வலைவாசல்:பெண்ணியம்
பெண்ணியம் வலைவாசல்
பெண்ணியம் என்பது பெண்களை தாழ்வுபடுத்தும் சமூக, அரசியல், பொருளாதார நடைமுறைகள், கட்டமைப்புக்கள் மற்றும் சமத்துவமின்மையைக் கவனப்படுத்தும் சமூக, கலாசார, அரசியல் இயக்கங்கள், செயற்பாடுகள், கோட்பாடுகளின் தொகுப்பாகும். ஆண் பெண் சமத்துவத்தில் கவனம் செலுத்தும் கோட்பாடாகவும் இது வரையறுக்கப்படுவதுண்டு. பெண்ணியத்தை வரையறுப்பதென்பதே கூட சிக்கலானதாக இருப்பதுண்டு. சமத்துவமின்மையின் மூலங்கள், சமத்துவத்தை அடைவதற்கான வழிமுறைகள், பால் மற்றும் பால்நிலை அடையாளங்களை விமர்சிப்பது, கேள்விக்குட்படுத்துவதற்கான எல்லைகள் போன்றன தொடர்பில் பெண்ணியவாதிகளிடையே கருத்து வேறுபாடுகள் உண்டு. பால் அடையாளங்களான ஆண் - பெண் போன்றவை வெறுமனே சமூகத்தால் கட்டமைக்கப்பட்டவையே என்ற வாதங்களும் உள்ளன.
பெண்ணியம் பற்றி மேலும்... |
சிறப்புக் கட்டுரை
பெண்ணிய எழுத்தாளர்கள்
பெண்ணியப் போராளிகள்
பெண்ணியம் குறித்த பகுப்புகள்
சாதனைப் பெண்கள்
உங்களுக்குத் தெரியுமா...?
- சித்தி ஜூனைதா பேகம் (படம்) முதல் தமிழ் முஸ்லிம் பெண் எழுத்தாளர். இவர் எழுதிய முதல் சிறுகதை, 1929ல் தாருல் இஸ்லாம் இதழில் வெளிவந்தது.
- எலிசபெத் பிளாக்வெல் உலகிலேயே அமெரிக்காவில் முதன்முதல் மருத்துவப் பட்டப்படிப்புப் படித்துத் தேறிய உலகின் முதல் பெண் மருத்துவராக விளங்கியவர்.
- திண்டிவனம் அருகில் உள்ள இரட்டணை என்ற ஊரில் 1875 ஆம் ஆண்டில் பிறந்த அசலாம்பிகை பெண் விடுதலை பற்றிய சிந்தனைகளுடன் இந்திய விடுதலை குறித்த கருத்துகளையும் மேடைகளில் பேசியவர்.
சிறப்புப் படம்
ராஜம் கிருஷ்ணன் (1925 - அக்டோபர் 20, 2014) தனது காலத்தின் பெண் அடிமை நிலையையும், மற்ற சமூக அவலங்களையும் தனது படைப்புகள் மூலமாக வெளிச்சமிட்டுக் காட்டினார்.
அண்மைய நிகழ்வுகள்
உள்ளதாக தாம்சன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன் எனும் செய்தி நிறுவனம் செய்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. (தினமணி, 5 நவம்பர் 2014)
- சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழக எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் (படம்), 20 அக்டோபர் 2014 அன்று சென்னையில் காலமானார். (தினமணி)
நீங்களும் பங்களிக்கலாம்
- பெண்ணியம் தொடர்பான விக்கித் திட்டத்தில் உங்களை இணைத்துக் கொள்ளலாம்.
- பெண்ணியம் தொடர்பான புதிய கட்டுரைகளை உருவாக்கலாம்.
- பெண்ணியம் தொடர்பான குறுங்கட்டுரைகளை விரிவுபடுத்தலாம்.
- பெண்ணியம் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்தி உதவலாம்.
- பெண்ணியம் தொடர்பான படிமங்களை பதிவேற்றலாம்.
- பெண்ணியம் தொடர்பான பகுப்புகளை ஒழுங்கமைத்து சீர்படுத்தலாம்