பயனர் பேச்சு:Anbumunusamy
|
---|
1 |
வாருங்கள்!
வாருங்கள், Anbumunusamy, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!
உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.
தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!
நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.
பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:
- விக்கிப்பீடியாவின் ஐந்து தூண்கள்
- விக்கிப்பீடியா:கொள்கைகளும் வழிகாட்டல்களும்
- விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று
- கட்டுரையை எப்படித் தொகுப்பது?
மேலும் காண்க:
- {{கலைக்களஞ்சியக் கட்டுரை விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் படிமம்}}
- {{தானியங்கித் தமிழாக்கம்}}
- {{வெளி இணைப்பு விளக்கம்}}
- {{கட்டுரையாக்க அடிப்படைகள்}}
--அன்புமுனுசாமி (பேச்சு) 07:19, 29 மே 2015 (UTC)
சேர்ந்து நடைபயிலலாம்
[தொகு]சகோதரர், அன்புமுனுசாமி தங்களின் மொழி ஆர்வத்தினை மெச்சுகின்றேன். பயிற்சியும், முயற்சியும் உங்களது எண்ணங்களை சாதனையாக்கும் ஆக விடாமுயற்சியால் வெல்லுங்கள். எனது விக்கி பயண அனுபவத்தினை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன், அது உங்களுக்கு உத்வேகமளிக்கும் என நம்புகின்றேன். விக்கியின் வளர்ச்சியின் மேலுள்ள எண்ணங்களின் காரணமாக எமது விக்கியின் ஆரம்பகாலங்களில் விக்கிசகோதரர்கள் பல தடையினை எமக்கும் ஏற்படுத்தினார்கள், பல கட்டுரைகளுக்கு பின்னரே என் நம்பகத்தன்மை ஏற்றுக்கொள்ளப்பட்டது. எனினும் விக்கியில் தொடர்ச்சியாக எழுதுவோரின் பல கட்டுரைகளில் எழுத்துப்பிழைகள் மட்டுமின்றி கருத்தாங்களும் மாற்றமடைவது வழமையானதுவே... ஆக நீங்கள் தளரவேண்டாம்.
விக்கி திறந்தவெளி மைதானம் போன்றது எனினும், இது அனைவராலும் அறிவுத்தேடலுக்கு பயன்படுத்தகூடியது என்பதை மனதில் வைத்து செயற்படுவோம். ஒரு முறை நம்பகத்தன்மை போய்விடின் மீட்பது கடினம், நான் வெளிப்படையாக விக்கியில் எழுதவதைப் பற்றி என் நண்பர்களிடத்தும் விவாதிப்பது இல்லை, ஏனெனில் இது தற்பெருமைபடத் தகுந்த விசயமென்பதை விட பல மாணக்கர்களுக்கு பயன்படவேண்டும் என்பதுவே எனது எண்ணம். புரியவில்லையா, என் நண்பர்கள் இவனுக்கு என்ன தெரியும் இவன் சென்று அங்கு என்ன எழுதிக் கிழிக்கிறான் என்ற எண்ணம் தோன்றுமெனில் அது விக்கியின் நம்பிக்கையை அசைத்துப் பார்க்குமென்பேன். விக்கியில் பல்துறைவித்தகர்கள், ஆதாரங்கள் இருப்பினும் வெகுஜன எண்ணங்களை வெல்வது என்பது முக்கியமென்பதையும் கவனத்தில் கொள்ளவும். இது பெருமைத்தரக்கூடிய விசயமென்பதுவைவிட அறம் சார்ந்த அர்ப்புணிப்புடன் கூடிய தர்மம் ஆகும். ஆக இதனையும் கவனத்தில் கொள்ளுதல் நலம். இதனால்தான் நமது நிர்வாகிகள் கடுமை செலுத்துகின்றார்கள். :)
ஆரம்பகாலத்தில் என்ன மாதிரியான கட்டுரையை எடுப்பது
[தொகு]பொதுவாக ஒரு குறிப்பிட்ட கருத்துகொண்ட கட்டுரையை தொடர்ச்சியாக எடுத்தாள்வது நமக்கு மொழிச்செழிமையையும், வாக்கிய நடையையும், சொற்கள் கையாளுவதையும் எளிதாக்கும். எ.கா, நீங்கள் சிறப்புத் தினங்கள் பற்றி எழுதி வருகிறீர்கள், நான் எனது ஆரம்ப காலங்களில் தொடருந்து பற்றிய கட்டுரைகளை எழுதுவதை சகோதரர் மா. செல்வசிவகுருநாதன் ஊக்குவித்தார் என்பதையும் பதிவு செய்யவிரும்புகிறேன். இதனால் உங்களுக்கு எப்படி கட்டுரையை கொண்டு செல்வது, மேலும் சொற்கள் உருவாக்கம் போன்றவை எளிதாகும்.
விக்சனரி, கூகுள் மொழியாக்கம் (இது விக்கியில் தடைச்செய்யப்பட்டுள்ளதையும் கவனத்தில் கொள்க) போன்றவற்றின் மூலம் தேவைப்படின் மொழியாக்கம் செய்யுங்கள் ஆனால் உங்கள் கண்ணோட்டத்தினை அதில் அழுத்தமாக பதிக்கவும்.
முதலில் மற்ற கட்டுரைகளை வாசிக்கத்தொடங்குவோம், பின்பு அந்தக் கட்டுரைகளிலுள்ள பிழைகளைத் திருத்தம் செய்வதன் மூலம் எப்படி கட்டுரையை விக்கியில் சமைக்கிறார்கள் என்பதறிவது எளிது.
முதலில் கட்டுரையின் தலைப்பிற்கேற்ற எண்ணங்களை குறைந்தப் பட்சம் இரண்டொரு வாக்கியங்களில் அமையுங்கள். பின்பு விரிவாக்கம் செய்யுங்கள். எந்த கட்டுரைக்கும் ஆதாரம், மேற்கோள்கள் முக்கியம், அதனால் அதனை கட்டாயம் இணையுங்கள்.
பின்பு வார்ப்புருக்கள் (Template) இருந்தால் இணையுங்கள், அனைத்துக் கட்டுரைகளையும் ஏற்கனவே உள்ள பகுப்பில்(category) இணையுங்கள். கடைசியாக பொருத்தமான ஆங்கில கட்டுரையோடு இணையுங்கள்.(இடதுபுறம் கிழுள்ள மொழிப்பட்டியலில்)
ஆரம்பநாட்களில் செய்யக்கூடாதவைகள்
[தொகு]அனைத்து கட்டுரைகளிலும் பயன்படுத்தப்படும் பகுப்பு உருவாக்கம் அல்லது வார்ப்புருக்கள் உருவாக்கம் முதலியவற்றை தவிர்த்துவிட்டு கட்டுரையில் கவனம் செலுத்தல் நலமென்பேன், தொடர்ச்சியாக நீங்கள் செயற்படும்பொழுது பகுப்புகள் பற்றிய எண்ணங்கள் வளரும், அப்பொழுது அதனை உருவாக்கி கொள்ளலாம். ஆனால் வார்ப்புருக்கள் பெரும்பாலும் நிரல்மொழி (software) தொடர்பு கொண்டவை அதனால் அதன் உருவாக்கம் விரிவாக்கம் போன்றவற்றில் தள்ளி இருப்பது நலம். நானும் சில வார்ப்புருக்களை தமிழ் படுத்த முயன்றபொழுதுதான் அதன் நீட்சி ஆங்கில விக்கிபீடியா வரை சென்றதை அறியமுடிந்தது. அதனால் வார்ப்புருக்களில் கூடுதல் கவனம் தேவை.
ஆரம்பநாட்களில் ஆர்வ மிகுதியால் கட்டுரையின் எண்ணிக்கையில் கவனம் செலுத்துதல் என்பது இயல்பே. ஆனால் எண்ணிக்கையை விட கருத்தாக்கமே முக்கியமானது, இரண்டொரு வாக்கியமைப்பு கட்டுரையாக கூட எழுதுங்கள் ஆனால் பொருள் செறிவுடன் எழுதுங்கள். இங்கு நமது கட்டுரைகள் திருத்தப்படுவது என்பது இயல்பு எனினும், மற்றவர்களின் பங்களிப்பு நமது கட்டுரைக்கு மேலும் வலுச்சேர்க்கும் வகையில் இருக்கவேண்டுமேயொழிய பிழைத்திருத்தங்கள், சந்திப்பிழை போன்றவைகள் மற்றவர்களினால் திருத்தப்படா வண்ணம் கட்டுரையை முதலிலே செயற்படுத்துங்கள். இதனால் நிர்வாகிகளின் பணி எளிதாகும்.
உங்களது பன்னாட்டு மொழிபெயர்ப்பு நாள் கட்டுரையினை எனதறிவிற்கு எட்டியவரை திருத்தியுள்ளேன். பாருங்கள் உங்களுக்கு பயன்தரும். முற்றுப்புள்ளி காற்புள்ளிகளுக்கு பின்புறம் இடைவெளி விடுங்கள். ஏற்கனவே உள்ள தமிழ் விக்கி கட்டுரைகளை பொருத்தமான இடங்களில் இணையுங்கள். எ.கா தமிழ் பல்கலைக்கழகம் என்ற இடத்தில் தமிழ் என்று இணைத்திருந்தீர்கள் ஆனால் பொருத்தமானது தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர். நேரம் கிடைத்தால் உங்கள் மற்ற கட்டுரைகளையும் திருத்துகின்றேன்.
இதனால் நீங்கள் மனக்கலக்கம் அடையவேண்டாமென்பது என்னுடைய தாழ்மையான விண்ணப்பம், வாருங்கள் சேர்ந்து நடைபயிலலாம். பொழுதுப்போக்கினை கூட பிறர்க்கு பயன்படும் வகையில் நீங்கள் முயலுவது என்னை வியப்பாக்குகின்றது. எம்முடைய தனிப்பட்ட விருப்பம்யாதெனில் ஆண்டுதோறும் பேராசிறியர்கள் அனைவரும் இது போன்ற கட்டுரைகளை ஒன்றோ இரண்டோ உருவாக்கவேண்டும் என்பதுவே...--குறிஞ்சி (பேச்சு) 10:01, 30 செப்டம்பர் 2015 (UTC)
ஆசிய மாதம், 2015
[தொகு]வணக்கம்,
ஆசிய மாதம் போட்டியில் கலந்து கொண்டு, கட்டுரைகளை உருவாக்கி வருவதற்கு பாராட்டுக்களும் நன்றிகளும்.
நினைவுபடுத்தலுக்காக: பின்வரும் விதிகளுக்கேற்ப கட்டுரைகளை உருவாக்கும்படி கோட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.
- கட்டுரைகளை (குறுங்கட்டுரை விரிவாக்கம் அல்ல) நவம்பர் 1, 2015 00:00 முதல் நவம்பர் 30, 2015 23:59 UTC வரையான காலப்பகுதியில் புதிதாக உருவாக்க வேண்டும்.
- கட்டுரையின் உரைப்பகுதி (வார்ப்புரு, குறிப்புகள், உசாத்துணை, ஆதாரங்கள், நூல் பட்டியல் போன்றவை தவிர்த்து) குறைந்தது 300 சொற்களைக் கொண்டிருக்க வேண்டும். (wordcounttools மூலமாக சொற்களின் எண்ணிக்கை நீங்களும் சரி பார்க்கலாம்.)
- பட்டியல் பக்கங்கள் எழுதலாம். போட்டிக்கான கட்டுரை எண்ணிக்கையில் கருத்தில் கொள்ளப்படாது.
- இந்தியா, இலங்கை பற்றி அல்லாமல் மற்ற ஆசிய நாடுகள் அல்லது வட்டாரங்கள் பற்றியதாக கட்டுரைகள் உருவாக்கப்பட வேண்டும்.
குறிப்பு: இதுவரை 50 இற்கு மேற்பட்ட கட்டுரைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
நன்றி
ஆசிய மாதம் - முதல் வாரம்
[தொகு]வணக்கம்,
ஆசிய மாதம் போட்டியில் கலந்து கொண்டு, கட்டுரைகளை உருவாக்கி வருவதற்கு பாராட்டுக்களும் நன்றிகளும்.
ஒழுங்கமைப்பாளர்கள் ஒவ்வொரு கட்டுரையையும் மதிப்பீடு செய்ததும், இங்கே (Y), (N) ஆகிய எழுத்துக்களால் குறிப்பிடுவார்கள். இதை நீங்கள் செய்ய வேண்டாம்.
- இங்குள்ள (Y) என்பது கட்டுரை விதிக்கு ஏற்ப உள்ளதென்பதைக் குறிக்கிறது.
- இங்குள்ள (N) என்பது கட்டுரை விதிக்கு ஏற்ப இல்லை என்பதைக் குறிக்கிறது.
- இங்குள்ள (P) என்பது கட்டுரை விதிக்கு ஏற்ப இருந்தாலும், சில சிக்கலால் மதிப்பீட்டு நிலையிலேயே உள்ளது என்பதைக் குறிக்கிறது.
- (Y), (N) இல்லாமல் இருந்தால் இற்றைப்படுத்தவில்லை அல்லது கட்டுரை இன்றைப்படுத்தும்படி விடப்பட்டுள்ளது எனக் கொள்ளலாம்.
- இங்குள்ள (Y), (N) அல்லது (P) என்பன மேல் விக்கியின் முடிவுகளின்படியே இங்கு இற்றைப்படுத்தப்படடுள்ளது.
கட்டுரையை மீளவும் மதிப்பீடு விரும்பினால், கட்டுரையை அடுத்துள்ள (N) அல்லது (P) என்பதை நீக்கிவிடுங்கள். ஒருங்கிணைப்பாளர்கள் கட்டுரைய மீளாய்வு செய்வார்கள்.
கட்டுரை ஏன் "இல்லை" (N) அல்லது "மதிப்பிடப்படுகிறது" (P) என்பதை, மதிப்பிடும் கருவியிலுள்ள இணைப்பு வழியாக அறிந்து கொள்ளலாம்.
குறிப்பு: இணைக்கப்படும் கட்டுரைகளை [[பகுப்பு:ஆசிய மாதக் கட்டுரைகள் நவம்பர் 2015]] என்ற பகுப்பினுள் இணைத்துவிடுங்கள். கட்டுரைகளை விதிக்கு ஏற்ப தொகுத்து முடிந்ததும் இங்கு இணையுங்கள். முன் கூட்டியே பதிவு செய்யத் தேவை இல்லை.
{{User Asian Month}}, இது விக்கிப்பீடியாவின் ஆசிய மாதம் போட்டியில் பங்குபற்றுபவர்களுக்காக பயனர் வார்ப்புரு. இதனை உங்கள் பயனர் பக்கத்தில் இணைக்கலாம்.
நன்றி --MediaWiki message delivery (பேச்சு) 19:49, 9 நவம்பர் 2015 (UTC)
ஆசிய மாதம் - இறுதி வாரம்
[தொகு]வணக்கம்!
கிட்டத்தட்ட ஆயிரம் விக்கிப்பீடியர்களில் ஒருவராக விக்கிப்பீடியா ஆசியா மாதத்தில் இணைந்து கொண்டமைக்கு நன்றி. சிலர் நல்ல முறையில் போட்டியில் பங்களிப்புச் செய்து கொண்டிருக்கையில், வேறுசிலர் நல்ல பங்களிப்புக்கு முயன்று கொண்டிருக்கிறார்கள். இந்நேரத்தில், சில இற்றைப்படுத்தப்பட்ட செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
- விக்கிப்பீடியா ஆசியத் தூதுவர் என்ற பட்டத்தைப் பெற நீங்கள் விரும்பினால், திட்டத்தின் பக்கத்தில் மற்றவர்கள் எவ்வாறு முனைப்புடன் செயற்படுகிறார்கள் என்பதில் இருந்து அறியலாம்.
- ஒரு வாரத்திற்கும் குறைவான நாட்களே போட்டி முடிவடைய இருப்பதால், உங்கள் பங்களிப்புக்களை திசம்பர் 3, 2015 (UTC) இற்கு முன் தெரிவியுங்கள். ஆனால், நவம்பர் மாதத்தில் செய்யப்பட்ட பங்களிப்புக்கள் மாத்திரம் போட்டிக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
- நீங்கள் ஐந்து கட்டுரைகளை போட்டிக்கென தெரிவித்து, அதில் ஒன்று சிறு காரணத்திற்கான தகுதி அடையவில்லை (குறைந்தது 300 சொற்களைக் கொண்டிருக்க வேண்டும், அல்லது சிக்கலான வார்ப்புருக்கள் காணப்படல்) என்றாலும், உங்களுக்கு அஞ்சலட்டை அனுப்பி வைக்கப்படும்.
- நீங்கள் போட்டியை முறையாக முடித்திராவிட்டாலும், உங்களை பங்களிப்பாளராகப் பெற்றதில் மகிழ்சியடைகிறோம்.
குறிப்பு: முடிந்தால் {{WAM talk 2015}} என்ற வார்ப்புருவை போட்டிக்காக உருவாக்கும் கட்டுரைகளின் பேச்சுப் பக்கத்தில் இணைத்துவிடுங்கள்.
உங்களுக்கு ஏதும் கேள்வியிருந்தால், என்னைத் தொடர்பு கொள்ளுங்கள். --AntanO --MediaWiki message delivery (பேச்சு) 04:15, 28 நவம்பர் 2015 (UTC)
பதக்கம்
[தொகு]அசத்தும் புதிய பயனர் பதக்கம் | ||
விக்கிப்பீடியாவில் கட்டுரைகளை எழுதி மேம்படுத்துவது கண்டு மகிழ்ந்து இப்பதக்கத்தை அளிக்கிறேன். மேலும் முனைப்போடு பங்களிக்க வாழ்த்துக்கள். நன்றி மாதவன் ( பேச்சு ) 17:15, 9 திசம்பர் 2015 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது |
- @( மாதவன் ( பேச்சு )அடியேன் ஆனந்த வணக்கத்தை சமர்ப்பிக்கிறேன், விக்கியின் பயணத்தில் இதுவே எனது முதல் பதக்கம் விக்கியன்பு மூலம் வழங்கிய இப்பதக்கத்தை என் வாழ்நாளில் கிடைத்த பொக்கிஷமாக போற்றி மகிழ்கிறேன், ஆக்கங்கள் தரும் ஊக்கமாக என்னி களிக்கின்றேன். விக்கிக்கும் இதை விதைத்தோர்க்கும் அகமகிழ்ந்து நன்றி கூறுகிறேன்.--அன்புமுனுசாமி (பேச்சு) 21:15, 09 திசம்பர் 2015 (UTC)
முயற்சியைப் பாராட்டுகிறேன்
[தொகு]நீங்கள் மிகவும் முயன்று எழுதுகிறீர்கள். பாராட்டுக்கள். உண்மையாகவே மன மகிழ்வுடன் பாராட்டுகிறேன்.--பாஹிம் (பேச்சு) 16:51, 13 திசம்பர் 2015 (UTC)
- @பாஹிம்--தாங்களின் மனதிறந்த பாராட்டை, சிரந்தாழ்த்தி ஏற்று மகிழ்கிறேன், நன்றிகள்.--அன்புமுனுசாமி (பேச்சு) 12:59, 25 திசம்பர் 2015 (UTC)
உங்களுக்கு தெரியுமா அறிவிப்புத் திட்டம்
[தொகு]நீங்கள் பங்களித்த தோபா ஏரி என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் 2015 திசம்பர் 09 அன்று வெளியானது. |
நீங்கள் பங்களித்த கோடை அரண்மனை என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் 2015 திசம்பர் 16 அன்று வெளியானது. |
நீங்கள் பங்களித்த நரகத்திற்கான கதவு என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் 2016 சூன் 01 அன்று வெளியானது. |
- அடியேன் பங்களிப்பை பறைசாற்றியமைக்கு நன்றிகள்--அன்புமுனுசாமி
- அயராத உழைப்பிற்கு வெற்றி உறுதி! நேசத்துடன்... --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:58, 8 சனவரி 2016 (UTC)
- @மா. செல்வசிவகுருநாதன், நேசத்திற்கு வணக்கம், தாங்களின் ஊக்கத்தை சிரம் தாழ்த்தி ஏற்கிறேன். அன்புடன்...--அன்புமுனுசாமி 13:13, 8 சனவரி 2016 (UTC)
விக்கிப்பீடியாவின் ஆசிய மாதம்
[தொகு]விக்கிப்பீடியாவின் ஆசிய மாதம் | |
ஆசிய மாதம் 2015 திட்டத்திற்குக் கட்டுரைகள் உருவாக்கிப் பங்களித்தமைக்கு நன்றிகள்! --AntanO 06:00, 25 திசம்பர் 2015 (UTC) |
- @ AntanO--தாங்களின் அறிவிப்பில் ஆனந்தமடைந்தேன், நன்றிகள்!--அன்புமுனுசாமி (பேச்சு) 13:10, 25 திசம்பர் 2015 (UTC)
ஆசிய மாதம் - நிறைவு
[தொகு]வணக்கம்!
ஆசிய மாதம் போட்டியில் கலந்து கொண்டு வெற்றியீட்டியதால், உங்கள் பெயரினை இந்த மதிப்பீட்டுப் படிவத்தை நிரப்புவதன் மூலம் உள்ளீடு செய்யுங்கள்.
குறிப்பு: படிவம் ஆங்கிலத்தில் உள்ளது. உதவி தேவையெனின் என் பேச்சுப்பக்கத்தில் குறிப்பிடுங்கள். நன்றி! --AntanO 09:22, 13 சனவரி 2016 (UTC)
பதக்கம்
[தொகு]விடாமுயற்சியாளர் பதக்கம் | |
நீங்கள் விடாமுயற்சியுடன் பங்களிக்கக் கற்றுக்கொண்டு தொடர்ந்து கட்டுரைகளை பங்களிக்கிறீர்கள். எனவே, உங்களுக்கு இப்பதக்கத்தினை மகிழ்வுடன் அளிக்கிறேன். --நந்தகுமார் (பேச்சு) 18:53, 19 சனவரி 2016 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை) |
- @நந்தகுமார் தாங்களுக்கு வணக்கம், விக்கியன்பு மூலம் இப்பதக்கம் வழங்கியமைக்கு உளம்மகிழ்ந்த நன்றிகள்!--அன்புமுனுசாமி
- விருப்பம்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:29, 19 சனவரி 2016 (UTC)
- @மா. செல்வசிவகுருநாதன் தாங்களுக்கு வணக்கம், விரும்பியமைக்கு நன்றிகள்!--அன்புமுனுசாமி
- விருப்பம்--{{✔|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|✆|✎|★}} 18:51, 20 சனவரி 2016 (UTC)
- @ ஸ்ரீகர்சன் தாங்களுக்கு வணக்கம், விரும்பியமைக்கு நன்றிகள்!--அன்புமுனுசாமி
தொடர் பங்களிப்பாளர்
[தொகு]தொடர் பங்களிப்புக்கு நன்றி
வணக்கம், Anbumunusamy!
தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ந்து பங்களிப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள், ஆய்வாளர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராகத் திகழ்கிறீர்கள். உங்கள் தொடர் பங்களிப்புகள் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருக்கிறது.
மக்கள் தொகை அடிப்படையில் தமிழ் உலகளவில் 18வது இடத்தில் இருந்தாலும், விக்கிப்பீடியா கட்டுரைகள் எண்ணிக்கையில் உலகளவில் 60ஆவது இடத்திலேயே உள்ளது. இந்த நிலையை மாற்ற, தமிழில் பல அறிவுச் செல்வங்களைக் கொண்டு வந்து சேர்க்க உங்கள் பங்களிப்புகள் உதவும்.
பின்வரும் வழிகளின் மூலமாக உங்கள் பங்களிப்புகளைத் தொடரலாம்:
- ஏற்கனவே உள்ள குறுங்கட்டுரைகளை விரிவாக்கலாம். தமிழ் விக்கிப்பீடியாவில் 15% குறைவான கட்டுரைகள் மட்டுமே 10 kb அளவுக்கு மேல் உள்ளன.
- உங்களுக்கு விருப்பமான விக்கித் திட்டங்களில் இணைந்து செயலாற்றலாம். புதிய திட்டங்களைத் தொடங்கலாம்.
- தமிழ் விக்கிப்பீடியாவின் துப்புரவு, பராமரிப்புப் பணிகளில் உதவலாம்.
- விக்கிப்பீடியாவைப் பற்றி பலருக்கும் எடுத்துரைக்க பயிற்சிப் பட்டறைகளில் கலந்து கொண்டு உதவலாம்.
இன்னும் சிறப்பாக பங்களிக்க ஏதேனும் உதவி தேவையென்றால், தயங்காமல் என் பேச்சுப் பக்கத்தில் எழுதுங்கள். நன்றி.
-- மாதவன் ( பேச்சு ) 11:25, 25 சனவரி 2016 (UTC)
- @ மாதவன் தோழமைக்கு வணக்கம், களஞ்சியக் கடலில் அடியேனை இனங்கண்டு சமூகத்தில் இணைத்தமைக்கு இன்புற்று நன்றிகள்!--அன்புமுனுசாமி 23:30, 25 சனவரி 2016 (UTC)
வாழ்த்துகள்...!
[தொகு]காஞ்சிபுரம் சாந்தாலீசுவரர் கோயில் கட்டுரையை ஒரு முழுமையான கட்டுரையாக பதிவேற்றம் செய்ததைப் பார்த்தபோது, விக்கி இப்போது உங்களுக்கு நன்கு பழகிவிட்டதை உணர முடிகிறது. தொடரட்டும் உங்கள் பணி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:33, 14 பெப்ரவரி 2016 (UTC)
- @Selvasivagurunathan m: தோழமைக்கு வணக்கம், தாங்களின் வாழ்த்தை தலைவணங்கி ஏற்று மகிழ்கிறேன்.நன்றிகள்!--அன்புமுனுசாமி பிப்ரவரி 15 2016 06:20, (UTC)
பதக்கம்
[தொகு]சைவ சமயக் கட்டுரைப் பங்களிப்புப் பதக்கம் | |
சைவசமயம் குறித்த கட்டுரைகள் எழுதுவதற்காக இப்பதக்கம். மேலும் முனைப்போடு பங்களிக்க வாழ்த்துக்கள். -- மாதவன் ( பேச்சு ) 15:56, 28 பெப்ரவரி 2016 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை) |
- விருப்பம்--Booradleyp1 (பேச்சு) 16:24, 28 பெப்ரவரி 2016 (UTC)
- @Booradleyp1: அவர்களுக்கு வணக்கம், மகிழ்வித்தமைக்கு நன்றிகள்!--அன்புமுனுசாமி பேச்சு 21:59, 28 பிப்ரவரி 2016 (UTC)
- @Maathavan: அவர்களுக்கு வணக்கம், தாங்கள் விக்கியன்பு மூலம் வழங்கப்பட்ட பதக்கத்தையும், வாழ்த்துக்களையும் தலைவணங்கி ஏற்று மகிழ்கிறேன்; சைவ சமயக் கட்டுரைப் பங்களிப்பு எமது பாக்கியமென்றே நினைக்கிறேன் நன்றிகள்!--அன்புமுனுசாமி பேச்சு 21:39, 28 பிப்ரவரி 2016 (UTC)
- விருப்பம் எண்ணற்ற காஞ்சிபுர கோயில்களைப் பற்றி தொகுத்துள்ளீர்கள். இத்தொகுத்தலுக்கு தாங்கள் ஒதுக்கிய காலத்தினையும், தன்முனைப்பையும் காணுகையில் பெரும் உவகை கொள்கிறேன். தம்பி மாதவன் அருமையான பதக்கத்தினை நல்கியிருக்கிறார். வாழ்த்துகள். தொடர்ந்து சைவத்தினை செம்மை செய்யுங்கள். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 16:55, 27 ஏப்ரல் 2016 (UTC)
- @Jagadeeswarann99: தோழமைக்கு வணக்கம், தாங்கள் உவகையுடன் வாழ்த்தியதில் பெருங்களிப்படைந்து நன்றி கூறுகிறேன், மேலும் இதுபோன்ற ஊக்கத்தில் அகமகிழ்ந்து ஆக்கத்திற்கு ஆயத்தமாகிறேன். நன்றிகள்!--அன்புமுனுசாமி பேச்சு 22:42, 27 ஏப்ரல் 2016 (UTC)
Address Collection Notice
[தொகு]Hi there, thank you for contributing to Wikipedia Asian Month in November 2015. You are qualified to receive (a) postcard(s) but we did not hear your back in past two months, or it could be an error on Google's server or a mistake. If you still willing to receive one, please use this new surveyto submit your mailing address. The deadline will be March 20th.
--AddisWang (talk) 14:40, 9 March 2016 (UTC)
அறிவிப்பு
[தொகு]பயனர்:Munusamyanbu - இக்கணக்கு உங்களுடையதா? முன்னர் இது பற்றி அறிவிக்கப்பட்டது. மேலும், பயனர் பக்க அறிவிப்புக்களை நீக்குவது பொருத்தமான செயல் அல்ல. நன்றி. --AntanO 02:08, 22 மார்ச் 2016 (UTC)
- இது பற்றிய விளக்கம் அளிக்கப்படாவிட்டால், பயனர் கணக்கு சோதனைக்கு உள்ளாக்கப்படும். --AntanO 05:24, 22 மார்ச் 2016 (UTC)
@AntanO: தோழமைக்கு வணக்கம், பயனர் கணக்கு பற்றிய விவரங்கள் தாங்கள் ஏற்கனவே கூறியது நினைவுள்ளது. ஒருவர் ஒரு கணக்குக்கு மேல் பயன்படுத்தக்கூடாது நானும் அறிந்துள்ளேன். மேலும், பயனர்:Munusamyanbu எனும் இக்கணக்கு எனது மகன் (வசந்த்) துவங்கியுள்ளது, அவன் ஒன்பதாம் வகுப்பு பயின்று வருகிறான். எனது ஆலோசனைப்படி விக்கிபீடியாவில் புதிய கணக்கு தொடங்கி இருக்கிறான். (குறிப்பு எனது பொதுவக கணக்கு முடங்கியுள்ளதால் படிம பதிவேற்றத்திற்கு அவனது கணக்கை பயன்படுத்துகிறேன். நன்றிகள்! ஐய்யமிருப்பின் ஆய்வு செய்துகொள்ளலாம். அன்புமுனுசாமி பேச்சு 18:09, 22 மார்ச்சு 2016 (UTC)
- உங்கள் கருத்தில் ஏரண நியாயம் இருப்பினும், புதுக்கணக்கு உருவாக்கியது பிழை: காரணம், கணக்கு தடை செய்யப்பட்டால், தடையை மீறுவதற்கு இன்னொரு கணக்கை உருவாக்கக் கூடாது என விக்கி விதி விளக்கமளிக்கிறது. மேலும் இன்னொருவர் கணக்கை நீங்கள் பயன்படுத்துவது ஏற்புடையதும் அல்ல. உங்கள் தடையினால் புதுக்கணக்கு மூலம் பதிவேற்றியதும் பிழை. இதனால், மூன்றாவது கணக்கு பொதுவகத்தில் முடிவிலியாகத் தடை செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்தும் இவ்வாறு செய்ய முற்படாதீர்கள். அவ்வாறு செய்தால் சகல கணக்குகளும் முடிவிலித் தடைக்கு உள்ளாகும். குறிப்பு: ஆய்வு செய்ததில் மூன்றாவது கணக்கு கைப்பாவை கணக்கு எனத் தெரிய வந்தது. இவற்றைக் காருத்திற் கொள்ளவும்: விக்கிப்பீடியா:கைப்பாவை, மேலதிக விபரங்களுக்கு: en:Wikipedia:Sock puppetry --AntanO 02:07, 23 மார்ச் 2016 (UTC)
- @AntanO: தோழமைக்கு வணக்கம், பிழைக்கு மீண்டும் மன்னிப்பு கூறுகிறேன்; மேலும், நான் பங்களித்துவரும் கட்டுரைகளுக்கு உரிய படிமங்களை எவ்வாறு பதிவேற்றி சேர்ப்பது தாங்களின் ஆலோசனை அடியேனுக்கு தேவை, அருள்கூர்ந்து வழிவகை அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். நன்றிகள்!--அன்புமுனுசாமி பேச்சு 14:16, 23 மார்ச்சு 2016 (UTC)
- பொதுவகத்தில், Blocked என்பதன் கீழ் {{unblock|your reason here}} என்று உள்ளிடுங்கள். your reason here என்பதை நீக்கிவிட்டு, ஏன் தடையை நீக்க வேண்டும் என்ற காரணத்தைத் தெரிவியுங்கள். அங்கு தமிழ் தெரியாத நிருவாகிகள் அதிகம் இருப்பதால், ஆங்கிலத்தில் இருப்பது சிறப்பு. --AntanO 09:16, 23 மார்ச் 2016 (UTC)
நுட்பப் பயிற்சிப் பட்டறைக்கான பங்கேற்பாளர் பதிவு
[தொகு]தமிழ் விக்கிப்பீடியர்களுக்கான நுட்பப் பயிற்சிப் பட்டறைக்கான பங்கேற்பாளர் பதிவு தொடங்கியுள்ளது. பெயரைப் பதியவும் கூடுதல் விவரங்களுக்கும் இங்கு வாருங்கள். பெயரைப் பதிவு செய்ய இன்னும் இரண்டு நாட்களே உள்ளன.--இரவி (பேச்சு) 18:20, 26 மார்ச் 2016 (UTC)
- @Ravidreams: தோழமைக்கு வணக்கம், தமிழ் விக்கிப்பீடியர்களுக்கான நுட்பப் பயிற்சிப் பட்டறைக்கான நிகழ்வில் கலந்துகொள்ளவும், கலந்துரையாடவும் மிகவும் ஆர்வமாகவும், ஆசையாகவும் இருக்கிறேன் ஆனால், பணியிடம் விடுப்பு கிடைக்காமையால் மூன்று நாள் நிகழ்வில் கலந்துகொள்ள இயலவில்லை இருப்பினும், நிகழ்ச்சியின் கடைநாளான மே 1 அன்று காலை முதல் - மாலை முடிய; கலந்துகொள்ள முடிவுசெய்துள்ளேன்; வாய்ப்புள்ளதா? என அருள்கூர்ந்து தெரியபடுத்துங்கள்.நன்றிகள்!--அன்புமுனுசாமி (பேச்சு) 07:32, 27 மார்ச்சு 2016 (UTC)
படிமம்
[தொகு]இன்று பதிவேற்றிய படிமத்தில் பதிப்புரிமை சிக்கல் இருந்ததால் நீக்கப்பட்டது. இவ்வாறு இனியும் செய்ய வேண்டாம். மேலும், உங்கள் சொந்தப்படைப்புக்களை பொதுவகத்தில் பதிவேற்றுங்கள். நன்றி. --AntanO 03:14, 8 சூன் 2016 (UTC)
- நியாயப் பயன்பாட்டுப் படிமங்கள், பொதுப்பரப்பில் இல்லாத படிமங்களை மாத்திரம் இங்கு பதிவேற்றுங்கள். கல்வி நோக்கத்திற்குப் பயன்படுத்தாத படிமங்கள் விக்கியூடகத்தில் (பொது, விக்கிப்பீடியா உட்பட) நீக்கப்படும். அறிவிப்புக்களை அலட்சியம் செய்வது தெடர்ந்தால் நீங்கள் தடைக்கு உள்ளாகலாம். இது தொடர்பில் பலமுறை உங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்அறிவிப்புக்களையும் நீங்கள் நீக்கியுள்ளீர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. --AntanO 04:29, 8 சூன் 2016 (UTC)
மேற்கோள்கள்
[தொகு]கட்டுரைகளில் தரப்படும் மேற்கோள்களில் ஆங்கிலம், அல்லது பிறமொழிக் கட்டுரைகளின் தலைப்புகளை மொழிபெயர்க்க வேண்டாம். மூல மொழிக் கட்டுரைத் தலைப்புகளையே தாருங்கள்.--Kanags \உரையாடுக 00:59, 16 சூன் 2016 (UTC)
@Kanags: அவர்களுக்கு வணக்கம், தாங்களின் ஆலோசனையை பின்பற்றுகிறேன். மேலும், வழிகாட்டியமைக்கு தாங்களுக்கு நன்றிகள்.--அன்புமுனுசாமி (பேச்சு) 08:45, 16 சூன் 2016 (UTC)
ஆயிரத்தெட்டு சிவலிங்கம்
[தொகு]வணக்கம் நண்பரே, தங்களுடைய காஞ்சிபுரம் ஆயிரத்தெட்டு சிவலிங்கம் என்றொரு கட்டுரையைக் கண்டேன். இக்கட்டுரையில் உள்ளபடியும், அதிலுள்ள இணைப்புகளில் உள்ளபடியும் இது கோயிலாக தெரியவில்லை. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலின் ஒரு சந்நிதியென விளங்குகிறது. இவ்வாறு தனித்த சந்நிதி என்றால் அக்கட்டுரையை காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் கட்டுரையுடன் இணைத்துவிடலாமா?. ஒரு சிவாலயம் என்பது மூலவர், அம்பிகை, ஏனைய பரிவாரத் தெய்வங்கள், திருக்குளம் என அமைந்திருக்க வேண்டும். ஒரே ஒரு மூர்த்தியை மட்டும் வைத்து கோயில் என வரையரை செய்தல் இயலாது. எனவே மேற்கண்ட கோரிக்கை பரிசீலிக்கவும். மேலும் தாங்கள் இத்தலத்திற்கு சென்று வந்திருந்தால், உடன் புகைப்படம் எடுத்திருந்தால் அதனையும் இணைக்க வேண்டுகிறேன். தங்களது கருத்தினை தெரிவிக்கவும். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 07:14, 20 சூன் 2016 (UTC)
- @Jagadeeswarann99: வணக்கம் தோழரே, தாங்கள் உரைத்தது சரிதான் என்றாலும் சிவம் ஓஆர்ஜியில் இவ்வாறுதான் வரிசைப்படித்தியுள்ளது காஞ்சி புராண படலத்துள் உட்கோயில்களாகச் சொல்லப்பட்டுள்ள கோயில்கள் என்று, எனினும் இதைப்பற்றி பரிசீலிப்போம் உரையாடியமைக்கு நன்றிகள்.--அன்புமுனுசாமி பேச்சு 13:38, 20 சூன் 2016 (UTC)
விக்கிக்கோப்பை 2016 முடிவுகள்
[தொகு]விக்கிக்கோப்பையில் வெற்றி பெற்றவர்களுக்கும் பங்கு பற்றிய அனைவருக்கும் பாராட்டுக்கள்!
தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், இருக்கும் கட்டுரைகளை விரிவாக்கவும் நடத்தப்பட்ட போட்டியில் 49 பேர் போட்டியிட தங்கள் பெயர்களைப் பதிவு செய்திருந்தனர். அதில் 21 பேர் பங்குபற்றினர். இப்போட்டியின் மூலம் 1639 கட்டுரைகள் புதிதாக உருவாக்கப்பட்டதோடு, 80 கட்டுரைகள் விரிவாக்கப்பட்டன.
3305 புள்ளிகள் பெற்று விக்கிக்கோப்பை 2016 வாகையாளராக எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (453 புதிய கட்டுரைகள்) திகழ்கிறார். 2810 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தை கி.மூர்த்தி (324 புதிய கட்டுரைகள்) பெறுகிறார். மூன்றாம் இடத்தை 1625 புள்ளிகள் பெற்ற மணியன் (169 புதிய கட்டுரைகள்) பெறுகிறார். இவர்களை அடுத்து புள்ளிகளைப் பெற்ற பாலாஜீ, மாதவன் முதல் 5 இடத்திற்குள் இடம் பெறுகின்றனர்.
மேலதிக விபரங்களை இங்கே காணலாம். MediaWiki message delivery (பேச்சு) 16:13, 20 சூலை 2016 (UTC)
- @எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி, கி.மூர்த்தி, Rsmn, Balajijagadesh, and Maathavan: சக தோழமைகளுக்கும் வணக்கம், 2016 விக்கிக்கோப்பை கட்டுரைப் போட்டியில் பங்களித்து பறைசாற்றிய அனைவரையும் வாழ்த்தி மகிழ்கிறேன். நன்றிகள்...
விக்கிக்கோப்பை 2016 பங்களிப்பாளர் பதக்கம்
[தொகு]MediaWiki message delivery (பேச்சு) 17:19, 20 சூலை 2016 (UTC)
- விருப்பம் + நன்றிகள்--அன்புமுனுசாமி
விக்கித்தரவு
[தொகு]அண்மையில் நீங்கள் உருவாக்கிய கட்டுரைகள் விக்கித்தரவில் பிறமொழிகளுடன் இணைக்கப்படாமல் உள்ளன. (ஆங்கிலம் உட்பட்ட) பிற மொழிக் கட்டுரைகளில் இணைப்பிருந்தால் இணைத்துவிடுங்கள். இல்லாவிட்டால் பரவாயில்லை. --AntanO 07:38, 21 சூலை 2016 (UTC)
- @AntanO: அவர்களுக்கு வணக்கம், தாங்களின் அறிவுரைப்படி மேற்கூறிய கட்டுரைகளுக்கு தரவுபடுத்த முயன்றேன் அக்கட்டுரைகளுக்கு மற்ற மொழியில் கட்டுரைகள் காணக்கிடைக்கவில்லை, ஆதலால் இதுபோன்ற கட்டுரைகளை மேற்கொண்டு எழுதலாமா? அல்லது விக்கியில் உள்ள மற்ற மொழி கட்டுரையை எடுத்து எழுத வேண்டுமா? அருள்கூர்ந்து தெளிவுபடுத்துங்கள். நன்றிகள்----அன்புமுனுசாமி09:23, 21 சூலை 2016 (UTC)
- மற்ற மொழிகளில் உள்ள கட்டுரைகளைத்தான் எழுத வேண்டும் என்றில்லை. ஜலந்தர் தேவி தாலாப் கோயில் கட்டுரை ஆங்கில மொழியில் இல்லாவிட்டாலும் நீங்கள் கன்னட மொழிக்கு இணைப்புக் கொடுத்துள்ளீர்கள். அவ்வாறு இருக்கும்பட்சத்தில் இணைப்புக் கொடுங்கள். இல்லாவிட்டால் பரவாயில்லை. கட்டுரைகள் வழமையான விக்கிக் கொள்கையின்படி அமைந்தாலே போதும். --AntanO 09:36, 21 சூலை 2016 (UTC)
- @AntanO: தாங்கள் சித்தம் எமது பாக்கியம். நன்றிகள்--அன்புமுனுசாமி09:40, 21 சூலை 2016 (UTC)
தற்காவல்
[தொகு]வணக்கம். உங்கள் கணக்கு தற்காவல் என்ற பயனர் உரிமைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் உருவாக்கும் கட்டுரைகள் சுற்றுக்காவலுக்கு உட்பட்டதாகக் தானாகக் குறிக்கப்படும். --AntanO 07:55, 21 சூலை 2016 (UTC)
- @AntanO: விருப்பம் + நன்றிகள்--அன்புமுனுசாமி 09:24, 21 சூலை 2016 (UTC)
விக்கிக்கோப்பை 2016
[தொகு]விக்கிக்கோப்பை முடிவுகளில் பிழை இருப்பதால், அதனை மீளவும் பரிசீலித்து முடிவுகள் பின்னர் அறிவிக்கப்படும். நன்றி. --MediaWiki message delivery (பேச்சு) 00:46, 23 சூலை 2016 (UTC)
தேவையற்ற பக்கங்கள்
[தொகு]பேச்சு:Khatkar Kalan போன்ற தேவையற்ற உரையாடல் பக்கங்களைத் தொடங்காதீர்கள். பயனர் பேச்சுப் பக்கத்தில் கேட்கலாம், அல்லது ஆலமரத்தடியில் கேட்கலாம்.--Kanags \உரையாடுக 08:19, 28 சூலை 2016 (UTC)
- புதிய கட்டுரைகளை எழுதுவதற்கு உங்களுக்கு தடை ஏதுமில்லை. அழிக்கப்பட்ட கட்டுரைகளை மீண்டும் தொடங்கலாம்.--Kanags \உரையாடுக 08:21, 28 சூலை 2016 (UTC)
- ஆங்கிலத் தலைப்புகளில் கட்டுரைகளை உருவாக்காதீர்கள்.--Kanags \உரையாடுக 09:31, 28 சூலை 2016 (UTC)
- @Kanags: "Khatkar Kalan" என்ற ஆங்கில தலைப்பு என்னால் தவறுதலாக (எனது கணக்கில்) உருவாக்கப்பட்டவை, அத்தவறுதலை திருத்தும் விதமாகவும், நீக்கல் பக்கத்தை நிரப்பும் விதமாகவும் அப்பக்கத்தில் புதிய கட்டுரையை (பிரிட்சு ஜெர்னிகி) தொகுத்தேன், மேலும் இதுபோன்ற நீக்கப்பட்ட (20-க்கும் மேல்) (எனது கணக்கில்) பக்கங்கள் (தமிழ்) உள்ளன அப்பக்கங்களையும் விக்கி மாரத்தான் 2016 நிகழ்வில் நிரப்ப உள்ளேன். தாங்களின் ஆலோசனைக்கு காத்திருக்கிறேன். நன்றிகள்...----அன்புமுனுசாமி இந்தியா--மாலை, 03:20, 28 சூலை 2016.
- அதற்காக ஏன் ஆங்கிலத் தலைப்பில் கட்டுரை எழுதி அதனை தமிழ்த் தலைப்புக்கு மாற்ற வேண்டும்? நேரடியாகவே தமிழில் தலைப்பிட்டு ஏன் அக்கட்டுரையைத் தொடங்குவதற்கு உங்களால் முடியாமல் உள்ளது? எனக்கு உங்கள் பிரச்சினை விளங்கவில்லை. மேலும், நீங்கள் தொடங்கும் கட்டுரைகள் ஆங்கில விக்கியில் எழுதப்பட்டிருந்தால் விக்கித்தரவில் இணைக்க மறக்காதீர்கள். பல கட்டுரைகள் இணைக்கப்படாமல் உள்ளன. இதனால் வேறு பயனர்கள் இதே கட்டுரைகளை வேறு தலைப்புகளில் எழுத ஆரம்பிக்கப் போகிறார்கள். கவனியுங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 03:08, 30 சூலை 2016 (UTC)
- @Kanags:வணக்கம், எனது கணக்கில் உள்ள அழித்தல் (Delete) பக்கங்களை ஆக்கம் செய்வதற்க்காக அப்படி செய்தேன்,மேலும், நான் தொடங்கும் கட்டுரைகளுக்கு ஆங்கில விக்கியிலோ அல்லது மற்ற மொழிகளிலோ அல்லாத கட்டுரைகள் மட்டுமே விக்கித்தரவில் இணைக்காமல் இருக்கும். நினைவுகூர்ந்தமைக்கு நன்றிகள்...--அன்புமுனுசாமி இந்தியா--03:25, 30 சூலை 2016 (UTC).
- இலட்சுமி சரவணகுமார் என்பவருக்கு இவருக்கு சரண் ராணி பாக்லீவால் என்ற பெயரும் உள்ளதா? எதற்காக அப்பெயரில் கட்டுரையைத் தொடங்கி வழிமாற்று வைத்திருக்கிறீர்கள்? கட்டுரையோடு தொடர்பற்ற பக்கங்களை ஏன் உருவாக்குகிறீர்கள்? பழைய அழிந்த கட்டுரைகள் அழிந்தவையாகவே இருக்கட்டும். புதிய கட்டுரைகளை சரியான தலைப்பில் உருவாக்குங்கள். உங்கள் பிரச்சினை என்னவென்று உண்மையில் எனக்கு விளங்கவில்லை. இது தொடர்ந்தால் உங்கள் தற்காவல் அணுக்கத்தை மீளப் பெற வேண்டி இருக்கும்.--Kanags \உரையாடுக 00:55, 31 சூலை 2016 (UTC)
- @Kanags: மன்னிக்கவும், இப்போது விளங்கியது...
- விருப்பம்--Kanags \உரையாடுக 01:21, 31 சூலை 2016 (UTC)
விக்கிக்கோப்பை 2016 முடிவுகள் - திருத்தம்
[தொகு]விக்கிக்கோப்பையில் வெற்றி பெற்றவர்களுக்கும் பங்கு பற்றிய அனைவருக்கும் பாராட்டுக்கள்!
தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், இருக்கும் கட்டுரைகளை விரிவாக்கவும் நடத்தப்பட்ட போட்டியில் 49 பேர் போட்டியிட தங்கள் பெயர்களைப் பதிவு செய்திருந்தனர். அதில் 21 பேர் பங்குபற்றினர். இப்போட்டியின் மூலம் 1463 கட்டுரைகள் புதிதாக உருவாக்கப்பட்டதோடு, 80 கட்டுரைகள் விரிவாக்கப்பட்டன.
3305 புள்ளிகள் பெற்று விக்கிக்கோப்பை 2016 வாகையாளராக எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (453 புதிய கட்டுரைகள்) திகழ்கிறார். 2810 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தை கி.மூர்த்தி (324 புதிய கட்டுரைகள்) பெறுகிறார். மூன்றாம் இடத்தை 1625 புள்ளிகள் பெற்ற மணியன் (169 புதிய கட்டுரைகள்) பெறுகிறார். இவர்களை அடுத்து புள்ளிகளைப் பெற்ற மாதவன், உலோ.செந்தமிழ்க்கோதை ஆகியோர் முதல் 5 இடத்திற்குள் இடம் பெறுகின்றனர்.
மேலதிக விபரங்களை இங்கே காணலாம். முன்னைய அறிவிப்பில் தவறுதலாக புள்ளிகள் சேர்க்கப்பட்டு, அறிவிக்கப்பட்மைக்கு வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். --MediaWiki message delivery (பேச்சு) 07:04, 31 சூலை 2016 (UTC)
- விருப்பம்@எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி, கி.மூர்த்தி, Rsmn, Maathavan, and உலோ.செந்தமிழ்க்கோதை:அய்யா, யாவர்க்கும் வணக்கத்துடன் வாழ்த்துக்கள், விக்கிக்கோப்பை 2016-ல் பங்காற்றிய அனைவருமே வெற்றியாளர்கள் எனும் பேரின்பமும், பெருமகிழ்ச்சியும் அடைகிறேன். மேலும், சிறப்பான ஒருங்கிணைப்பாளர்களான, AntanO, ஸ்ரீஹீரன், மாதவன், ஆதவன் ஆகியோருக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களைத் சமர்பிக்கிறேன். நன்றிகள்--அன்புமுனுசாமி 07:44, 31 சூலை 2016 (UTC)
பதக்கம்
[தொகு]பஞ்சாப் மாதப் பங்களிப்பாளர் பதக்கம் | |
வணக்கம்,
பஞ்சாப் மாதத்தில் சிறப்பான பங்களித்தமைக்கு நன்றி. தமிழ் விக்கிப்பீடியர் சிவகோசரனின் முன்னெடுப்பில், இம்முயற்சியில் முதலில் ஈடுபட்டது தமிழ் விக்கிப்பீடியாவே. இம்முனைப்பின் ஊடாக இந்திய மொழி விக்கிப்பீடியாக்கள் அனைத்திலும் ~3,000 கட்டுரைகள் உருவாகியுள்ளன. கூடுதல் பைட்டுகளைச் சேர்த்து கேடயம் வெல்ல இயலாவிட்டாலும், பல்வேறு தலைப்புகளிலும் செறிவான கட்டுரைகளை உருவாக்கியது தமிழ் விக்கிப்பீடியர்களே என்பது ஒருங்கிணைப்பாளர்கள் கருத்து. அனைத்துக்கும் மேலாக, இந்திய விக்கிமாநாட்டுக்குச் சென்ற போது, பஞ்சாப் பற்றிய பல்வேறு தகவல்களையும் தமிழிலேயே அறிந்து கொள்ள நமது கட்டுரைகள் உதவின என்பதே ஆகப் பெரும் சிறப்பு. தொடர்ந்து இது போன்ற பல்வேறு மாநிலங்கள், நாடுகள் பற்றி கட்டுரைகளைச் சீராக வளர்த்தெடுக்க வேண்டும் என்ற எண்ணமும் மேலோங்கியது. நன்றி. --இரவி (பேச்சு) 07:07, 15 ஆகத்து 2016 (UTC) விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை) |
Rio Olympics Edit-a-thon
[தொகு]Dear Friends & Wikipedians, Celebrate the world's biggest sporting festival on Wikipedia. The Rio Olympics Edit-a-thon aims to pay tribute to Indian athletes and sportsperson who represent India at Olympics. Please find more details here. The Athlete who represent their country at Olympics, often fail to attain their due recognition. They bring glory to the nation. Let's write articles on them, as a mark of tribute.
For every 20 articles created collectively, a tree will be planted. Similarly, when an editor completes 20 articles, a book will be awarded to him/her. Check the main page for more details. Thank you. Abhinav619 (sent using MediaWiki message delivery (பேச்சு) 16:54, 16 ஆகத்து 2016 (UTC), subscribe/unsubscribe)
கருத்து
[தொகு]வணக்கம், இந்த திருத்தத்தின்படி சில உரைதிருத்தங்களைச் செய்யலாம். தமிழ் இலக்கணம் மொழியின் முதலில் மெய்யெழுத்துக்களைக் கொண்டு தொடங்குவதில்லை (எ.கா: த்ரோம்சோ என்பதை திரோம்சோ). (காண்க: மொழிமுதல் எழுத்துக்கள், மொழியிறுதி எழுத்துக்கள்) மேலும், அப்படி உச்சரிப்பதும் கடினமானது. ஊடகங்கள் பல இத்தவறுகள் பெருமளவில் செய்கின்றன என்பதற்காக கலைக்களஞ்சியத்தில் நாமும் செய்ய வேண்டியதில்லை. 1936-ம் ஆண்டு என்பதை 1936 ஆம் ஆண்டு என்று முறையாக எழுதலாம். ஹைல்ஈஸ்டத் என்பதை கைலீஸ்டத் கிரந்தம் குறைந்து எழுதலாம். முற்றிலும் கிரந்தம் குறைத்தும் எழுதலாம். --AntanO 03:21, 1 செப்டம்பர் 2016 (UTC)
- @AntanO: அன்ரன் அவர்களுக்கு வணக்கம், தாங்கள் கருத்துரைத்து வழிக்காட்டியமைக்கு நன்றிகள், மேலும் தாங்களின் அறிவுரைப்படி மொழிமுதல் எழுத்துக்கள், மொழியிறுதி எழுத்துக்கள் கவனத்தில் கொண்டு கையாள விழைகிறேன். நன்றிகள்--அன்புமுனுசாமி 07:35, 1 செப்டம்பர் 2016 (UTC)
இந்த (----) en:Hyphen-minus பயன்பாடு தேவையற்றது என்றே கருதுகிறேன். --AntanO 04:12, 16 செப்டம்பர் 2016 (UTC)
வேண்டுகோள்...
[தொகு]வணக்கம்! தங்களைக் குறித்து தாங்களே குறைத்து மதிப்பிட வேண்டியதில்லை; விக்கியில் யாரும் யாருடைய எவ்விதத் தகுதிகளையும் கவனத்தில் கொள்வதில்லை! இங்கு அனைவரும் சமம்; நமது ஒரே நோக்கம்:- நல்ல கலைக்களஞ்சியமாக விக்கியை பராமரிப்பதுவே. படிப்பு குறித்தெல்லாம் உரையாடல் பகுதியில் இனிமேல் எழுதாதீர்கள் என்பது எனது அன்பு வேண்டுகோள். (ஏனெனில் அது நெருடலாக இருக்கிறது) நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 01:40, 16 செப்டம்பர் 2016 (UTC)
- @Selvasivagurunathan m and AntanO: அவர்களுக்கு வணக்கம், நெருடலாக உள்ள இதுபோன்ற வார்த்தைகளை இனிமேல் பிரயோகிக்க மாட்டேன், சுட்டிக்காட்டியமைக்கு நன்றிகள். --அன்புமுனுசாமி 06:01, 16 செப்டம்பர் 2016 (UTC)
பதக்கம்
[தொகு]சிறந்த உழைப்பாளர் பதக்கம் | |
தங்களுக்கு இந்தப் பதக்கத்தை வழங்குவதில் பெருமை கொள்கிறேன்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:42, 1 அக்டோபர் 2016 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை) |
- விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 06:09, 1 அக்டோபர் 2016 (UTC)
- விருப்பம்--@Selvasivagurunathan m:--மா. செல்வசிவகுருநாதன் அவர்களுக்கு வணக்கம், தங்கள் இந்தப் பதக்கத்தை வழங்குயதில், பெருமகிழ்ச்சியும், பேரானந்தமும் அடைகிறேன். தாங்கள், என்னை நன்கு கவனித்து இப்பதக்கத்தை வழங்கியமைக்கு, நன்றிகள்!--அன்புமுனுசாமி|உறவாடுகஉரையாடுக : 06:40, 1 அக்டோபர் 2016 (UTC)
- @Nan:--நந்தகுமார் ஐய்யா அவர்களுக்கு வணக்கம், விரும்பியமைக்கு மகிழ்ச்சி கலந்த நன்றிகள்!--அன்புமுனுசாமி|உறவாடுகஉரையாடுக : 06:46, 1 அக்டோபர் 2016 (UTC)
கட்டுரை நீக்கம்
[தொகு]2015 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கம் என்ற கட்டுரை குறிப்பிடத்தக்கதல்ல. உலகில் பல இடங்களில் நிலநடுக்கம் ஏற்படுவதும், அதனை ஊடகங்கள் செய்தியாகத் தருவதும் இயல்பானதே. குறிப்பிட்ட நிலநடுக்கத்தால் குறிப்பிட்டளவு சேதங்கள் ஏற்பட்டால் கட்டுரை எழுத இடம் ஏற்படலாம். --AntanO 13:19, 11 அக்டோபர் 2016 (UTC)
- விருப்பம்--@AntanO:-- அவர்களுக்கு வணக்கம், தங்கள் சுட்டிக்காட்டிய பிறகே அக்கட்டுரை பற்றி அறிந்தேன், தரவுகளில் தேடினேன் தேவையற்றது என்பதை தெரிந்துகொண்டேன், தெளிந்துகொண்டேன். மகிழ்ச்சி | நன்றிகள்!--அன்புமுனுசாமி|உறவாடுகஉரையாடுக : 17:32, 11 அக்டோபர் 2016 (UTC)
நன்றி...
[தொகு]வணக்கம்!
இராமாயணம், ஸ்ரீ கிருஷ்ண முராரி, கோவலன், தசாவதாரம், சீதா வனவாசம் ஆகிய கட்டுரைகளை எழுதியமைக்கு நன்றி!
நீங்களும் இத்திட்டத்தில் பங்குகொண்டால், சிறப்பாக இருக்கும். உங்களை வற்புறுத்தவில்லை; ஏனெனில் உங்களுக்கு வேறு துறைகளில் ஆர்வமிருக்கலாம்; உங்களுக்கென்று சில தனிப்பட்ட திட்டங்கள் இருக்கலாம். உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்போது இத்திட்டத்திற்காக பங்களியுங்கள். உதாரணமாக, நீங்கள் எம்ஜிஆர் இரசிகராக இருந்தால், அவர் குறித்த கட்டுரைகளில் பங்களிக்கலாம்.
அனுமதி வேண்டல்: நீங்கள் எழுதிய இக்கட்டுரைகளின் தலைப்புகளை இங்கு குறிப்பிடலாமா? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு)
- @Selvasivagurunathan m:>>செல்வசிவகுருநாதன் அவர்களுக்கு வணக்கம்! மற்றும் மகிழ்ச்சி, நம்மில் நன்றி நன்றன்று இருப்பினும் , நன்றியுரைப்பது நன்று, திட்டங்கள், நோக்கங்கள், ஆர்வங்கள் பல இருப்பினும் தங்களுக்காகவும், தமிழ் திரையுலகை அறியவும் அத்திட்டத்தில் இயன்றவரை பங்களிக்கிறேன். மேலும், ஒரு குறிப்பிட்ட துறைகளில் உழல்வதைவிட பலத் துறைகளில் பங்காற்றி அத்துறைகளைப் பற்றியும் அறிந்துகொள்ளலாம் அல்லவா!, நான் எழுதிய இக்கட்டுரையை அங்கு குறிப்பிடலாம். நன்றிகள்!--அன்புமுனுசாமிஉறவாடுகஉரையாடுக : 17:03, 15 அக்டோபர் 2016 (UTC)
விருப்பம்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 01:35, 16 அக்டோபர் 2016 (UTC)
- @Selvasivagurunathan m:>> விருப்பம்!+ வணக்கம்+ மகிழ்ச்சி+ நன்றிகள்!--அன்புமுனுசாமிஉறவாடுகஉரையாடுக : 01:39, 16 அக்டோபர் 2016 (UTC)
பழைய தமிழ்த் திரைப்படங்கள் குறித்து தாங்கள் எழுதும் கட்டுரைகளில் குறைந்தது 3 வரிகள் இருக்குமாறு தகவல்களை திரட்டி எழுதுங்கள். இந்த அடிப்படையான தேவையை நாம் பூர்த்தி செய்யாவிட்டால், "போதிய உள்ளடக்கம் இல்லை" எனும் பராமரிப்பு வார்ப்புரு இடப்படும் வாய்ப்புள்ளது. எண்ணிக்கை முக்கியமன்று; தரமே முதன்மை என்பதனை இத்திட்டத்திலும் கடைப்பிடிப்போம்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:58, 16 அக்டோபர் 2016 (UTC)
சம்பூர்ண அரிச்சந்திரா, பாரிஜாத புஷ்பஹரணம்...
[தொகு]வணக்கம்! சம்பூர்ண அரிச்சந்திரா, பாரிஜாத புஷ்பஹரணம் எனும் கட்டுரைகளுக்கு நன்றி! ஆனால், சம்பூர்ண ஹரிச்சந்திரா, பாரிஜாத புஷ்பஹாரம் எனும் கட்டுரைகள் ஏற்கனவே உள்ளன. உங்களின் புதிய கட்டுரைகளில் உள்ள தகவல்களை ஏற்கனவே உள்ள கட்டுரைகளில் சேர்த்து விடுங்கள். புதிய கட்டுரைகளிலிருந்து பழைய கட்டுரைகளுக்கு வழிமாற்று தந்துவிடலாம்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:16, 17 அக்டோபர் 2016 (UTC)
- @Selvasivagurunathan m:>> ஆயிற்று!+ வணக்கம்+ மகிழ்ச்சி+ நன்றிகள்!--அன்புமுனுசாமிஉறவாடுகஉரையாடுக : 05:54, 17 அக்டோபர் 2016 (UTC)
தாங்கள் புதிதாக எழுதிய கட்டுரைகளை நீக்கி விட்டேன். இதில் தங்களுக்கு மன வருத்தம் இருக்காது என நம்புகிறேன்; ஏனெனில் இதுவே முறை! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:14, 17 அக்டோபர் 2016 (UTC)
- @Selvasivagurunathan m:>>வணக்கம்+ அதுதான் சரி+ மகிழ்ச்சி+ நன்றிகள்!--அன்புமுனுசாமிஉறவாடுகஉரையாடுக : 06:25, 17 அக்டோபர் 2016 (UTC)
வேண்டுகோள்...
[தொகு]திட்டத்தின்கீழ் சான்று சேர்ப்பதாக தாங்கள் கருதினால், இந்தப் பக்கத்தில் அந்த செயற்பாடு குறித்து இற்றை செய்துவிடுங்கள்:
- விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் திரைப்படம்/தமிழ்த் திரைப்படம்/சான்றுகள் சேர்த்தல் (1975ஆம் ஆண்டு வரை)
- ஆயிற்று என்பதனை {{ }} இக்குறிகளுக்கு இடையே இட்டு (அதாவது வார்ப்புரு), உங்களின் கையெழுத்தினையும் இடுங்கள் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:31, 17 அக்டோபர் 2016 (UTC)
விக்கி உள்ளிணைப்பு தருவது குறித்தான சில பரிந்துரைகள்...
[தொகு]விக்கி உள்ளிணைப்பு தருவதன் நோக்கங்கள் 2:
- தனித்துவம் வாய்ந்த சொற்களுக்கு (அதாவது குறிப்பிடத்தக்க விசயங்களுக்கு) உள்ளிணைப்பு தருதல். இதனை ஆங்கிலத்தில் unique [1] எனக் குறிப்பிடுவர். உதாரணமாக கலைமாமணி விருது பெற்றவர் எனக் குறிப்பிடும்போது, கலைமாமணி விருது என்பதற்கு உள்ளிணைப்பு தரலாம். கட்டுரையைப் படிக்கும் வாசகருக்கு இந்த உள்ளிணைப்பு உதவிகரமாக இருக்கும்.
- அரிதான சொற்களுக்கு உள்ளிணைப்பு தருதல். இதனைத் தருவதன் மூலமாக, பரவலாகத் தெரியாத ஒரு விசயத்தைப் பற்றி வாசகர்கள் அறிந்து கொள்ளலாம். இதற்கான சரியான உதாரணத்தை பின்னர் சொல்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:52, 17 அக்டோபர் 2016 (UTC)
- பாரிஜாத புஷ்பஹரணம் கட்டுரையில் செய்தது போன்று 1932ஆம் ஆண்டு, சனவரி 1 என உள்ளிணைப்பு தருவது அவசியமில்லை. இதனால் உங்களுக்கு நேர விரயம் ஏற்படும்.
- துருவ சரித்திரம் (1935 திரைப்படம்) கட்டுரையில் செய்தது போன்று நீளம், புராணம், தமிழ், திரைப்படம் என்றெல்லாம் உள்ளிணைப்பு தருவதால் வாசகருக்கு எந்த உதவியும் இல்லை. உங்களுக்கும் நேர விரயம். தமிழ்த் திரைப்படம் எனும் ஒரு கட்டுரை இருந்து, அதற்கு உள்ளிணைப்பு தருவதுகூட ஓரளவு அர்த்தமுடையது. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:20, 17 அக்டோபர் 2016 (UTC)
- வழுவூர் பி. இராமையா பிள்ளை எனும் கட்டுரையைப் பாருங்கள். பரதநாட்டியம் என்பதற்கு உள்ளிணைப்பு உள்ளது. பரதம், நாட்டியம் என தனித்தனியே தரவில்லை. மற்ற உள்ளிணைப்புகளையும் கவனியுங்கள். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:33, 17 அக்டோபர் 2016 (UTC)
- கட்டுரையில் உள்ளிணைப்பு கொடுத்தபிறகு ஒருமுறை சோதித்துப் பார்ப்பது நல்லது. உதாரணமாக, மயில் ராவணன் (1935 திரைப்படம்) கட்டுரையில் பி. எஸ். சீனிவாசன் என்பதற்கு இணைப்பு தந்துள்ளீர்கள். தவறான நபருக்கு இணைப்பு தரப்பட்டுள்ளது. இதனை சரிசெய்ய வேண்டும்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:50, 17 அக்டோபர் 2016 (UTC)
- தங்களின் பதிலுக்காக காத்திருக்கிறேன்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 21:24, 17 அக்டோபர் 2016 (UTC)
- @Selvasivagurunathan m: >>வணக்கம், தங்களின் பரிந்துரைகளை நன்கு கவனித்து வருகிறேன், மேலும், தாங்களின் ஆலோசனைகளைக் கேட்டறிந்துக்கொள்வதோடு, செயற்பாடுகளுக்கும் விழைகிறேன். நன்றிகள்!--அன்புமுனுசாமிஉறவாடுகஉரையாடுக : 00:25, 18 அக்டோபர் 2016 (UTC)
- நன்றி; நீங்கள் புரிந்து கொண்டீர்களா என்பதனை தெரிந்துகொள்ளவே மீண்டும் கேட்டேன்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 01:18, 18 அக்டோபர் 2016 (UTC)
- எனக்கு ping வார்ப்புரு இடும்போது, >> எனும் குறியையும் எதற்காக இடுகிறீர்கள் என அறிந்துகொள்ளலாமா? ஏனெனில், எனக்கு அறிவிப்பு வருவதில்லை! மற்றவர்கள் எனக்கு
ping செய்தால், எனக்கு அறிவிப்பு வருகிறது! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 01:22, 18 அக்டோபர் 2016 (UTC)
- @Selvasivagurunathan m: ping செய்தால் வருவதில்லையா? மன்னியுங்கள், தங்களை மட்டும் குறிக்கும் வகையில்தான் இக்குறியை >> பயன்படுத்தினேன், எனதறியாமைக்கு இதுவும் ஒரு எ: கா: போலும்.நன்றிகள்!--அன்புமுனுசாமிஉறவாடுகஉரையாடுக : 01:32, 18 அக்டோபர் 2016 (UTC)
மெட்ராஸ் மெயில் திரைப்படத்தில் மலையாள நடிகர் மோகன்லால் நடித்ததாக உள்ளது. இதனை திருத்த வேண்டும்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:04, 24 அக்டோபர் 2016 (UTC)
இதனை நானே செய்திருக்கலாம்; இருந்தாலும் இந்த மாதிரியான பிழைகளை தாங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே தெரிவிக்கிறேன்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:20, 24 அக்டோபர் 2016 (UTC)
பதக்கம்
[தொகு]மெய்வாழ்வுப் பதக்கம் | |
ஒவ்வொரு நாளும் அண்மைய மாற்றங்களில் உங்கள் பங்களிப்புகளைப் பார்க்கும் போது தமிழ் விக்கிப்பீடியாவின் எதிர்காலம் மீது நம்பிக்கை பூக்கிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் உங்களைப் போன்ற ஒரு சில பங்களிப்பாளர்கள் தங்களின் அன்றாடச் செயற்பாடாக விக்கிப் பங்களிப்புகளைக் கொண்டிருப்பதே இத்திட்டத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. தொடர்ந்து சிறப்பாக பங்களிக்க வாழ்த்துகள். --இரவி (பேச்சு) 07:59, 17 அக்டோபர் 2016 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை) |
- விருப்பம் பாராட்டுக்களும் வாழ்த்துகளும் !!--மணியன் (பேச்சு) 08:35, 17 அக்டோபர் 2016 (UTC)
- விருப்பம்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:48, 17 அக்டோபர் 2016 (UTC)
- விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 08:49, 17 அக்டோபர் 2016 (UTC)
- விருப்பம்--நந்தினிகந்தசாமி (பேச்சு) 12:19, 17 அக்டோபர் 2016 (UTC)
- விருப்பம் பாராட்டுக்களும் வாழ்த்துகளும் --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 17:31, 18 அக்டோபர் 2016 (UTC)
- @Ravidreams, Rsmn, Selvasivagurunathan m, Nan, Nandhinikandhasamy, and Dineshkumar Ponnusamy: அன்பில் பதக்கம் வழங்கி பாராட்டி, வாழ்த்தி, ஆனந்தத்தில் ஆழ்த்திய அன்பர்கள் யாவர்க்கும், அடியேனின் அன்பு வணக்கம்+ மகிழ்ச்சி+ நன்றிகள்!--அன்புமுனுசாமிஉறவாடுகஉரையாடுக : 16:25, 17 அக்டோபர் 2016 (UTC)
தகவல்...
[தொகு]வணக்கம்!
- சீர்மை (uniformity) கருதி, ஹரிச்சந்திரா (1935 திரைப்படம்), சாரங்கதாரா (1935 திரைப்படம்) என்பதாக தலைப்புகளை நகர்த்தியுள்ளேன்.
- இந்தத் திட்டத்திற்காக தாங்கள் புதிதாக கட்டுரை உருவாக்கினால், இங்கு பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்; நன்றிகள்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 21:23, 25 அக்டோபர் 2016 (UTC)
வணக்கம்! இந்த மாற்றத்தை கவனியுங்கள். தேவையற்ற உள்ளிணைப்புகளை தர வேண்டாம் என மீண்டும் கேட்டுக் கொள்கிறேன். அவசியமற்ற உள்ளிணைப்புகளும், அதிகப்படியான சிவப்பிணைப்புகளும் வாசகரின் கண்களுக்கு இடையூறாகும். ஐயமிருப்பின், இன்னொரு பயனரின் கருத்தினையும் அறியுங்கள்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:27, 26 அக்டோபர் 2016 (UTC)
சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்களில் ஏதேனும் சான்று சேர்க்க விரும்பினால், இந்த இணைப்பு தங்களுக்கு உதவக்கூடும்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:37, 31 அக்டோபர் 2016 (UTC)
வேண்டுகோள்
[தொகு]தாங்கள் விக்கிப்பீடியாவின் ஆசிய மாதத்திற்காக உருவாக்குகின்ற கட்டுரைகளை இக்கருவியில் பதிவு செய்க, நீங்கள் உருவாக்கிய கட்டுரை 300 சொற்களைக் கடந்த அடுத்த நொடியிலேயே நிச்சயம் பதிவு செய்து விடுங்கள். உடனே பதிவு செய்யாத பட்சத்தில் போட்டியானது இறுக்க நிலையை அடையும் போதோ அல்லது வேறு சந்தர்பங்கலின் போதோ பல சிக்கல்களையும் தங்களுக்கு உருவாக்கி விடும் என்பதையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன். மேலதிக உதவி தேவைப்படின் என்னை பேச்சுப்பக்கத்தில் அணுகுங்கள்.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:47, 5 நவம்பர் 2016 (UTC)
Address Collection
[தொகு]Congratulations! You have more than 4 accepted articles in Wikipedia Asian Month! Please submit your mailing address (not the email) via this google form. This form is only accessed by me and your username will not distribute to the local community to send postcards. All personal data will be destroyed immediately after postcards are sent. Please contact your local organizers if you have any question. Best, Addis Wang, sent by MediaWiki message delivery (பேச்சு) 07:58, 3 திசம்பர் 2016 (UTC)
விக்கி நுட்பத் திறன்கள் பயிற்சிப் பட்டறை விளைவுகள் கருத்தெடுப்பு
[தொகு]வணக்கம். கடந்த மே மாதம் சென்னையில் நடைபெற்ற விக்கி நுட்பத் திறன்கள் பயிற்சிப் பட்டறையின் விளைவுகளை அறிவதற்கான சுருக்கமான கருத்தெடுப்பு இங்கே (தமிழில்) உள்ளது. அருள்கூர்ந்து, இதில் கலந்து கொள்ள சில மணித்துளிகள் ஒதுக்குங்கள். இப்பயிற்சிப் பட்டறையின் பயன்களை மதிப்பிடவும், வருங்காலத்தில் விக்கிமீடியா அறக்கட்டளை இது போன்று விக்கிச் சமூகங்களுக்கான நேரடிப் பயிற்சிப் பட்டறைகளை நடத்துமா என்பதை முடிவு செய்யவும் இக்கருத்தெடுப்பு மிகவும் இன்றியமையாததாகும். நன்றி.--இரவி (பேச்சு) 11:11, 8 திசம்பர் 2016 (UTC)
விக்கிக்கோப்பை
[தொகு]வணக்கம்! எமது விக்கிப்பீடியாவில் வருடாந்தம் இடம்பெறும் விக்கிக்கோப்பைப் போட்டியானது 2017 ஆம் ஆண்டின் சனவரி மாதத்தில் இடம்பெறவுள்ளது.
இப்போட்டியில் நீங்களும் பங்கு கொண்டு பல கட்டுரைகளையும உருவாக்கிப் பாராட்டுக்களைப் பெறுவதுடன் மேலும் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உங்கள் அளப்பெரிய பங்கினை ஆற்றுங்கள்.
போட்டியில் தாங்கள் பங்குபெற விரும்பின் சனவரி 15 ஆம் திகதிக்கு முன்னர் "இங்கு பதிவு செய்க" எனும் கீழுள்ள பொத்தானை இப்போதே அழுத்தி உங்கள் பெயரைப் பதிவுசெய்யுங்கள். மேலதிக விபரங்களை இங்கு தெரிந்து கொள்ளலாம். நன்றி!..
--ஸ்ரீஹீரன் (பேச்சு) 14:55, 8 திசம்பர் 2016 (UTC)
விக்கிக்கோப்பை:அறிவிப்பு 1
[தொகு]
விக்கிகோப்பைப் போட்டியில் தாங்கள் பங்குபெறுவதையிட்டு மகிழ்ச்சி! தாங்கள் போட்டியின் விதிகளையும், அறிவிப்புக்களையும் கவனத்திற்கொண்டு பங்குபற்றுவீர்கள் என நம்புகின்றோம். நன்றி!...
--ஸ்ரீஹீரன் (பேச்சு) 13:23, 9 திசம்பர் 2016 (UTC)
விக்கிக்கோப்பை: விசேட அறிவித்தல்
[தொகு]
உங்கள் கவனத்திற்கு! விக்கிக்கோப்பைப் போட்டியில் பங்குபற்றும் நீங்கள் போட்டிக்காக உருவாக்கும் கட்டுரைகளை கீழுள்ள பொத்தானை அழுத்துவன் மூலம், வரும் பக்கத்தில் போட்டிக்காலத்தில், நிச்சயம் உடனுக்குடன் தவறாது சமர்ப்பியுங்கள்.
அவ்வாறு சமர்ப்பிப்பதில் பிரச்சினைகள், சந்தேகங்கள் இருப்பின் ஒருங்கிணைப்பாளர்களிடம் அவர்களின் பேச்சுப்பக்கத்தில் வினவுங்கள். மேலதிக விபரங்களை இங்கு அறிந்து கொள்ளலாம். நன்றி!
--ஸ்ரீஹீரன் (பேச்சு) 11:42, 11 திசம்பர் 2016 (UTC)
விக்கிக்கோப்பை:ஞாபகம் ஊட்டி
[தொகு]
|
விக்கிப்பீடியா சார்பாக தங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள் --ஸ்ரீஹீரன் (பேச்சு) 23:50, 31 திசம்பர் 2016 (UTC)
விக்கிக்கோப்பை
[தொகு]நீங்கள் தற்போது உருவாக்க்கிய கட்டுரைகளை இங்கு சமர்ப்பிக்கலாமே--ஸ்ரீஹீரன் (பேச்சு) 00:36, 1 சனவரி 2017 (UTC)
விக்கிக்கோப்பை-இரண்டாம் சுற்று
[தொகு]விக்கிக்கோப்பைப் போட்டியில் தாங்கள் முனைப்புடன் பங்குபற்றுவதையிட்டு மகிழ்ச்சி!. விக்கிப்பீடியாவில் மேற்கோள்கள் இடப்படாத பல கட்டுரைகள் பல இருக்கின்றன. அவற்றை முற்றிலும் ஒழிக்கும் நோக்குடன் விக்கிக்கோப்பையின் இரண்டாம் சுற்றானது திகழ்கின்றது. அந்தவகையில் விக்கிக்கோப்பையின் பெப்ரவரி மாதம் முழுவதும் இடம்பெறும் இரண்டாம் சுற்றிலும் பங்குபற்றி உங்கள் புள்ளிகளை அதிகரித்துக் கொள்ளுங்கள். மேலும் கீழுள்ள பகுப்புகளிலுள்ள கட்டுரைகளுக்கு சான்றுகள்/மேற்கோள்களைச் சேர்த்து போட்டியின் வெற்றியாளராக வாழ்த்துக்கள். அத்துடன் நீங்கள் மேற்கோள் சேர்க்கும் கட்டுரைகளை இங்கு உடனுக்குடன் சமர்ப்பியுங்கள். பெப்ரவரி 10 ஆம் திகதிக்கு முன்னதாக சமர்ப்பிக்கப்படும் கட்டுரைகளுக்கு விசேட புள்ளிகளும் வழங்கப்படும். அப்பகுப்புகள்
*மேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள் * மேற்கோள் தேவைப்படும் அனைத்து கட்டுரைகள்* மேற்கோள்கள் தேவைப்படும் கட்டுரைகள்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 11:23, 25 சனவரி 2017 (UTC)
தொழிற்கலைகள் செயற்திட்டம் முன்மொழிவு
[தொகு]உங்கள் கருத்துக்களையும், ஆதரவையும், பங்களிப்பையும் இந்தச் செயற்திட்டத்துக்கு விக்கிப்பீடியா:இலங்கையின் கிழக்கு-வடக்கு-மலையக தொழிற்கலைகளை பல்லூடக முறையில் ஆவணப்படுத்தல் நல்கவும். நன்றி.
தொடர்பங்களிப்பாளர் போட்டி: பயனர் அழைப்பு
[தொகு]15 ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்படும் போட்டி..
||தொடர்பங்களிப்பாளர் போட்டி||
போட்டி:
#போட்டி விபரம்
#30,000/= மொத்தப்பரிசு
போட்டிக்காலம்
6 மாதங்கள்
2017 மே-ஒக்டோபர்!
போட்டிக்காக
நீங்கள்
கட்டுரைகளை விரிவாக்குதல் வேண்டும். இதில் பங்குபற்றுவது மிக இலகு!
இங்கு
பதிவு செய்யுங்கள்!
விதிகளைப் பின்பற்றி
வெற்றி பெறுங்கள்!
--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 13:17, 10 மார்ச் 2017 (UTC)
தொடர்பங்களிப்பாளர் போட்டி:அறிவிப்பு 1
[தொகு]
அறிவிப்பு
•
போட்டியில் பங்குபெறப் பதிவுசெய்தமைக்கு நன்றிகள்!
•
போட்டி விதிகளை கவனத்திற் கொள்க!...
•
போட்டியில் சிறப்புற பங்குபெற்று வெற்றிபெற வாழ்த்துகள்!...
--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:59, 12 மார்ச் 2017 (UTC)
நிக்கலை Noskov
[தொகு]ஹலோ அன்பே Anbumunusamy! நான் உங்கள் மொழி தெரியும் மற்றும் ஒரு ஒழுங்கு செய்ய வேண்டாம்: நீங்கள் பாடகர் நிகோலாய் Noskov பற்றி உங்கள் இந்தி மொழியில் ஒரு கட்டுரை செய்ய முடியும்? நீங்கள் இந்த கட்டுரை செய்தால், நான் உங்களுக்கு மிகவும் கடமைப்பட்டு இருக்கும்! நன்றி! --178.66.115.29 13:35, 23 மார்ச் 2017 (UTC)
மணல்தொட்டி
[தொகு]வணக்கம்! தாங்கள் அதிகமாக மணல்தொட்டி பயன்படுத்துவது நல்லதே. ஆனால் ஒரு க்ட்டுரைக்காக தாங்கள் செய்த திருத்தங்கள் மணல்தொட்டியிலேயே பதிவாகின்றன. ஆதலால் புதிய கட்டுரை உருவாக்கத் துவங்குபோது பயனர்:Anbumunusamy/<தங்களுக்கு உகந்த பெயர்> என்று துவங்கி, முடித்த பின்னர் (முதன்மை பெயர்வெளி) <கட்டுரை> என்று நகர்த்திடலாம். இதனால் தங்கள் செய்யும் திருத்தங்கள் அக்கட்டுரையிலேயே பதிவாகும். நன்றி --அஸ்வின் (பேச்சு) 06:13, 2 ஏப்ரல் 2017 (UTC)
விக்கிமீடியா வியூகம் 2017
[தொகு]தமிழ் விக்கிப்பீடியா, விக்சனரி, விக்கிமூலம், விக்கிச் செய்திகள், விக்கிமேற்கோள், விக்கி நூல்கள் உட்பட்ட திட்டங்கலை முன்னெடுக்கி விக்கிமீடியா நிறுவனம் தனது தொலைநோக்குச் செயற்பாடுகளை ஒழுங்கமைக்கும் வண்ணம் உள்ளீடுகளைக் கேட்டுள்ளது. தமிழ் விக்கியில் இருந்து உள்ளீடுகளைத் தொகுப்பதற்கான இந்தப் பக்கத்தை தொடங்கி உள்ளேம். அப் பக்கத்தின் பேச்சுப் பக்கத்தில் உங்கள் எண்ணங்களை, கருத்துரிப்புக்களை பகிருங்கள். விக்கிப்பீடியா:விக்கிமீடியா வியூகம் 2017. இதன் முதற்கட்டம் ஏப்பிரல் 15 இல் முடிவடைகிறது. நன்றி. --Natkeeran (பேச்சு) 17:48, 3 ஏப்ரல் 2017 (UTC)
படிமம்
[தொகு]தயவு செய்து சொந்தப்படிமங்களை இங்கு பதிவேற்றாது பொதுவில் பதிவேற்றுங்கள். அல்லது யாரிடமாவது தெரிவித்து பொதுவிற்கு நகர்த்துங்கள். திரும்பவும் திரும்பவும் குறிப்பிடுவது அழகல்ல. நன்றி. --AntanO 14:31, 7 ஏப்ரல் 2017 (UTC)
விக்கித்திட்டம் 15: போட்டி ஆரம்பமாகிவிட்டது!
[தொகு]--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 17:06, 30 ஏப்ரல் 2017 (UTC)
தொடர்பங்களிப்பாளர் போட்டி:வழிகாட்டல்
[தொகு]போட்டியாளர்களுக்கான வழிகாட்டல்...
👉 - போட்டியில் பங்குபறெவதற்கு நன்றிகளும் வாழ்த்துகளும்!
வானவியல் நாள் எனும் கட்டுரை இப்பட்டியலில் இடம்பெறவில்லை ஆகையால் அது போட்டிக்கு ஏற்புடையது அல்ல. அருள்கூர்ந்து அப்பட்டியலில் உள்ள கட்டுரைகளை விரிவாக்குங்கள். போட்டியில் பங்குபற்றி வெற்றி பெற மனமுவந்து வாழ்த்துகின்றேன்.!
--ஸ்ரீஹீரன் (பேச்சு) 02:47, 1 மே 2017 (UTC)
- காளிதாசன் கட்டுரையை சிறப்புற விரிவாக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:10, 10 மே 2017 (UTC)
தொடர்பங்களிப்பாளர் போட்டி : உதவிக் குறிப்பு
[தொகு]போட்டியாளர்களுக்கான அறிவிப்பு...
- ✒️ - போட்டிக்காக ஒரு கட்டுரையை நீங்கள் விரிவாக்கும் போது, பிற பயனர்கள் நீங்கள் விரிவாக்கும் கட்டுரையைத் தொகுக்கலாம். அப்போது நீங்கள் செய்த மொத்த விரிவாக்கமும் அழிந்து போக நேரிடலாம். இதனைத் தவிர்த்துக்கொள்ள,
- ⏩ - நீங்கள் விரிவாக்கும் கட்டுரையின் மேலே {{AEC|உங்கள்பெயர்}} என்பதனை இட்டு சேமித்துவிட்டு, விரிவாக்க ஆரம்பியுங்கள். உங்கள் பயனர் பெயரைக் குறிப்பிடத் தவறாதீர்கள்.
- 👉 - விரிவாக்கம் முடிந்த பின் {{AEC|உங்கள்பெயர்}} இனை நீக்கிவிடுங்கள்.
- 🎁 - தொடர்ந்து முனைப்போடு பங்குபற்றி போட்டியில் வெல்லுங்கள்!...
--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 08:05, 21 மே 2017 (UTC)
தொடர்பங்களிப்பாளர் போட்டி : கட்டுரை முற்பதிவு அறிவிப்பு
[தொகு]போட்டியாளர்களுக்கான அறிவிப்பு...
சிலநேரங்களில் ஒருவர் முற்பதிவு செய்த கட்டுரைகளை இன்னொருவர் விரிவாக்கும் செயற்பாடு தவறுதலாக நடைபெற்றுள்ளதனால், அதனைத் தவிர்க்கும் வகையிலும், அனைவருக்கும் சந்தர்ப்பத்தை அளிக்கும் வகையிலும் கட்டுரைகள் முற்பதிவு செய்வதில் ஒரு சில மாற்றங்கள் செய்துள்ளோம். அவை பின்வருமாறு:
- 👉 - ஒரு நேரத்தில் ஒருவர் மூன்று கட்டுரைகளுக்கு மட்டுமே முற்பதிவு செய்து வைக்கலாம். முற்பதிவைச் செய்ய இங்கே செல்லுங்கள்.
- 🎰 - நீங்கள் முற்பதிவு செய்யும் கட்டுரைக்கு, முற்பதிவு வார்ப்புரு இடப்படும்.
- ✒️ - ஒருவரால் முற்பதிவு செய்யப்படும் கட்டுரை 10 நாட்கள்வரை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். அதன் பின்னர் வேறொருவர் விரும்பினால் விரிவாக்கலாம்.
- ⏩ - போட்டிக்கான முற்பதிவு வார்ப்புரு இடப்பட்டிருக்கும் ஒரு கட்டுரையை 10 நாட்களுக்கு முன்னர் வேறொருவர் விரிவாக்கினால், அது ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. புரிந்துணர்வுடன், ஒத்துழைப்பு நல்குவீர்கள் என நம்புகின்றோம்.
- 🎁 - இவற்றை கருத்திற் கொண்டு தொடர்ந்து சிறப்பாகப் போட்டியில் பங்குபற்றி வெற்றிபெற வாழ்த்துகின்றோம்!...
--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 16:39, 31 மே 2017 (UTC)
ஆசிரியர்களுக்கான அடுத்த கட்ட விக்கிப்பீடியா பயிற்சிகள் அறிவிப்பு - உங்கள் உதவி தேவை
[தொகு]வணக்கம். ஆசிரியர்களுக்கான அடுத்த கட்ட விக்கிப்பீடியா பயிற்சிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. உங்கள் அருகில் உள்ள பகுதிகளில் விக்கிப்பீடியா சார்பாக கலந்து கொண்டு பயிற்சி அளித்து தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உதவ வேண்டுகிறேன். ஒரு நாளைக்கு ஒரு மாவட்டம் செல்லலாம். பயணம், உணவு, தங்குமிடம் பொறுப்பேற்றுக் கொள்ளப்படும். உங்களால் இயன்ற தேதிகள், ஊர்களை இங்கு உறுதிப்படுத்த வேண்டுகிறேன். நிகழ்வு நடக்கும் இடங்கள், மற்ற விவரங்களை விரைவில் இற்றைப்படுத்துவோம். நன்றி.--இரவி (பேச்சு) 12:50, 25 சூன் 2017 (UTC)
- @Ravidreams: இரவி அவர்களுக்கு வணக்கம், ஆசிரியர்களுக்கான விக்கிப்பீடியா பயிற்சி அளிக்க அழைத்ததில் மிக்க மகிழ்ச்சி, சூலை 4, 5, & 6 ஆகிய நாட்களில் பங்குபற்ற விழைகிறேன், எனினும் பணி நிமித்தம் காரணமாக விடுப்பு கிடைக்குமா என தெரியவில்லை இருப்பினும், ஒன்றிரண்டு அல்லது மூன்று நாட்களும் பங்குபெற முயல்கிறேன். மேலும் பங்களிக்க வேண்டிய காலம், நேரம் மற்றும் இடம் போன்ற பிற விவரங்கள் அளிக்க வேண்டுகிறேன். நன்றிகள்... --அன்புமுனுசாமிஉறவாடுகஉரையாடுக : 07:01, 29 சூன் 2017 (UTC)
பதக்கம்
[தொகு]சிறந்த வழிகாட்டிப் பதக்கம் | |
--நந்தகுமார் (பேச்சு) 07:21, 11 சூலை 2017 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை) |
வணக்கம்
நந்தகுமார் அய்யா, தாங்கள் வழங்கிய சிறந்த வழிகாட்டிப் பதக்கத்தினால் பேரின்பத்தில், பெருமகிழ்ச்சியடைகிறேன் நன்றிகள் அய்யா... அன்பு♥முனுசாமிᗔ
உறவாடுகᗖᗗஉரையாடுக! : 07:30 11 சூலை 2017 (UTC)
வழிகாட்டுக் குறிப்புகள்
[தொகு]ஆசிரியர்களுக்குத் தாங்கள் இடும் வழிகாட்டுக் குறிப்புகள் நன்று. ஆனால், இது போன்று ஒரே மாதிரி பல பக்கங்களில் இடும் செய்திகளைத் தானியக்கமாகச் செய்ய முடியும். எனவே, உங்கள் நேரத்தை இதில் செலவழிக்க வேண்டாம். குறிப்பிட்ட செய்தியை இன்னும் மேம்படுத்தி இட முடியும். --இரவி (பேச்சு) 13:39, 12 சூலை 2017 (UTC)
- அப்படியே ஆகட்டும் ௮ன்புமுனுசாமி
நன்றிகள்...--13:55, 12 சூலை 2017 (UTC)
பாராட்டுகள்
[தொகு]நெல் வகைகள் தொடர்பாக கட்டுரைகள் எழுதிவருவதற்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து எழுதுங்கள்.--இரா. பாலாபேச்சு 03:05, 18 ஆகத்து 2017 (UTC)
- வணக்கம்
இரா. பாலா, தாங்கள் பாராட்டியதில் பெருமகிழ்ச்சியடைகிறேன் நன்றிகள்... அன்பு♥முனுசாமிᗔ
உறவாடுகᗖᗗஉரையாடுக! : 06:33, 18 ஆகத்து 2017 (UTC)
ஆசிய மாதம், 2017
[தொகு]வணக்கம்,
ஆசிய மாதம் போட்டியில் கலந்து கொண்டு, கட்டுரைகளை உருவாக்கி வருவதற்கு பாராட்டுக்களும் நன்றிகளும்.
நினைவுபடுத்தலுக்காக: பின்வரும் விதிகளுக்கேற்ப கட்டுரைகளை உருவாக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.
- கட்டுரைகளை (குறுங்கட்டுரை விரிவாக்கம் அல்ல) நவம்பர் 1, 2017 00:00 முதல் நவம்பர் 30, 2017 23:59 UTC வரையான காலப்பகுதியில் புதிதாக உருவாக்க வேண்டும்.
- கட்டுரையின் உரைப்பகுதி (வார்ப்புரு, குறிப்புகள், உசாத்துணை, ஆதாரங்கள், நூல் பட்டியல் போன்றவை தவிர்த்து) குறைந்தது 300 சொற்களைக் கொண்டிருக்க வேண்டும். wordcounttools கொண்டு சொற்கள் எண்ணிக்கை சரி பார்க்கப்படும்.
- குறிப்பிடத்தக்கமை நிறுவப்பட வேண்டும்.
- உசாத்துணை, சான்றுகள், மேற்கோள்கள் நிறுவப்பட வேண்டும்.
- 100% இயந்திர மொழிபெயர்ப்புகள் நிராகரிக்கப்படும்.
- தமிழ் விக்கிப்பீடியா ஒருங்கிணைப்பாளர்களின் முடிவே இறுதியானது.
- பட்டியல் பக்கங்கள் எழுதலாம். ஆனால், அஞ்சல் அட்டை பெறுவதற்கான கட்டுரை எண்ணிக்கையில் கருத்தில் கொள்ளலாகாது.
- உங்களின் சொந்த நாட்டைப் பற்றி அல்லாமல் (எ.கா: இந்தியா, இலங்கை) மற்ற ஆசிய நாடுகள் அல்லது வட்டாரங்கள், ஆசியப் புவியியல் தோற்றப்பாடுகள் (எ.கா: மலை, நதி, பள்ளத்தாக்கு), இடங்கள், வரலாற்றுத் தளங்கள், கைத்தொழில்கள், கலாசாரம் பற்றியதாக இருக்க வேண்டும். நபர்கள், மொழிகள் பற்றிய கட்டுரைகள் ஏற்கப்பட மாட்டாது.
நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 17:13, 14 நவம்பர் 2017 (UTC)
ஆசிய மாதம் - இறுதி வாரம்
[தொகு]வணக்கம்!
ஆசிய மாதம் போட்டியில் கலந்து கொண்டு, கட்டுரைகளை உருவாக்கி வருவதற்கு பாராட்டுக்களும் நன்றிகளும். சில இற்றைப்படுத்தப்பட்ட செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
- ஒரு வாரத்திற்கும் குறைவான நாட்களே போட்டி முடிவடைய இருப்பதால், உங்கள் பங்களிப்புக்களை இங்கே தெரிவியுங்கள். நவம்பர் மாதத்தில் செய்யப்பட்ட பங்களிப்புக்கள் மாத்திரம் போட்டிக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
- நீங்கள் ஐந்து கட்டுரைகளை போட்டிக்கென தெரிவித்து, அதில் ஒன்று சிறு காரணத்திற்கான தகுதி அடையவில்லை (குறைந்தது 300 சொற்களைக் கொண்டிருக்க வேண்டும், அல்லது சிக்கலான வார்ப்புருக்கள் காணப்படல்) என்றாலும், உங்களுக்கு அஞ்சலட்டை அனுப்பி வைக்கப்படும்.
- நீங்கள் போட்டியை முறையாக முடித்திராவிட்டாலும், உங்களை பங்களிப்பாளராகப் பெற்றதில் மகிழ்சியடைகிறோம்.
குறிப்பு: முடிந்தால் {{WAM talk 2017}} என்ற வார்ப்புருவை போட்டிக்காக உருவாக்கும் கட்டுரைகளின் பேச்சுப் பக்கத்தில் இணைத்துவிடுங்கள்.
உங்களுக்கு ஏதும் கேள்வியிருந்தால், என்னைத் தொடர்பு கொள்ளுங்கள். --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 19:10, 25 நவம்பர் 2017 (UTC)
@Dineshkumar Ponnusamy: வணக்கம்! தாங்கள் உரையாடியதில் மகிழ்ச்சி, எனது பணிபளு காரணமாக ஆசிய மாதம் போட்டியில் சரியாகப் பங்களிக்க இயலவில்லை, மேலும் 2015 இல் 8 கட்டுரைகளும், 2016 இல் 11 கட்டுரைகளும் உருவாக்கினேன் அதற்கான அஞ்சலட்டையே இதுவரையில் வழங்கவில்லை, மேலும் விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் நெற்களஞ்சியம் எனும் திட்டத்தை உருவாக்கி பலரை பங்களிக்க அழைப்புவிடுத்தேன் யாரும் உதவி புரியவில்லை, மேலும் ஆரம்ப காலத்தில் பொதுவக பதிவேற்ற பிழையில் எனது பொதுவக கணக்கைத் தடுத்து வைத்துள்ளார்கள் இதுபோன்ற சிறுசிறு கசப்பான நிகழ்வுகளால் எனது ஆர்வமும், வேகமும் குறைந்துள்ளது என்பது உண்மையே நன்றிகள்...அன்பு♥முனுசாமிᗔ உறவாடுகᗖᗗஉரையாடுக! : 01:50 26 நவம்பர் 2017 (UTC)
கட்டுரைப் போட்டியில் பங்கேற்க அழைப்பு
[தொகு]அன்புள்ள அன்புமுனுசாமி, உடன் பங்களிப்பவன் என்ற முறையில், இது நான் உங்களுக்கும் மற்ற தமிழ் விக்கிப்பீடியர்களுக்கு எழுதும் தனிப்பட்ட மடல்.
2005ல் இருந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகிறேன். அப்போது தோராயமாக 600 கட்டுரைகள் இருந்தன. இப்போது 1,15,000 கட்டுரைகள் உள்ளன. மலைப்பாக இருக்கிறது. மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. அதே வேளை, கடந்து வந்த பாதையையும் எண்ணிப் பார்க்கிறேன்.
இது ஒரு நெடும் பயணம். பல பேருடைய பல மணிக்கணக்கான உழைப்பைக் கொட்டிய பயணம். ஆங்கில விக்கிப்பீடியா 2001 தொடங்கி 2004 வரை அடைந்த வளர்ச்சியைக் கூட நமது 15 ஆண்டுகளில் நாம் இன்னும் எட்டிப் பிடிக்க முடியவில்லை! அப்படி என்றால், இன்னும் செல்ல வேண்டிய தொலைவோ மிக அதிகம். ஆங்கிலத்தில் ஒருவருக்குக் கிடைக்கக் கூடிய அறிவின் அளவும் தரமும் தமிழர்களுக்குக் கிடைப்பது எப்போது? தமிழர்களின் சமூக வரலாற்று, அரசியல் சூழலுக்கு உட்பட்டு, உடனடியாக கட்டற்ற அறிவைப் பெற வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.
அதற்கு நாம் புதிய வழிமுறைகளையும் பெரும் திட்டங்களையும் தீட்ட வேண்டியுள்ளது. அப்படிச் செய்ய வேண்டுமானால் நாம் அதற்கு வலுவானவர்கள் என்று உறுதிபட நிறுவ வேண்டிய தேவை உள்ளது. ஒரு எடுத்துக்காட்டு சொல்கிறேன்:
தமிழ் விக்கிமூலத்தில் 2000 நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களைச் சேர்த்துள்ளோம். இவை பல இலட்சம் பக்கங்கள் உள்ளன. இவற்றை மனித முறையில் சரிபார்ப்பது என்றால் பல பத்தாண்டுகள் ஆகலாம். ஆனால், இயந்திரம் மூலம் சரி பார்க்க முடியுமா? அதற்குப் பல மென்பொருளாளர்களை முழு நேரமாக ஈடுபடச் செய்ய முடியுமா? பெருமெடுப்பில் தன்னார்வலர்களை முழு நேரமாக ஈடுபடுத்த முடியுமா? (இப்படிச் செய்வதற்குச் சமூகத்தின் ஒப்புதலும் விக்கிமீடியா அறக்கட்டளையின் ஒப்புதலும் தேவைப்படும் என்பதைக் கவனிக்க!) அதனால், இதனை ஒரு எடுத்துக்காட்டாக மட்டுமே குறிப்பிடுகிறேன்.
நாம் ஏற்கனவே சிறப்பாகச் செயற்படுத்திய சில திட்டங்களுக்கான எடுத்துக்காட்டுகள்:
இத்தகைய வலுவான திட்டங்களின் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு என்று ஒரு நற்பெயரைப் பெற்றுள்ளோம். நாம் அடுத்து கோரும் திட்டங்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
வெகு அரிதாகவே விக்கிப்பீடியாவையும் தமிழ் கட்டற்ற அறிவுச் சூழலையும் வெளியாட்கள் புரிந்து கொள்கிறார்கள். புரிந்து கொள்ளும் ஆட்களால் நமக்கு உதவ முடிவதில்லை. உதவ முடிகிற ஆட்களோ நம்மைப் புரிந்து கொள்வதில்லை.
வயிறு பசிக்கும் மாணவனால் பள்ளிக்கு வர முடியாது என்பதை உணர்ந்து ஒரு நூற்றாண்டு முன்பே இலவச மதிய உணவுத் திட்டம் கொண்டு வந்தவர்கள் நாம். ஆனால், பில் கேட்சு போன்றவர்களே கூட இன்னும் இது பயனுள்ளது தானா என்று சில ஆப்பிரிக்க நாடுகளில் ஆய்வு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய உலகச் சூழலில், நமக்கு என்ன தேவை என்று அறிந்து திட்டங்களை வகுக்க முடிகிற நம்முடன், மற்றவர்கள் இணைந்து கொள்ள பல ஆண்டுகள் ஆகிறது.
2010க்கு முன்பே தகவல் உழவனுக்கு நமது தனிப்பட்ட முயற்சியில் கணினி உதவி அளித்தோம். அதன் பிறகு தமிழ்க் குரிசிலுக்கு இணைய உதவி அளித்தோம். இத்திட்டங்கள் இந்தியாவுக்கே முன்னோடியாக அமைந்து இன்னும் பல இந்திய விக்கிப்பீடியர்களுக்கு உதவியது. தற்போது, இதன் நன்மையைப் புரிந்து கொண்டு விக்கிமீடியா அறக்கட்டளையும் கூகுளும் இணைந்து நூற்றுக் கணக்கானவர்களுக்கு இலவசமாக இணையத்தையும் கணினியையும் வழங்குகிறது. இத்திட்டம் பயனுள்ளது தானா என்று இன்னும் கூட சிலருக்கு ஐயமாக இருக்கலாம். ஆனால், பயன் மிக்கது என்பதில் நான் உறுதியாக இருக்கிறோம். திட்டம் முடிந்து விளைவுகளை அலசும் போது, இத்திட்டம் உலக நாடுகள் பலவற்றுக்கும் விரிவுபடுத்தப்பட்டு இன்னும் பல நாட்டு விக்கிப்பீடியருக்கு உதவும். இந்திய அளவில், உலக அளவில் இது போன்ற திட்டங்கள் எப்படி வகுக்கப் படுகின்றன என்று அருகில் இருந்து பார்த்த முறையில் சொல்கிறேன்: மாற்றம் மிகக் கடினமாக உள்ளது. நமக்கு என்ன தேவை என்று தெரிந்தும், அதனைப் பெற்று வருவது மிகச் சிரமமாக உள்ளது. நாம் இத்தகைய திட்டங்களைச் செயற்படுத்தக் கூடியவர்கள் தானா என்று ஐயுறும் போக்கு உள்ளது.
அதனால், தமிழ் உள்ளிட்ட இந்திய மொழி விக்கிப்பீடியாக்களுக்கு உதவும் இத்திட்டம் வெற்றியடையுமா, எந்த அளவு வெற்றியடையும், தமிழ் விக்கிப்பீடியா இதில் செலுத்தப் போகும் பங்கு என்ன என்பது நம் கையிலேயே உள்ளது.
இத்திட்டத்தின் முதற்பகுதியாக கணினி, இணைய உதவி வழங்கினோம். இரண்டாம் பகுதியாக கட்டுரைப் போட்டி தொடங்கியுள்ளது. கவனிக்க: இது வழமை போல் அனைவரும் பங்கு கொள்ளக்கூடிய போட்டியே. கணினி, உதவி பெற்றோருக்கு மட்டுமான போட்டி அன்று.
ஏற்கனவே, பல தமிழ் விக்கிப்பீடியா முன்னோடித் திட்டங்களில் சிறப்பாகப் பங்களித்தவர் என்ற முறையில் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் முனைப்புடன் பங்களித்து மாபெரும் வெற்றியடையைச் செய்ய உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
தமிழ் விக்கிப்பீடியர் 50 பேர் மாதம் 15 கட்டுரைகளை எழுதினாலும் 2000 கட்டுரைகள் என்ற இலக்கை இலகுவாக அடைந்து விடலாம். எனவே. உங்களுடைய வழக்கமான விக்கி பங்களிப்பு ஆர்வத்துக்கு இடையே இந்தப் போட்டியிலும் பங்கு பெறக் கோருகிறேன். உங்கள் ஒவ்வொருவராலும் பரிசுகள் வெல்ல முடியாது. அது நம் நோக்கமும் இல்லை. இங்கு பரிசு என்பது ஊக்கம் மட்டுமே. ஆனால், தனிப்பட்ட பரிசுகளைத் தாண்டி அதிகம் கட்டுரைகளை எழுதும் விக்கிப்பீடியாவுக்குச் சமூகப் பரிசு உண்டு. இது சுமார் 10,00,000 இந்திய ரூபாய் மதிப்பில் இலங்கை, இந்தியாவைச் சேர்ந்த 40 தமிழ் விக்கிப்பீடியர்களுக்குத் திறன்கள் பயிற்சி அளிக்கும் வாய்ப்பாக அமையும். இந்த வாய்ப்பைத் தட்டிச் செல்வது நமது திறன்களை மேம்படுத்திக் கொள்ளவும் மீண்டும் ஒரு முறை அனைவரும் கண்டு மகிழவும் வாய்ப்பாக அமையும்.
இந்த ஒவ்வொரு தலைப்பும் தமிழர்களுக்கு உடனடித் தேவை தானா என்று கூட உங்களுக்கு ஐயம் இருக்கலாம். இங்கு காணப்படும் தலைப்புகள் யாவும் தமிழகப் பகுதியில் இருந்து அதிகம் தேடி ஆங்கில விக்கிப்பீடியாவில் படிக்கப்படும் பக்கங்கள். இவை தமிழ் விக்கிப்பீடியாவில் குறைந்தபட்ச தரத்திலேனும் இல்லாவிட்டால், ஆங்கிலம் நன்றாகத் தெரிந்தல் ஒழிய இந்த அறிவைத் தமிழர்கள் பெற முடியாது. மொழியின் அடிப்படையில் எழும் இந்த இடைவெளியை நிரப்பத் தான் இந்தப் போட்டி நடைபெறுகிறது. இதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவுக்குக் கூடுதலாகப் பல புதிய வாசகர்களும் பங்களிப்பாளர்களும் கிடைப்பார்கள் என்றும் எதிர்பார்க்கிறோம். உங்களுக்கு ஆர்வம் ஊட்டக் கூடிய கலை, இலக்கியம், வரலாறு, புவியியல், அறிவியல், நுட்பம், நல வாழ்வு, பெண்கள் என்று இன்னும் பல்வேறு துறைகளில் கூடுதல் தலைப்புகளைப் பெற முயன்று கொண்டிருக்கிறோம். இந்தக் கூட்டுழைப்பு நிச்சயம் ஒரு அறிவுச் சமூகமாக நம்மை அடுத்த தளத்துக்கு இட்டுச் செல்லும்.
வழமை போல் எத்தனையோ வகையான பங்களிப்புகளில் ஈடுபடும் தாங்கள், இப்போட்டியில் கலந்து கொண்டு இத்திட்டத்தை வெற்றியடையச் செய்வீர்கள் என்றால் அதன் விளைவுகள் மிகவும் தொலைநோக்கானவையாக அமையும். தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு எங்களுக்குக் கூடுதல் திட்டங்களைச் செயற்படுத்தித் தாருங்கள் என்று கேட்டு வாங்கும் வலுவான இடத்தில் நம்மை அமர்த்தும். இது வரை நான் இப்படி உங்களுக்குக் கடிதம் எழுதியது இல்லை. இப்போது எழுதுகிறேன் என்றால், கட்டுரைப் போட்டியில் உங்கள் பங்களிப்பு இப்போது தேவை என்று உரிமையோடு கேட்டுக் கொள்ளவே.
இத்திட்டம் தொடர்பாக கேள்விகள், ஐயங்கள் இருப்பின் தயங்காது கேளுங்கள்.
நன்றி. --இரவி (பேச்சு) 09:41, 10 மார்ச் 2018 (UTC)
- கட்டுரைப் போட்டியில் தலைப்புகள் குறித்த முக்கிய மாற்றம் ஒன்றைப் பற்றி உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த 2000 தலைப்புகள் பெரிதும் திரைப்படங்கள், நடிகர்கள், பாடகர்கள் போன்ற பரவலான ஈடுபாடுடையை தலைப்புகளை மட்டும் கொண்டிருந்தன என்பதைக் கவனத்தில் கொண்டு தற்போது கூடுதலாகப் பல புதிய தலைப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. இப் புதிய பட்டியலில் பெண்கள், உடல்நலம், அறிவியல் மற்றும் நுட்பம், வரலாறு மற்றும் புவியியல், கலை மற்றும் அறிவியல் போன்ற துறைகளுக்கு முன்னுரிமை தந்து தொகுத்துள்ளோம். இவை தமிழகப் பகுதியில் இருந்து அதிகம் படிக்கப்படும் ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரைகள். ஆனால், இவை தமிழில் இல்லை (அல்லது போதுமான விரிவு/தரத்துடன் இல்லை). தமிழகத்தில் இருந்தாலும் ஆங்கிலம் அறிந்தால் மட்டுமே இவ்வறிவைப் பெற்றுக் கொள்ள முடியும் என்ற நிலையை மாற்றி தமிழிலேயே இவ்வறிவைத் தரும் முயற்சியே இக் கட்டுரைப் போட்டி. இத்தலைப்புகள