தமிழ்நாடு சட்டப் பேரவை அவை முன்னவர் பட்டியல்
{{{body}}}
தமிழ்நாடு சட்டப் பேரவை அவை முன்னவர் பட்டியல் | |
---|---|
தமிழ்நாடு அரசு இலட்சினை | |
தமிழ்நாடு சட்டப்பேரவை | |
பரிந்துரையாளர் | ஆளும் கட்சியினரால் முன்மொழியப்படும் |
நியமிப்பவர் | தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் |
முதலாவதாக பதவியேற்றவர் | சி. சுப்பிரமணியம் |
உருவாக்கம் | 3 மே 1952 |
இணையதளம் | www |
தமிழ்நாடு சட்டப் பேரவையின் அவை முன்னவர் (List of leaders of the house in the Tamil Nadu Legislative Assembly) என்பது தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளும் கட்சியை வழிநடத்தும் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் தமிழ்நாடு சட்டப் பேரவையின் அவை முன்னவர் எனத் தமிழக அரசின் ஒரு அங்கமான சட்டமன்றத்தின் மிகப்பெரிய அரசியல் கட்சியின் தலைவர் ஆவார். சபை முன்னவராக அமைச்சர் ஒருவர் அரசாங்கத்தால் நியமிக்கப்படுவார். சட்டப் பேரவையின் சபாநாயகர், சில அலுவல் விடயங்களின் விவாதத்திற்கு நேரத்தை ஒதுக்குவதற்கு முன், அவை முன்னவரைக் கலந்தாலோசிக்க வேண்டும் என்று நடைமுறை விதிகள் கூறுகின்றன. அரசாங்க செயல்பாடுகளின் இவரது முக்கியப் பொறுப்பு ஆகும். சட்டப்பேரவையின் அலுவல்களை நடத்துவதில் பேரவைத் தலைவருக்கு உதவுவதே இவரது தலையாய கடமையாகும்.
1952 முதல், தமிழ்நாடு சட்டமன்றத்தில் 12 அவைத் தலைவர்கள் இருந்துள்ளனர். இந்தியக் குடியரசின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர், இந்திய தேசிய காங்கிரசின் சி. சுப்பிரமணியம், சென்னை மாநில சட்டப் பேரவையின் அவை முன்னவர் பதவி வகித்த முதல் நபர் ஆவார். தமிழ்நாட்டின் முன்னாள் செயல் தலைவரான வி. ஆர். நெடுஞ்செழியன், மிக நீண்ட காலம் இப்பதவி வகித்த தலைவர் ஆவார். இவர் திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய இரு திராவிடக் கட்சிகளிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டவர். திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த க. அன்பழகன் இரண்டாவது மிக நீண்ட பதவிக் காலம் பெற்றவர். ஆர். எம். வீரப்பன் மிகக் குறுகிய பதவிக் காலம் (23 நாட்கள் மட்டுமே) மட்டுமே இப்பதவியினை வகித்தவர் ஆவார். மு. பக்தவத்சலம் முதலமைச்சராக பணியாற்றுவதற்கு முன்பு அவைத் முன்னவராகப் பணியாற்றினார். மு. கருணாநிதி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தமிழக சட்டசபையின் அவைத் தலைவராகப் பணியாற்றிய முன்னாள் முதல்வர்கள் ஆவர்.
11 மே 2021 முதல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தற்போதைய பொறுப்பாளர் துரைமுருகன் அவை முன்னவராக உள்ளார்.[1]
பட்டியல்
[தொகு]- விளக்கம்
வ. எண் | படம் | பெயர்
(பிறப்பு–இறப்பு) |
தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதி | Term of office | சட்டப் பேரவை தேர்தல் |
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் | அரசியல் கட்சி | |||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
பதவியேற்ற நாள் | பதவி முடிந்த நாள் | அலுவல் நாட்கள் | ||||||||
1 | சி. சுப்பிரமணியம் (1910–2000) |
கோயம்புத்தூர் கிழக்கு | 3 மே 1952 | 31 மார்ச்சு 1957 | 9 ஆண்டுகள், 273 நாட்கள் | 1st (1952) |
ஜெ. சிவசண்முகம் பிள்ளை
என். கோபால மேனன் |
இந்திய தேசிய காங்கிரசு | ||
கோவில்பாளையம் | 29 ஏப்ரல் 1957 | 1 மார்ச்சு 1962 | 2nd (1957) |
யு. கிருஷ்ண ராவ் | ||||||
2 | மு. பக்தவத்சலம் (1897–1987) |
திருப்பெரும்புதூர் | 29 மார்ச்சு 1962 | 28 பிப்ரவரி 1967 | 4 ஆண்டுகள், 336 நாட்கள் | 3rd (1962) |
எஸ். செல்லபாண்டியன் | |||
3 | இரா. நெடுஞ்செழியன் (1920–2000) |
திருவல்லிக்கேணி | 6 மார்ச்சு 1967 | 10 பிப்ரவரி 1969[RES] | 1 ஆண்டு, 341 நாட்கள் | 4th (1967) |
சி. பா. ஆதித்தனார்
|
திமுக | ||
4 | மு. கருணாநிதி (1924–2018) |
சைதாப்பேட்டை | 13 பிப்ரவரி 1969 | 13 ஆகத்து 1969[RES] | 181 நாட்கள் | |||||
(3) | இரா. நெடுஞ்செழியன் (1920–2000) |
திருவல்லிக்கேணி | 14 ஆகத்து 1969[§] | 5 சனவரி 1971 | 6 ஆண்டுs, 100 நாட்கள் | |||||
16 மார்ச்சு 1971 | 31 சனவரி 1976 | 5th (1971) |
கே. ஏ. மதியழகன்
| |||||||
5 | நாஞ்சில் கி. மனோகரன் (1929–2000) |
பாளையங்கோட்டை | 4 சூலை 1977 | 17 பிப்ரவரி 1980 | 2 ஆண்டுகள், 228 நாட்கள் | 6th (1977) |
முனு ஆதி | அதிமுக | ||
(3) | இரா. நெடுஞ்செழியன் (1920–2000) |
திருநெல்வேலி | 19 சூன் 1980[§] | 15 நவம்பர் 1984 | 7 ஆண்டுகள், 99 நாட்கள் | 7th (1980) |
க. இராசாராம் | |||
ஆத்தூர் - திண்டுக்கல் | 25 பிப்ரவரி 1985 | 6 சனவரி 1988[RES] | 8th (1984) |
பி. எச். பாண்டியன் | ||||||
6 | இராம. வீரப்பன் (1926–) |
திருநெல்வேலி | 7 சனவரி 1988 | 30 சனவரி 1988 | 23 நாட்கள் | |||||
7 | க. அன்பழகன் (1922–2020) |
அண்ணா நகர் | 6 பிப்ரவரி 1989 | 30 சனவரி 1991 | 1 ஆண்டு, 358 நாட்கள் | 9th (1989) |
மு. தமிழ்க்குடிமகன் | திமுக | ||
(3) | இரா. நெடுஞ்செழியன் (1920–2000) |
தேனி | 1 சூலை 1991[§] | 13 மே 1996 | 4 ஆண்டுs, 317 நாட்கள் | 10th (1991) |
சேடபட்டி இரா. முத்தையா | அதிமுக | ||
(7) | க. அன்பழகன் (1922–2020) |
துறைமுகம் | 22 மே 1996[§] | 14 மே 2001 | 4 ஆண்டுகள், 357 நாட்கள் | 11th (1996) |
பி. டி. ஆர். பழனிவேல்ராசன் | திமுக | ||
8 | சி. பொன்னையன் (1942–) |
திருச்செங்கோடு | 22 மே 2001 | 12 மே 2006 | 4 ஆண்டுகள், 355 நாட்கள் | 12th (2001) |
கா. காளிமுத்து | அதிமுக | ||
(7) | க. அன்பழகன் (1922–2020) |
துறைமுகம் | 17 மே 2006[§] | 14 மே 2011 | 4 ஆண்டுs, 362 நாட்கள் | 13th (2006) |
இரா. ஆவுடையப்பன் | திமுக | ||
9 | ஓ. பன்னீர்செல்வம் (1951–) |
போடிநாயக்கனூர் | 23 மே 2011 | 27 நவம்பர் 2014[RES] | 3 ஆண்டுகள், 188 நாட்கள் | 14th (2011) |
து. ஜெயக்குமார்
|
அதிமுக | ||
10 | நத்தம் ஆர். விசுவநாதன் (1949–) |
நத்தம் | 28 நவம்பர் 2014 | 11 ஆகத்து 2015[RES] | 256 நாட்கள் | |||||
(9) | ஓ. பன்னீர்செல்வம் (1951–) |
போடிநாயக்கனூர் | 12 August 2015[§] | 21 May 2016 | 1 ஆண்டு, 185 நாட்கள் | |||||
25 மே 2016 | 16 பிப்ரவரி 2017[RES] | 15th (2016) |
ப. தனபால் | |||||||
11 | கே. ஏ. செங்கோட்டையன் (1948–) |
கோபிச்செட்டிப்பாளையம் | 17 பிப்ரவரி 2017 | 3 சனவரி 2018[RES] | 320 நாட்கள் | |||||
(9) | ஓ. பன்னீர்செல்வம் (1951–) |
போடிநாயக்கனூர் | 4 சனவரி 2018[§] | 3 மே 2021 | 3 ஆண்டுs, 119 நாட்கள் | |||||
12 | துரைமுருகன் (1938–) |
காட்பாடி | 11 மே 2021 | பதவியில் | 3 ஆண்டுகள், 216 நாட்கள் | 16th (2021) |
எம். அப்பாவு | திராவிட முன்னேற்றக் கழகம் |
மேலும் பார்க்கவும்
[தொகு]- தமிழ்நாட்டின் வரலாறு
- தமிழகத்தில் தேர்தல்
- தமிழக ஆளுநர்களின் பட்டியல்
- தமிழ்நாடு தலைமைச் செயலகம்
- தமிழ்நாடு சட்டமன்றம்
- தமிழ்நாட்டு முதல்வர்கள் பட்டியல்
- தமிழக துணை முதல்வர்கள் பட்டியல்
- தமிழ்நாடு சட்டப் பேரவையின் பேச்சாளர்கள் பட்டியல்
- தமிழக சட்டப் பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் பட்டியல்