உள்ளடக்கத்துக்குச் செல்

பக்த ஸ்ரீ தியாகராஜா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பக்த ஸ்ரீ தியாகராஜா
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்வீரேந்திர ஆர். தேசாய்
மூலக்கதைதியாகராஜர் வாழ்க்கை வரலாறு
திரைக்கதைஎம். பி. சுந்தரராஜன்
நடிப்புமாதிரிமங்கலம் நடேச ஐயர்
கமலா
சீதா
டி. கே. பி. சாஸ்திரி
மற்றும் பலர்
ஒளிப்பதிவுரஜனிகாந்த பாண்டியா[1]
கலையகம்சாகர் மூவிடோன்
வெளியீடுமார்ச்சு 27, 1937 (1937-03-27)[2]
ஓட்டம்14,533 அடி[2]
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பக்த ஸ்ரீ தியாகராஜா அல்லது ஸ்ரீ தியாகராஜா சரிதம் 1937 ஆம் ஆண்டு வெளியான ஒரு இந்திய தமிழ்த் திரைப்படமாகும். வீரேந்திர தேசாய் இயக்கத்தில் வெளியான இத்திரைப்படத்தில் மாதிரிமங்கலம் நடேச ஐயர், கமலா, சீதா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்தனர்.[1]

திரைக்கதை[தொகு]

18 ஆம் நூற்றாண்டில் திருவாரூரில் பிறந்து திருவையாற்றில் வாழ்ந்தவரும், கருநாடக சங்கீத மும்மூர்த்திகள் எனப் போற்றப்படுபவர்களில் ஒருவருமான தியாகராஜ சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டது.[1]

நடிகர்கள்[தொகு]

மாதிரிமங்கலம் நடேச ஐயர்
கமலா
சீதா
டி. கே. பி. சாஸ்திரி
சி. பி. எஸ். மணி ஐயர்
எஸ். கே. சுந்தரம்
கவை கல்யாணம்
ஏ. தனபால் செட்டியார்
வி. பி. ஸ்ரீநிவாசன்
பேபி கோகிலா
மாஸ்டர் பிரணதார்த்திகரன்
பத்மநாபாச்சார்

இராஜகோபால ஐயர்

[1]

தயாரிப்பு விபரம்[தொகு]

1930 களில் கடவுளர்களையும் அவர்தம் அடியார்களையும் பற்றிய பக்திப் படங்கள் வெளியாகின. 1936-37 காலப்பகுதியில் மகாத்மா கபீர்தாஸ், பட்டினத்தார், மீராபாய், அருணகிரிநாதர், சுந்தரமூர்த்தி நாயனார், பக்த அருணகிரி, பக்த துளசிதாஸ், பக்தி புரந்தரதாச, பக்த ஜெயதேவ எனப் பல இறைவன் அடியார்களைப் பற்றிய திரைப்படங்கள் வெளிவந்து அவை பெரும் வரவேற்பையும் பெற்றன.
அந்த வரிசையில் இராம பக்தரான ஸ்ரீ தியாகராஜர் பற்றிய இந்தத் திரைப்படம் வெளியானது. அக்காலத்தில் பம்பாயில் (இப்போது மும்பை) பிரபல திரைப்படத் தயாரிப்பு நிறுவனமாக விளங்கிய சாகர் மூவிடோன் இத் திரைப்படத்தைத் தயாரித்தது. இயக்குநர் வீரேந்திர தேசாய்க்கு போதிய தமிழறிவு இல்லாததால் சென்னையில் பிரபல சட்ட வல்லுநராக விளங்கியவரும், திரைப்படத்துறையில் பணியாற்றிக் கொண்டிருந்தவருமான டி. பி. கல்யாணராம சாஸ்திரி இணை இயக்குநராகப் பணியாற்றினார்.
சென்னையில் அக்கால பிரபல வக்கீல் எம். பி. சுந்தரராஜன் கதை, வசனம் எழுதினார். அவரின் மகன் சிறுவன் பிரணதார்த்திகரன் ஒரு பாத்திரத்தில் நடித்தான். இந்தப் பிரணதார்த்திகரன் பின்நாளில் மும்பையில் இயங்கிய இந்தியன் பிலிம் டிவிசனில் தொகுப்புக்குப் பொறுப்பான மேலதிகாரியாகப் பணியாற்றினார்.[1]

பாடல்கள்[தொகு]

இத் திரைப்படத்தில் 32 பாடல்கள் இடம் பெற்றன. அநேகமாக எல்லாம் ஸ்ரீ தியாகராஜர் பாடிய தெலுங்கு கீர்த்தனைகள். கருநாடக இசைப் பாடகரான மாதிரிமங்கலம் நடேச ஐயர் தியாகராஜர் கீர்த்தனைகளைப் பாடி நடித்தார். இரண்டு பாடல்கள் தமிழில் அமைந்திருந்தன. தியாகராஜரிடம் வழிப்பறி செய்ய வந்த திருடர் கூட்டம் பாடும் ஒரு குழுப்பாடலும், தியாகராஜரின் எவரெனி என்ற தெலுங்கு கீர்த்தனையின் தமிழாக்கமாக சிவனோ .. என்ற பாடலும் இடம் பெற்ற தமிழ்ப் பாடல்களாகும்.[1]

சான்றாதாரங்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 கை, ராண்டார் (7 ஜூன் 2014). "Bhaktha Sri Thyagaraja (1937)". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 23 அக்டோபர் 2016. {{cite web}}: Check date values in: |date= (help)
  2. 2.0 2.1 பிலிம் நியூஸ் ஆனந்தன் (2004). சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். Archived from the original on 2016-11-02. பார்க்கப்பட்ட நாள் 2016-10-23. {{cite book}}: Cite has empty unknown parameter: |coauthors= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பக்த_ஸ்ரீ_தியாகராஜா&oldid=3722764" இலிருந்து மீள்விக்கப்பட்டது