விக்கிப்பீடியா பேச்சு:பயிலரங்கு 2024 (திருநெல்வேலி)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திட்டத்திற்கான முன்மொழிவு[தொகு]

தமிழ் விக்கிப்பீடியாவை மக்களிடையே கொண்டு செல்லும் முயற்சியாக அறிமுக நிகழ்வுகள், பயிற்சிப் பட்டறைகள் ஆகியவற்றை தொடர்ந்து நடத்திவருகிறோம். புதிய பயனர்களுக்கான இந்நிகழ்ச்சிகள் இதுவரை 'ஒரு நாள் நிகழ்வாக' அமைந்திருந்தன என்பதாக நான் அறிகிறேன். பயிற்சிப் பட்டறைகளை இரு நாட்களுக்கு தொடர்ச்சியாக நடைபெறும் வகையில் அமைத்தால், புதிய பயனர்களை தொடர் பங்களிப்பாளர்களாக மாற்றும் முயற்சிக்கான வெற்றி விழுக்காடு அதிகரிக்கும் எனத் தோன்றியது. இதன் காரணமாக விக்கிப்பீடியா:தொடர்-தொகுப்பு 2023, விக்கிப்பீடியா:பயிலரங்குகள் 2023 ஆகிய திட்டங்கள் 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டு காலத்தில் உருவாக்கப்பட்டன. எனினும், பிற திட்டங்களுக்கு முன்னுரிமைத் தந்ததால், மேற்குறிப்பிட்ட திட்டங்களை 2023 ஆம் ஆண்டில் அடுத்த நிலைக்கு கொண்டு செல்லவில்லை.

2024 ஆம் ஆண்டில், 2-நாள் பயிலரங்கு எனும் திட்டத்திற்கான முன்னெடுப்பினை ஒரு முன்மொழிவாக தமிழ் விக்கிப்பீடியர்களின் பார்வைக்கு இங்கு வைக்கிறேன். திட்டத்தின் கூறுகள்:

  • ஒரு நிகழ்வானது சோதனை முயற்சியாக நடத்தப்படும். குறைவான பளு, குறைவான அழுத்தம், எளிதில் நிதியுதவி பெறுதல், அதிகபட்சப் பலனைப் பெறுதல் என்பனவற்றைக் கருத்திற் கொண்டு, ஒரேயொரு நிகழ்வு என்பது திட்டமிடப்பட்டுள்ளது.
  • அறிவுப் பகிர்தலை ஊக்குவிக்கும் ஒரு கல்லூரியில், அங்கு பணியாற்றும் ஆசிரியர்களுக்கு இப்பயிலரங்கினை நடத்துதல்.
  • இரு நாட்களுக்கு தொடர்ச்சியாக பயிலரங்கு நடத்தப்படும்.
  • நாள் 1 - அறிமுகமும், அடிப்படைப் பயிற்சியும் (தளத்தில் உலவுதல், தொகுத்தல்)
  • நாள் 2 - கட்டுரைகளில் முன்னேற்றப் பணிகளை புதிய பயனர்கள் செய்வர். பயிற்சி தருபவர்கள் உடனிருந்து உதவுவர்.
  • 1000 கட்டுரைத் தலைப்புகள் அடங்கிய பட்டியலானது புதிய பயனர்களிடத்து தரப்படும். அவர்களுக்கு விருப்பமான கட்டுரையை அவர்கள் தேர்ந்தெடுத்து, மேம்பாட்டுப் பணிகளைச் செய்யலாம்.
  • பயிலரங்கத்தின் முடிவில் 250 கட்டுரைகள் மேம்படுத்தப்பட்டிருக்கும் என்பது நமது குறிக்கோள் ஆகும்.
  • பயிலரங்கத்திற்குப் பின்னர், அடுத்த 4 வாரங்களுக்கு ஒவ்வொரு வாரமும் இணையவழி கூட்டமொன்று நடத்தப்படும். கலந்துகொள்ளும் பயனர்களுக்கு உதவிக் குறிப்புகள் வழங்கப்பட்டு அவர்களை தொடர் பங்களிப்பாளர்களாக மாற்றுவதற்கு முயற்சி செய்யப்படும்.
  • அடுத்த 5 மாதங்களுக்கு மாதமொருமுறை இணையவழி கூட்டம் நடத்தப்படும். கலந்துகொள்ளும் பயனர்களுக்கு உதவிக் குறிப்புகள் வழங்கப்பட்டு அவர்களை தொடர் பங்களிப்பாளர்களாக தொடரச் செய்வதற்கு முயற்சி செய்யப்படும்.
  • பயிலரங்கத்தை நடத்துவதற்குத் தேவைப்படும் நிதியைப் பெறுவதற்கான கோரிக்கை, இணையம் மற்றும் சமூகத்துக்கான மையம் (இந்தியா) அமைப்பிடம் வைக்கப்படும். அவர்களால் உதவிசெய்ய இயலவில்லையெனில், விக்கிமீடியா அமைப்பிடம் Rapid Funds கோரப்படும்.

தமிழ் விக்கிப்பீடியர்கள் தமது கருத்துகள், பரிந்துரைகளை இந்த உரையாடல் பக்கத்தில் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அனைவரின் கருத்துகளும் கவனத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, திட்டத்தில் உரிய மாற்றங்கள் செய்யப்படும்; நன்றி! - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:56, 26 சனவரி 2024 (UTC)[பதிலளி]

மிக அருமையான யோசனை! ஆசிரியர்கள் இரண்டு தொடர் நாட்களை ஒதுக்க முடியுமா என்பது ஒரு விவாதத்துக்குரிய விஷயமாக தெரிந்தாலும் முயற்சிகளை மேற்கொள்வது தவறாகாது. ஏற்கனவே முன்மொழிவில் இது ஒரு சோதனை முயற்சியாக நடத்தப்படும் என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மற்றபடி திட்டம் மிக துல்லியமாக வகுக்கப்பட்டுள்ளதாகவே கருதுகிறேன். முதல் மாதம் வாரம் ஒருமுறையும், அடுத்துவரும் ஐந்து மாதங்களுக்கு மாதம் ஒருமுறையும் இணையவழி கூட்டங்கள் நடத்தப்படுவது நடைமுறைக்கேற்ற சிறப்பான யோசனை. இந்த யோசனையை நான் மனமார வழிமொழிகிறேன்.
ஸ்ரீகிருஷ்ணன் நாராயணன் (பேச்சு) 03:01, 27 சனவரி 2024 (UTC)[பதிலளி]
@Sree1959: தங்களின் கருத்துகளுக்கு மிக்க நன்றி! இந்தத் திட்டம் குறித்து, தமிழ் விக்கிப்பீடியா பயனர்களில் ஒருவரான பேராசிரியர் பி. மாரியப்பன் அவர்களிடம் பேசியிருந்தேன். வெள்ளி, சனி ஆகிய தொடர்ச்சியான 2 நாட்களுக்கு நடத்த இயலும் என பதிலுரைத்தார். வெள்ளிக்கிழமை என்பது பணி நாட்களில் ஒன்று என்பதாக இருக்கும். இதனை on duty என்பதாக கல்லூரி எடுத்துக்கொள்ளும். கூடுதலாக, சனிக்கிழமையை இதற்காக செலவழிப்பதில் ஆசிரியர்களிடம் தயக்கம் இருக்காது என அவர் தெரிவித்தார். இதன் மூலமாக ஞாயிறு எனும் விடுமுறை நாளினை நாம் தவிர்க்க இயலும் எனவும் அவர் தெரிவித்தார். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:25, 27 சனவரி 2024 (UTC)[பதிலளி]
ஆம் நல்ல யோசனை தான். கூடுதலாக
  • 50 பேராசிரியர்களுக்கும் போதுமான கணினி அறை இருப்பதனை உறுதி செய்ய வேண்டும்.
  • திறன்பேசியில் தொகுப்பதற்காகவே ஒரு நிகழ்வு உருவாக்கப்பட வேண்டும். (சிறு தொகுப்புகளைச் செய்யவும், தொடர்ந்து பங்களிக்கவும் இது உதவும்).
  • சான்றிதழ்கள் தருவது கூடுதல் ஊக்கத்தினை அளிக்கலாம்.
  • அதிக கட்டுரைகள் உருவாக்கியவர்கள் / ஆழமான கட்டுரைகளை உருவாக்கியவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கலாம்.
-- ஸ்ரீதர். ஞா (✉) 16:00, 31 சனவரி 2024 (UTC)[பதிலளி]
தங்களின் கருத்துகளுக்கு மிக்க நன்றி. பயிற்சிக்கான பெரிய அறை, இணைய வசதியுடன் இருக்கும் கணினிகள் ஆகிய சிறப்பான வசதிகள் இருப்பதாக சத்திரத்தான் அவர்கள் தெரிவித்துள்ளார். திறன்பேசியில் தொகுப்பதற்கான பயிற்சியையும் நிகழ்ச்சி நிரலில் சேர்த்துக்கொள்வோம். சான்றிதழ்கள் வழங்குவது ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து திட்டப் பக்கத்தில் குறிப்பிடுகிறேன். நினைவுப் பரிசு குறித்து திட்டமிடுவோம். இதனை குறித்துக்கொள்கிறேன். -மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:57, 31 சனவரி 2024 (UTC)[பதிலளி]

தகவலுழவனின் முன்மொழிவு[தொகு]

  • விக்கிப்பீடியா:ஆலமரத்தடி_(புதிய_கருத்துக்கள்)#புதிய_பங்களிப்பாளர்களை_உருவாக்க_கலந்துரையாடுக என்பதில் கூறப்பட்டுள்ளது போல செயற்படுதல் நலம். மறந்து விடுவது மனித இயல்பு தானே! அதனால் திரைநிகழ்வு பதிவுகளைப் பகிர்தல் நன்று. பல பக்கங்களைக் காட்டி படிக்கச் சொல்வதைத் தவிரக்க வேண்டும். குறள் போன்று நம் குரல் இருக்க வேண்டும். புதியவர்களின் வினாக்களுக்கு, தவறு, சரி எனக் கூறாமல், அதிக விளக்கம் தருதல், நல்ல பலனைத் தருகிறது.
  • மேலும், புதுப்பயனர்களின் தவறுகளை ஆய்ந்து அவை திரும்பவும் வராமல் இருக்க திட்டமிட வேண்டும். இதற்கு முன் நடந்த பயிலரங்குகளில் நாம் கற்றவை என்ன? என்பதை அறிய, ஒரு தனிப்பக்கம் இருப்பது நலம். தஞ்சையில் பல கல்லூரி ஆசிரியர் வினா எழுப்பினர்? விளைவு..? UGC திட்டப்படி கணக்கு காட்ட மட்டுமே பயன்படுத்திக் கொள்வர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எனக்கு என்ன பலன்? என்ற வினா பல பயிலரங்குகளில் கேட்கப்படுவது வழக்கம். ஏனெனில், பல்கலை கல்வித்திட்டத்திலோ, பள்ளித் திட்டங்களிலோ விளையாட்டுகளைப் போல கூட, ஊக்குவிப்பதில்லை. ஆனால் வெளிநாட்டு பாடத்திட்டங்களில் கட்டற்ற தரவுகளில் ஈடுபடுபவருக்கு ஊக்கம் தரப்படுகிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
  • கட்டுரைக் குறித்து கட்டுரையின் பேச்சுப்பக்கத்தில் தான் உரையாட வேண்டும். அவரது பேச்சுப்பக்கத்தில் இணைப்பு மட்டுமே தர வேண்டும். இப்படி செய்தால் பின்னாளில் நடந்த உரையாடல்களை காட்டி, சமூக உணர்வினை வளர்க்க உதவும். இல்லையெனில் விலகி விடுவர்.
  • பயிற்சிக்கான காலம் குறுகியது. குறுகிய காலத்தில் தமிழ் விக்கித் திட்டங்கள் பயன்பெற விரும்புகிறேன். எக்கட்டுரைகளில் படங்கள் தேவை? ஒரு சான்றாவது ஒரு கட்டுரையில் இணைப்பது எப்படி? இப்படி.. பொதுவாக பேசாமல், குறிப்பாக செயற்பட வைக்க வேண்டும் என்பதே என் அவா. பெண்கள் ஏன் இங்கு செயற்படுவதில்லை? பத்து வருடங்களுக்கும் மேலாக ஓரிருவரே ஏன் இருக்கின்றனர்? விக்கிமூலத்தில் அதிக பெண்கள் ஈடுபட காரணம் என்ன? என்பதையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும்..
  • வாட்சுஅப் போன்ற சமூக ஊடகங்களில் அனுப்பப்படும் படங்கள், செய்திகள் போன்றவைகளை சில நாட்களுக்கு பிறகு அழிந்து விடும். எனவே, யூடிய்பு அல்லது பெரும்பான்மையான பன்னாட்டு விக்கிக்கூடல் போன்று, டெலிகிராம் பயன்படுத்தச் சொல்லலாம். அதில் சில நாட்களுக்கு பின் இணைந்தாலும், முந்தைய தரவுகள் அவர்களுக்கு கிடைக்கும் படி செய்ய இயலும். கட்டற்ற தரவுதளத்திற்காக செயற்படும் போது, கட்டற்ற சமூக ஊடகங்களைப் பயன்படுத்த முன்மொழிகிறேன்.--உழவன் (உரை) 03:00, 1 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]
இந்த முயற்சியானது மிகவும் ஆழமாக திட்டமிடப்பட்டுள்ளது. பயிற்சிக்குப் பிறகு, அடுத்த ஆறு மாதங்களுக்கு follow up நடவடிக்கைகள் இருக்கும். குறைந்தது 10 தொடர்பங்களிப்பாளர்களை தமிழ் விக்கிப்பீடியாவிற்கு கொண்டுவருவது இத்திட்டத்தின் இலக்காகும். திட்டப் பக்கத்தில் விவரங்கள் இடப்பட்டுள்ளன. - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:56, 1 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]
மகிழ்ச்சி. உழவன் (உரை) 14:42, 1 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]

பயிற்சியாளராக பங்களிக்க விரும்புபவர்கள்[தொகு]

  1. மார்ச்சு 1, மார்ச்சு 2 - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:28, 5 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]
  2. மார்ச்சு 1, மார்ச்சு 2 -சத்திரத்தான் (பேச்சு) 22:36, 31 சனவரி 2024 (UTC) (கல்லூரி ஒருங்கிணைப்பு & பயிற்சி)[பதிலளி]
  3. -- கல்லூரி உள்ள ஊர், எந்நாள், பயணச்செலவு ஆகியவற்றின் அடிப்படையில், நானும் இணைந்து செயற்பட விரும்புகிறேன்.--உழவன் (உரை) 02:29, 1 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]
  4. -- மார்ச்சு 2 கலந்துகொள்ள விருப்பம் ஸ்ரீதர். ஞா (✉) 07:51, 1 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]
  5. மார்ச்சு 1 (வெள்ளிக்கிழமை) மட்டும் பங்களிக்கிறேன் (ஏற்கனவே திட்டமிட்ட மற்றொரு பயணம் இருப்பதால் ஒரு நாள் மட்டுமே இம்முறை இயலும்). ஸ்ரீகிருஷ்ணன் நாராயணன் (பேச்சு) 07:48, 6 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]
  6. - பாலசுப்ரமணியன்--Balu1967 (பேச்சு) 16:43, 1 பெப்பிரவரி 2024 (UTC) இரு நாட்களும் பங்களிக்கிறேன்.[பதிலளி]
  7. - வசந்தலட்சுமி--வசந்தலட்சுமி (பேச்சு) 15:45, 5 பெப்பிரவரி 2024 (UTC) இரு நாட்களும் பங்களிக்கிறேன்.[பதிலளி]
  8. மார்ச்சு 2 அன்று பங்களிக்க விரும்புகிறேன். --மகாலிங்கம் இரெத்தினவேலு 16:16, 5 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]
  9. மார்ச்சு 2 அன்று பங்களிக்க விரும்புகிறேன்.--கி.மூர்த்தி (பேச்சு) 07:49, 6 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]
  10. மார்ச்சு 1, மார்ச்சு 2 --கு. அருளரசன் (பேச்சு) 15:29, 7 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]

விருப்பத்தை உறுதிசெய்வதற்கான வேண்டுகோள்[தொகு]

திட்டமிடப்பட்ட இந்த நிகழ்வை ஒன்றிணைந்து நடத்துவதற்கு சி.ஐ.எஸ் அமைப்பு தமது ஒப்புதலைத் தந்துள்ளனர். கோரியுள்ள நிதியையும் நமக்கு வழங்கவிருக்கிறார்கள். கல்லூரி நிருவாகத்திடமிருந்து ஒப்புதல் கிடைத்ததோடு, நடைபெறும் நாட்களையும் உறுதி செய்துள்ளனர். விவரங்களை, திட்டப் பக்கத்தில் காணுங்கள்.

  • @சத்திரத்தான், Info-farmer, Sridhar G, Sree1959, and Balu1967: வணக்கம். உங்களால் எந்தெந்த நாட்களில் கலந்துகொள்ள இயலும் எனும் தகவலையும் மேலேயுள்ள பயிற்சியாளராக பங்களிக்க விரும்புபவர்கள் எனும் பகுதியில் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். திட்டமிடலுக்கு உதவியாக இருக்கும்.
  • @TNSE Mahalingam VNR and கி.மூர்த்தி: வணக்கம். உங்களின் விருப்பத்தைப் பதிவுசெய்வதோடு, உங்களால் எந்தெந்த நாட்களில் கலந்துகொள்ள இயலும் எனும் தகவலையும் மேலேயுள்ள பயிற்சியாளராக பங்களிக்க விரும்புபவர்கள் எனும் பகுதியில் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். திட்டமிடலுக்கு உதவியாக இருக்கும்.
  • @Neechalkaran, Arularasan. G, and Vasantha Lakshmi V: வணக்கம். இந்த நிகழ்வில் ஒரு பயிற்சியாளராக நீங்கள் பங்களிக்க வேண்டுமென விரும்புகிறோம். உங்களின் விருப்பத்தைப் பதிவுசெய்வதோடு, உங்களால் எந்தெந்த நாட்களில் கலந்துகொள்ள இயலும் எனும் தகவலையும் மேலேயுள்ள பயிற்சியாளராக பங்களிக்க விரும்புபவர்கள் எனும் பகுதியில் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். திட்டமிடலுக்கு உதவியாக இருக்கும்.

அனைவருக்கும் நன்றி! -மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:20, 5 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]

//கல்லூரி உள்ள ஊர், எந்நாள், பயணச்செலவு ஆகியவற்றின் அடிப்படையில்// என்று ஏற்கனவே தெரிவித்துள்ளேன். நிகழ்வு அட்டவணையை முதலில் உருவாக்குதல் நன்று. பிறகு வினாக்களுக்கு விடையளிப்பது அனைவருக்கும் எளிதாகும் என்றே எண்ணுகிறேன். உழவன் (உரை) 15:27, 5 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]
திட்டப் பக்கம் இற்றை செய்யப்பட்ட நேரம்: 20:23, பெப்பிரவரி 5, 2024‎, இந்தப் பகுதியை நான் பதிப்பித்த நேரம்: 20:50, பெப்பிரவரி 5, 2024‎. இந்தப் பகுதியில், பொதுவான செய்தியை தொடக்கத்தில் இட்டுவிட்டு, 3 தனித்தனியான செய்திகளை வகைப்பிரித்து இட்டுள்ளேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:58, 5 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]

மேற்கோள்கள் இல்லா ஆங்கிலக் கட்டுரைகள்[தொகு]

வணக்கம், இங்குள்ள 4000 கட்டுரைகளில் மேற்கோள்கள் இல்லை. ஆனால், இவை அனைத்திற்கும் ஆங்கிலக் கட்டுரையின் இணைப்பு உள்ளது. மேற்கோள்கள் சேர்க்கும் தொகுப்பு குறித்து பயிற்சி அளிக்கும் சமயத்தில் இது உதவியாக இருக்கும் என நம்புகிறேன். நன்றி -- ஸ்ரீதர். ஞா (✉) 14:50, 18 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]