தங்கபாண்டியன்
தங்கபாண்டியன் (இறப்பு: சூலை 31, 1997) ஓர் தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் 1989 மற்றும் 1996 ஆம் ஆண்டுகளில் நடந்த சட்டமன்றத் தேர்தலில், அருப்புக்கோட்டை தொகுதியிலிருந்து, தி.மு.க சார்பில் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2] இவரது பிள்ளைகளான தங்கம் தென்னரசு, தமிழச்சி தங்கப்பாண்டியன் ஆகியோரும் தி.மு.கவில் உறுப்பினராக உள்ளனர்.