) 03.00, 6 மார்ச் 2014 (UTC)
  8. -- வைகுண்ட ராஜா (பேச்சு) 07:31, 7 மார்ச் 2014 (UTC)
    1. பயனர்கள் கோபி, மயூரநாதன் ஆகியோரின் கருத்துகள் முழுமையாக ஏற்கப்படவெண்டியது மட்டுமல்லாமல் இது போன்ற நிகழ்வுகள் எதிர்காலத்தில் எந்த சூழ்நிலையிலும் ஏற்பட்டுவிடாமலும் பார்த்துக்கொள்வது மிகவும் அவசியம். பயனர்கள் தங்களுக்குள் உள்ள முரண்பாடுகளை முளையிலேயே கிள்ளவும் மற்றவர் செய்யும் தவறுகளையும் ஆரம்பத்திலேயே சுட்டிக்காட்டவும், திருத்தவும் வேண்டியதன் முக்கியத்துவத்தை இந்த நிகழ்வு நமக்கு சுட்டுகிறது. இவ்வாறான நிகழ்வுகள் எதிர்காலத்தில் ஏற்படுமெனில், அது மிக பெரும் எண்ணிக்கையில் பயனர் பங்களிப்புகளை பாதிப்பதோடு தேவையற்ற பகைமைகளையும் கால விரையங்களையும் பண்பான, அனுபவம் மிக்க பயனர்களுக்கே உருவாக்கி விடும். இவை தமிழ் விக்கிவுக்கு ஏற்படுத்தும் எதிர் விளைவு ஆழமாதாகவும், அகலமானதகவும், நிவிர்த்தி செய்ய முடியாததாகவும் ஆகிவிடும். இது போன்ற சூழ்நிலைகளை தவிர்க்கும் நோக்குடன் ஆங்கில விக்கியில் "Policies and guidelines" தவிர பல கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. Notability essays மற்றும் Civility essays ஆகிய பகுப்புகளின் கீழுள்ள கட்டுரைகளை விரைவாக தமிழ் விக்கி-வுக்கு மொழி மற்றம் செய்ய பயனர்களை கோருகிறேன். - வைகுண்ட ராஜா (பேச்சு) 07:31, 7 மார்ச் 2014 (UTC)
  9. --சங்கர இராமசாமி/உரையாடுக. 09:40, 9 மார்ச் 2014 (UTC)

# ::மேலே குறித்த காரணங்கள்-- சுமதி(பேச்சு) 21: 25, 6 மார்ச் 2014 (UTC) (காரணம்: 150 பங்களிப்புகளுக்கு மேல் இல்லை.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:33, 6 மார்ச் 2014 (UTC))

வாக்கெடுப்பு முடிவு[தொகு]

  • பதிவான மொத்த வாக்குகள் - 28
  • செல்லுபடியாகும் வாக்குகள் - 27
  • நிருவாக அணுக்கம் நீக்க ஆதரவு தரும் வாக்குகள் - 12 (44.44%)
  • நடுநிலை - 6 (22.22%)
  • நிருவாக அணுக்கம் நீக்க வேண்டாம் என்னும் வாக்குகள் - 9 (33.33%)

இந்த வாக்கெடுப்பு தொடர்பாக அதிகாரி நிலை பயனர்கள் நேரடி, உடனடி முடிவு எடுக்க மூன்றில் இரு பங்கு வாக்குகள் (66.66%) தேவை. எனவே, இந்த வாக்குகளின் எண்ணிக்கை, கருத்து ஆகியவற்றைக் கவனித்து உரிய முடிவை அறிவிக்கும் பொறுப்பு பிணக்குத் தீர்ப்பாயத்துக்குச் செல்கிறது. தமிழ் விக்கிப்பீடியாவில் இது வரை பிணக்குத் தீர்ப்பாயம் உருவாக்கப்படவில்லை என்பதால், அதனை உருவாக்குவதற்கான பணிகள் தொடங்கும். அதன் பிறகு, தன்னுடைய முதல் வழக்காக இந்ந வாக்கெடுப்பைக் கவனத்தில் எடுத்து உரிய முடிவை பிணக்குத் தீர்ப்பாயம் அறிவிக்கும். நன்றி. --இரவி (பேச்சு) 06:19, 10 மார்ச் 2014 (UTC)

இரவி பிணக்குத் தீர்பாயத்துக்கான ஆங்கிலப் பக்கத்துக்கு இணைப்புத் தர முடியுமா?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 15:29, 18 மார்ச் 2014 (UTC)