சால்வடோர் அயேந்தே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சால்வடோர் அயேந்தே
Salvador Allende
1970 இல் அரசுத்தலைவராக இருந்த போது.
சிலியின் 29வது அரசுத்தலைவர்
பதவியில்
4 நவம்பர் 1970 – 11 செப்டம்பர் 1973
முன்னையவர்எதுவார்டோ மொன்டால்வா
பின்னவர்ஆகுஸ்தோ பினொச்சே
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1908-06-26)26 சூன் 1908
வல்பெய்ரசோவ், சிலி
இறப்பு11 செப்டம்பர் 1973(1973-09-11) (அகவை 65)
சான் டியேகோ, சிலி
தேசியம்சிலி
அரசியல் கட்சிசமத்துவக் கட்சி
துணைவர்ஓர்ட்டென்சியா புசி (1914–2009)
பிள்ளைகள்பீட்ரிசு (1943–1977)
கார்மன் பாசு (b. 1944)
இசோபெல்(b. 1945)
முன்னாள் கல்லூரிசிலி பல்கலைக்கழகம்
தொழில்மருத்துவர்
அரசு அதிகாரி
கையெழுத்து
இணையத்தளம்ww.fundacionsalvadorallende.cl

சால்வடோர் கியேர்மோ அயேந்தே (Salvador Guillermo Allende Gossens, 26 சூன் 1908 – 11 செப்டம்பர் 1973) என்பவர் சிலி நாட்டு மார்க்சிய அரசியல்வாதியும், மருத்துவரும் ஆவார். இலத்தீன் அமெரிக்க நாடொன்றில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலாவது மார்க்சிய அரசுத்தலைவர் என இவர் அறியப்படுகிறார்.[2]

ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் சிலி நாட்டின் அரசியலில் ஈடுபட்டிருந்த அலண்டே, சமத்துவக் கட்சியின் உறுப்பினராகவும், மேலவை உறுப்பினராகவும், அமைச்சரவை உறுப்பினராகவும் இருந்தவர். 1952, 1958, 1964 அரசுத்தலைவர் தேர்தல்களில் இவர் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். 1970 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று அரசுத்தலைவரானார்.

இவருடைய ஆட்சிக் காலத்தில், தொழிற்துறைகளை தேசியமயமாக்கும் கொள்கையைக் கடைப்பிடித்தார். இதனால், நாட்டில் அரசியல் குழப்ப நிலை தோன்றியது. தேர்தலில் இவருக்கு ஆதரவாக இருந்த கிறித்தவ சனநாயகவாதிகள் உட்படப் பல நடுத்தர-இடதுசாரிக் கட்சிகள் இவரது ஆட்சியை அரசியலமைப்புக்கு முரணானதெனக் கூறி, ஆட்சிக் கலைப்புக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர். 1973 செப்டம்பர் 11 இல் இராணுவம் நடத்திய ஆட்சிக் கவிழ்ப்பில் அலண்டேயின் பதவி பறிக்கப்பட்டது.[3][4] அரசுத்தலைவர் மாளிகையை இராணுவம் சுற்றி வளைத்த போதிலும், தான் பதவியைத் துறக்கப் போவதில்லை என அலண்டே சூளுரைத்தார்.[5] அதே நாளில் அவர் மர்மமான முறையில் இறந்தார்.

அலண்டே பதவியில் இருந்து அகற்றப்பட்டதை அடுத்து, இராணுவத் தலைவர் ஆகுஸ்தோ பினொச்சே ஆட்சியைக் கைப்பற்றி நாட்டை 1973 முதல் 1990 வரையில் இராணுவ ஆட்சியில் வைத்திருந்தார். சிலியின் 41 ஆண்டுகள் சனநாயக ஆட்சி இதனால் முடிவுக்கு வந்தது. அலண்டே தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக இராணுவம் அறிவித்தது. சிலியின் காங்கிரசைக் கலைத்த பினோச்சே, அலன்டேயின் ஆதரவாளர்களைக் கைது செய்து ஆயிரக்கணக்கானோரைப் படுகொலை செய்தார். அலண்டேயின் ஆட்சியில் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த ஒர்லாண்டோ லாடெலியர், பிரதி அரசுத்தலைவர் கார்லோசு பிராட்சு ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர்.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-08-03. பார்க்கப்பட்ட நாள் 2014-05-11.
  2. "Profile of Salvador Allende". BBC. 8 September 2003. http://news.bbc.co.uk/2/hi/americas/3089846.stm. 
  3. Pipes, Richard (2003). Communism: A History. The Modern Library. பக். 138. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8129-6864-6. 
  4. "Chile: The Bloody End of a Marxist Dream... Allende's downfall had implications that reached far beyond the borders of Chile. His had been the first democratically elected Marxist government in Latin America...". Time Magazine. http://www.time.com/time/magazine/article/0,9171,907929,00.html. பார்த்த நாள்: 2014-05-11. 
  5. http://en.wikisource.org Salvador Allende's Last Speech
  6. Lynton, Stephen J.; Meyer, Lawrence (செப்டம்பர் 22, 1976), "Ex-Chilean Ambassador Killed by Bomb Blast", வாசிங்டன் போஸ்ட் {{citation}}: Check date values in: |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சால்வடோர்_அயேந்தே&oldid=3553555" இலிருந்து மீள்விக்கப்பட்டது