அனிதா ராதாகிருஷ்ணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அனிதா ராதாகிருஷ்ணன்
தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர்
பதவியில்
07.05.2021 முதல்
திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
19 may 2001
தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முன்னாள் அமைச்சர்
பதவியில்
9 November 2002 – 12 May 2006
தனிநபர் தகவல்
பிறப்பு 19 செப்டம்பர் 1952 (1952-09-19) (அகவை 68)
தண்டுப்பத்து, தமிழ் நாடு,
அரசியல் கட்சி திராவிட முன்னேற்றக் கழகம்
வாழ்க்கை துணைவர்(கள்) ஜெயகாந்தி
பிள்ளைகள் அனந்த பத்மநாபன்

அனந்த ராமகிருஷ்ணன்
அனந்த மகேஸ்வரன்

இருப்பிடம் மதுரை, தமிழ் நாடு,


அனித்தா ராதாகிருஷ்ணன் தமிழக அரசியல்வாதி ஆவார். தமிழக அமைச்சரவையில் கால்நடை வளம் மற்றும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை துறை அமைச்சராக பணியாற்றியவரும். தற்போது மீன் வளத்துறை, மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சராகவும் உள்ளவராவார். திராவிட கொள்கையில் பற்று கொண்ட இவர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளராக முக்கியப் பங்கு வகிக்கின்றார்.[1]

அனித்தா ராதாகிருஷ்ணன் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள தண்டுப்பத்து கிராமத்தில் 1952ஆம் ஆண்டு செப்டம்பர் 19ல் பிறந்தார்.

திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து 2001 , 2006 ஆகிய இரு முறை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பிலும், 2010 இடைத்தேர்தல், 2011, 2016, 2021ஆகிய நான்கு முறை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை உறுப்பினராக, தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] கால்நடை வளம் மற்றும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.[3][4][5]

ஆரம்பத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலும், 2001 சட்டப்பேரவைத் தேர்தலில் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றவுடன் தொடர்ந்து தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளர், ஒருங்கிணைந்த தூத்துக்குடி மாவட்டச் செயலாளர், மாநில அமைச்சர் என படிப்படியாக வளர்ச்சி அடைந்தவர். 8 ஆண்டுகள் தூத்துக்குடி மாவட்ட அதிமுகவில் அசைக்க முடியாத சக்தியாக இருந்து வந்தார்.

2009 ல் அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், ராதாகிருஷ்ணன் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அழைப்பை ஏற்றுக்கொண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தில், சேர்ந்தார். [6] 2016ம் ஆண்டு திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியிலில் திமுக சார்பில் போட்டியிட்டு அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட நடிகர் சரத்குமாரை வென்றார்.

2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் திருச்செந்தூர் தொகுதியில் வெற்றிப்பெற்று தமிழகத்தின் மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சரானார்.[7]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அனிதா_ராதாகிருஷ்ணன்&oldid=3143872" இருந்து மீள்விக்கப்பட்டது