நச்மா எப்துல்லா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நச்மா எப்துல்லா
The Union Minister for Minority Affairs, Dr. Najma A. Heptulla addressing at the inauguration of an exhibition, in New Delhi on March 19, 2016.jpg
16வது மணிப்பூர் மாநில ஆளுநர்
பதவியில்
21 ஆகத்து 2016 – 10 ஆகத்து 2021
முன்னவர் வி. சண்முகநாதன்
பின்வந்தவர் கங்கா பிரசாத் (கூடுதல் பொறுப்பு)
சிறுபான்மையினர் அமைச்சர்
பதவியில்
26 மே 2014 – 12 ஜூலை 2016
பிரதமர் நரேந்திர மோதி
துணை அவைத்தலைவர், மாநிலங்களவை
பதவியில்
1985 - 1986, 1988 - 2004
மாநிலங்களவை உறுப்பினர்
பதவியில்
2004 - 2010, 2012 - 2016
தனிநபர் தகவல்
பிறப்பு 13 ஏப்ரல் 1940 (1940-04-13) (அகவை 82)
போப்பால்
அரசியல் கட்சி பாரதிய ஜனதா கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) அக்பரலி ஏ. எப்துல்லா (1966-2007) (மறைவு)
பிள்ளைகள் 3
இருப்பிடம் ராஜ் பவன், இம்பால்
சமயம் இசுலாம்

முனைவர். நச்மா எப்துல்லா (Najma Heptulla, மாற்று ஒலிப்பு: நஜ்மா ஹெப்துல்லா, இந்தி: नजमा हेपतुल्ला, உருது: نجمہ ہیپت اللہ) (பிறப்பு 13 ஏப்ரல் 1940) இந்திய அரசின் சிறுபான்மையினர் அமைச்சராக[1] பொறுப்பாற்றும் அரசியல்வாதி ஆவார். முன்னதாக பாரதிய ஜனதா கட்சியின் துணைத் தலைவராக இருந்துள்ளார். 1986 முதல் 2014 வரையிலான காலகட்டத்தில் மாநிலங்களவையில் ஐந்து முறை உறுப்பினராக இருந்துள்ளார்; மாநிலங்களவை துணைத்தலைவராக பதினாறு ஆண்டுகள் இருந்துள்ளார். முன்னதாக இந்திய தேசிய காங்கிரசு உறுப்பினராக இருந்த நச்மா 2012இல் பா.ஜ.கவில் இணைந்தார். சூலை 2004 முதல் சூலை 2010 வரை இராச்சசுத்தான் மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.2012இல் பாஜக சார்பில் மத்தியப் பிரதேசம் மாநிலத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] ஆகத்து 2007இல் நடந்த இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு முகம்மது அமீத் அன்சாரியிடம் தோற்றார்.

நச்மா எப்துல்லா புகழ்பெற்ற இந்திய விடுதலைப் போராட்ட வீரரும் விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் கல்வி அமைச்சருமான அபுல் கலாம் ஆசாத்தின் குடும்பத்தைச் சேர்ந்தவர்.[3] பரவலாக அறியப்படும் இந்தி நடிகர் ஆமிர் கானுக்கும் உறவினர்.[4][5][6]

நச்மா எப்துல்லா அவர்கள் நவம்பர் 22, 2014 அன்று சென்னையில் நடந்த ஒரு கருத்தரங்கம் நிகழ்ச்சியில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக தலைமை தாங்கினார், நடிகர் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

மேற்சான்றுகள்[தொகு]

  1. "Najma Heptullah, the lone Muslim face in Modi Cabinet". Press Trust of India. IndianExpres. 26 மே 2014. 28 மே 2014 அன்று பார்க்கப்பட்டது.
  2. Parsai, Gargi (25 ஏப்ரல் 2012). "New stars in Rajya Sabha, spotlight on மேawati". தி இந்து (New Delhi). http://www.thehindu.com/news/national/article3350098.ece. பார்த்த நாள்: 25 ஏப்ரல் 2012. 
  3. Najma Heptullah: Checkered career in Indian politics... Najma is the grand-niece of Maulana Abul Kalam Azad, prominent Indian freedom fighter who became the country's first education minister.
  4. "The Times of India: Latest News India, World & Business News, Cricket & Sports, Bollywood". The Times Of India. Archived from the original on 2013-07-20. https://web.archive.org/web/20130720072406/http://articles.timesofindia.indiatimes.com/2008-09-29/did-you-know-/27903834_1_zakir-hussain-film-producer-tahir-hussain. 
  5. "Aamir Khan gifted Maulana Azad's speech to sister - The Times of India". The Times Of India. Archived from the original on 2013-05-03. https://web.archive.org/web/20130503052630/http://articles.timesofindia.indiatimes.com/2012-08-07/news-interviews/33082475_1_aamir-khan-azad-rao-khan-satyamev-jayate. 
  6. "Aamir Khan, the family guy – Hindustan Times". 2013-08-14 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-05-28 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

அரசியல் பதவிகள்
முன்னர்
சியாம்லால் யாதவ்
மாநிலங்களவை துணை அவைத்தலைவர்
1985–1986
பின்னர்
மு. மா. சேக்கப்பு
முன்னர்
பிரதிபா பாட்டில்
மாநிலங்களவை துணை அவைத்தலைவர்
1988–2004
பின்னர்
கே. இரகுமான் கான்
"https://ta.wikipedia.org/w/index.php?title=நச்மா_எப்துல்லா&oldid=3559873" இருந்து மீள்விக்கப்பட்டது