நச்மா எப்துல்லா
நச்மா எப்துல்லா | |
---|---|
16வது மணிப்பூர் மாநில ஆளுநர் | |
பதவியில் 21 ஆகத்து 2016 – 10 ஆகத்து 2021 | |
முன்னையவர் | வி. சண்முகநாதன் |
பின்னவர் | கங்கா பிரசாத் (கூடுதல் பொறுப்பு) |
சிறுபான்மையினர் அமைச்சர் | |
பதவியில் 26 மே 2014 – 12 ஜூலை 2016 | |
பிரதமர் | நரேந்திர மோதி |
துணை அவைத்தலைவர், மாநிலங்களவை | |
பதவியில் 1985 - 1986, 1988 - 2004 | |
மாநிலங்களவை உறுப்பினர் | |
பதவியில் 2004 - 2010, 2012 - 2016 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 13 ஏப்ரல் 1940 போப்பால் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர் | அக்பரலி ஏ. எப்துல்லா (1966-2007) (மறைவு) |
பிள்ளைகள் | 3 |
வாழிடம்(s) | ராஜ் பவன், இம்பால் |
முனைவர். நச்மா எப்துல்லா (Najma Heptulla, மாற்று ஒலிப்பு: நஜ்மா ஹெப்துல்லா, இந்தி: नजमा हेपतुल्ला, உருது: نجمہ ہیپت اللہ) (பிறப்பு 13 ஏப்ரல் 1940) இந்திய அரசின் சிறுபான்மையினர் அமைச்சராக[1] பொறுப்பாற்றும் அரசியல்வாதி ஆவார். முன்னதாக பாரதிய ஜனதா கட்சியின் துணைத் தலைவராக இருந்துள்ளார். 1986 முதல் 2014 வரையிலான காலகட்டத்தில் மாநிலங்களவையில் ஐந்து முறை உறுப்பினராக இருந்துள்ளார்; மாநிலங்களவை துணைத்தலைவராக பதினாறு ஆண்டுகள் இருந்துள்ளார். முன்னதாக இந்திய தேசிய காங்கிரசு உறுப்பினராக இருந்த நச்மா 2012இல் பா.ஜ.கவில் இணைந்தார். சூலை 2004 முதல் சூலை 2010 வரை இராச்சசுத்தான் மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.2012இல் பாஜக சார்பில் மத்தியப் பிரதேசம் மாநிலத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] ஆகத்து 2007இல் நடந்த இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு முகம்மது அமீத் அன்சாரியிடம் தோற்றார்.
நச்மா எப்துல்லா புகழ்பெற்ற இந்திய விடுதலைப் போராட்ட வீரரும் விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் கல்வி அமைச்சருமான அபுல் கலாம் ஆசாத்தின் குடும்பத்தைச் சேர்ந்தவர்.[3] பரவலாக அறியப்படும் இந்தி நடிகர் ஆமிர் கானுக்கும் உறவினர்.[4][5][6]
இதனையும் காண்க
[தொகு]- மாநிலங்களவைத் துணைத் தலைவர்கள் பட்டியல்
மேற்சான்றுகள்
[தொகு]- ↑ "Najma Heptullah, the lone Muslim face in Modi Cabinet". Press Trust of India. IndianExpres. 26 மே 2014. பார்க்கப்பட்ட நாள் 28 மே 2014.
- ↑ Parsai, Gargi (25 ஏப்ரல் 2012). "New stars in Rajya Sabha, spotlight on மேawati". தி இந்து (New Delhi). http://www.thehindu.com/news/national/article3350098.ece. பார்த்த நாள்: 25 ஏப்ரல் 2012.
- ↑ Najma Heptullah: Checkered career in Indian politics... Najma is the grand-niece of Maulana Abul Kalam Azad, prominent Indian freedom fighter who became the country's first education minister.
- ↑ "The Times of India: Latest News India, World & Business News, Cricket & Sports, Bollywood". The Times Of India இம் மூலத்தில் இருந்து 2013-07-20 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130720072406/http://articles.timesofindia.indiatimes.com/2008-09-29/did-you-know-/27903834_1_zakir-hussain-film-producer-tahir-hussain.
- ↑ "Aamir Khan gifted Maulana Azad's speech to sister - The Times of India". The Times Of India இம் மூலத்தில் இருந்து 2013-05-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130503052630/http://articles.timesofindia.indiatimes.com/2012-08-07/news-interviews/33082475_1_aamir-khan-azad-rao-khan-satyamev-jayate.
- ↑ "Aamir Khan, the family guy – Hindustan Times". Archived from the original on 2013-08-14. பார்க்கப்பட்ட நாள் 2014-05-28.
வெளி இணைப்புகள்
[தொகு]- மாநிலங்களவை குறிப்பு. பரணிடப்பட்டது 2012-02-05 at the வந்தவழி இயந்திரம்
- உருது வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்
- மாநிலங்களவை உறுப்பினர்கள்
- இந்திய அமைச்சர்கள்
- 1940 பிறப்புகள்
- பதினாறாவது மக்களவை அமைச்சர்கள்
- வாழும் நபர்கள்
- இருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்
- 21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்
- இந்தியப் பெண் அரசியல்வாதிகள்
- மத்தியப் பிரதேச நபர்கள்
- பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதிகள்
- மணிப்பூர் ஆளுநர்கள்
- இந்தியப் பெண் மாநில ஆளுநர்கள்
- மாநிலங்களவைத் துணைத் தலைவர்கள்