மல்லாங்கிணறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மல்லாங்கிணறு (ஆங்கிலம்:Mallankinaru), இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், அமைந்துள்ள விருதுநகர் மாவட்டம், காரியாப்பட்டி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இங்கு பழமையான செங்கமலத்தாயார் உடனுறை சென்னகேசவப் பெருமாள் திருக்கோவில் உள்ளது. இது விருதுநகரிலிருந்து 13 கி.மீ. தொலைவில் உள்ளது.

2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, மல்லாங்கிணறு பேரூராட்சி 3,308 வீடுகளும், 12,986 மக்கள்தொகையும் கொண்டது.[1]

இது 8.7 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 61 தெருக்களும் கொண்ட மல்லாங்கிணறு பேரூராட்சி திருச்சுழி (சட்டமன்றத் தொகுதி)க்கும், இராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [2]

இவ்வூரில் பிறந்தவர்கள்[தொகு]

  • எஸ். ராமகிருஷ்ணன் - தமிழ் எழுத்தாளர்
  • தங்கம் தென்னரசு - தமிழக அரசியல்வாதி முன்னாள் அமைச்சர் தங்கப்பாண்டியன் அவர்களின் மகன்.
  • இங்கு இரண்டு மேல்நிலைப்பள்ளி களும் இரண்டு ஆரம்ப பள்ளிகளும் ஒரு ஆரம்ப சுகாதார நிலையமும் நன்கு பிரசித்தி பெற்ற கோவில்களும் தேவாலயமும் உள்ளன.
  • இங்கு பலதரப்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.
  • அதிகபட்சமாக இந்துக்களே அதிகம் உள்ளனர்.


ஆதாரங்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மல்லாங்கிணறு&oldid=3940103" இலிருந்து மீள்விக்கப்பட்டது