அர. சக்கரபாணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அர. சக்கரபாணி என்பவர் தமிழக அரசியல்வாதியும், தமிழக அமைச்சரும் ஆவார். இவர் தமிழக சட்டப்பேரவைக்கு தொடர்ச்சியாக ஆறு தேர்தல்களில் ஒட்டன்சத்திரம் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். திராவிட முனேற்றக் கழக கட்சியின் உறுப்பினரான இவர் 1996, [1] 2001, [2] 2006, [3] 2011, [4] 2016, 2021 தேர்தல்களில் வெற்றி பெற்றார். அவர் 2006 முதல் 2011 வரையிலும், 2011 முதல் 2016 வரையும் 2016 முதல் 2021 திமுக சட்டமன்ற கொறடாவாக இருந்துள்ளார். 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இதே தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கபட்டார். இதையடுத்து 2021 மே 7 அன்று மு.க. ஸ்டாலின் அமைச்சரவையில் முதல் முறையாக தமிழக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை (உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு, விலைக்கட்டுப்பாடு) அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். [5]

பிறப்பு[தொகு]

கள்ளிமந்தையம் அருகே ஒரு கிராமத்தில் அர.சக்கரபாணி பிறந்தார்.

போட்டியிட்ட தேர்தல்கள்[தொகு]

தேர்தல்கள் தொகுதி கட்சி முடிவு வாக்கு சதவீதம் எதிர் வேட்பாளர் எதிர்க்கட்சி எதிர்க்கட்சி வாக்கு சதவீதம்
1996 தமிழக சட்டசபை தேர்தல் ஒட்டன்சத்திரம் திமுக வென்றது 58.57 கே செல்லமுத்து அதிமுக 26.08 [6]
2001 தமிழக மாநில சட்டசபை தேர்தல் ஒட்டன்சத்திரம் திமுக வென்றது 46.4 ஏ. டி செல்லசாமி அதிமுக 45.2 [7]
2006 தமிழக மாநில சட்டசபை தேர்தல் ஒட்டன்சத்திரம் திமுக வென்றது 53.66 கே. பி. நல்லசாமி அதிமுக 36.93 [8]
2011 தமிழக மாநில சட்டசபை தேர்தல் ஒட்டன்சத்திரம் திமுக வென்றது 51.99 பி பாலசுப்பிரமணி அதிமுக 43.14 [9]
2016 தமிழக மாநில சட்டசபை தேர்தல் ஒட்டன்சத்திரம் திமுக வென்றது 64.26 கே. கிட்டுசாமி அதிமுக 29.56 [10] [11]
2021 தமிழக மாநில சட்டசபை தேர்தல் ஒட்டன்சத்திரம் திமுக வென்றது 54.51 நடராஜ் என். பி. அதிமுக 40.26[12]

தேர்தல்[தொகு]

அர.சக்கரபாணி முதல்முதலில் 1996 இல் ஒட்டன்சத்திரம் தொகுதியில் போட்டியிட்டார். இவர் அதிமுகவின் கே. செல்லமுத்தை 36823 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். 2001 ஆம் ஆண்டில் அதே தொகுதியில் இருந்து இரண்டாவது முறையாக போட்டியிட்டார், அதிமுக தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்தது என்றாலும், அர.சக்கரபாணி 1369 வாக்குகள் வித்தியாசத்தில் தொகுதியை மீண்டும் கைப்பற்றினார். 2006 ஆம் ஆண்டில் மீண்டும் அதே ஒட்டன்சத்திரம் தொகுதியில் இருந்து போட்டியிட்டு 19903 என்ற வாக்கு வித்தியாசத்தில் வென்றார். இவர் திமுக கொறடாவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2011 ஆம் ஆண்டில், அர.சக்கரபாணி 14933 வாக்குகள் வெத்தியாசத்தில் மீண்டும் வென்றார். 2016 தேர்தலில் அர.சக்கரபாணி அதிமுக வேட்பாளர் கிட்டுசாமியை 65727 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார். இவரது தொடர் வெற்றியானது மாநிலத்தில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிற்கு அடுத்ததாக உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

 1. "Statistical Report on General Election, 1996". Election Commission of India. p. 8 இம் மூலத்தில் இருந்து 2010-10-07 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20101007221700/http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1996/StatisticalReport-TN96.pdf. 
 2. "2001 Tamil Nadu Election Results, Election Commission of India" இம் மூலத்தில் இருந்து 2010-10-06 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20101006173934/http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_2001/Stat_Rep_TN_2001.pdf. 
 3. "2006 Tamil Nadu Election Results, Election Commission of India" இம் மூலத்தில் இருந்து 2018-06-13 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180613115719/http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_2006/StatReport_TN_2006.pdf. 
 4. "List of MLAs from Tamil Nadu 2011". Government of Tamil Nadu இம் மூலத்தில் இருந்து 2012-03-20 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120320103427/http://www.assembly.tn.gov.in/member_list.pdf. 
 5. "DMK govt in Tamil Nadu: Names of MK Stalin’s cabinet colleagues revealed". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 6 May 2021. https://timesofindia.indiatimes.com/city/chennai/m-k-stalin-cabinet-in-tamil-nadu-raj-bhavan-releases-list-of-ministers/articleshow/82430341.cms. 
 6. "Statistical report on Tamil Nadu Assembly election 1996". Election Commission of India. 1996. p. 261 இம் மூலத்தில் இருந்து 7 அக்டோபர் 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20101007221700/http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1996/StatisticalReport-TN96.pdf. 
 7. "Statistical report on Tamil Nadu Assembly election 2001". Election Commission of India. 2001. p. 257 இம் மூலத்தில் இருந்து 6 அக்டோபர் 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20101006173934/http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_2001/Stat_Rep_TN_2001.pdf. 
 8. "Statistical report on Tamil Nadu Assembly election 2006". Election Commission of India. 2006. http://eci.nic.in/archive/May2006/index_st.htm. 
 9. "Statistical report on Tamil Nadu Assembly election 2001". Election Commission of India. 2011. p. 36. http://eci.nic.in/eci_main/StatisticalReports/AE2011/stat_TN_May2011.pdf. 
 10. "The verdict 2016". p. 6. 
 11. "Green cover". p. 2. 
 12. https://results.eci.gov.in/Result2021/ConstituencywiseS22128.htm?ac=128
"https://ta.wikipedia.org/w/index.php?title=அர._சக்கரபாணி&oldid=3541463" இருந்து மீள்விக்கப்பட்டது