கே. எஸ். மஸ்தான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செஞ்சி கே. எஸ். மஸ்தான்
மஸ்தான்.jpg
சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர், தமிழ்நாடு
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
மே, 2021
தொகுதி செஞ்சி
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு
பதவியில்
2016 ஆண்டு மே - 15 வது தமிழக சட்டமன்றம் – 2021 ஆண்டு மே - 16 வது தமிழக சட்ட மன்றம்
தொகுதி செஞ்சி
தனிநபர் தகவல்
பிறப்பு 31 மே 1955 (1955-05-31) (அகவை 67)
அரசியல் கட்சி Indian election symbol rising sun.svg திராவிட முன்னேற்றக் கழகம்
வாழ்க்கை துணைவர்(கள்)
சைத்தானி பீ மஸ்தான் (தி. 1985)
உறவினர் கே. எஸ். தஸ்தகீர் (சகோதரன்)
பிள்ளைகள் மகள்கள் : மைமுன்னிசா, ஜெய் முன்னிசா, தை முன்னிசா.
மகன் : கே.எஸ்.எம்.மொக்தியார் மஸ்தான்
பெற்றோர் தந்தை: காஜா பாஷா
தாய்: ஜூலேகா பீ
இருப்பிடம் 59, தளபதி இல்லம், தேசூர் பாட்டை, செஞ்சி, விழுப்புரம் மாவட்டம். 604202.
கல்வி 8 ஆம் வகுப்பு
பணி
  • விவசாயம்

கே. எஸ். மஸ்தான் (K. S. Masthan) என்ற இயற்பெயர் கொண்ட இவர், செஞ்சி கே. எஸ். மஸ்தான் என்ற பரவலாக அறியப்படும் தமிழக அரசியல்வாதியும், தமிழக அமைச்சரும் ஆவார். இவர் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் விழுப்புரம் மாவட்டத்தின், செஞ்சி சட்டமன்றத் தொகுதியில்[1] தி.மு.க கட்சி சார்பில் போட்டியிட்டு சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3][4] 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் செஞ்சி சட்டமன்றத் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கபட்டார். இதையடுத்து 2021 மே 7 அன்று திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு. க. ஸ்டாலின் அவர்கள் தமிழக முதல்வராக பதவி ஏற்றுள்ள அமைச்சரவையில் தமிழக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சராக பதவியேற்றிருக்கிறார்.[5] இந்த அமைச்சுவின் கீழ், சிறுபான்மையினர் நலன், வெளிநாடு வாழ் தமிழர் நலன், அகதிகள், வெளியேற்றப்பட்டவர்கள், வக்ஃபு வாரியம் போன்றவை ஆளுமையாகிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளராகவும் உள்ளார்.[6][7]

வாழ்க்கை[தொகு]

31 மே 1955-ஆம் ஆண்டு, தமிழ்நாட்டிலுள்ள விழுப்புரம் மாவட்டத்தின் செஞ்சி என்ற தமிழக நகரில், இவரது தந்தையான காஜா பாஷா என்பவருக்கும், தாயான ஜூலேகா பீ என்பவருக்கும் மகனாகப் பிறந்தார். இவர்[8], செஞ்சி அரசு மேல்நிலைப்பள்ளியில், 1972 ஆம் ஆண்டு 8 ஆம் வகுப்பு வரை கல்வி பயின்றார். [9][10] 1985 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 3 ஆம் நாள், சைத்தானி பீ மஸ்தான் என்பவரை மனைவியாக ஏற்றார், இவர்கள் இருவரும் திருமணம் வாழ்வினில், மூன்று மகள்கள். ஒரு மகனையும் பெற்று வாழ்கின்றனர்.


சட்டமன்ற உறுப்பினர்[தொகு]

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி வாக்கு விழுக்காடு (%) பெற்ற வாக்குகள்
2016 செஞ்சி தி.மு.க 43.99 88440
2021 செஞ்சி தி.மு.க 52.99 109625

கட்சி பொறுப்புகள்[தொகு]

  • 1976-ல் அரசியல் பயணம் துவக்கம்.
  • 1978-ல் செஞ்சி பேரூர் கழக செயலாளர்.
  • 1980-ல் பொதுக்குழு உறுப்பினர்.
  • 1992-ல் ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர்.
  • 1996-ல் மாநில செயற்குழு உறுப்பினர்
  • 1999-ல் ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்ட அவைத்தலைவர்.
  • 2014 ஆம் ஆண்டு முதல் விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக கட்சியின் செயலாளர்.

அரசு பதவிகள்[தொகு]

  • 1986-முதல் 2016 வரை 5 முறை செஞ்சி பேரூராட்சி தலைவர்.
  • 1989-ல் செஞ்சி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத் தலைவர்.
  • 1996 ல் கடலூர் - விழுப்புரம் மாவட்ட பால்வள பெருந்தலைவர்.
  • 1996-ல் செஞ்சி விவசாய கூட்டுறவு வங்கி தலைவர்.
  • 2016 முதல் 2021 வரை செஞ்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர்.
  • 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் செஞ்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். மேலும் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு. க. ஸ்டாலின் அவர்கள் முதல்வராக பதவி ஏற்றுள்ள அமைச்சரவையில், செஞ்சி கே எஸ்.மஸ்தான் திமுக வின் தமிழ்நாட்டு சட்டமன்ற உறுப்பினராகவும், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சராக உள்ளார்.

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. https://www.elections.in/tamil-nadu/assembly-constituencies/gingee.html
  2. "Complete List of Tamil Nadu Assembly Elections 2016 Winners". News18. 19 May 2016. 2021 மே 23 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |accessdate= (உதவி)
  3. "List of Winners in Tamil Nadu 2016". www.myneta.info. 28 September 2019 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Tamil Nadu Assembly Election Results 2016". www.elections.in. 23 மே 2021 அன்று பார்க்கப்பட்டது.
  5. தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் யார், யார்? முழு விவரம், பிபிசி தமிழ் - 2021 மே 6
  6. Tamil Nadu Assembly Election Results 2016
  7. https://dmk.in/publicreps]
  8. https://nocorruption.in/politician/masthan-k-s/ பிறப்பு
  9. https://dmk.in/publicreps கல்வி
  10. https://myneta.info/tamilnadu2016/candidate.php?candidate_id=163
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._எஸ்._மஸ்தான்&oldid=3519648" இருந்து மீள்விக்கப்பட்டது