கொங்கு மங்கலவாழ்த்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கொங்கு மங்கலவாழ்த்து என்பது கொங்கு வேளாளர் மற்றும் வேட்டுவக் கவுண்டர் என்ற இனத்தவர்கள் திருமணங்களில் நடைபெறும் மிக முக்கியமான சடங்குச்சீர்களில் ஒன்றாகும். குடிமகன் அல்லது மங்கலன் என்று அன்புடன் அழைக்கப்படும் நாவிதர்குலப் பெருமகன் இதனைப் பாடுவார். ஒவ்வொரு நிகழ்ச்சியாக மங்கலன் சொல்லி நிறுத்தும்போதும் மத்தளத்தில் மேளகாரர் ஒருமுறை தட்டுவார். "இது கவிச்சக்கிரவர்த்தி கம்பர் பெருமானால் பாடிக் கொடுக்கப்பட்டதென்று கொங்குநாட்டார் அனைவரும் நம்புகிறார்கள்" என்று 1913 இல் பதிப்பித்த திருச்செங்கோடு அட்டாவதானம் தி. அ. முத்துசாமி குறிப்பிடுகிறார். திருமண முறைகளை எளிய நாட்டு வழக்கச் சொற்களால் ஒழுங்குபெற அமைத்துப் புலவர்பிரானார் இதனை அருளியுள்ளார். அதற்கேற்ப இவ்வாழ்த்தினுள் 'கங்காகுலம் விளங்கக் கம்பர் சொன்ன வாழ்த்துரைத்து' என்பது கவுண்டர்களின் கங்க அரச வம்சப் பெயராகும்.

Wikisource-logo.svg
விக்கிமூலத்தில் இந்தப் பாடல்களின் முழுத் தொகுப்பு உள்ளது:

பதிப்பாதாரங்கள்[தொகு]

  • தி. அ. முத்துசாமிக் கோனார், கவிச்சக்கிரவர்த்தியாகிய கம்பர் இயற்றிய மங்கல வாழ்த்து, வாழி. விவேகதிவாகரன் அச்சுக்கூடம், சேலம், 1913
  • எஸ். ஏ. ஆர். சின்னுசாமி கவுண்டர், கொங்கு வேளாளர் புராண வரலாறு. தமிழன் அச்சகம், ஈரோடு, 1963

மேற்கோள்கள்[தொகு]