ஆர். காந்தி (அரசியல்வாதி)
ஆர். காந்தி | |
---|---|
கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 7 மே 2021 | |
தொகுதி | இராணிப்பேட்டை |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | இராணிப்பேட்டை, தமிழ்நாடு |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | திராவிட முன்னேற்றக் கழகம் |
துணைவர் | கமலா |
பிள்ளைகள் | வினோத் சந்தோஷ் |
பெற்றோர் | சின்னப்பா |
ஆர். காந்தி (R. Gandhi) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்றத்தின் இராணிப்பேட்டை சட்டமன்றத் தொகுதியின் தற்போதைய உறுப்பினரும் ஆவார். 1996 ஆவது ஆண்டில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இராணிப்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு முதல்முறையாக வெற்றி பெற்றார்.[1] தொடர்ந்து, 2006 ஆவது ஆண்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலிலும், 2016 ஆவது ஆண்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலிலும் அதே தொகுதியில் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[2][3] 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதே தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கபட்டார். இதையடுத்து 2021 மே 7 அன்று தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் (கைத்தறி மற்றும் துணி நூல், கதர் மற்றும் கிராம தொழில் வாரியம், பூதானம் மற்றும் கிராம தானம்) அமைச்சசராக பதவியேற்றார்.[4] இவர் ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க. செயலாளராக உள்ளார்.[5]
வகித்த பதவிகள்
[தொகு]சட்டமன்ற உறுப்பினராக
[தொகு]ஆண்டு | வெற்றி பெற்ற தொகுதி | கட்சி | வாக்கு விழுக்காடு (%) |
---|---|---|---|
1996 | இராணிப்பேட்டை | திராவிட முன்னேற்றக் கழகம் | 50.80% |
2006 | இராணிப்பேட்டை | திராவிட முன்னேற்றக் கழகம் | 55% |
2016 | இராணிப்பேட்டை | திராவிட முன்னேற்றக் கழகம் | 43.33% |
2021 | இராணிப்பேட்டை | திராவிட முன்னேற்றக் கழகம் | 49.79% |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Statistical Report on General Election 1996 to the Legislative Assembly of Tamil Nadu" (PDF). Election Commission of India. p. 5. Archived from the original (PDF) on 2010-10-07. Retrieved 2017-05-06.
- ↑ "2006 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-06-13. Retrieved 2017-05-13.
- ↑ "15th Assembly Members". Government of Tamil Nadu. Archived from the original on 2016-08-22. Retrieved 2017-04-26.
- ↑ தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் யார், யார்? முழு விவரம், பிபிசி 2021 மே 6
- ↑ புதிய அமைச்சர்களின் வாழ்க்கைக் குறிப்பு தினத்தந்தி 2021. மே. 7