பேச்சு:யோகியாகார்த்தா ஆடினின்கிராத்து அரண்மனை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலைப்பு[தொகு]

@Fahimrazick: கிராத்தொன் ஙயோகியாக்கார்த்தா ஆடினின்கிராத்து, யோகியாக்கார்த்தா, இந்த தலைப்பு சரி தானா?? --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 04:38, 16 செப்டம்பர் 2020 (UTC)

சரி என்பதாலேயே மாற்றியுள்ளேன். ஹடினின்கிராத்து என்றிருக்க வேண்டும், ஆனால் தலைப்புக்களில் கிரந்த எழுத்துக்களைத் தவிர்க்கும் கொள்கைப்படி அதனைத் தவிர்த்துள்ளேன்.--பாஹிம் (பேச்சு) 17:27, 26 செப்டம்பர் 2020 (UTC)

இந்த அரண்மணைக்கு நேரடியாகப் போயிருக்கிறேன். நான் 4ஜீ தொழினுட்பத்தைப் பயன்படுத்தி இங்குள்ள நிகழ்ச்சிகளை இலங்கைக்கு நேரடியாக அஞ்சல் செய்ததுமுண்டு. இதைத் தவிர வேறு சில அரண்மனைகளுக்கும் சென்றுள்ளேன். சோலோ அரண்மனையைச் சேர்ந்த சிலருடன் நல்ல பழக்கமும் உண்டு.--பாஹிம் (பேச்சு) 17:31, 26 செப்டம்பர் 2020 (UTC)

@Fahimrazick: ஙயோகியாக்கார்த்தா தமிழில் (ங)வைக் கொண்டு, முதல் எழுத்து தோன்றாது.-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 18:12, 26 செப்டம்பர் 2020 (UTC)

@Fahimrazick: Kraton Ngayogyakarta Hadiningrat என்பதற்கு கிராத்தொன் ஙயோகியாக்கார்த்தா ஆடினின்கிராத்து, யோகியாக்கார்த்தா என்று தலைப்பிட்டுள்ளீர்கள். இத்தலைப்பில் கௌதம் மேலே குறிப்பிட்டது உட்பட மூன்று தவறுகளைக் காண்கிறேன்:
  • பொதுவாக எந்த மொழியானாலும் Palace என்பதை அரண்மனை என்று தான் எழுதுவோம். இங்கும் கிராத்தொன் என்றால் அரண்மனையைக் குறிக்கிறது. எனவே கிராத்தொன் என்பதற்குப் பதிலாக அரண்மனை என எழுதவேண்டும்.
  • Ngayogyakarta என்பது சாவக மொழியில் யோகியாக்கார்த்தா என்ற நகரையே குறிக்கிறது. எனவே இரண்டு முறை நகரின் பெயரைத் தலைப்பில் தரவேண்டியதில்லை.

எனவே தலைப்பை யோகியாகார்த்தா ஆடினின்கிராத்து அரண்மனை என மாற்றப் பரிந்துரைக்கிறேன்.--Kanags \உரையாடுக 23:16, 26 செப்டம்பர் 2020 (UTC)

இங்கே நான் ஏற்கனவே இருந்த தலைப்பில் சாவக மொழிக்கேற்றவாறு எழுத்துத் திருத்தம் மாத்திரமே செய்தேன். வேறு எதையும் கவனிக்கவில்லை. இந்தோனேசியாவில் சாதாரணமாக அரண்மனை என்பதைக் குறிக்க இஸ்தானா என்றே குறிப்பிடப்படுகிறது. கிராத்தொன் என்ற சொல் பண்டைக்கால அரண்மனைகளுக்குக் குறிப்பான சொல். அடுத்தது @Gowtham Sampath: தமிழில் ங முதலெழுத்தாகத் தோன்றாதென்று கூறுகிறீர்கள். அது எந்த ஆதாரத்தின் அடிப்படையில் என்று சொல்கிறீர்களா? ஔவையார் ஙப்போல் வளை என்று ங என்ற எழுத்தை முதலெழுத்தாகக் கொண்டு எழுதியுள்ளார்.--பாஹிம் (பேச்சு) 16:43, 27 செப்டம்பர் 2020 (UTC)

@Gowtham Sampath:,

சுட்டு, யா, எகர வினா வழி, அவ்வை
ஒட்டி ஙவ்வும் முதல் ஆகும்மே (நன்னூல் - 106)

என்று ஙகரம் மொழி முதலெழுத்தாகலாம் என்கிறார் நன்னூலார். நீங்கள் தமிழில் (ங)வைக் கொண்டு, முதல் எழுத்து தோன்றாது என்கிறீர்கள். ஆதாரமேயில்லாமல் வெற்றுக் கூற்றாக இலக்கணம் கூறக் கூடாது.--பாஹிம் (பேச்சு) 16:51, 27 செப்டம்பர் 2020 (UTC)

@Fahimrazick: காண்க -- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 17:06, 27 செப்டம்பர் 2020 (UTC)

நீங்கள் காட்டிய இணைப்பில் அப்படியொரு ஆதாரமும் கிடையவே கிடையாதே. நான் ஆதாரம் தந்துள்ளேன். உங்களிடம் இலக்கண ஆதாரம் கேட்கிறேன். விக்கிப்பீடியா ஆதாரமல்ல.--பாஹிம் (பேச்சு) 17:14, 27 செப்டம்பர் 2020 (UTC)

@Fahimrazick: ங, ட, ண, ர, ல, ழ, ள, ற, ன என்னும் ஒன்பது எழுத்துகளும், மொழி முதலில் வராது என தொல்காப்பியத்தில் கூறப்பட்டுள்ளது. காண்க

தொல்காப்பியத்தைப் பின்பற்றினால் நீங்கள் எழுதுவது அப்படியே பிழை. இங்கே நான் மட்டுமல்ல, எல்லாப் பல்கலைக்கழகங்களிலும் நன்னூல் இலக்கணத்தையே கற்பிக்கிறார்கள். அதுவே பின்பற்றப்படுகிறது.--பாஹிம் (பேச்சு) 03:12, 28 செப்டம்பர் 2020 (UTC)

@Fahimrazick: சரி. நன்னூல் இலக்கணத்தை பின்பற்றி, எழுத்தை முதலில் கொண்டு, தற்போது வரை எத்தனை வார்த்தைகள் தமிழில் உள்ளது-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 04:30, 28 செப்டம்பர் 2020 (UTC)

1. இது வேற்று மொழிச் சொல். 2. இங்கே இலக்கணப்படி முடியுமா முடியாதா என்பதே கேள்வி. எத்தனை இருந்தால் என்ன? ஒரேயொரு சொல் இருந்தாலும் இலக்கணப்படி சரியாயின் அதுவே போதும்.--பாஹிம் (பேச்சு) 04:50, 28 செப்டம்பர் 2020 (UTC)

நீங்கள் இலக்கணம் பேச முனைகிறீர்கள். நீங்கள் விடும் பெருந்தவற்றைப் பார்க்கவில்லையா? எத்தனை வார்த்தைகள் தமிழில் உள்ளது என்று பன்மையில் தொடங்கி ஒருமையில் முடித்துள்ளீர்கள். அதற்கு என்ன இலக்கணம்?--பாஹிம் (பேச்சு) 04:52, 28 செப்டம்பர் 2020 (UTC)