என்ன கொடுமை சரவணன் இது?

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
"என்ன கொடுமை சரவணன் இது?"
கதை மாந்தர்செந்தில்நாதன்
நடிகர்பிரபு
ஆக்கம்பி. வாசு
முதல் பயன்பாடுசந்திரமுகி

என்ன கொடுமை சரவணன் இது? என்பது 2005-ம் ஆண்டு வெளிவந்த சந்திரமுகி திரைப்படத்தில் செந்தில்நாதன் என்ற பாத்திரமாக நடித்த பிரபு பேசிய வசனமாகும். நாளடைவில் இது மக்கள் வழக்கில் நகைமுரணையோ,வியப்பையோ காட்டும் பொதுவான தொடராகவே உருப்பெற்றுவிட்டது.[1]

தொடக்கம்[தொகு]


சந்திரமுகி திரைப்படத்தில் ஒரு காட்சியில் உளவியல் மருத்துவர் சரவணனாக நடித்த ரஜினிகாந்த் பிரபுவின் மனைவி கங்கா (ஜோதிகா) சில வேளைகளில்,மனத்தளவில் மற்றொரு நபராக இருக்கிறார் என்று கண்டறிந்துத் தெரிவிப்பார். இதைக் கேட்டு அதிரும் பிரபு என்ன கொடுமை சரவணன் இது? என்பார்.

மற்ற பயன்பாடுகள்[தொகு]

பிரபுவின் மேற்கண்ட வசனத்தை 2007-ம் ஆண்டு வெளிவந்த சென்னை 600028 திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் பிரேம்ஜி அமரன் சற்றே மாற்றி என்ன கொடுமை, சார்? என்பார். அதன் பின்னரே என்ன கொடுமை சரவணன் இது? என்பது வழக்கூன்றியது.[2][3][4][5] 2007-ம் ஆண்டு வெளிவந்த சிவாஜி திரைப்படத்தில் நடிகர் லிவிங்ஸ்டன் என்ன கொடுமை சரவணன் சார் இது? என்பதாக ஒரு காட்சியில் வரும். அதே ஆண்டு வெளிவந்த பில்லா திரைப்படத்திலும் நடிகர் அஜித் குமார் நடிகர் பிரபுவைப் பார்த்து என்ன கொடுமை சார் இது? என்று கேட்பதாக ஒரு காட்சியில் வரும்.

என்ன கொடுமை சரவணன் இது? என்ற தொடரின் முதலெழுத்துக்களைக் கொண்ட எகொசஇ என்ற குறிசொல்லும்[6] அதன் ஆங்கில ஒலிபெயர்ப்பின் முதலெழுத்துக்களைக் கொண்ட EKSI என்ற குறிசொல்லும் குறுஞ்செய்திகளிலும் இணைய உரையாடல்களிலும் சுருக்கமான குழூஉக்குறியாக நடைமுறைக்கு வந்து கொண்டிருக்கிறது[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.hindu.com/fr/2008/09/12/stories/2008091250810100.htm "Prabhu’s penchant for comedy is well known. "I hope I get to play light roles. Incidentally, I quite like the way in which these young actors have made a joke of my serious line in ‘Chandramukhi’ — ‘Enna Kodumai Saravana Idhu.'"
  2. http://www.behindwoods.com/tamil-movie-news-1/oct-09-02/goa-09-10-09.html "It is worth a mention here that the director, in his debut venture Chennai 28, had modified the famous “Enna Kodumai Saravanan” dialogue in Chandramukhi to “Enna Kodumai Sir,” which was well received by the audience."
  3. http://www.indiaglitz.com/channels/tamil/article/37299.html
  4. http://bellitere.com/nannusire.html
  5. http://www.behindwoods.com/features/visitors-1/premji-11-12-08.html
  6. http://www.google.co.in/#hl=ta&q=%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9A%E0%AE%87
  7. http://www.urbandictionary.com/define.php?term=eksi