விக்கிப்பீடியா:பயிலரங்கு 2024 (திருநெல்வேலி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

2-நாள் பயிலரங்கு ஒன்றினை தமிழ்நாட்டின் திருநெல்வேலி நகரில் நடத்துவதற்கான திட்டப் பக்கம்.

தமிழ் விக்கிப்பீடியா - சி.ஐ.எஸ் இணைவாக்க முறையில், சதக்கத்துல்லா அப்பா கல்லூரியுடன் இணைந்து இப்பயிலரங்கு நடத்தப்படும்.

நோக்கம்

 1. புதிய பயனர்களுக்கு தமிழ் விக்கிப்பீடியாவை அறிமுகப்படுத்தி, பங்களிப்பதற்கான பயிற்சியளித்தல்.
 2. உரிய பயிற்சிகளுக்குப் பிறகு, புதிய பயனர்களின் வாயிலாக கட்டுரைகளில் முன்னேற்றப் பணிகளைச் செய்தல்.

திட்டத்திற்கான மூலம்: விக்கிப்பீடியா:பயிலரங்குகள் 2023

கவனக்குவியம்

 • கலைக்களஞ்சியம் குறித்து தெளிவான புரிதலை ஏற்படுத்துதல்.
 • மேற்கோள்கள் இல்லாத கட்டுரைகளில் குறைந்தது ஒரு மேற்கோளாவது சேர்த்தல்.
 • கட்டுரைகளில் மேம்பாட்டுப் பணிகளைச் செய்தல்.

நிகழ்வு குறித்த விவரங்கள்

 • நாட்கள்: மார்ச்சு 1, மார்ச்சு 2; 2024
 • நேரம்: காலை 9.30 முதல் மாலை 4.30 மணி வரை
 • நிகழ்விடம்: சதக்கத்துல்லா அப்பா கல்லூரி, திருநெல்வேலி - 627 011, தமிழ்நாடு
 • பயிற்சி பெற்றோர்:
 • கல்லூரிப் பேராசிரியர்கள் - 65
 • ஆய்வு மாணவர்கள் - 18
 • பயிற்சி தந்தோரின் எண்ணிக்கை: 8

பயிற்சியாளர்கள்

மார்ச்சு 1 மார்ச்சு 2
சத்திரத்தான்
மா. செல்வசிவகுருநாதன்
ஸ்ரீ. பாலசுப்ரமணியன்
வசந்தலட்சுமி
ஸ்ரீகிருஷ்ணன் நாராயணன்
கு. அருளரசன்
சத்திரத்தான்
மா. செல்வசிவகுருநாதன்
ஸ்ரீ. பாலசுப்ரமணியன்
வசந்தலட்சுமி
கு. அருளரசன்
கி.மூர்த்தி
ஸ்ரீதர். ஞா

ஏற்பாடுகள்

 1. கற்பித்தல் உள்ளடக்கங்களைத் தயாரிப்பது, நேரடியாகப் பயிற்சியளித்தல் ஆகிய பொறுப்புகளை தமிழ் விக்கிப்பீடியா குமுகாயம் எடுத்துக்கொண்டது.
 2. நடத்துவதற்குத் தேவைப்படும் நிதியை சி.ஐ.எஸ் தந்தது.
 3. வகுப்பு நடத்துவதற்கான இடம், இணைய இணைப்புடன் இருக்கும் கணினி வகுப்பறை ஆகியவற்றை சதக்கத்துல்லா அப்பா கல்லூரி நிர்வாகம் தந்தது. பங்கேற்கும் ஆசிரியர்களை ஒருங்கிணைக்கும் பொறுப்பினை அக்கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவர் எடுத்துக்கொண்டார்.

பயிலரங்கத்திற்குப் பிறகான செயல்பாடுகள்

 1. பயிலரங்கம் முடிந்த பிறகு, அடுத்த 4 வாரங்களுக்கு ஒவ்வொரு வாரமும் இணையவழி கூட்டமொன்று நடத்தப்படும். கலந்துகொள்ளும் பயனர்களுக்கு உதவிக் குறிப்புகள் வழங்கப்பட்டு, அவர்களை தொடர் பங்களிப்பாளர்களாக மாற்றுவதற்கு முயற்சி மேற்கொள்ளப்படும்.
 2. அதற்கடுத்த 5 மாதங்களுக்கு மாதமொருமுறை இணையவழி கூட்டம் நடத்தப்படும். கலந்துகொள்ளும் பயனர்களுக்கு உதவிக் குறிப்புகள் வழங்கப்பட்டு, அவர்களை தொடர் பங்களிப்பாளர்களாக தொடரச் செய்வதற்கு முயற்சி மேற்கொள்ளப்படும்.
 3. மூன்று மாதங்கள் அல்லது ஆறு மாதங்கள் கழித்து, இப்பயிலரங்கில் பங்குகொண்ட ஆசிரியர்களை மீண்டும் வரவழைத்து அவர்களுக்கு தேவைப்படும் உதவிகளைச் செய்யலாம். இதே கல்லூரியில் ஒருநாள் கூடல் நிகழ்வினை நடத்தலாம். பயிலரங்கிற்குப் பிறகான நிலவரங்களின் அடிப்படையில் மேற்கொண்டு திட்டமிடப்படும்.

திட்ட ஒருங்கிணைப்பாளர்கள்

 1. -மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:32, 26 சனவரி 2024 (UTC)[பதிலளி]
 2. -ஸ்ரீகிருஷ்ணன் நாராயணன் (பேச்சு) 06:38, 29 சனவரி 2024 (UTC)[பதிலளி]

விக்கிமீடியா அளவில் ஆவணப்படுத்துதல்

துணைப் பக்கங்கள்