உள்ளடக்கத்துக்குச் செல்

இல. கணேசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இல. கணேசன்
19வது நாகாலாந்து ஆளுநர்
பதவியில்
20 பிப்ரவரி 2023 – 15 ஆகத்து 2025
முன்னையவர்ஜகதீஷ் முகீ (கூடுதல் பொறுப்பு)
17வது மணிப்பூர் ஆளுநர்
பதவியில்
27 ஆகத்து 2021[1] – 19 பிப்ரவரி 2023
முன்னையவர்கங்கா பிரசாத் (கூடுதல் பொறுப்பு)
பின்னவர்அனுசுயா யுகே
மேற்கு வங்காள ஆளுநர் (கூடுதல் பொறுப்பு)
பதவியில்
18 ஜூலை 2022 – 17 நவம்பர் 2022
முன்னையவர்ஜகதீப் தன்கர்
பின்னவர்சி. வி. ஆனந்த போசு
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்
பதவியில்
6 அக்டோபர் 2016 – 2 ஏப்ரல் 2018
முன்னையவர்நஜ்மா ஹெப்துல்லா
பின்னவர்கைலாஷ் சோனி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1945-02-16)பெப்ரவரி 16, 1945
தஞ்சாவூர்
இறப்பு15 ஆகத்து 2025(2025-08-15) (அகவை 80)
தேசியம்இந்தியன்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
பணிநாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்

இல. கணேசன் (Ila. Ganeshan, 16 பிப்ரவரி 1945 – 15 ஆகத்து 2025) ஓர் இந்திய அரசியல்வாதியும், நாகாலாந்து மாநிலத்தின் முன்னாள் ஆளுநரும் ஆவார்.[2][3] இந்தியாவின் தஞ்சாவூரைச் சேர்ந்தவர். பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாட்டின் மூத்த அரசியல்வாதியும் கட்சியின் தேசியக் குழுவின் முன்னாள் உறுப்பினரும் ஆவார்.[4] பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில செயலராக நியமிக்கப்படுவதற்கு முன்பு ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்தின் பிரச்சாரகராக இருந்தவர்.[5] பின் கட்சியின் தேசிய செயலராகவும், கட்சியின் தேசிய துணைத்தலைவராகவும் பணியாற்றினார்.[6] பின்னர் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தொடக்க கால வாழ்க்கை

[தொகு]

1945ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16ஆம் நாள் இலக்குமிராகவன் - அலமேலு தம்பதியின் மகனாகப் பிறந்தார். சிறுவயதில் தந்தையை இழந்ததால் அண்ணன் அரவணைப்பில் வளர்ந்தார். ஆர்எஸ்எஸ் அமைப்பில் ஈடுபாடு கொண்டு திருமணம் செய்யாமலும் தனது வேலையை விட்டுவிட்டும் முழுநேரச் செயல்பாட்டாளராகப் பொதுவாழ்விற்கு வந்தார்.[7] இவர் தெலுங்கு பிராமண வகுப்பை சேர்த்தவர்.[8][9]

அரசியல் வாழ்க்கை

[தொகு]

இவர் பாஜகவின் செயற்குழு உறுப்பினர்களுள் ஒருவர். 1991 இல் பாஜகவின் மாநில அமைப்புச் செயலாளரானார். 2009 மக்களவைத் தேர்தலிலும், 2014 மக்களவைத் தேர்தலிலும் தென் சென்னை தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். பின்னர் மத்தியப் பிரதேசத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டு, 6 அக்டோபர் 2016 அன்று பதவி ஏற்றுக் கொண்டார்.[10]

ஆகத்து 22, 2021 அன்று இந்திய குடியரசுத் தலைவர் திரு. ராம் நாத் கோவிந்த் அவர்களால் 17வது மணிப்பூர் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

பிப்ரவரி 20, 2023 அன்று இந்திய குடியரசுத் தலைவர் திரு. திரௌபதி முர்மு அவர்களால் 19வது நாகாலாந்து மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

மேற்கு வங்க ஆளுநராக கூடுதல் பொறுப்பு

[தொகு]

18 சூலை 2022 அன்று, ஜகதீப் தன்கர் தேசிய ஜனநாயகக் கூட்டணியால் துணைத் தலைவர் வேட்பாளராகப் பரிந்துரைக்கப்பட்டதை அடுத்து, கணேசன் மேற்கு வங்க ஆளுநராக கூடுதல் பொறுப்பேற்று 17 நவம்பர் 2022 வரை பதவிவகித்தார்.[11]

இறப்பு

[தொகு]

சர்க்கரை நோயால் காலில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை பெற்று வந்தார், கணேசன். பின்னர், 2025 ஆகத்து 5 அன்று வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது, கால் மரத்துப் போனதால், சுயநினைவற்ற நிலையில் சரிந்தார். இதனைத் தொடர்ந்து சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவப் பரிசோதனையில் தலையில் காணப்பட்ட இரத்தக் கட்டிக்கு அறுவை சிகிச்சைக்கு பலனின்றி 15 ஆகத்து 2025 அன்று இறந்தார்.[12]

மேற்கோள்கள்

[தொகு]
  1. La. Ganesan sworn in as Governor of Manipur
  2. மணிப்பூர் ஆளுநராகும் இல.கணேசன்
  3. "மணிப்பூர் மாநில ஆளுநராக இல.கணேசன் நியமனம்". புதிய தலைமுறை (ஆகத்து 22, 2021)
  4. "BJP-DMDK alliance possible: L Ganesan". The Economic Times. July 9, 2013. http://articles.economictimes.indiatimes.com/2013-07-09/news/40469452_1_dmdk-ram-sethu-lok-sabha. பார்த்த நாள்: 9 January 2014. 
  5. "Munde lobbies for Mahajan’s post, but RSS has other plans". The Indian Express. May 13, 2006. http://www.indianexpress.com/news/munde-lobbies-for-mahajan-s-post-but-rss-has-other-plans/4328/. பார்த்த நாள்: 9 January 2014. 
  6. "By elevating Ganesan, BJP hopes to strengthen State unit". The Indian Express. Feb 1, 2006. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/by-elevating-ganesan-bjp-hopes-to-strengthen-state-unit/article3172447.ece. பார்த்த நாள்: 9 January 2014. 
  7. "தலைவர் 11 தகவல்கள்: இல.கணேசன்". தி தமிழ் இந்து. https://tamil.thehindu.com/opinion/columns/article25199707.ece. பார்த்த நாள்: 29 May 2019. 
  8. கவர்னராகிறார் இல.கணேசன்; முழு வாழ்க்கை வரலாறு. தினமலர். 22 ஆகத்து 2021.
  9. ந.இறைவன், ed. (ஏப்ரல் 2014). பிஜேபி கூட்டணி என்ற பெயரில் தெலுங்கர்கள் அமைத்த தெலுங்கர் மறுமலர்ச்சிக் கூட்டணி வரலாறு காணாத கண்ணாமூச்சி ஆட்டங்கள். அச்சமில்லை இதழ். p. 4. இல. கணேசன்-தெலுங்கு பிராமணர்{{cite book}}: CS1 maint: year (link)
  10. மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றார் இல. கணேசன்
  11. "La. Ganesan takes oath as West Bengal governor" (in en-IN). The Hindu. 2022-07-18. https://www.thehindu.com/news/national/la-ganesan-takes-oath-as-west-bengal-governor/article65654847.ece. 
  12. "நாகாலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன் காலமானார்". Dinamalar. 15 August 2025. Retrieved 15 August 2025.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இல._கணேசன்&oldid=4327879" இலிருந்து மீள்விக்கப்பட்டது