வலைவாசல்:பெண்ணியம்/உங்களுக்குத் தெரியுமா
Appearance
உங்களுக்குத் தெரியுமா.. பெட்டகம்
[தொகு]இங்கு உங்கள் பரிந்துரைகளைத் தரலாம்.
- ஐநா மனித உரிமைகள் ஆணையாளராக பணியாற்றிய நவநீதம் பிள்ளை (படம்), 1992 இல் பெண்கள் உரிமைக்காகப் போராடும் "ஈக்குவலிட்டி இன்று" என்ற அமைப்பைத் தோற்றுவித்தார்.
- ஐரோப்பிய நாடுகளில் பெண்களுக்கு முதன்முதலில் வாக்களிக்கும், தேர்ந்தெடுக்கப்படும் உரிமை வழங்கப்பட்டது பின்லாந்து நாட்டில் ஆகும்.
- சிவா இராமநாதன் , பிரான்சு நாட்டின் அதியுயர் விருதான செவாலியர் விருது பெற்ற முதல் யாழ்ப்பாணத் தமிழ்ப்பெண் .
- அஞ்சலி கோபாலன் (படம்), பிரான்சின் தலையாய செவாலியர் விருது பெற்ற முதல் இந்திய தமிழ் பெண்.
- முதல் பெண் நட்டுவனார் , கே. ஜே. சரசா அவர்களின் மாணவி செல்வி செயலலிதா.
- பல நாட்டுப்புறப் பாடல்களைப் பாடிய கொல்லங்குடி கருப்பாயி , அனைத்திந்திய வானொலியில் நிகழ்கலை நிகழ்த்துனராகத் தன் பணியைத் தொடங்கியவர்.
- சித்தி ஜூனைதா பேகம் (படம்) முதல் தமிழ் முஸ்லிம் பெண் எழுத்தாளர். இவர் எழுதிய முதல் சிறுகதை, 1929ல் தாருல் இஸ்லாம் இதழில் வெளிவந்தது.
- எலிசபெத் பிளாக்வெல் உலகிலேயே அமெரிக்காவில் முதன்முதல் மருத்துவப் பட்டப்படிப்புப் படித்துத் தேறிய உலகின் முதல் பெண் மருத்துவராக விளங்கியவர்.
- திண்டிவனம் அருகில் உள்ள இரட்டணை என்ற ஊரில் 1875 ஆம் ஆண்டில் பிறந்த அசலாம்பிகை பெண் விடுதலை பற்றிய சிந்தனைகளுடன் இந்திய விடுதலை குறித்த கருத்துகளையும் மேடைகளில் பேசியவர்.
- மாதங்கி அருள்பிரகாசம், தமிழீழ விடுதலைப் போராட்டங்களின் ஒலிப்புகள் அதிகமாகக் கொண்டப் பாடல்களை பாடிவரும் ஒரு ராப் இசைப் பாடகர்.
- மார்கரெட் தாட்சர் பிரித்தானியாவின் முதல் மற்றும் ஒரே பெண் பிரதமர் ஆவார். வேதியியல் ஆய்வாளராக துவங்கிய மார்கரெட் பின்னர் சட்டம் படித்து பார் அட் லா ஆனார்.
- மேரி சாந்தி தைரியம், மலேசிய மனித உரிமை, பெண்ணுரிமைப் போராளி ஆவார். ஐக்கிய நாடுகள் அவையின் பாலினத்திற்கான சம உரிமைக் குழுவிலும் பெண்களுக்கெதிரான பாகுபாட்டை ஒழிக்கும் குழுவிலும் பணியாற்றியவர்.
- பெண் மருத்துவரான முத்துலட்சுமி ரெட்டி (படம்), சென்னை மாகாண சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணியாவார். தேவதாசி முறை ஒழிப்பு, இருதார தடைச் சட்டம், பெண்களுக்குச் சொத்துரிமை, குழந்தைத் திருமணங்களைத் தடை செய்யும் சட்டங்களை நிறைவேற்றியவர்.
- மலாலா யூசப்சையி மிகவும் சிறுவயதில் 2014ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசினைப் பெற்றவர்.
- சிவசங்கரி, 2010 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூலாசிரியருக்கான பரிசு பெற்றவர். இவர் எழுதிய பாரத தரிசனம் எனும் நூலுக்கு இப் பரிசு வழங்கப்பட்டது.
- காரைக்கால் அம்மையார் மூன்று பெண் நாயன்மார்களில் ஒருவரும், அந்தாதி எனும் இலக்கண முறையை அறிமுகம் செய்தவரும், இறைவனை இசைத்தமிழால் பாடியவர்களில் முதலாமானவரும் ஆவார்.
- சில்வியா கார்ட்ரைட் கம்போடியாவிலுள்ள சிறப்பு நீதிமன்ற கழகத்தின் தலைவரும் பெண்களுக்கு எதிராக வேற்றுமை காட்டுதலை ஒழிப்பதற்கான ஐநா குழுவின் முன்னாள் உறுப்பினரும் ஆவார்.
- சின்னப்பிள்ளை கிராமப்புற மகளிரிடையே சிறுசேமிப்பு பழக்கம் ஏற்படுத்தி, களஞ்சியம் எனும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் பொருளாதார நிலையை மேம்படுத்திக் காட்டியவர். மகளிர் மேம்பாட்டிற்காக வழங்கப்படும் "ஸ்திரீ சக்தி” எனும் உயர் விருது பெற்றவர்.
- ஐநா மனித உரிமைகள் ஆணையாளராக பணியாற்றிய நவநீதம் பிள்ளை, 1992 இல் பெண்கள் உரிமைக்காகப் போராடும் "ஈக்குவலிட்டி இன்று" என்ற அமைப்பைத் தோற்றுவித்தார்.