உள்ளடக்கத்துக்குச் செல்

தங்கம் தென்னரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தங்கம் தென்னரசு
Thangam Thennarasu
முன்னையவர்எவருமில்லை
தமிழக நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியில்
7 மே 2021
முதன்மை அமைச்சர்மு. க. ஸ்டாலின்
முன்னையவர்மு. சி. சம்பத்
பள்ளிக் கல்வி அமைச்சர்
பதவியில்
மே 2006 – மே 2011
முதன்மை அமைச்சர்மு. கருணாநிதி
தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
மே 2011
முன்னையவர்எவருமில்லை
தொகுதிதிருச்சுழி
பதவியில்
2006–2011
முன்னையவர்கே. கே. சிவசாமி
பின்னவர்வைகைச் செல்வன்
தொகுதிஅருப்புக்கோட்டை
பதவியில்
சனவரி 1998 – சூன் 2001
முன்னையவர்தங்கபாண்டியன்
பின்னவர்கே. கே. சிவசாமி
தொகுதிஅருப்புக்கோட்டை
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு3 சூன் 1966 (1966-06-03) (அகவை 58)
மல்லாங்கிணறு, தமிழ்நாடு, இந்தியா
அரசியல் கட்சிதிராவிட முன்னேற்றக் கழகம்
துணைவர்மணிமேகலை
உறவுகள்தமிழச்சி தங்கப்பாண்டியன் (சகோதரி)[1]
பிள்ளைகள்2 (மகள்)
பெற்றோர்தங்கபாண்டியன்
ராஜாமணி
இணையத்தளம்தங்கம் தென்னரசு

தங்கம் தென்னரசு ஒரு தமிழக அரசியல்வாதியும், தற்போதைய சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் தமிழக அமைச்சரவையில் நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்தித்துறைத்துறை அமைச்சராகப் பணியாற்றுகிறார். திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர். இவர் முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் வி. தங்கபாண்டியனின் மகனும் மற்றும் பெண் கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியனின் அண்ணனும் ஆவார்.

தென்னரசு மல்லாங்கிணறு கிராமத்தில் 03 சூன், 1966 ஆம் ஆண்டு பிறந்தார். பொறியியல் பட்டம் பெற்ற இவர் ஸ்பிக் நிறுவனத்தில் பத்து வருடங்கள் பொறியாளராகப் பணியாற்றியுள்ளார்.

அரசியல் வாழ்வு

[தொகு]

இவர் தமிழக அமைச்சரவையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திருச்சுழி சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கபட்டார். இதையடுத்து 2021 மே 7 அன்று தமிழக தொழிற்துறை (தொழிற்துறை, ஆட்சி மொழி மற்றும் தமிழ் பண்பாட்டுத்துறை, தொல்பொருள்) அமைச்சராக பதவியேற்றார்.[2] பின்பு மே 11 2023 அன்று நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்தித்துறைத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார்.

தேர்தல் வரலாறு

[தொகு]
தேர்தல்கள் தொகுதி கட்சி முடிவு வாக்கு வீதம் எதிர்ப் போட்டியாளர் எதிர்க்கட்சி எதிர்க்கட்சி வாக்குவீதம்
1997–98 தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல் அருப்புக்கோட்டை திமுக வெற்றி 36.50% வி. எஸ். பஞ்சவர்ணம் அதிமுக 34.73%[3]
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001 அருப்புக்கோட்டை திமுக தோல்வி 40.32% கே. கே. சிவசாமி அதிமுக 46.07%[4]
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006 அருப்புக்கோட்டை திமுக வெற்றி 44.88% கே. முருகன் அதிமுக 37.77%[5]
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011 திருச்சுழி திமுக வெற்றி 54.36% எசக்கிமுத்து அதிமுக 41.07%[6]
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016 திருச்சுழி திமுக வெற்றி 53.61% கே. தினேஷ்பாபு அதிமுக 37.77%[7]
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021 திருச்சுழி திமுக வெற்றி 59.15% எஸ். ராஜசேகர் அதிமுக 23.86%

அமைச்சர்கள் தங்கம் தென்னரசு & சாத்தூர் இராமச்சந்திரன் சொத்து குவிப்பு வழக்குகள்

[தொகு]

கடந்த 2006-2011 ஆண்டுகளில் திமுக அரசில் அமைச்சர்களாக இருந்த தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன், ஆகியோர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வழக்கு 2012ம் ஆண்டில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இவ்வழக்குகள் திருவில்லிபுத்தூர் மக்கள் பிரதிகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. டிசம்பர், 2022ல் தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன் ஆகியோரை, இவ்வழக்கில் இலஞ்ச ஒழிப்புத் துறை போதிய ஆதாரங்கள் சமர்ப்பிக்காததால் டிசம்பர், 2022ல் திருவில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்றம் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் சாத்தூர் ராமச்சந்திரனை விடுவித்தது. இத்தீர்ப்பை எதிர்த்து இலஞ்ச ஒழிப்புத் துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவில்லை.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் இவ்வழக்குகளை தாமாக முன்வந்து விசாரணை நடத்தினார். இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு காவல்துறை மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் விளக்கம் அளிக்க அவர் உத்தரவிட்டார். அப்போது தமிழ்நாடு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், இவ்வாறு தாமாக முன்வந்து விசாரணை நடத்துவது தவறான முன்னுதாரணமாகி விடும் என்றும், லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்று வாதிட்டார்.

இதற்கு பதிலளித்த நீதியரசர் ஆனந்த் வெங்கடேசன், அமைச்சர்கள் சொத்து குவிப்பு வழக்கிலிருந்து தங்களை விடுவிக்க கோரி நீதிமன்றத்தில் மனு அளித்தபோது முதலில் எதிர்ப்பு தெரிவித்த லஞ்ச ஒழிப்பு காவல் விசாரணை அதிகாரி பின்னர் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளார். மேலும் சிறப்பு நீதிமன்றங்களில் வழக்குகள் நடத்தப்படும்விதம் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. மனசாட்சியை உலுக்கியதால் தாமாக முன்வந்து இவ்வழக்கு விசாரணையை மேற்கொள்கிறோம் என்றார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ். இரு வழக்குகளின் விசாரணையின் போது பின்பற்றப்பட்ட நடைமுறைகள் தவறானவை' எனக்கூறி, இந்த இரண்டு வழக்குகளில் லஞ்ச ஒழிப்புத்துறை பதில் அளிக்க உத்தரவிட்டார். நீதிமன்றத்தின் மனசாட்சியை உலுக்கியதாலேயே தாமாக முன் வந்து விசாரணை நடத்தப்பட்டது. அமைச்சர்கள் விடுவிக்கப்பட்ட உத்தரவுகள் ஒரே மாதிரியாக உள்ளது. இதனை பார்த்ததும் கண்ணை மூடிக்கொண்டிருந்தால் கடமையில் இருந்து தவறியது போல் ஆகிவிடும். எனவே இந்த விவகாரத்தில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரும், 2 அமைச்சர்களும் உரிய பதில் அளிக்க உத்தரவிடுகிறேன் என்றார்.[8][9][10]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Thamizhachi Thangapandian injured in accident
  2. தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் யார், யார்? முழு விவரம், பிபிசி 2021 மே 6
  3. "1997–98 Tamil Nadu Legislative Assembly by-election".
  4. "STATISTICAL REPORT ON GENERAL ELECTION, 2001 TO THE LEGISLATIVE ASSEMBLY OF TAMIL NADU".
  5. "STATISTICAL REPORT ON GENERAL ELECTION, 2006 TO THE LEGISLATIVE ASSEMBLY OF TAMIL NADU".
  6. "STATISTICAL REPORT ON GENERAL ELECTION, 2011 TO THE LEGISLATIVE ASSEMBLY OF TAMIL NADU".
  7. "Tamil Nadu General Legislative Election 2016, Election Commission of India".
  8. சொத்து குவிப்பு வழக்கு: அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
  9. 2 அமைச்சர்கள் விடுவிக்கப்பட்டதற்கு ஐகோர்ட் நீதிபதி கடும் அதிருப்தி
  10. "தீர்ப்பை படித்து 3 நாட்களாக தூங்கவில்லை": அமைச்சர்கள் மீதான வழக்கை விசாரிக்கும் நீதிபதி வேதனை

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தங்கம்_தென்னரசு&oldid=3943808" இலிருந்து மீள்விக்கப்பட்டது