புறக்கோள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புறக்கோள் (extrasolar planet, அல்லது exoplanet), என்பது சூரியக் குடும்பத்திற்கு வெளியே உள்ள ஒரு கோளைக் குறிக்கும். முதலாவது புறக்கோள் 1917 இல் அவதானிக்கப்பட்டது, ஆனாலும் அது அங்கீகரிக்கப்படவில்லை.[1] 2022 சூலை 9 வரை பெறப்பட்ட தகவல்களின் படி, இதுவரை 5,110 புறக்கோள்கள் இருப்பது வானியலாளர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது.[2][3] இவற்றில் பெரும்பாலான புறக்கோள்களின் புகைப்படங்கள் நேரடியாகப் பெறப்படாமல், ஆரத் திசைவேகம் (radial velocity) அவதானிப்புகள் மூலம் பெறப்பட்டவையாகும்[2].

பல புறக்கோள்கள் வியாழன் கோளை ஒத்த பெரும் கோள்கள் ஆகும். சில புறக்கோள்கள் எடை குறைந்தவையாகும். இவை பூமியை விட சில மடங்கு அதிக நிறை உடையவை[4][5] பல விண்மீன்கள் கோள்களைக் கொண்டுள்ளதென இப்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 10 விழுக்காடு விண்மீன்கள் சூரியனை ஒத்தவை ஆகும்[6].

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புறக்கோள்&oldid=3529560" இருந்து மீள்விக்கப்பட்டது