மா. மதிவேந்தன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மா.மதிவேந்தன்
தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினர்
முன்னையவர்மரு.வி. சரோஜா
தொகுதிஇராசிபுரம்
வனத்துறை அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியில்
7 May 2021
முதலமைச்சர்மு. க. ஸ்டாலின்
முன்னையவர்வெல்லமண்டி நடராசன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு25 திசம்பர் 1984 (1984-12-25) (அகவை 39)
தமிழ்நாடு, இந்தியா
அரசியல் கட்சி திராவிட முன்னேற்றக் கழகம்
துணைவர்சிவரஞ்சினி
உறவுகள்மாயவன் (தந்தை)
பிள்ளைகள்1 பெண் குழந்தை
வாழிடம்இராசிபுரம்
முன்னாள் கல்லூரிஇராசா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி
வேலைமருத்துவம்
இணையத்தளம்தமிழ்நாடு சட்டமன்ற அமைச்சர்கள்

மா. மதிவேந்தன் (பிறப்பு: 25 திசம்பர் 1984) ஒரு தமிழ்நாட்டு அரசியலர் மற்றும் மருத்துவர் ஆவார். திராவிட முன்னேற்றக் கழக (திமுக) உறுப்பினரான இவர், மே 2021 முதல் இராசிபுரம் தொகுதிக்கான தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினராகவும் மு. க. ஸ்டாலின் தலைமையிலான மாநில அமைச்சரவையில் அமைச்சராகவும் பணியாற்றி வருகிறார்.

கல்வி[தொகு]

இவர் 2002-இல் இராசா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து இளநிலை மருத்துவம் மற்றும் அறுவையியல் மற்றும் எம்.டி. பயின்றார்.[1]

தனி வாழ்க்கை[தொகு]

தற்போது இவர் இராசிபுரத்தில் வசித்து வருகிறார். இவருக்கு சிவரஞ்சினி என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர்.[2] இவரது தந்தை அருந்ததிய சமூகத்தை சேர்ந்த மருத்துவர் மாயவன். இவர் நாமக்கல் சட்டமன்ற தொகுதியிலும் ராசிபுரம் மக்களவை தொகுதியிலும் போட்டியிட்டு தோல்வியடைந்தார். திமுகவில் இருந்த இவர் வைகோ திமுகவில் இருந்து வெளியேற்றப் பட்ட போது அவருடன் வெளியேறி மதிமுகவில் சேர்ந்தார். பின்பு சில ஆண்டுகள் கழித்து மீண்டும் திமுகவுக்கே வந்தார். நாமக்கல்லில் சாந்தி மருத்துவமனையை நடத்தி வருகிறார். தற்போது மதிவேந்தன் அம்மருத்துவமனையின் பொறுப்பை எடுத்து நடத்தி வருகிறார்.[3]

அரசியல்[தொகு]

இவர் 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் சட்டமன்றத் தொகுயில் முன்னாள் அமைச்சர் சரோஜாவை தோற்கடித்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து 2021 மே 7 அன்று சுற்றுலா துறை அமைச்சசராக பதவியேற்றார்.[4] உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்ற பொழுது பல அமைச்சர்களின் துறைகள் மாற்றப்பட்டன அதில் மதிவேந்தனுக்கு வனத்துறை ஒதுக்கப்பட்டது, இவரிடமிருந்த சுற்றுலாதுறை முன்பு வனத்துறையை பார்த்த அமைச்சர் ராமச்சந்திரனுக்கு ஒதுக்கப்பட்டது[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "சாதி என் வாழ்க்கையிலும் மோசமா விளையாடி இருக்கு..!" MINISTER மதிவேந்தன் INSPIRING பேட்டி, பார்க்கப்பட்ட நாள் 2023-06-24
  2. புதிய அமைச்சர்களின் வாழ்க்கை குறிப்பு தினத்தந்தி 2021. மே. 7
  3. சுற்றுலா துறை அமைச்சர் மதிவேந்தன் சுய விபரம்
  4. தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் யார், யார்? முழு விவரம், பிபிசி 2021 மே 6
  5. தமிழக அமைச்சர்களின் துறை மாற்றம்: யாருக்கு எந்த பதவி?
"https://ta.wikipedia.org/w/index.php?title=மா._மதிவேந்தன்&oldid=3944040" இலிருந்து மீள்விக்கப்பட்டது