வி. சண்முகநாதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வி. சண்முகநாதன்
V Shanmuganathan
மேகாலயா மாநில ஆளுநர்
பதவியில்
12 மே 2015 – 27 சனவரி 2017
நியமிப்புபிரணப் முகர்ஜி
இந்தியக் குடியரசுத் தலைவர்
முன்னையவர்கேசரிநாத் திரிப்பாதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு21 நவம்பர் 1949 (1949-11-21) (அகவை 74)
தஞ்சாவூர், தமிழ்நாடு, இந்தியா
தேசியம்இந்தியன்
வாழிடம்(s)சில்லாங், மேகாலயா
முன்னாள் கல்லூரிசென்னைப் பல்கலைக்கழகம்

வி. சண்முகநாதன் (பிறப்பு: 21 நவம்பர் 1949) இந்தியாவின் மேகாலயா மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் ஆவார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

1949 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள தஞ்சாவூரில் பிறந்தார். 1970 ஆம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் முதுகலை பட்டம் பெற்றார். அப்போதைய சென்னைப் பல்கலைக்கழகத் தலைவர் மீனாட்சிசுந்தரத்திடம் தங்கப்பதக்கம் பெற்றார். அதன்பின் 1962 ஆம் ஆண்டு ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தில் சேர்ந்தார். பாரதிய ஜனதா கட்சியில் 2003 ஆம் ஆண்டு சேர்ந்த இவருக்குப் பல பதவிகள் கொடுக்கப்பட்டன. தமிழில் பல புத்தகங்கள் எழுதியுள்ளார்.[1]

மணிப்பூர் மாநில ஆளுநராக இருந்த சையது அகமது மரணம் அடைந்ததை அடுத்து இவர் 2015 அக்டோபர் 1 முதல் கூடுதல் பொறுப்பாக மணிப்பூர் மாநில ஆளுநராகவும் நியமிக்கப்பட்டார்.[2][3] இவர் மீது பாலியல் குற்றசாட்டுகள் எழுந்ததைத் தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு சனவரி மாதம் 27 ஆம் திகதி தனது ஆளுநர் பதவியிலிருந்து ராஜினமா செய்தார்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Governor of Meghalaya". Government of Meghalaya. Archived from the original on 5 ஜூலை 2015. பார்க்கப்பட்ட நாள் 17 July 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. ஆளுநராக சண்முகநாதன் பொறுப்பேற்பு தி இந்து தமிழ் 01 அக்டோபர் 2015
  3. "V Shanmuganathan sworn in as Meghalaya governor". Business Standard. 20 மே 2015.
  4. "மேகாலய ஆளுநர் சண்முகநாதன் ராஜிநாமா". பார்க்கப்பட்ட நாள் 18 சூன் 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._சண்முகநாதன்&oldid=3571427" இலிருந்து மீள்விக்கப்பட்டது