முகமது பின் ராஷித் அல் மக்தூம்
முகமது பின் ராஷித் அல் மக்தூம் محمد بن راشد آل مكتوم | |
---|---|
ஐக்கிய அரபு அமீரகத்தின் முதலமைச்சர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 5 ஜனவரி 2006 11 பெப்ரவரி 2006 வரை நடப்பின்படி | |
குடியரசுத் தலைவர் | ஷேக் காலிஃபா பின் சாயத் அல் நஹ்யான்(2006–2022) முகமது பின் சயீது அல் நகியான்(2022 முதல்) |
முன்னையவர் | சேக் மக்தூம் பின் ராசித் அல் மக்தூம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 22 சூலை 1949 துபாய், ஐக்கிய அரபு அமீரகம் |
தேசியம் | அமீரகர் |
துணைவர்(கள்) | ஹிந்த் பிந்த் மக்தூம் பின் ஜுமா அல் மக்தூம் ஹயா பிந்த் உசேன் |
சேக் முகமது பின் ராஷித் அல் மக்தூம் (ஆங்: Mohammed bin Rashid Al Maktoum, அரபு: محمد بن راشد آل مكتوم, பி. ஜூலை 15, 1949) ஐக்கிய அரபு அமீரகத்தின் முதலமைச்சரும் துணைத் தலைவரும் துபாயின் ஆட்சியாளரும் ஆவார். பன்னாட்டு குதிரை ஓட்டத்தில் முக்கிய நபர்களில் ஒருவர். $16 பில்லியன் மொத்த செல்வம் பெற்ற மக்தூம் உலகில் பெரும் பணக்கார அரசர்களின் பட்டியலில் நான்காம் நிலையில் உள்ளார்.
அரசியலும் வணிகமும்
[தொகு]1995 ஆம் ஆண்டு சனவரி மாதம் 3 ஆம் தேதி, அப்போதைய துபாய் ஆட்சியாளரும், சேக் முகம்மத்தின் தமையனாருமான சேக் மக்தூம் பின் ராசித் அல் மக்தூம் இவரை துபாயின் முடிக்குரிய இளவரசராக அறிவித்தார். துபாயில் முன்னெடுக்கப்பட்ட பல வளர்ச்சித் திட்டங்களை இவர் முன்னின்று நிறைவேற்றினார். பாம் தீவுகள், பூர்ஜ் அல் அராப் விடுதிக் கட்டிடம் முதலிய பல திட்டங்கள் இவற்றுள் அடங்கும். 2010 சனவரி 4 ஆம் தேதி திறந்துவைக்கப்பட்ட உலகின் மிக உயரமான கட்டிடமும், மிகவும் உயரமான தனித்து நிற்கும் அமைப்புமான "புர்ஜ் கலிஃபா" கட்டிடமும் இவரது முன்முயற்சியால் உருவானதே. முடிக்குரிய இளவரசராக இருந்த காலத்தில், பன்முகப் படுத்திய வணிகம், முதலீடுகள் என்பவற்றோடு கூடிய துபாய் கோல்டிங் என்னும் ஒரு நிறுவனத்தை உருவாக்கினார். இவருக்கு இதில் தற்போது 99.67% பங்குகள் உள்ளன.
ஏறத்தாழ ஒரு பத்தாண்டுகள் ஆட்சியாளர் போலவே இவர் செயற்பட்டார். 2006 ஆம் ஆண்டு சனவரி 4 ஆம் தேதி சேக் மக்தூம் பின் ராசித் அல் மக்தூம் காலமாதைத் தொடர்ந்து இவர் முறைப்படி துபாயின் ஆட்சியாளர் ஆனார். இதனைத் தொடர்ந்து சனவரி 5 ஆம் தேதி, ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை சனாதிபதியாகவும், பிரதம அமைச்சராகவும், சனாதிபதி சேக் கலீபா பின் சயத் அல் நகியானால் நியமிக்கப்பட்டார்.