பேச்சு:துபாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Wikipedia-logo-v2-bw.svg துபாய் என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

தமிழில் துபாய் என்று எழுதுவதும் ஒலிப்பதுவுமே வழக்கு எனவே தலைப்பை மீண்டும் துபாய் என்றே மாற்றவேண்டும் எனது எனது கருத்து. ---மயூரநாதன் (பேச்சு) 17:43, 3 ஏப்ரல் 2012 (UTC)

துபாய் என்று எழுதுவது மூல மொழியின்படி பிழையானது. துபை என்பதே மூல மொழியின்படி சரியானதாகும். மேலும், துபை என்று எழுதும் வழக்கம் ஏற்கனவே தமிழில் உள்ளதே.--பாஹிம் (பேச்சு) 05:21, 25 சூலை 2014 (UTC)

துபாய் என்று எழுதும் வழக்கம் ஏற்கனவே உள்ளது! ஏற்கனவே உள்ள பெயர்களை திடீரென்று மாற்றினால், நூற்றுக்கணக்கான பெயர்கள் மாறிவிடும். கூகுள் தேடலில் சிக்குவதும் கடினம். வேண்டுமானால் ஒன்று செய்யலாம். ஏற்கனவே உள்ள பெயர்களை விட்டுவிட்டு, புதிதாக எழுதப்படும் ஊர்/நாடு/மாநிலப் பெயர்களை மூல மொழியின் ஒலிப்புக்கு ஏற்ப எழுதலாம். ’துபாய்’ என்று இருந்தாலும், அதற்குள் அடங்கும் ஊர்ப் பெயர்களையும், நகரங்களையும் மூல மொழிக்கேற்ப எழுதலாம். இது சிக்கலை தவிர்க்கும் என்று எண்ணுகிறேன். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 05:39, 25 சூலை 2014 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:துபாய்&oldid=2282059" இருந்து மீள்விக்கப்பட்டது