விக்கிப்பீடியா:சிறப்புக் கட்டுரைகள் முன்மொழிவு/பிலிப்பீன்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிலிப்பீன்சு கட்டுரை சிகரம் திட்டத்தினூடாகச் சிறப்புக் கட்டுரைத் தகுதிகளைப் பூர்த்தி செய்யும் வகையில் முழுமையாக விரிவாக்கப்பட்டுள்ளது. இக்கட்டுரையைச் சிறப்புக் கட்டுரையாக்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட பராமரிப்புப் பணிகளை இப்பக்கத்தில் காணலாம். இக்கட்டுரை ஆங்கிலக் கட்டுரைக்கு (Philippines) நிகரான வகையில் சகல விடயங்களையும் உள்ளடக்கி எழுதப்பட்டுள்ளதுடன் சிறந்த கட்டுரைகளுக்கு எடுத்துக்காட்டாகவும் அமைந்துள்ளது. இக்கட்டுரையை சிறப்புக் கட்டுரையாக நியமிப்பதற்கு முன்மொழிகின்றேன்.--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 10:55, 4 பெப்ரவரி 2015 (UTC)

ஆதரவு[தொகு]

  1. --{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 10:55, 4 பெப்ரவரி 2015 (UTC)
  2. --நந்தகுமார் (பேச்சு) 13:14, 5 பெப்ரவரி 2015 (UTC)
  3. --குறும்பன் (பேச்சு) 15:20, 5 பெப்ரவரி 2015 (UTC)
  4. --ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:55, 5 பெப்ரவரி 2015 (UTC)
  5. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 05:49, 6 பெப்ரவரி 2015 (UTC)
  6. --சிவகோசரன் (பேச்சு) 15:53, 6 பெப்ரவரி 2015 (UTC)
  7. --Mohamed ijazz (பேச்சு) 17:20, 6 பெப்ரவரி 2015 (UTC)
  8. ஆதரவு. சிறப்புக் கட்டுரையாக அறிவித்துத் தொடர்ந்து மேம்படுத்தி வரலாம்.--இரவி (பேச்சு) 12:05, 28 சூலை 2015 (UTC)[பதிலளி]

நடுநிலைமை[தொகு]

  1. --மணியன் (பேச்சு) 04:41, 6 பெப்ரவரி 2015 (UTC)

எதிர்ப்பு[தொகு]

கருத்துக்கள்[தொகு]

கருத்து 1[தொகு]

ஸ்ரீகர்சன், மிகவும் பாராட்டத்தக்க முயற்சி !! வாழ்த்துகள் !! நீண்ட காலத்திற்குப் பின்னர் சிறப்புக் கட்டுரையாக அறிவித்திட முறையாக முன்மொழிவு செய்யப்பட்டுள்ளதால் இது எதிர்வரும் கட்டுரைகளுக்கு முன்னோடியாக அமையவுள்ளது. இக்காரணத்தால் சில மேம்பாடுகளைப் பரிந்துரைக்கிறேன்:

  1. செம்மல், பூங்கோதை போன்றவர்களால் சொற்பிழை, இலக்கணப்பிழைகள் சரிபார்த்தல் நல்லது.
  2. சிவப்பு இணைப்புகள் இல்லாதபோதும் கட்டுரை முழுமையாகச் சென்றடைய சில இணைப்புகள் இல்லாதுள்ளது: மூன்று முதன்மைத் தீவுகள், பிலிப்பீன்சின் பிராந்தியங்கள், சில நபர்கள். இவையும் அடையாளம் காணப்பட்டு அவற்றிற்கு குறுங்கட்டுரைகளாவது எழுதப்பட வேண்டும்.

ஆங்கில விக்கி போல (A Class -> GA -> FA) முதல்தரம் -> நல்ல கட்டுரை -> சிறப்புக் கட்டுரை எனத் தரப்படுத்தினால் இதனை நல்ல கட்டுரை என்று தற்போது தேர்ந்தெடுக்கலாம் என்பது எனது கருத்து. தமிழ் விக்கியின் தற்போதைய சிறப்புக் கட்டுரைகளின் தரம் கருதி இதனை சிறப்புக் கட்டுரையாக அறிவித்து அவ்வப்போது மேம்பாடுகளைச் செய்து வரவும் உடன்படுகின்றேன். --மணியன் (பேச்சு) 04:40, 6 பெப்ரவரி 2015 (UTC)

உங்கள் ஊக்குவிப்பிற்கு நன்றி மணியன் அவர்களே! பூங்கோதை அவர்களும் அன்டன் அவர்கள், கனக்ஸ் அவர்கள், நந்தகுமார் அவர்கள் உள்ளிட்ட பிற பயனர்களும் ஆரம்பத்தில் உரை திருத்தங்களை மேற்கொண்டிருந்தனர் பின்னர் குறும்பன் அவர்களும் ஸ்ரீஹீரனும் உரை திருத்தத்தினை முழுக் கட்டுரையிலும் மேற்கொண்டனர். சொற்பிழை, இலக்கணப்பிழைகள் இருப்பின் நீங்கள் கூறியது போல் மீண்டும் அவற்றைச் சரிபார்த்தல் சிறப்பானதே. முழுக் கட்டுரையையும் மொழிபெயர்க்கும் போது தவறுகள் நிகழ்வது சகஜமானது. அதனால் தான் பல பயனர்களின் பேச்சுப்பக்கத்திலும் நான் உரை திருத்த உதவி கோரியிருந்ததுடன் ஒரு மாதத்திற்கு மேலாகக் காத்திருந்து சிறப்புக் கட்டுரையாக்க முன்மொழிந்தேன். ஆரம்பத்தில் பிலிப்பீன்சு கட்டுரையுடன் தொடர்புபட்ட பல முக்கிய கட்டுரைகள் இருக்கவில்லை. பின்னர் உங்களதும், ஸ்ரீஹீரனதும் பிற பயனர்களதும் உதவியுடன் நான்/நீங்கள் கட்டுரைக்கு முக்கியமானவை எனக் கருதிய 25 இற்கும் மேற்பட்ட கட்டுரைகள் உருவாக்கப்பட்டன. மேலும் கட்டுரைகள் உருவாக்கப்பட வேண்டும் எனக் கருதினால் அக்கட்டுரைகளை அவற்றுக்குரிய ஆங்கில இணைப்புடன் இப்பக்கத்தில் இட்டு உதவுங்கள்.
தமிழ் விக்கியின் தற்போதைய நிலைப்படி ஆங்கில விக்கியில் FA, GA தரத்திலுள்ள கட்டுரைகள் தமிழில் ஆங்கிலத்திற்கு நிகராக எழுதப்படின்/மொழிபெயர்க்கப்படின் அவற்றுக்கு சிறப்புக் கட்டுரைத் தகுதி வழங்கலாம் என்பது என் சொந்தக் கருத்து. ஏற்கனவே உள்ள சிறப்புக் கட்டுரைகளையும் மீளாய்வு செய்ய வேண்டும். மீளாய்வு செய்து அவை சிறப்புக் கட்டுரைத் தகுதிகளை இழந்துள்ளன என்பதைக் கண்டறிந்தால் அவற்றை முன்னாள் சிறப்புக் கட்டுரைகள் (en:Wikipedia:Former featured articles) அல்லது நல்ல கட்டுரை எனத் தகுதி மாற்றம் செய்யலாம். பிற பயனர்களின் கருத்துக்களையும் வரவேற்கின்றேன்.--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 12:24, 6 பெப்ரவரி 2015 (UTC)
ஸ்ரீகர்சன், உங்களுடன் சேர்ந்து நானும் இத்திட்டத்தில் பயணித்ததால் இதனை சிறப்புக் கட்டுரையாக்குவதில் எனக்கும் ஆவலுண்டு :) இருப்பினும் இன்னும் மேம்படுத்தலாமே என்ற எண்ணத்தையே முன்வைத்தேன். /தமிழில் ஆங்கிலத்திற்கு நிகராக எழுதப்படின்/மொழிபெயர்க்கப்படின் / இது உள்ளடக்கத்திற்குத் தான் பொருந்தும் - உரைகள், படிமங்கள்,மேற்கோள்கள் - ஆனால் தமிழ் நடை, இலக்கணம் ஆகியவற்றை ஆய்வுசெய்து சிறப்புக் கட்டுரை ஆக்க வேண்டும். ஆங்கிலத்தில் இதற்காக பலர் முன்வருகிறார்கள். நமது சூழலில் ஒரு சிலரே இதற்கான மனவிழைவைப் பெற்றுள்ளனர்.
உள்ளிணைப்புகளைப் பொறுத்தவரை கட்டுரையைப் படிப்பவருக்கு தெரியாத இடங்கள், நபர்களுக்கும் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்படும் கருத்துக்களுக்கும் நிச்சயமாக இணைப்புகள் ஏற்படுத்த வேண்டும். பிலிப்பைன்சு பெயர் வைக்கப்பட்ட அரசருக்கே கட்டுரை இல்லாதிருத்தல் நல்லதல்ல. நான் அடுத்த ஒரு வாரத்திற்கு வெளியூர் செல்லவிருப்பதால் வேண்டிய இணைப்பைகளை பட்டியலிட முடியவில்லை. இணைய வசதி கிடைத்தால் இயன்றவரை உதவுகின்றேன். நான் குறிப்பிட்டது போல தற்போதைய நிலையில் சிறப்புக் கட்டுரை வழங்க எனக்கு எதிர்ப்பு எதுவும் இல்லை.--மணியன் (பேச்சு) 15:38, 7 பெப்ரவரி 2015 (UTC)
தங்கள் பதிலுக்கு நன்றி மணியன் அவர்களே! ஆங்கில விக்கியில் இங்கு உள்ளது போல அனைத்துத் தகுதிகளையும் பிலிப்பீன்சு கட்டுரை பூர்த்தி செய்யினும் well-written: its prose is engaging, even brilliant, and of a professional standard; என்பதை அழுத்தமாகக் கருத்திற்கொள்ள வெண்டும் என்ற உங்கள் எண்ணத்துடன் முழுமையாக உடன்படுகின்றேன். அண்மைக்காலமாகச் சில முக்கிய கட்டுரைகளை உருவாக்கித்தந்தமைக்கு நன்றி. தேவைப்படும் மேலதிக கட்டுரைகளை இங்கு பட்டியலிடுகின்றேன். நேரம் கிடைக்கும் போது நீங்களோ அல்லது சக விக்கிப்பீடியர்களோ உருவாக்கி உதவுங்கள்.--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 05:53, 8 பெப்ரவரி 2015 (UTC)
கருத்து 2[தொகு]

தமிழ் விக்கிப்பீடியாவின் தற்போதைய நிலையில் மிகவும் இறுக்கமான வழிமுறைகள் பின்பற்றப்பட வேண்டியதில்லை என்பது ஒரு பொதுவான கருத்து. இக்கட்டுரை சிறப்புக் கட்டுரைக்கான தகுதிகளைப் பெரிதும் கொண்டுள்ளது. இதனைச் சிறப்புக் கட்டுரையாக அங்கீகரிக்கலாம். மேலும், ஏற்கனவேயுள்ள சிறப்புக் கட்டுரைகளை மீள்பரிசீலனை செய்வது தற்போது அவசியமானதொன்றாகத் தோன்றவில்லை. --சிவகோசரன் (பேச்சு) 16:00, 6 பெப்ரவரி 2015 (UTC)

என் கருத்துப்படி ஏற்கனவேயுள்ள சிறப்புக் கட்டுரைகளை மீள்பரிசீலனை செய்வது அவசியமானது. ஆங்கில விக்கியில் உள்ளவாறு en:Wikipedia:Featured article review போன்றதொரு சிறப்புக் கட்டுரை மீள்பரிசீலனை நடைமுறையைத் தமிழிலும் அறிமுகப்படுத்துவது பயனுள்ளதாக அமையும். இச்சிறப்புக் கட்டுரைகளும் 2006 ஆம் ஆண்டில் சிறப்புக் கட்டுரைகளாக நியமிக்கப்பட்டிருப்பதால் இக்கட்டுரைகளில் பெரும்பாலானவை சிறப்புக் கட்டுரைக்கான தகுதியை இழக்கும் தறுவாயிலுள்ளன. இதற்கு எடுத்துக்காட்டாகப் பெரும்பாலான சிறப்புக் கட்டுரைகளில் போதியளவு சான்றுகள் இல்லாமையைக் குறிப்பிடலாம். இது முக்கியமாகக் கவனிக்கப்படவேண்டிய விடயமாகும்.--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 12:58, 7 பெப்ரவரி 2015 (UTC)
👍 விருப்பம் சிவகோசரன், முந்தைய காலகட்டத்தில் இத்தனை முனைப்பான பயனர்கள் இருந்ததில்லை; அப்போது பல அடிப்படைக் கட்டுரைகளை விரைவாக ஆக்க வேண்டிய தேவை இருந்தது. தற்போது தமிழ் விக்கி ஒரு நிலைத்த நிலையை அடைந்துள்ளதால் நமது வழிமுறைகளை இறுக்கிக் கொள்ள வேண்டியது நல்லது. போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து என்பது மன அமைதிக்கு வழியாகும்; ஆனால் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் வழியாகாது. மனநிறைவு கொள்ளாமையே சிறந்த ஆக்கங்களுக்கு அடிப்படை. இஃதேபோல பழைய சிறப்புக் கட்டுரைகளையும் மீளாய்வு செய்தல் அவசியமாகும். --மணியன் (பேச்சு) 15:38, 7 பெப்ரவரி 2015 (UTC)
நல்லது மணியன். நாம் அடுத்தகட்ட வளர்ச்சிக்குத் தயாராவோம்! சிறப்புக்கட்டுரைகளை மீளாய்வு செய்வதில் என்னாலான ஒத்துழைப்பை வழங்குகிறேன். --சிவகோசரன் (பேச்சு) 09:19, 8 பெப்ரவரி 2015 (UTC)
கருத்து 3[தொகு]

2006 வாக்கில் முதற்பக்கத்தில் கட்டுரைகள் தேவை என்பதே பார்க்கப்பட்டது. சிறப்புக் கட்டுரை தகுதி பற்றிய இறுக்கமோ உரையாடலோ இல்லை. இதன் போதாமைகளை உணர்ந்தே, முதற்பக்கக் கட்டுரைகள் என்ற முறை கொண்டு வரப்பட்டது. எனவே, தற்போது சிறப்புக் கட்டுரை நிலையில் உள்ள அனைத்துக் கட்டுரைகளையும் மீளாய்வு செய்ய வேண்டும். விக்கிப்பீடியா:சிறப்புக் கட்டுரைத் தகுதிகள் வரையறையை இற்றை செய்ய வேண்டும் (இணையான ஆங்கில விக்கி பக்கம்). பல ஆண்டுகள் கழித்து மீண்டும் சிறப்புக் கட்டுரைகள் தெரிவைத் தொடங்குகிறோம் என்பதால் நல்ல முன்மாதிரியை நிறுவ வேண்டும். ஏன் எனில், இதன் அடிப்படையில் அடுத்து பல கட்டுரைகளை அலச வேண்டி இருக்கும். பிலிப்பீன்சு கட்டுரைக்குப் பின் அசுரத்தனமான உழைப்பு உள்ளது. இவ்வளவு பெரிய கட்டுரையில் இத்தனை நீள இணைப்புகளைக் காண மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. எனினும், மணியன் சொன்ன மாதிரி இன்னும் கொஞ்சம் மெனக்கடலாம். இன்னும் கொஞ்சம் பொறுமை காக்கலாம். தமிழ் விக்கிப்பீடியாவில் மற்ற பல இடங்களில் போதிய இளக்கம் காட்டப்படுகிறது. சிறப்புக் கட்டுரை என்பது உயர் தகுதி என்பதால் அதில் இறுக்கம் காட்டுவதில் தவறு இல்லை. என்னுடைய பங்களிப்பையும் தந்து விட்டு ஆதரவு வாக்கிடுகிறேன். இக்கட்டுரைக்காக உழைத்த அனைவருக்கும் உளமார்ந்த நன்றி.--இரவி (பேச்சு) 16:17, 7 பெப்ரவரி 2015 (UTC)

👍 விருப்பம் இரவி அவர்களே! தங்கள் கருத்துக்களுக்கும் உங்களுடைய பங்களிப்பை வழங்க முன்வந்தமைக்கும் நன்றி. சிறப்புக் கட்டுரைத் தகுதிகளில் இறுக்கம் காட்டுவது ஆரோக்கியமானதொன்றாகும். தொடர்ந்தும் பிலிப்பீன்சைப் பலப்படுத்துவோம்.--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 06:20, 8 பெப்ரவரி 2015 (UTC)
கருத்து 4[தொகு]

மணியன், இரவி ஆகியோரின் கருத்துக்களுடன் உடன்படுகிறேன். அக்கருத்துக்களை ஆக்கபூர்வமாகக் கருதி ஏற்றுக் கொள்ளும் உங்கள் மனநிலைக்குப் பாராட்டுக்கள். தரம் என்பது அங்கு ஒன்றும் இங்கு ஒன்றுமாக இருக்கக் கூடாது. அங்கு இருப்பதைவிட இன்னும் அதிகமாக இங்கு தரம் இருக்கும் என்றால் த.விக்குத்தான் பெருமை. அதேவேளை, இந்தளவிற்கு கட்டுரையினை வளர்த்த உங்கள் முயற்சி வீணாகக் கூடாது. மேலும், ஏற்கெனவே இருக்கும் கட்டுரைகளில் எல்லாம் இக்கட்டுரை சிறப்பானது என்பது என் கருத்து. சிறப்புக் கட்டுரைக்காக நம்மிடம் முறையான அளவுகோல் இல்லை. அதற்கான கருவிகளும் இல்லை. ஆ.வியில் சிறப்புக் கட்டுரைக்காக கருவிகள் இவை.

எனவே இக்கருவிகளின் வேலையை நாம் செய்ய வேண்டும். அத்தோடு விரைவான சில குறிப்புகள்:

  • வரைபடங்கள் (3 உள்ளன?) தமிழாக்கத்துடன் இருக்க வேண்டும்.
  • மேற்கோள்களில் உள்ள ஆங்கில சிவப்பு இணைப்புகள் நீக்கப்படுவது சிறப்பு. சில மேற்கோள்கள் வெற்று இணைப்புகளாகவுள்ளன (எ.கா: <ref>100 Events That Shaped The Philippines (Adarna Book Services Inc. 1999 Published by National Centennial Commission) Page 72 "The Founding of the Sulu Sultanate"</ref>).
  • குறுங்கட்டுரைகளாவது இவற்றுக்குத் தேவை - 19 மொழிகள், தேசிய இனங்கள், நிர்வாகப் பிரிவுகள் (பிலிப்பைன்சின் 17 பிராந்தியங்கள் 81 மாகாணங்கள் - வார்ப்புருவில் சிவப்பு இணைப்புக்களாகவுள்ளன), சமயங்களுக்கு இணைப்பு / குறுங்கட்டுரைகள்

இவற்றை உடன் கருத்திற் கொள்வோம். மணியன் குறிப்பிட்ட கருத்துகளில் முக்கிய கவனம் செலுத்துங்கள். ஒரு கட்டத்தை தாண்டி அடுத்த கட்டத்திற்குச் செல்வது இலகு. சிகரம் தொட்டுவிடும் தூரந்தான்! --AntonTalk 07:34, 8 பெப்ரவரி 2015 (UTC)

தங்கள் கருத்துகளுக்கு நன்றி அன்டன் அவர்களே! நான் ஆங்கில விக்கியில் பங்களிப்பது அரிதென்றாலும் பல சிறப்புக் கட்டுரை முன்மொழிவு உரையாடல்களை வாசித்திருக்கின்றேன். அங்கு முன்வைப்பது போன்ற சிறு சிறு தவறுகளையும் சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. இவ்வாறு சிறப்புக் கட்டுரைக்கான கருவிகள் இருப்பது எனக்கு இப்போது தான் தெரியும். வரைபடங்களைத் தமிழாக்க சிபி அவர்களிடம் கேட்டுப் பார்க்கலாம். அல்லது நீங்களே முடியுமென்றால் கட்டுரையிலுள்ள இணையான தமிழ் சொற்களைப் பயன்படுத்தித் தமிழாக்கம் செய்து உதவுங்கள். இவ்வளவு கட்டுரைகளையும் விரைவில் உருவாக்க முடியுமா என்று தெரியவில்லை. மணியன் அவர்களும் தமிழ்க்குரிசில் அண்ணாவும் கவனித்து உதவுங்கள்.--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 10:07, 10 பெப்ரவரி 2015 (UTC)
Y ஆயிற்று அன்டன் அவர்களே! ஒரு வரைபடத்தைத் தமிழாக்கம் செய்துவிட்டேன்.--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 12:03, 12 பெப்ரவரி 2015 (UTC

~~செம்மல்50