தமிழ்நாடு அரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தமிழ் நாடு அரசு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
தமிழ்நாடு அரசு
TamilNadu Logo.svg
தலைமையிடம்புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை
செயற்குழு
ஆளுநர்ஆர். என். ரவி
முதலமைச்சர்மு. க. ஸ்டாலின்
தலைமைச் செயலாளர்வெ. இறையன்பு, இ. ஆ. ப.
சட்டவாக்க அவை
சட்டப் பேரவை
சபாநாயகர்எம். அப்பாவு, (திமுக)
துணை சபாநாயகர்கு. பிச்சாண்டி, (திமுக)
உறுப்பினர்கள்234
நீதித்துறை
உயர் நீதிமன்றம்சென்னை உயர் நீதிமன்றம்
தலைமை நீதிபதிநீதியரசர் சன்ஜிப் பானர்ஜி

தமிழ்நாடு அரசு[1] 1986 வரை தமிழ்நாடு அரசு ஈரவைகள் கொண்ட (சட்டப்பேரவை மற்றும் சட்ட மேலவை) அரசாக செயல்பட்டது. அதன் பின் இன்று ஓரவையான சட்டமன்றத்தை மட்டும் கொண்டு செயல்பட்டு வருகின்றது. இதன் தலைமையிடம் சென்னையில் உள்ள, புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ளது.

ஆளுநர், தமிழக அரசிற்கான இந்திய அரசியலமைப்புத் தலைவராகச் செயலாற்றுகிறார். தமிழக முதல் அமைச்சர் மற்றும் அவரது அமைச்சரவையின் ஆலோசனைகளின் பேரில் தமிழக ஆளுநர் செயல்படுகிறார். நீதித்துறை சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியின் கீழ் இயங்குகின்றது.

தற்பொழுதைய ஆட்சியாளர்[தொகு]

தமிழகத்தின் தற்போதைய ஆளுநர் மேதகு ஆர். என். ரவி[2], தற்போதைய முதல்வர் மு. க. ஸ்டாலின்[3], தற்போதைய தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு இ. ஆ. ப., தற்போதைய தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி [4] ஆகியோர்கள் ஆவர்.

தொகுதிகள்[தொகு]

இக்கட்டுரை
தமிழ்நாடு அரசு மற்றும் அரசியல்
என்ற தொடரில் ஒரு பகுதி

TamilNadu Logo.svg

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தமிழ்நாடு மாநிலத்தில் மொத்த மக்கள் தொகை 72,138,959 ஆகும். இது 130,058 கிமீ² பரப்பளவைக் கொண்டுள்ளது. தமிழக அரசின் ஆளுமைக்குட்பட்ட 234 சட்டசபைத் தொகுதிகளும், 39 மக்களவைத் தொகுதிகளும் உள்ளன. தமிழக அரசு 38 மாவட்டங்களையும், 76 வருவாய் கோட்டங்களையும், 220 வட்டங்களையும், 21 மாநகராட்சிகளையும், 150 நகராட்சிகளையும், 385 ஊராட்சி ஒன்றியங்களையும், 561 பேரூராட்சிகளையும், 12,618 கிராம ஊராட்சிகளையும் உள்ளடக்கியது.

மின் ஆளுமை[தொகு]

தமிழ்நாடு மாநிலம், மின் ஆளுமையை அறிமுகப்படுத்தியதன் விளைவாக மற்ற மாநிலங்களிலிருந்து விலகி முன்னோடி மாநிலமாக திகழ்கின்றது. அரசு பதிவேடுகள், நிலப்பதிவு, பட்டா போன்றவைகளை அனைத்து கிராம, நகர, சார் பதிவாளர் அலுவலகங்களில் கணிணி மயமாக்கலின் மூலம் அனைவரும் எளிதில் மற்றும் துரிதமாக பயன்பெரும் விதமாக, அரசின் செயல்பாடுகளை அனைவரும் அறியும் விதமாக மாற்றப்பட்டதில், தமிழக அரசுக்கு பெரும் பங்கு உண்டு.

அமைச்சர்கள்[தொகு]

தமிழகத்தில் மொத்தம் முதலமைச்சருடன் சேர்த்து 34 அமைச்சர்கள் உள்ளனர். அவர்களின் விவரம் மேலே உள்ள கட்டுரையில் தரப்பட்டுள்ளது.

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழ்நாடு சட்டப் பேரவை- தமிழ் நாடு அரசு இணைய தளம்". மூல முகவரியிலிருந்து 2010-04-13 அன்று பரணிடப்பட்டது.
  2. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  4. http://www.tn.gov.in/government/keycontact/198

அதிகாரப்பூர்வ இணைய தளம்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்நாடு_அரசு&oldid=3287754" இருந்து மீள்விக்கப்பட்டது