உள்ளடக்கத்துக்குச் செல்

சிவ. வீ. மெய்யநாதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிவ. வீ. மெய்யநாதன்
சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியில்
7 மே 2021
தொகுதிஆலங்குடி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஅக்டோபர் 9, 1969 (1969-10-09) (அகவை 54)
மறமடக்கி, அறந்தாங்கி, புதுக்கோட்டை
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிதிராவிட முன்னேற்றக் கழகம்
துணைவர்சுமதி
பிள்ளைகள்நவீன்
வசுந்தரா

சிவ. வீ. மெய்யநாதன் (Siva. V. Meyyanathan) என்பவர் தமிழக அரசியல்வாதியும், அமைச்சரும் ஆவார். 2016 மற்றும் 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி சட்டமன்றத் தொகுதியிலிருந்து தமிழக சட்டபேரவை உறுப்பினராக திமுக கட்சியின் சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் [1][2]. எம்.சி.ஏ பட்டப்படிப்பை படித்துள்ள இவர் புதுக்கோட்டை மாவட்டம் மறமடக்கி கிராமத்தைச் சேர்ந்தவர்[3]. அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்தின் பெருந்தலைவராக 2011 முதல் 2016 வரை இருந்துள்ளார் [4] இவர் 2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் ஆலங்குடி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கபட்டார். பின்னர் 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தர்ம தங்கவேலு என்ற வேட்பாளரைத் தோற்கடித்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கபட்டார். இதையடுத்து 2021 மே 7 அன்று தமிழக சுற்றுச்சூழல் ,காலநிலை மாற்றம், இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை (சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாடு, ) அமைச்சசராக பதவியேற்றார்.[5]

துறை மாற்றம்[தொகு]

14 திசம்பர் 2022 ஆம் ஆண்டு சேப்பாக்கம்-திருவல்லிக்கேனி தொகுதி சட்டப்பேரைவ உறுப்பினரும், தி.மு.க இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகப் பதவியேற்றதை அடுத்து மெய்யநாதன் கவனித்து வந்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அவருக்கு வழங்கப்பட்டது. தற்போது சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சராகப் பணியாற்றி வருகிறார்.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்கள் 2011" (PDF). தமிழக அரசு விவர தொகுப்பு அகராதி. Archived from the original on 2011-10-05. பார்க்கப்பட்ட நாள் 2021-05-08.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  2. http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=717610[தொடர்பிழந்த இணைப்பு]
  3. [1]
  4. http://www.dailythanthi.com/News/Districts/2014/10/08005151/Aranthangi-Union-meeting-Digg-Councillors-velinatappu.vpf
  5. தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் யார், யார்? முழு விவரம், பிபிசி 2021 மே 6
  6. https://www.bbc.com/tamil/articles/c3gp20p32p8o
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவ._வீ._மெய்யநாதன்&oldid=3832874" இலிருந்து மீள்விக்கப்பட்டது