மா. சுப்பிரமணியம் (அரசியல்வாதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மா. சுப்பிரமணியம்

மா. சுப்ரமணியம் (M. Subramaniam) என்பவர் ஒரு தமிழக அரசியல்வாணர். திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) கட்சி உறுப்பினரான இவர் 2006-2011 காலகட்டத்தில் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையின் மாநகர மேயராக இருந்தார். மீண்டும் திமுக வேட்பாளராக 2011 இல் மேயர் தேர்தலில் போட்டியிட்டார்[1], ஆனால் அதிமுகவின் சைதை சா. துரைசாமியிடம் தோல்வியடைந்தார். 2016 தமிழக சட்டமன்றத் தேர்தலின்போது சைதாபேட்டை தொகுதியில் போட்டியிட்டு சட்டப் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கிண்டி தொழிற்குடியிருப்பில் வாழும் இவர் ஒரு வழக்கறிஞர் ஆவார். இவர் 1999 இல் இருந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார்.

கல்வி[தொகு]

சுப்பிரமணியன், சைதாப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் தனது உயர் கல்வியை நிறைவு செய்தார். பின்னர் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பையும் பெங்களூர் ஹவ்னூர் சட்டக்கல்லூரியில் தனது சட்டப்படிப்பையும் (எல்.எல்.பி) முடித்தார்.

பணி[தொகு]

1976 ஆம் ஆண்டு திமுகவில் சேர்ந்தார். 1996-2006 காலகட்டத்தில் சென்னை மாநகராட்சி அவைத்தலைவராக இருந்தார். திமுக இளைஞர் அணியின் துணை பொதுச் செயலாளராக இருக்கும் இவர் ஸ்டாலினின் ஒரு தீவிர ஆதரவாளர்.

இவருக்கு உடற்பயிற்சி நிலையத்தில் உடற்பயிற்சிசெய்தல், திரைப்படங்கள், யோகா போன்றவற்றில் ஆர்வம் உண்டு. இவர் ஒரு மாரத்தான் வீரரும் கூட தனது முதல் மாரத்தானை 2014 ஆம் ஆண்டு புதுச்சேரி ஆரோவிலில் நடந்த மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டவர், இதுவரை 100 மாரத்தான் போட்டிகளைக் கடந்துள்ளார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. மா. சுப்ரமணியம் மேயர் திமுக வேட்பாளராக அறிவிப்பு
  2. செ.ஞானபிரகாஷ் (2017 பெப்ரவரி 17). "வின்னர்ஸ்... இந்த ‘ரன்’னர்ஸ்!". கட்டுரை. தி இந்து. பார்த்த நாள் 18 பெப்ரவரி 2017.