எ. வ. வேலு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எ .வ .வேலு[1]
அமைச்சர்
பதவியில்
2006-2011
சமஉ
பதவியில்
2011 - இன்று
தொகுதி திருவண்ணாமலை
சமஉ
பதவியில்
2006 - 2011
தொகுதி தண்டராம்பட்டு
தனிநபர் தகவல்
வாழ்க்கை துணைவர்(கள்) ஜீவா
பிள்ளைகள் எ. வா. வே. கம்பன்
எ. வா. வே. குமரன்

எ .வ .வேலு (E. V. Velu, பிறப்பு: மார்ச் 15, 1951)[2] ஓர் தமிழக அரசியல்வாதி மற்றும் தமிழக உணவுத் துறை அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். திராவிடக் கொள்கையில் பற்றுக் கொண்ட இவர், திருவண்ணாமலையில் அருணை பொறியியல் மற்றும் கலைக் கல்லூரியை நடத்தி வருகிறார்.

இவர் திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள, குடலூர் கிராமத்தில் பிறந்தார். தமிழ் இலக்கியத்தில் பட்டம் பெற்ற இவர் பேருந்து நடத்துநராகவும் பணியாற்றியுள்ளார். இவருக்கு ஒரு மகளும், இரு மகன்களும் உள்ளனர்.

அரசியல் வாழ்வு[தொகு]

முதலில் அ.தி.மு.கவில் தன் அரசியல் வாழ்வைத் துவக்கிய எ. வ. வேலு பின்னர் தி.மு.கவில் இணைந்தார். 2011 இல் திருவண்ணாமலை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கபட்டு தமிழக அமைச்சரவையில் அமைச்சராக இருந்தார். பின்னர் இதே தொகுதியில் இருந்து 2016 ஆம் ஆண்டு தேர்தலிலும், 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலிலும் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கபட்டார். இதையடுத்து 2021 மே 7 அன்று தமிழக பொதுப் பணிகள் (பொதுப்பணிகள் (கட்டடங்கள் மற்றும் நெடுஞ்சாலைத் துறை மற்றும் சிறு துறைமுகங்கள், கரும்பும்ப் பயிர் மேம்பாடு மற்றும் தரிசு நில மேம்பாடு) அமைச்சசராக பதவியேற்றார்.[3]

வெளி இணைப்புகள்[தொகு]

  1. "எ .வ .வேலு ". www.tn.gov.in
  2. "எ .வ .வேலு ". www.tn.gov.in
  3. தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் யார், யார்? முழு விவரம், பிபிசி 2021 மே 6
"https://ta.wikipedia.org/w/index.php?title=எ._வ._வேலு&oldid=3143708" இருந்து மீள்விக்கப்பட்டது