மாதங்கி அருள்பிரகாசம்
எம்.ஐ.ஏ. M.I.A. | |
---|---|
நியூயார்க்கில் டைம் 100 ஒன்றுக்கூடலில் (5 மே 2009) எம்ஐஏ | |
பின்னணித் தகவல்கள் | |
இயற்பெயர் | மாதங்கி அருள்பிரகாசம் |
பிறப்பு | 18 சூலை 1975 |
பிறப்பிடம் | அவுன்சுலோ, இலண்டன், இங்கிலாந்து |
இசை வடிவங்கள் | மின்னணு இசை, வேறு வழி இசை, ராப் இசை, டான்ஸ்ஹால், நடன இசை |
தொழில்(கள்) | பாடகி, இசையமைப்பாளர், இசை தயாரிப்பாளர், ஓவியர், ஒய்யாரம் வடிவமைப்பாளர் |
இசைக்கருவி(கள்) | பாடல், மேளக் கருவி, மின்னணு இசை |
இசைத்துறையில் | 2000–இன்று |
இணையதளம் | miauk.com |
எம்.ஐ.ஏ. (MIA) என அழைக்கப்படும் மாதங்கி 'மாயா' அருள்பிரகாசம் (பிறப்பு: சூலை 18, 1975, லண்டன், இங்கிலாந்து) ஒரு ராப் இசைப் பாடகர். இவரது மேடைப் பெயரான எம்.ஐ.ஏ. என்னும் இவரது உருவாக்கமான இசைக் குழுவின் பெயரால் அழைக்கப்படுகிறார். எம்.ஐ.ஏ. என்பது Missing In Action என்ற ஆங்கில சொற்பதத்தில் இருந்தும் அவரது முழுப்பெயரை குறிப்பதுமாக அமைகிறது. மாதங்கி அருள்பிரகாசம் 2002 இல் தனது இசையமைப்பு, பாடல் ஒலிப்பது போன்றவற்றில் ஆர்வம் செலுத்த தொடங்கி இருந்தாலும் லண்டனின் மேற்கு பகுதிகளில் இவர் 2000 ஆம் ஆண்டு முதல் ஓவியத்துறைகளிலும் திரைப்படத் துறைகளிலும் தனது ஆர்வத்தை காட்ட தொடங்கியிருந்தார். இவரது இசைகள், பாடல்கள் பெரும்பாலும் மின்னணு இசை, நடனம், ஹிப் ஹொப், சொல்லிசை, உலகப் பாடல் வகையை சார்ந்தனவாக இருக்கிறது.
இவர் 2008 ஆம் ஆண்டுக்கான கிராமி விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்[1]. மாதங்கியின் பாடல்களில் பெரும்பாலானவை இலங்கையின் விடுதலைப் போராட்டங்களின் ஒலிப்புகள் அதிகமாகவே காணப்படும்.[சான்று தேவை] விடுதலைப் புலிகளின் உறுப்பினராக அங்கம் வகித்த இவரின் தந்தையான அருள்பிரகாசம் ஆரம்ப காலங்களில் விடுதலைப் போராட்டங்களில் ஈடுபடுத்திக் கொண்டு பின்னர் ஆயுதம் ஏந்திப் போராடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.[சான்று தேவை] மேலும் மாதங்கியின் பாடல்கள் விடுதலைப்புலிகளை அங்கீகரிப்பதாக[சான்று தேவை] இருப்பதாக அமெரிக்காவிற்கு இசைப் பயணத்திற்காக செல்லவிருந்த மாதங்கி தடுக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வெளியிட்ட இசைத்தொகுப்புகள்
[தொகு]- பைரசி பண்ட்ஸ் டெரொரிசம் (Piracy Funds Terrorism (2004) )
- அருளர் (Arular, 2005) (பில்போர்ட் 200: #190, சிறந்த எலெக்ரோனிக் இசைத்தொகுப்பு: #3, சிறந்த ஹார்ட்சீக்கர்ஸ்: #14, சிறந்த சுதந்திர இசைத்தொகுப்பு: #16)
- கலா (Kala, 2007)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "51வது கிராமி விருதுகளுக்கான பரிந்துரைப்பு பாட்டியல்". Archived from the original on 2008-12-05. பார்க்கப்பட்ட நாள் 2008-12-06.