உள்ளடக்கத்துக்குச் செல்

வார்ப்புரு:Mainpage v2

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முதற்பக்கக் கட்டுரைகள்

பெலோப்பிடாசு (Pelopidas, இறப்பு கிமு 364) என்பவர் ஒரு குறிப்பிடத்தகுந்த தீபன் அரசியல்வாதியும் தளபதியும் ஆவார். நான்காம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தீபன் மேலாதிக்கத்தை நிறுவுவதில் கருவியாக இருந்தார். பெலோப்பிடாசு ஒரு புகழ்பெற்ற குடும்பத்தில் பிறந்தவர். பெரும் செல்வத்தைக் கொண்டிருந்தவராக இருந்தார். இவர் தன் நண்பர்களுக்காகவும் பொதுச் சேவைக்காகவும் பங்காற்றினார். அதே நேரத்தில் இவர் ஒரு விளையாட்டு வீரரைப்போன்ற கடினமான வாழ்க்கையை வாழ்வதில் மனநிறைவு அடைந்தார்.கிமு 384 இல், இவர் மான்டினியா முற்றுகையின் போது எசுபார்த்தன்களுக்கு ஆதரவாக அனுப்பப்பட்ட தீபன் குழுவில் பணியாற்றினார். அங்கு இவர் ஆர்க்காடியன்களால் காயப்படுத்தப்பட்டார். ஆபத்தான முறையில் காயமடைந்த இவர் எபமினோண்டாசு, அஜெசிபோலிஸ் ஆகியோரால் காப்பாற்றப்பட்டார்.மேலும்...

மேலும் கட்டுரைகள்...

உங்களுக்குத் தெரியுமா?

  • துட்டு என்பது தற்போது வழக்கில் இல்லாத குறைந்த மதிப்பு கொண்ட பழைய டச்சு செப்பு நாணயம் ஆகும். இது தமிழில் குறைந்த மதிப்புள்ள பணத்தைக் குறிக்கும் ஒரு பேச்சு வழக்காக உள்ளது.
  • இந்தியாவிலேயே கேரளாவிலும் தமிழ்நாட்டிலும் மட்டும் தான் பணியாளர்கள் உட்கார்ந்து பணியாற்றுவதற்கான உரிமை சட்டப்படி உறுதிசெய்யப்பட்டுள்ளது.
  • மீனா நாராயணன் (படம்) தென்னிந்தியாவின் முதல் பெண் திரைப்பட ஒலிப்பதிவுக் கலைஞர் ஆவார்.
  • இறகுப் பந்தாட்ட விளையாட்டின் ஆங்கிலப் பெயரான Badminton என்பது இங்கிலாந்தில் உள்ள Badminton மாளிகை என்னும் இடத்தின் காரணமாக அப்பெயரைப் பெற்றது.
  • மறைந்த திருத்தந்தை பிரான்சிசு தான் கடந்த 1200 ஆண்டுகளில் ஐரோப்பாவிற்கு வெளியில் இருந்து தெரிவான முதல் திருத்தந்தை ஆவார்.

தொகுப்பு

செய்திகளில் இற்றைப்படுத்து

தொடர் நிகழ்வுகள்: 2026 ஈரான் போர் • பிற நிகழ்வுகள்

இன்றைய நாளில்...

அக்டோபர் 15: உலகக் கைகழுவும் நாள்

ஏ. பீம்சிங் (பி. 1924) · அப்துல் கலாம் (பி. 1931) · தருமபுரம் ப. சுவாமிநாதன் (இ. 2009)
அண்மைய நாட்கள்: அக்டோபர் 14 – அக்டோபர் 16 – அக்டோபர் 17




பங்களிப்பாளர் அறிமுகம்

பிச்சைமுத்து மாரியப்பன் (சத்திரத்தான்), தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரியில் விலங்கியல் பேராசிரியராக உள்ளார். பள்ளி, கல்லூரிக் கல்வியினை பாளையங்கோட்டையில் பயின்ற இவர், திருநெல்வேலி மாவட்டம் வி. எம். சத்திரத்தில் பிறந்தவர். தமிழ் நாளிதழ்களில் அறிவியல் கட்டுரைகள் பல எழுதியுள்ளார். 2020-ஆம் ஆண்டு நடைபெற்ற விக்கிப்பீடியா பயிலரங்கம் ஒன்றின் மூலம் விக்கிப்பீடியாவில் பங்களிக்கத் தொடங்கினார். இதுவரை விக்கிப்பீடியாவில் 10,000+ கட்டுரைகளை உருவாக்கியுள்ளார். இவர் விக்கிமீடியாவின் விக்கிமூலம், விக்கிமீடியா பொதுவகம், விக்கியினங்கள் உள்ளிட்ட பிற திட்டங்களிலும் பங்களித்ததோடு ஆங்கில விக்கிப்பீடியாவிலும் கட்டுரைகளை உருவாக்கியுள்ளார். விலங்கியல் கட்டுரைகள் உருவாக்கத்தினை முதன்மையாகக் கொண்டாலும் அனைத்து துறைகளிலும் விக்கிப்பீடியாவில் பக்கங்களை உருவாக்கியும் கட்டுரைகளை மேம்படுத்தியும் உள்ளார். இவரது விக்கிப்பீடியா பங்களிப்புகளில் சில: இந்திய மத்தியப் பல்கலைக்கழகங்கள், தேசிய வேளாண் அறிவியல் கழகம், சோலி சொராப்ஜி, பாரம்பரிய அறிவு எண்ணிம நூலகம், மரபணு மாற்றப்பட்ட சுண்டெலி, 2021 சுயஸ் கால்வாய் வழித்தடை, சக மதிப்பாய்வு, கூகுள் இசுகாலர், கருவுறுதல் சோதனை.

சிறப்புப் படம்

கரவாஜியோ வரைந்த நார்சீசசு ஓவியம் (அண். 1597–1599). தன் பிம்பத்தின் மீது காதல் கொண்டு தண்ணீரைப் பார்த்துக்கொண்டிருக்கும் நார்சிசசைச் சித்தரிக்கிறது.

ஓவியர்: கரவாஜியோ
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


  • சமுதாய வலைவாசல் – திட்டம்பற்றித் தெரிந்துகொள்ள, நீங்கள் என்ன செய்ய முடியும், தேவையானவற்றை எங்கு தேட முதலியவற்றை அறிய.
  • உதவி – விக்கிப்பீடியாவைப் பயன்படுத்துவது தொடர்பான வினாக்களைக் கேட்க.
  • தூதரகம் – தமிழ் தவிர்த்த பிறமொழிகளில் விக்கிப்பீடியா குறித்த தொடர்பாடல்கள்.
  • ஆலமரத்தடி – விக்கிப்பீடியாவின் கொள்கை விவாதங்களும் தொழில்நுட்ப விவாதங்களும் குறித்து உரையாட.
  • புதியன - விக்கிப்பீடியாவின் புதிய கட்டுரைகள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வார்ப்புரு:Mainpage_v2&oldid=4641947" இலிருந்து மீள்விக்கப்பட்டது