அல் அத்தார் வணிகக் கோபுரம்
Appearance
அல் அத்தார் வணிகக் கோபுரம் | |
தகவல் | |
---|---|
அமைவிடம் | துபாய், ஐக்கிய அரபு அமீரகம் |
நிலை | Complete |
கட்டப்பட்டது | 1999 |
தள எண்ணிக்கை | 38 |
நிறுவனங்கள் | |
கட்டிடக்கலைஞர் | ஆர்.டி.கே.எல் நிறுவனம் |
References: [1][2] |
அல் அத்தார் வணிகக் கோபுரம் (Al Attar Business Tower) ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் அமீரகத்தில் கட்டப்பட்டுள்ள 38 மாடிகளைக் கொண்ட ஒரு கட்டிடம் ஆகும். கோபுரத்தின் மொத்த கட்டமைப்பு உயரம் 158 மீ (518 அடி) ஆகும். இக்கோபுரம் தென்னாப்பிரிக்க கட்டுமான ஒப்பந்ததாரர் முர்ரே & ராபர்ட்சால் கட்டப்பட்டது. இந்த வணிகக் கோபுரத்தின் உரிமையாளர் அல் அத்தர் பிராப்பர்டீசு என்பவராவார். 1999 ஆம் ஆண்டில் கட்டிமுடிக்கப்பட்டது.
குடியிருப்புகள், வணிக கடைகள், உணவு விடுதிகள், விடுதி கட்டிடங்கள் மற்றும் பிரபலமான கடைகள் இங்குள்ளன. இந்தப் பகுதி எப்போதும் தொழில் வல்லுநர்கள் மற்றும் பணிபுரியும் நபர்களால் பரபரப்பாக காணப்படும். துபாய் பேரங்காடி, உலக வர்த்தக மையம், துபாய் பன்னாட்டு நிதி மையம் போன்ற முக்கியமான அலுவலகங்களுக்கு அருகில் அல் அத்தார் வணிகக் கோபுரம் அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ அல் அத்தார் வணிகக் கோபுரம் at SkyscraperPage
- ↑ "Emporis building ID alattarbusinesstower-dubai-unitedarabemirates". Emporis. Archived from the original on March 7, 2016.
புற இணைப்புகள்
[தொகு]- அல் அத்தார் வணிகக் கோபுரம் பரணிடப்பட்டது 2007-11-23 at the வந்தவழி இயந்திரம் சொந்த இணையத் தளம்
- எம்போரிஸ்