மார்த்தாண்ட வர்மா (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தக் கட்டுரை மலையாளத் திரைப்படம் பற்றியாகும், ஏனைய தகவல்களுக்கு மார்த்தாண்ட வர்மா என்ற பக்கம் பார்க்கவும்.
மார்த்தாண்ட வர்மா
இயக்கம்பி. வி. ராவு
தயாரிப்புஆர். சுந்தர் ராச்
மூலக்கதைமார்த்தாண்டவர்ம்மா
படைத்தவர் சி. வி. இராமன் பிள்ளை
திரைக்கதைபி. வி. ராவு
நடிப்பு
 • செய்தேவ்
 • எ.வி.பி மேனன்
 • தேவகி
 • பத்மினி
ஒளிப்பதிவுபாண்டுரங்க். இ. நாயிக்
விநியோகம்சிறீ இராசேசுவரி பிலிம்சு
வெளியீடு1933 (திருவனந்தபுரம்)
ஓட்டம்118 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிஊமைத் திரைப்படம்
மலையாளம் மற்றும் ஆங்கில மொழிகளில் இடைத்தலைப்புகள்

மார்த்தாண்ட வர்மா என்பது சி. வி. இராமன் பிள்ளையின் இதே தலைப்பிலான வரலாற்றுப் புதினத்தை அடிப்படையாகக் கொண்டு பி.வி.ராவு இயக்கி 1933-ல் வெளியான ஒரு பேசாத கருப்பு வெள்ளை மலையாளத் திரைப்படமாகும். மலையாளத் திரைப்படத் துறையில் வெளியான இரண்டாவது படம் மற்றும் ஒரு இலக்கியப் படைப்பை அடிப்படையாகக் கொண்ட முதல் திரைப்படம் இது[1][2].

கதைப் பின்னல்[தொகு]

சி. வி. இராமன் பிள்ளையின் மார்த்தாண்ட வர்மா நாவலை அடிப்படையாகக் கொண்ட கதை.[1][2][3]

நடிப்பு[தொகு]

இத் திரைப்படத்தில் நடித்தவர்கள்[4]:

 • செய்தேவ் - மார்த்தாண்ட வர்மா
 • எ.வி.பி மேனன் - அனந்த பத்மநாபன்
 • வி. நாயிக் - பத்மநாபன் தம்பி
 • பத்மினி - பாறுக் குட்டி
 • தேவகி
 • வி. சி. குட்டி
 • எச். வி. நாத்
 • சுந்தரம் ஐயர்

வெளியீடு[தொகு]

இந்தத் திரைப்படம் வெளியிட்டபோது அக் காலகட்டத்தில் நாவலின் பதிப்பாளர் கமலாலயா புக் டிப்போவுடன் காப்புரிமை பிரச்சனையில்[2] சிக்கி முதல் காட்சிக்குப் பிறகு இத்திரைப்படம் பின்வாங்கப்பட்டு கேரள திரைப்படத்துறையில் மற்றும் இலக்கிய பதிப்பகத் துறையில் முதலாவது[3] காப்புரிமை வழக்கைப் பதிந்தது.

இத் திரைப்படத்தின் ஒரு பதிப்பு புனேயிலுள்ள தேசிய திரைப்பட ஆவணக்காப்பக மையத்தில் பத்திரப்படுத்தப்பட்டிருக்கிறது [5].

தென்னிந்தியாவில் வெளியான பேசாத கருப்பு வெள்ளை திரைப்படங்களில் இத்திரைப்படம் மட்டுமே பாதுகாக்கப்படும் பெருமையைப் பெற்றுள்ளது.[6]

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 கெ. வி, ராமன் குட்டி (1999). "Malayalam Cinema -The Pageant and the Parade". Essays on the Cultural Formation of Kerala literature, Art, Architecture, Music, Theatre, Cinema. கெ.சி.எச்.ஆர் பப்லிகேசன்ச். Archived from the original on 2010-07-11. பார்க்கப்பட்ட நாள் 2010-05-16. {{cite web}}: Cite has empty unknown parameter: |month= (help)
 2. 2.0 2.1 2.2 சுதீப் கீதிகா (திசம்பர் 12, 2009). "Houseful!". மெட்ரோ ப்லச். திருவனந்தபுரம்: THE HINDU. Archived from the original on 2011-06-04. பார்க்கப்பட்ட நாள் 2010-05-16. {{cite web}}: Unknown parameter |month= ignored (|date= suggested) (help)CS1 maint: date and year (link)
 3. 3.0 3.1 பிந்து மேளன். எம். (2009). "Romancing history and historicizing romance". Circuits of Cinema: a symposium on Indian cinema in the 1940s and '50s. புது தில்லி: செமினார்: கணிணி இணய பதிப்பு. {{cite web}}: Unknown parameter |month= ignored (|date= suggested) (help)
 4. "Documentation". Search on Cinema. பூனே: National Film Archive of India. பார்க்கப்பட்ட நாள் சனவரி 30, 2009.[தொடர்பிழந்த இணைப்பு]
 5. கய் ராண்டூர் (அக்டோபர் 18, 2001). "Mylapore and movies". Reflections/Reminiscences. சென்னை: THE HINDU. Archived from the original on 2011-06-06. பார்க்கப்பட்ட நாள் 2010-05-16. {{cite web}}: Unknown parameter |month= ignored (|date= suggested) (help)CS1 maint: date and year (link)
 6. Mending the moving image: South India’s cinematic heritage has seen huge loss, The Hindu, 27 August 2017

வெளி இணைப்புகள்[தொகு]