உள்ளடக்கத்துக்குச் செல்

கோடகநல்லூர் கைலாசநாதர் கோயில்

ஆள்கூறுகள்: 8°41′54″N 77°35′22″E / 8.6982°N 77.5895°E / 8.6982; 77.5895
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோடகநல்லூர் கைலாசநாதர் கோயில்
கோடகநல்லூர் கைலாசநாதர் கோயில்
அமைவிடம்
நாடு: இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருநெல்வேலி
அமைவு:கோடகநல்லூர்
ஏற்றம்:69.87 m (229 அடி)
ஆள்கூறுகள்:8°41′54″N 77°35′22″E / 8.6982°N 77.5895°E / 8.6982; 77.5895[1]
கோயில் தகவல்கள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கோயில்களின் எண்ணிக்கை:ஒன்று

கோடகநல்லூர் கைலாசநாதர் கோயில் (Kailasanathar Temple, Kodaganallur) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் திருநெல்வேலி மாவட்டம், கோடகநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட கோடகநல்லூரில் அமைந்துள்ள ஒரு சிவாலயம் ஆகும்.[1] [2]இச்சிவாலயம் நவகைலாயங்களில் ஒன்றாகவும், செவ்வாய் தலமாகவும் கருதப்படுகிறது.[3]

சன்னிதிகள்[தொகு]

இச்சிவாலயத்தின் மூலவர் கைலாசநாதர், அம்மன் சிவகாமி அம்பாள். இருவருக்கும் தனித்தனி சன்னிதிகள் உள்ளன. தாமிரபரணி தீர்த்தம், வில்வமரம் தலவிருட்சம், காமிக ஆகமம் ஆகமம் என்பவை கோவிலின் சிறப்புகளாகும்.

கோயில் அமைப்பு[தொகு]

இக்கோயிலில் கைலாசநாதர், சிவகாமி அம்பாள் சன்னதிகளும், விநாயகர், முருகன், வள்ளி தெய்வானைஆனந்த கௌரி அம்பாள், நந்தி உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயிலில் மொத்தம் இரண்டு கோபுரங்கள் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.

பூசைகள்[தொகு]

காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 7.00 மணி வரையும் நடை திறக்கப்படுகிறது.

கோடகநல்லூர் கைலாசநாதர் கோயிலில் சிவாகம முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. மாதாந்திர பிரதோசம், மார்கழி திருவாதிரை (டிசம்பர் – சனவரி), மகா சிவராத்திரி (பிப்ரவரி – மார்ச்) ஆகியவை முக்கிய திருவிழாவாக நடைபெறுகின்றன. நடைபெறுகிறது.

தமிழ்நாடு அரசு இணையதளம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "கோடகநல்லூர் கைலாசநாதர் கோயில்". தினமலர்.
  2. "அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் கோடகநல்லூர்". திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம். https://tirunelveli.nic.in/ta/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%88%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0/. பார்த்த நாள்: 18 April 2024. 
  3. "அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்". தினமலர். https://temple.dinamalar.com/new.php?id=1047. பார்த்த நாள்: 18 April 2024. 

புற இணைப்புகள்[தொகு]