விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்/சிறப்பிதழ்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

செப்ரம்பர் - தமிழ் விக்கிப்பீடியா சிறப்பு இதழ்கள்[தொகு]

தாய்வீடு, தமிழ் கம்பியூட்டர், கணியம் போன்ற இதழ்களில் தமிழ் விக்கிப்பீடியா சிறப்பு இதழ்கள் கொண்டு வருவது பற்றி உரையாடலாம். --Natkeeran (பேச்சு) 15:19, 24 மே 2013 (UTC)

நல்ல பரிந்துரை. பத்தாண்டுக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான ஊடக ஒருங்கிணைப்புக்குச் சிறப்பான கவனம் தர வேண்டும். --இரவி (பேச்சு) 05:31, 28 மே 2013 (UTC)
கனடாவில் மிகவும் தரமும் மதிப்பும் பெற்ற தாய்வீடு பத்திரிகையின் ஆசிரியருடன் உரையாடினேன். அவர் சிறப்பிதழ் பற்றி ஆசிரியர் குழுவுடன் உரையாடிக் கூறுவதாகவும், ஆனால் நிச்சியமாக தமிழ் விக்கி தொடர்பான ஐந்து கட்டுரைகள் விளம்பரங்கள் கூட இடையில் வராமல் வெளியிட முடியும் என்று கூறினார். இக் கட்டுரைகளை நாம் சிறப்பாக உருவாக்க பயனர்கள் உதவ வேண்டுகிறேன். நன்றி. --Natkeeran (பேச்சு) 13:22, 17 சூலை 2013 (UTC)
தமிழ்நாட்டில் வெளியாகும் பல்வேறு இதழ்கள் வணிக நோக்கமுடையவை. இங்கு ஊடகங்களில் செய்தி வரவழைப்பதற்கே பரிந்துரைகள் தேவையாக இருக்கும். இந்நிலையில் சிறப்பு இதழ்கள் என்பது இயலாத ஒன்றுதான்.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 13:38, 17 சூலை 2013 (UTC)
தகவலுக்கு நன்றி தேனி. நாம் சிற்றிதழ்களை, இணைய இதழ்களை முயற்சி செய்தால் அவர்கள் கூடிய ஒத்துளைப்புத் தருவார்கள் என்று எண்ணுகிறேன். --Natkeeran (பேச்சு) 04:59, 20 சூலை 2013 (UTC)

இதழ்கள்[தொகு]

தொடர்பு கொள்ளப்பட்ட இதழ்கள்[தொகு]

 • தாய்வீடு (கனடா) - தொடர்பு கொண்டவர் நற்கீரன் - ஐந்து கட்டுரைகளை விளம்பரங்கள் கூட இடையில் வராமல் வெளியிட ஆசிரியர் ஒத்துக் கொண்டுள்ளார். சிறப்பிதழ் பற்றி ஆசிரியர் குழுவிடன் உரையாடி பதில் தருவார்.
 • முத்துக்கமலம் - செப்டம்பர் 15 அல்லது அக்டோபர் 1 இதழ் புதுப்பித்தல் முழுக்க தமிழ் விக்கிப்பீடியா மற்றும் அனைத்து விக்கித் திட்டங்கள் குறித்த கட்டுரைகள்/தகவல்களை வெளியிடலாம்.
 • ஐரோப்பாவில் வெளிவரும் வானவில் இதழ் - தொடர்பு கொண்டவர் கலை - தமிழ்விக்கி சிறப்பிதழ் வெளியிடுவதில் மகிழ்ச்சி எனக் கூறியுள்ளனர்.
 • வெற்றிமணி (யேர்மனி) தொடர்பு கொண்டவர் சந்திரவதனா - ஒக்டோபர் இதழை விக்கிபீடியா சிறப்பிதழாகக் கொண்டுவரச் சம்மதித்துள்ளார்.
 • காற்றுவெளி (லண்டன்) தொடர்பு கொண்டவர் சந்திரவதனா - ஒக்டோபர் இதழை விக்கிபீடியா சிறப்பிதழாகக் கொண்டுவரச் சம்மதித்துள்ளார்.
 • செம்பருத்தி (மலேசியா) - தொடர்பு கொண்டவர் நற்கீரன்
 • கணியம் (இணையம்) - தொடர்பு கொண்டவர் நற்கீரன்
 • பதிவுகள் (இணைய இதழ்) - தொடர்பு கொண்டவர் சந்திரவதனா - ஆசிரியர் கிரிதரன் நான் கொடுத்த நான்கு கட்டுரைகளையும் பதிவேற்றச் சம்மதித்துள்ளார்.
 • பொங்குதமிழ் http://ponguthamil.com/ - தொடர்பு கொண்டவர் சந்திரவதனா
 • திண்ணை (இணையம்) - தொடர்பு கொண்டவர் சந்திரவதனா - கொடுக்கும் கட்டுரைகளை பதிவேற்றச் சம்மதித்துள்ளார்.

தொடர்பு கொள்ளப்பட வேண்டிய இதழ்கள்[தொகு]

கட்டுரைத் தலைப்புக்கள்[தொகு]

 • கலைச்சொற்கள் பரவலாக்கலில் தமிழ் விக்சனரியின் பங்கு
 • தமிழில் கல்வி உள்ளடக்கமும் விக்கிநூல்களும்
 • அலுவலகம் இல்லாத செய்தியூடகம் - தமிழ் விக்கிசெய்திகள்
 • தமிழ் விக்கிப்பீடியா - ஒரு புள்ளிவிபர ஆய்வு
 • தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்: வளர்ச்சியும் வாய்ப்புக்களும்
 • இணையத் தமிழும் விக்கியூடகங்களும்
 • மலேசியாவில் தமிழ் விக்கியூடகங்களின் தேவையும் வாய்ப்புக்களும்
 • தமிழ் விக்கி இயக்கமும் அதன் சமூகத் தாக்கமும்
 • இலங்கையில் தமிழ் விக்கியூடகங்களின் வளர்ச்சியும் வாய்ப்புக்களும்
 • தமிழ் விக்கிச் சமூகம்
 • மீடியாவிக்கி இடைமுக தன்மொழியாக்க அனுபவங்கள்
 • தமிழ் விக்கியூடகங்களில் பெண்களின் பங்களிப்பு
 • தமிழை இணையத்தில் பயன்படுத்துவதில் விக்கியூடக அனுபவங்கள்
 • இந்திய விக்கிகளும் தமிழ் விக்கியும் - ஓர் ஒப்பீடு
 • தமிழ் விக்கியின் பல்லூடகப் போட்டியின் வெற்றி
 • தமிழ் விக்கியூடகங்கள் ஊடாக பல்லூடக ஆவணப்படுத்தல்
 • தமிழ் விக்கி உள்ளடக்கமும் பதிப்பாளர்களுக்கான வாய்ப்புக்களும்
 • கட்டற்ற அறிவும் சட்டமும்
 • விக்கிப் பண்பாடு, என்ன எப்படி
 • தமிழ் விக்கிப்பீடியாவில் ஆய்வாளர்களின் பங்கு
 • தமிழ் விக்கியூடகம் ஊடாக வரலாற்றைப் பதிவு செய்தல்
 • தமிழ் விக்கியூடகமும் திறந்த தரவுகளும்
 • தமிழ்ச் சூழலில் கட்டற்ற இயக்கத்துக்கு விக்கியூடகத்தின் பங்களிப்பு
 • தமிழ் விக்கியூடகங்களில் மாணவர்கள் (பயன்படுத்துதல், பங்களிப்பு, பங்கு, பயன்கள்...)
 • தமிழ் விக்கியூடகத்தின் பன்முகத்தன்மையை வலுப்படுத்தல்
 • தமிழ் விக்கியூடகத்தின் அடுத்த கட்டங்கள்: விக்கி தரவுகள், விக்கி பயணம், விக்கி புவிப்படம்
 • தமிழில் விக்கிகள்
 • தமிழ் விக்கியூடகங்கள்: முன்னோக்கிய நகர்வுக்கான சில எண்ணங்கள்
 • உங்கள் பரிந்துரை

எழுதப்படும் தலைப்புக்கள்[தொகு]

தெரிவு செய்யப்பட்ட விக்கிக் கட்டுரைகள்[தொகு]

அறிவியல்[தொகு]

தொழில்நுட்பம்[தொகு]

பண்பாடு[தொகு]

தமிழ், தமிழர்[தொகு]

வரலாறு[தொகு]

புவியியல்[தொகு]

நபர்கள்[தொகு]