சாஞ்சோர் மாவட்டம்
சாஞ்சோர் மாவட்டம் | |
---|---|
மாவட்டம் | |
இராஜஸ்தானில் சாஞ்சோர் மாவட்டத்தின் அமைவிடம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | இராஜஸ்தான் |
கோட்டம் | பாலி |
நிறுவிய நாள் | 7 ஆகஸ்டு 2023 |
தலைமையிடம் | சாஞ்சோர் |
பரப்பளவு | |
• மொத்தம் | 2,996 km2 (1,157 sq mi) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 8,45,430 |
• அடர்த்தி | 280/km2 (730/sq mi) |
நேர வலயம் | ஒசநே+05:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 343041 |
வாகனப் பதிவு | RJ-46 |
இணையதளம் | sanchore |
சாஞ்சோர் மாவட்டம் (Sanchore district), இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் தென்மேற்கில் அமைந்த ஜலோர் மாவட்டப் பகுதிகளை 7 ஆகஸ்டு 2023 அன்று இப்புதிய மாவட்டம் நிறுவப்பட்டது.[1][2][3]இதன் நிர்வாகத் தலைமையிடம் சாஞ்சோர் நகரம் ஆகும். இம்மாவட்டத்தில் பழங்குடி பிஷ்னோய் மக்கள் மற்றும் அஞ்சனா சௌதாரி மக்கள் வாழ்கின்றனர்.[4][5]
மாவட்ட நிர்வாகம்
[தொகு]சாஞ்சோர் மாவட்டம் 4 வருவாய் வட்டங்களைக் கொண்டது.[6]அவைகள் பின்வருமாறு:
- சாஞ்சோர் வட்டம்
- பகோரா வட்டம்
- சிதால்வானா வட்டம்
- ராணிவாரா வட்டம்
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 8,45,430 ஆகும். அதில் ஆண்கள் 438,753 மற்றும் 406,677 பெண்கள் உள்ளனர்.பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 927 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு % ஆகும். இதன் மக்கள் தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 18.79% மற்றும் 8.22%ஆக உள்ளனர். இம்மாவட்ட மக்களில் இந்து சமயத்தினர் 94.50%, இசுலாமியர் 4.74%, சமணர்கள்0.65% மற்றும் பிறர் 0.11% ஆக உள்ளனர். மார்வாரி மொழியை 56.39% மற்றும் இராசத்தானி மொழியை 41.74% பேசுகின்றனர்.
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Rajasthan govt announces 17 new districts, 3 new divisions in state". Hindustan Times (in ஆங்கிலம்). 2023-08-04. பார்க்கப்பட்ட நாள் 2023-10-16.
- ↑ "Rajasthan CM Ashok Gehlot creates 19 more districts, 3 new divisions in election year". The Times of India. 2023-03-18. https://timesofindia.indiatimes.com/city/jaipur/rajasthan-cm-announces-19-new-districts-3-new-divisions/articleshow/98742873.cms.
- ↑ "In poll year, Ashok Gehlot announces 19 new districts, 3 divisions". The Indian Express (in ஆங்கிலம்). 2023-03-18. பார்க்கப்பட்ட நாள் 2023-03-31.
- ↑ "जालोर: सांचोर जिले की विधिवत हुई स्थापना,हवन के साथ संत महात्माओं का हुआ संबोधन". Zee News (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2023-08-31.
- ↑ "4 उपखंड और 4 तहसील के साथ बना सांचौर जिला:ओएसडी बनेंगे कलेक्टर, एसपी; जल्द खुलेंगे जिला लेवल के सभी ऑफिस". Bhaskar. 4 August 2023. https://www.bhaskar.com/local/rajasthan/jalore/sanchore/news/sanchore-district-formed-with-4-subdivisions-and-4-tehsils-131638051.html.
- ↑ Talukas of Sanchore District