பதிவுகள் (இணைய இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


பதிவுகள் கனடாவில் இருந்து வெளிவரும் ஒரு இணைய இதழ் (சஞ்சிகை) ஆகும். இது 2000 ஆண்டில் இருந்து தொடர்ச்சியாக இன்றைப்படுத்தப்பட்டுவருகின்றது. இவ்விதழ் TSCII தமிழ் கணினி எழுத்துருவை பயன்படுத்துகின்றது. இதன் ஆசிரியர் வ. ந. கிரிதரன் ஆவார்.

ஈழத்தின் முற்போக்கு இலக்கிய முன்னோடியான அறிஞர் அ. ந. கந்தசாமியை மீண்டும் இனங்காண்பதில் பதிவுகள் முக்கிய பங்காற்றி வருகிறது. பதிவுகளில் உலகின் பல பாகங்களிலிருந்தும் பல முக்கியமான படைப்பாளிகள் எழுதி வருகின்றார்கள். பலருக்குப் பதிவுகள் களம் அமைத்துக் கொடுத்துமிருக்கிறது. பதிவுகளைப் பற்றிய செய்திகள், கட்டுரைகள் பல சஞ்சிகைகளில் வெளிவந்துள்ளன. பதிவுகள் இணைய இதழ் இன்று உலகின் பல பாகங்களிலிருந்தும் பலரால் ஆர்வமாக வாசிக்கப் பட்டு வருவது குறிப்பிடத் தக்கது. பல படைப்பாளிகள் பல்வேறு நாடுகளிலிருந்தும் பதிவுகளில் பங்குபற்றி வருவதும் குறிப்பிடத் தக்கது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பதிவுகள்_(இணைய_இதழ்)&oldid=3392611" இருந்து மீள்விக்கப்பட்டது