இராசேந்திர அர்லேகர்
இராசேந்திர அர்லேகர் | |
|---|---|
பாரதிய ஜனதா கட்சி தலைவர் | |
| தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் மார்ச் 12, 2026 | |
| முன்னையவர் | ஆர். என். இரவி |
| 23-ஆவது கேரள ஆளுநர் | |
| பதவியில் சனவரி 2, 2025 – பதவியில் | |
| முன்னையவர் | ஆரிப் முகமது கான் |
| 29-ஆவது பீகார் ஆளுநர் | |
| பதவியில் 14 பிப்ரவரி 2023 – 1 சனவரி 2025 | |
| முன்னையவர் | பாகு சவுகான் |
| பின்னவர் | ஆரிப் முகமது கான் |
| 21-ஆவது இமாச்சலப் பிரதேச ஆளுநர் | |
| பதவியில் 13 சூலை 2021 – 13 பெப்ரவரி 2023 | |
| முன்னையவர் | பி. தத்தாத்திரேயா |
| பின்னவர் | சிவ பிரதாப் சுக்லா |
| சட்டமன்ற உறுப்பினர், கோவா | |
| பதவியில் 1 அக்டோபர் 2015 – 2017 [1] | |
| பதவியில் 2012–2017 | |
| முன்னையவர் | தயானந்த சோப்தே |
| பின்னவர் | மனோகர் அஜாகோன்கர் |
| தொகுதி | பெர்னெம் |
| சட்டமன்ற உறுப்பினர் கோவா | |
| பதவியில் 2002–2007 | |
| முன்னையவர் | ஜோசு பிலிப் டிசோசா |
| பின்னவர் | ஜோசு பிலிப் டிசோசா |
| தொகுதி | வாசுகோ |
| சபாநாயகர், கோவா சட்டமன்றம் | |
| பதவியில் 2012–2015 | |
| முன்னையவர் | பிரதாப்சிங் ரானே |
| பின்னவர் | அனந்த் ஷெட் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 23 ஏப்ரல் 1954 பனாஜி, கோவா |
| குடியுரிமை | இந்தியர் |
| அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| துணைவர் | அனாகா அர்லேகர் |
| உறவுகள் | மணமானவர் |
| பிள்ளைகள் | 2 |
| தொழில் | அரசியல்வாதி |
| செயற்குழு | தலைவர், வர்த்தக ஆலோசனைக் குழு |
| பதவி | மேனாள் சபாநாயகர், கோவா சட்டமன்றம் |
| இணையத்தளம் | http://www.rajendraarlekar.in |
இராசேந்திர அர்லேகர் (Rajendra Arlekar) என்பவர் 23-ஆவது கேரள மாநில ஆளுநர் ஆவார். இவர் பீகார், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் முன்னாள் ஆளுநர் ஆவார். இவர் கோவா அரசாங்கத்தில் அமைச்சராகவும், கோவா சட்டப் பேரவையின் முன்னாள் சபாநாயகராகவும் இருந்தார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களுள் ஒருவர் ஆவார். இவர் 2026 மார்ச் 12 அன்று தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டார். [2]
அரசியல் வாழ்க்கை
[தொகு]அர்லேகர் தனது குழந்தைப் பருவத்திலிருந்தே இராஷ்ட்ரிய சுயம்சேவாக் சங்கத்துடன் தொடர்புடையவர். 1989-இல் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார். 1980-களிலிருந்து கோவா பாஜகவின் தீவிர உறுப்பினராக இருந்து வருகிறார். பின்வரும் பல்வேறு பதவிகளை பாஜகவில் வகித்துள்ளார்:
- பொதுச் செயலாளர், பாரதிய ஜனதா கட்சி, கோவா பிரதேசம்.
- தலைவர், கோவா தொழில் வளர்ச்சிக் கழகம்.
- தலைவர், கோவா மாநிலப் பட்டியல் சாதியினர் மற்றும் பிற பிற்படுத்தப்பட்டோர் நிதி மேம்பாட்டுக் கழகம்.
- பொதுச் செயலாளர், பாரதிய ஜனதா, கோவா.
- தெற்குக் கோவா தலைவர், பாரதிய ஜனதா கட்சி.
2014-இல் மனோகர் பாரிக்கர் மத்தியப் பாதுகாப்பு அமைச்சராகப் பதவியேற்றபோது, அர்லேகர் அடுத்த முதலமைச்சராகப் பரிசீலிக்கப்பட்டார். ஆனால் அதற்குப் பதிலாக இலட்சுமிகாந்த் பர்சேகரை அடுத்த முதலமைச்சராகக் கட்சி தேர்வு செய்தது.
கோவா சட்டப் பேரவையைக் காகிதமில்லாததாக மாற்றிய பெருமைக்குரியவர். அவ்வாறு செய்த முதல் மாநிலச் சட்டமன்றம். பின்னர் 2015-இல் அமைச்சரவை மாற்றத்தின் போது சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
ஆளுநராக
[தொகு]இமாச்சலப்பிரதேச ஆளுநராக இருந்த பண்டாரு தத்தாத்ரேயா அரியானா ஆளுநராக நியமிக்கப்பட்டபோது, அர்லேகர் இமாச்சல பிரதேச ஆளுநராக நியமிக்கப்பட்டார். அர்லேகர் 2021 சூலை 13 முதல் இப்பதவியில் இருந்தார். பாஜக என்பது ஒவ்வோர் உறுப்பினரின் பணியையும் அங்கீகரிக்கும் கட்சி என்று அர்லேகர் கூறினார்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Pernem MLA Rajendra Arlekar takes oath as minister - Times of India". indiatimes.com. Retrieved 9 January 2018.
- ↑ "ராஜேந்திர விசுவநாத் - பொறுப்பு ஆளுநர்". தி இந்து. Retrieved மார்ச் 12, 2026.
- ↑ IANS (2021-07-06). "Ex-Goa Speaker Rajendra Arlekar is new Himachal Governor | english.lokmat.com". Lokmat English (in ஆங்கிலம்). Retrieved 2021-07-06.