சில்வியா கார்ட்ரைட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மாண்புமிகு
டேம் சில்வியா கார்ட்ரைட்
SilviaCartwright.jpg
18வது [[நியூசிலாந்தின் தலைமை ஆளுநர்]]
பதவியில்
4 ஏப்ரல் 2001 – 4 ஆகத்து 2006
அரசர் ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத்
பிரதமர் எலென் கிளார்க்கு
முன்னவர் சேர் மைக்கேல் ஆர்டி-பாய்சு
பின்வந்தவர் சேர் ஆனந்த் சத்தியானந்த்
தனிநபர் தகவல்
பிறப்பு 7 நவம்பர் 1943 (1943-11-07) (அகவை 77)
துனெடின், ஒடாகோ, நியூசிலாந்து
படித்த கல்வி நிறுவனங்கள் ஒடாகோ பல்கலைக்கழகம்

டேம் சில்வியா ரோசு கார்ட்ரைட்டு (Dame Silvia Rose Cartwright, திருமணம் முன்பு: பவுல்டர், பிறப்பு: 7 நவம்பர், 1943) நியூசிலாந்தின் 18வது தலைமை ஆளுநராகப் பொறுப்பில் இருந்தவர்.

ஒடாகோ பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்ற இவர் 1967இல் ஒடாகோ பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பில் இளங்கலைப்பட்டம் பெற்றுள்ளார். சில்வியா கார்ட்ரைட் கம்போடியாவிலுள்ள சிறப்பு நீதிமன்ற கழகத்தின் தலைவரும் பெண்களுக்கு எதிராக வேற்றுமை காட்டுதலை ஒழிப்பதற்கான ஐ.நா குழுவின் முன்னாள் உறுப்பினரும் ஆவார்.[1]

இலங்கையின் வடபகுதியில் விடுதலைப் புலிகளுடனான இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் அமைக்கப்பட்டுள்ள ஐக்கிய நாடுகள் விசாரணைக் குழுவின் ஆலோசகர்களில் ஒருவராக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.[1][2]

மேற்சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 "Asma Jahangir to assist UN probe in Sri Lanka". மீரா சீனிவாசன். தி இந்து (25 சூன் 2014). பார்த்த நாள் 26 சூன் 2014.
  2. "ஐ.நா. விசாரணைக் குழுவின் ஆலோசகர்கள் நியமனம்; அமெரிக்கா வரவேற்பு!". 4தமிழ்மீடியா செய்தித்தளம் (26 சூன் 2014). பார்த்த நாள் 26 சூன் 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சில்வியா_கார்ட்ரைட்&oldid=2714159" இருந்து மீள்விக்கப்பட்டது